Azhagiya Asura

வணக்கம், நான் பிரியா விவேக். நான் படிக்கும் எந்த புத்தகத்திற்கும் விமர்சனம் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. நான் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக வாசகியாக இருக்க விரும்புகிறேன். அது நான் 'அழகிய அசுரன்' பார்க்கும் வரை தொடர்ந்தது.

எனக்கு ஒரு பழக்கம் உண்டு. நான் ஒரு புத்தகம் அல்லது நாவலைப் படிக்கும் போதெல்லாம், அதில் உள்ள கதாபாத்திரங்களை கற்பனை செய்ய ஆரம்பிக்கிறேன், ஒவ்வொரு வரியிலும் நான் அவர்களுடன் பயணிப்பேன். நான் பல நாவல்களைப் படித்திருக்கிறேன், ஆனால் அழகிய அசுரா என் இதயத்தை முழுவதுமாக வென்றுள்ளது.

அப்டேட் இல்லாத போது நான் இன்னும் பழைய அப்டேட்டைப் படித்து கொண்டிருப்பேன் .அழகிய அசுர நாவல் என் வாழ்க்கையில் ஒன்றாய் மாறிய தருணம் பல இருக்கிறது. ஏ.கே. மற்றும் விகாவின் காதல் பயணம், அவர்களுக்கு வரும் போராட்டங்கள் எனக்கு ஒரு த்ரில்லர் அனுபவமாக இருக்கிறது.

இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால், அவர்களின் குணாதிசயங்கள் பல வழிகளில் என்னையும் என் கணவரையும் ஒத்திருக்கின்றன.  என் கணவர் பெரும்பாலும் அதிரனைப் போலவே இருப்பார் , அவர் அவ்வளவு சீக்கிரம் கோபப்படமாட்டார்.

பல சமயங்களில் இந்த நாவலில் இருக்கும்  சூழ்நிலை  அல்லது உரையாடல் நானும் என் கணவரும் பேசியதைப் போலவே இருக்கும்.உதாரணத்திற்கு, விகா மனதில் இருக்கும் எல்லா கேள்விகளுக்கும் ஏ.கே பதிலளிப்பார், அதுவும் அவள்  எதுவும் சொல்லாமலேயே, என் கணவர் என் மனதில் உள்ள எல்லா கேள்விகளுக்கும் நான் அவரிடம் கேட்காமலேயே பதிலளிப்பார்.அழகு என்னவென்றால்,  நானும் என் கணவரும் பேசிய உரையாடலின் ஒவ்வொரு வார்த்தையும் இந்த நாவலில் வரும் வசனங்களும் ஒரே மாதிரியாக இருக்கும், இப்போது அதை என்னால் சுட்டிக்காட்ட முடியவில்லை, ஏனென்றால் இதுபோன்ற சம்பவங்கள் நிறைய உள்ளன.

நான் ஆச்சரியப்பட்டு, அவரிடம் அதை காட்ட ஓடுவேன். இதன் காரணமாக அல்ல,ஆனால் அழகிய அசுர நாவல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்க மற்ற நாவல்களையும் நான் படிச்சிருக்கேன், ஆனா அதிரன், திவிமா கிட்ட எதுவும் வராது.

அவர்களின் ஆழமான காதல் பிணைப்பை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் இல்லை, இந்த நாவல் என் மனதிற்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை, மிக்க நன்றி சர்மி சிஸ், இந்த நாவல் ஒரு விருதுக்கு தகுதியானது. தொடர்ந்து கலக்குங்கள்.  நன்றி.

Author:    587 Priya Vivek
Comments   3

*** Azhagiya Asura - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com