செல்வி தாமரையிடம், ஆதியின் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, “வசதியான பொண்ணுன்னா, எப்புடி அத்த, பக்கத்து ஊரையும் சேர்த்து எழுதி வெச்சிடுவாகளா?” என்று கேட்டப்படி அங்கு வந்தான் ஆதிரன்.
அதில் அவரோ, “இல்ல ஆதி. அது” என்றவருக்கு வார்த்தை வர மறுக்க, “இந்த ஆதிக்கு சொந்தத்த பாத்துத்தேன் பழக்கமே தவிர, சொத்த பாத்து கெடையாது. இப்பக்கூட, நீங்க ஒரு வார்த்த சொல்லுங்க. அம்புட்டு சொத்தையும், கதிரவன் பேருக்கு மாத்திக்கொடுத்துடுறேன்” என்றான்.
“ச் என்னப்பா. நான் எப்போ அப்படில்லாம் நெனச்சேன்? என் ஆதிய பத்தி எனக்கு தெரியாதா? அது. நல்ல வரனா இருக்குன்னுத்தேன்” என்றார் செல்வி.
“மருமவென்னு பேச்சுக்கு கூட வரமாட்டேங்கிதுல்ல அத்த” என்று சிறு ஆதங்கத்துடன் ஆதி கேட்க, செல்விக்கோ சுருக்கென்று வலித்தது.
எங்கே அப்படி அழைத்து பழகிவிட்டால், அவருக்கே தெரியாமல், தன் மகளை கட்டிக்கொள் என்று உரிமையாய் சொல்லிவிடுவோமோ என்ற பயம் அவருக்கு. அதுவும் போக, அவர் அப்படி அழைப்பதை கேட்டு, யாராவது ஏதாவது சொல்லி, அது மகனின் காதில் விழுந்தால் தேவையில்லாத சிக்கல். அதனால் தான் அவர் அப்படி அழைப்பது இல்லை.
ஆனாலும் அவன் அப்படி சொல்லவும், “நான் கூப்டாத்தேன், நீ என் மருமவென்னா என்ன? நீ என்னிக்கு பொறந்தையோ, அப்பவே நீ என் மருமவென்த்தேன்ன” என்றாள் செல்வி.
“அப்படியா? அப்போ, உங்க பொண்ண தாங்கன்னு கேட்டா, எனக்கு கட்டிக்கொடுத்துடுவீங்களா அத்த?” என்று அசராது கேட்டான் ஆதிரன்.
அதைக் கேட்டு செல்வி அதிர்ந்து அவனைப் பார்க்க, தாமரையோ, “ஏண்டி, கூறுகெட்டவளே, சொல்லுடி” என்றார்.
ஆனால் செல்விக்கோ கண்ணெல்லாம் கலங்கிவிட, அதில் ஆதியோ, “பயப்படாதீங்க. நீங்களே கட்டிக்கோன்னு சொன்னாலும், எனக்கொன்னும் உங்க பொண்ணு வேண்டாம். அப்படில்லாம், உங்க பொண்ண தாங்கன்னு, உங்க வீட்டுல வந்து நின்னுட மாட்டேன். அதுக்காண்டில்லாம், நீங்க, இப்படி எனக்கு அவசரமா, வேற பொண்ணு பாத்துட்டு வர வேண்டாம்” என்றான் ஆதிரன்.
அவனுக்கு எப்போதுவோ வெட்டு ஒன்று துண்டு இரண்டுத்தான். மறைத்து மறைத்துலாம் பேச தெரியாது. மனதில் தோன்றியதை அப்படியே பேசிவிடுவான்.
இப்போதும் அப்படித்தான். “என்னடா பேசுற நீ” என்று தாமரை கோவப்பட, “ச் நீ சும்மா இரு பாட்டி. அன்னிக்கே உன்கிட்ட நான் என்ன சொன்னேன்? இப்போதைக்கு எனக்கு கல்யாணம் பண்ற எண்ணம் கிடையாது. அடுத்து, எனக்கு பிடிச்ச மாதிரி பொண்ண, நானே பாத்து கூட்டி வாரேன். யாரும் எனக்கு பொண்ணு பாக்க வேண்டாம்” என்றான்.
அதில் செல்விக்குத்தான் என்னவோ போல் ஆகிவிட்டது. அதில், “மன்னிச்சிடுப்பா. உன் மனசு புரியாம, நான் ஏதோ நெனப்புல வந்துட்டேன். தப்புத்தேன். எனக்கு என்ன உரிம இருக்கு” என்றவர் எழுந்துக் கொண்டார்.
“அதெப்டி அத்த? உங்களுக்கு உரிம இல்லாம போகும், நான் கூட்டிட்டு வர்ற புள்ளைய உங்களுக்கு பிடிக்கலன்னா, நான் கட்டிக்க மாட்டேன். உங்களுக்கும் புடிச்சாத்தேன் கட்டிப்பேன்” என்று சொல்லியவன், செல்வியின் கையை வந்து பிடித்தான்.
சற்று முன் அவன் தான் அப்படி பேசினான். இப்போது இவனே தான், அத்தையின் கையை பிடித்து செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தான்.
“எனக்கு புடிக்கிறதுல என்ன இருக்கு? உனக்கு அப்படி ஆறையும் பிடிச்சிருக்கா” என்று அவர் கேட்க, “ஆமா அத்த எனக்கு ஒரு பொண்ண ப்டீச்சிருக்கு. ஆனா, அவளுக்குத்தேன் நான் பாக்குற வேலையும், இந்த ஊரும் பிடிக்கல. அதேன் யோசனையா இருக்கு” என்றான் ஆதிரன்.
“என்னடா சொல்ற நீ?” என்ற தாமரைக்கோ, மனதில் இருந்த சிறிய நம்பிக்கை கூட விட்டுப்போயிருந்தது.
“இப்போ என்னத்துக்கு நீ வருத்தப்படுற. நீத்தேன்ன, என் கல்யாணத்த பாக்கனும்னு சொல்லிட்டு திரிவ. எனக்கு ஒருத்தியா பிடிச்சா, நல்லதுத்தேன்ன” என்றான் ஆதிரன்.
“ஐயா ராசா. நெசமாத்தேன் சொல்றீயா? அவெள்ல இங்க கூட்டி வாய்யா. இங்க வந்து பாத்தா, நம்ம ஊர பிடிக்காம போயிடுமா என்ன?” என்றார் செல்வி.
“ஏண்டி. அவன்த்தேன் என்னமோ சொல்றான்னா, நீயும் அவன்கூட சேர்ந்து பேசிட்டு இருக்க. ஏன் நம்ம சொந்த பந்தத்துல இல்லாத பொண்ணா?” என்று சிறு கோவமாய் கேட்டார்.
“ச் பாட்டி. நான் முன்னமே சொல்லிட்டேன். எனக்கு சொந்தத்துல கட்டிக்கிறதுல கொஞ்சமும் விருப்பம் கிடையாது” என்று சற்று அழுத்தியே கூறினான்.
“நீ சும்மா இருக்கா. நம்ம புள்ளைக்கு ஆறோ பிடிச்சிருக்கோ, கட்டி வைக்கலாம். நம்ம புள்ள மனசுத்தேன் முக்கியம்” என்றார் செல்வி.
“அப்படி சொல்லுங்கத்த. எனக்கு பொண்ணு பாக்க போறப்ப, நீங்கத்தேன் வந்து எனக்காண்டி, அவீக வீட்டுல கேக்கனும்” என்றான் ஆதிரன்.
“அப்போ எல்லாம் முடிவு பன்ணிட்ட. இத்தன நாள், சும்மாத்தேன் கன்னாலம் வேண்டாம்னு சொல்லிட்டு திரிஞ்சிருக்க” என்றார் தாமரை.
“ச் அட என்ன பாட்டி. நான்த்தேன் சொல்றேன்த்தேன்ன, நான் இன்னும் முடிவு பண்ணல. அதுவும் போக, நான் கட்டிக்க போற பொண்ணுக்கு என்னை மட்டும் இல்ல. இந்த மண்ணையும், என் வேலையையும் சேர்ந்து பிடிக்கனும். அதெல்லாத்தையும் விட, நம்ம சொந்தபந்தம் எல்லாத்தையும் அனுசரிச்சு போகனும். அதுக்கெல்லாம் செரியா வந்தாத்தேன்” என்றான் ஆதிரன்.
“அதுக்குத்தேன். நம்ம சொந்தத்துலையோ, இல்ல ஊர்பக்கமோ பாத்தா” என்று முடிக்கும் முன்னே, “சும்மா ஏதாச்சும் பேசாத பாட்டி. இப்போ நீ போய் எனக்கு, இந்த ஊருல பொண்ணு பாக்க போறேன்னு வை. மொத கேள்வியே என்ன கேப்பாக தெரியுமா?” என்று சிறு கோவத்துடன் கேட்டான்.
“என் பேரன்ன கட்டிக்கிறதுக்கு, அவீகளுக்கு என்ன கேள்வி வேண்டி கெடக்கு” என்று தாமரை கேட்க, “உனக்கு புரியாது. அத்தை. நான் எதுக்கு சொல்றேன்னு உங்களுக்கு புரியுதுத்தேன்ன” என்றான்.
அவருக்கு புரியாமல் இருக்குமா என்ன? எப்படியும், உள்ளூரிலோ, சொந்தத்திலோ, அவனுக்கு பெண் கேட்டு சென்றால், முதலில் வரும் கேள்வியே, சொந்தப் பென்ணை வைத்துக் கொண்டு, வெளியில் எதுக்கு கேட்கிறீர்கள் என்பதுதான். அதுவும் போக, அவர்கள் ஊர் வழக்கப்படி. மொதலில் முறைப்பெண்ணிடம் கேட்டு, அவளுக்கு அவனை கட்டிக்க விருப்பமில்லை என்றோ. இல்லை. அவன் வேறு பெண்ணை திருமணம் செய்ய சம்மதம் என்று சொன்னாலோதான், மற்றவர்கள் பெண் கேட்டு வரவே அனுமதிப்பார்கள்.
அப்படி இருக்க, அத்தனை கேள்வியும், முருகேசன், செல்வி மற்றும் நிலாவை சுற்றித்தான் வரும். அதற்காகத்தான், ஆதிரன் சொந்தத்திலேயோ, சொந்த ஊரிலோ பெண் எடுக்க விரும்பவில்லை.
அதை புரிந்தவரோ, “நீ சும்மா இருக்கா. அவென் சொன்னா அதுல ஆயிரம் காரணம் இருக்கும். உனக்கு புடிச்ச பொண்ணுன்னு சொன்னீயே. ஏதாச்சும் போட்டோ வெச்சிருக்கீயா” என்று பேச்சை மாற்றினார்.
இங்கே தாமரையோ, “ம் நானும் பாக்குறேன். அப்படி எந்த வகையில. என் நிலாவ விட உசத்தியா இருக்கான்னு” என்று தனக்குள் புலம்பினார்.
“போட்டோலாம் இல்ல அத்த. ஆனா பொண்ணு பாக்க போறப்ப, நீங்க இல்லாம நான் போ மாட்டேன். அதனால நேர்லையே காட்டுறேன். அடுத்து, என் தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்ச பொறவுத்தேன். நான் கல்யாணம் பண்ணிப்பேன். தேவையில்லாம, அக்காவும், தங்கச்சியும், இப்பவே கல்யாணத்துக்கு வரன் தேடி சுத்தாதீங்க” என்றான்.
“செரி ராசா. உன் மனசுக்கு எல்லாமே நல்லதாத்தேன் நடக்கும். நான் பொறப்படுறேன்” என்று செல்வி அங்கிருந்து சென்றுவிட, இப்போது தாமரையோ, முகத்தை திருப்பிக் கொண்டு நின்றார்.
அதைப் பார்த்து சிரித்தவனோ, “அட என்ன பாட்டி. வழக்கமா நான் சாப்பிடாம கெளம்புனாலும், கூப்டு வச்சி சோறு போடுவ. இன்னிக்கு பசியில வந்திருக்கேன். சாப்பாடு போடாம, இப்புடி நிக்குற” என்று சீண்டலாய் கேட்டான்.
“இனி நான் எதுக்குடா பரிமாறனும். அதேன் ஏதோ டவுன் கார பொண்ண புடிச்சிருக்குன்னு சொல்லிட்டத்தேன்ன. அவெள்ள வந்து பரிமாற சொல்லு” என்றார்.
“அதுக்குன்னு இப்பவேவா கூட்டியார முடியும். அதுக்குலாம் நாள் இருக்குல்ல. அதுவரைக்கும், நி வந்து போடு” என்று தாமரையின் கையை பிடித்து அழைத்து சென்றான்.
அதில் அவரோ, அவனுக்கு சாப்பாட்டை பரிமாறியப்படியே, “என் தம்பிக்கு பொறந்திருக்க ரெண்டும், இப்படி அசல்லத்தேன் போகனும்னு அடம்பிடிச்சா. ஒத்தையாள நான் பிடிச்சா நிறுத்த முடியும். என்னமோ, இன்னும் எத்தன நாளைக்கு, இந்த உசுரு இருக்கோ, அதுவரைக்கும், எனக்கு கஞ்சி காத்த ஊத்த நாதி இல்லாமலா போயிடும்” என்று புலம்பினார்.
“ஏன், நான் பாக்குற பொண்ணு. உனக்கு கஞ்சி ஊத்த மாட்டான்னு பாத்தீயா? அதெல்லாம் அவ பரோட்டா, பாயான்னு வாங்கி கொடுப்பா” என்றான் ஆதிரன்.
அதில் தன் பேரனை முறைத்தவரோ, “எதுவும் பேசாதடா. நீயும், உன் தங்கச்சிக்கணக்கா, சொந்தமே வேண்டாம்னு சொல்லிட்டீங்கத்தேன்ன. போங்க. எனக்கு என் மவ நிலா இருக்கா. அவ என்ன பாத்துப்பா” என்றார்.
“யாரு என் அம்மாவா?” என்று ஆதி நக்கலாய் கேட்க, “க்கும் அவெளுக்கு அவ மாமன்ன பாத்துக்கவே நேரம் பத்தாது. நான் சொன்னது, என் இளநிலாவ” என்று கோவமாய் கூறினார்.
அந்தப் பெயரில், ஆதியின் மனதில் நொடிக்கும் குறைவாய், பஞ்சு மிட்டாய் கடையை பார்த்த பெண்ணவள் நினைவுக்கு வந்தாள்.
வீட்டிற்கு வந்த செல்வியோ வழக்கம் போல், புலம்புவதற்கு ஆள் இல்லாமல், நிலாவிடம் தான் ஆதி சொல்லியதை எல்லாம் சொல்லியிருந்தார்.
அதற்கடுத்த நாள், இளநிலாவை, அழைக்க வந்த செம்பாவிடமும் விஷயத்தை சொல்லியிருக்க, அவளோ இளநிலாவைத்தான் பார்த்தாள். அவளோ அமைதியாய், தன்னுடைய காலேஜ் பேக்கை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.
அவர்கள் வீட்டை தாண்டியதும், “ஆதியண்ணன் மனசுல வேற பொண்ணு இருக்கா? அது உனக்கு தெரியுமா?” என்று கேட்டாள்.
ஆனால் நிலாவோ பதில் சொல்லாது நடந்துக் கொண்டிருக்க, “ஏண்டி. உன்கிட்டத்தேன்ன கேக்குறேன். நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்?” என்று கேட்டாள்.
“பஸ்ஸு வந்துடும். சீக்கிரம் வா” என்று நிலா சொல்ல, “ஹேய் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன சொல்ற. நீ சொல்லு. உனக்கு தெரியுமா?” என்றாள் செம்பா.
அதில் “தெரியும்” என்று சொல்லியவள், நிற்காது நடக்க, “என்ன? அப்போ அதுனாலத்தேன் நேத்து. அவீக, சம்மதிக்க மாட்டாங்கன்னு அடிச்சு சொன்னீயா நீ” என்று கேட்டாள்.
“ஆமா” என்று சொல்லியவள், அப்போதும் நிற்க வில்லை. அதில் அவள் கையை எட்டிப் பிடித்த செம்பாவோ, “அப்போ ஆதியண்ணே மனசுல, இன்னொரு பொண்ணு இருக்கான்னும் தெரிஞ்சுத்தேண். நீ அவீகல மனசுல நெனச்சிட்டு இருக்கீயா” என்று அதிர்ச்சியாய் கேட்டாள்.
ஏனெனில் மற்றவர்களுக்கு வேண்டும் என்றால், நிலாவின் மனம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் செம்பாவுக்கு தெரியும். அவளின் பதினாறு வயதில் இருந்தே ஆதியின் மீது காதலை வளர்த்து வைத்திருக்கிறாள் என்று அவளுக்கு மட்டும்தான் தெரியும்.
நிலா அமைதியாய் இருக்கவும், “சொல்லுடி. தெரிஞ்சுமா நீ உன் மனசுல நெனச்சிட்டு இருக்க” என்றாள் செம்பா.
“ஆமா. இப்போ அதுக்கு என்ன?” என்று சிறு கோவத்துடன் அவள் கேட்க, ஏனோ அதை கேட்கும் போதே அவளுக்கு கண்கள் சற்று கலங்குவது போல் இருந்தது.
“கோட்டீயாடி புடிச்சிருக்கு உனக்கு. அவீக மனசுல நீ இல்லன்னு தெரிஞ்சும், எந்த கிறுக்கியாச்சும், இப்படி மனசுல ஆசைய வளத்துட்டு திரிவாளா” என்று கோவமாய் கேட்டாள் செம்பா.
“என் மாமா மனசுல நான் இல்லன்னு தெரியும். எப்பவும் இருக்க மாட்டேன்னும் தெரியும். ஆனா, என் மாமாத்தேன்ன அவரு. அவர மனசுல நினைக்கிறதுல என்ன தப்பு இருக்கு? அதுவும் போக, என்னிக்குமே அவர கட்டிக்கனும்னு நான் ஆசப்பட்டது இல்ல. இனியும் ஆசைப்பட மாட்டேன்” என்றாள் நிலா.
அவள் பேசுவதில், செம்பாவுக்குத்தான் அத்தனை ஆதங்கமாய் வந்தது. அவள் சொல்வதில் ஏதாவது கொஞ்சம் நியாயமாவது இருக்கிறதா?
(ஏம்மா நிலா. நீ என்ன சொல்ற? சத்தியமா எனக்கு புரியல. செரி. அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
இம்சிக்குமா?..
Keerthi S
athi nee unnoda appa maari nee after mrg nila pinnadi idhuku nu feel panni sutha pora da
deepika saravanan
enaku athi pechu pidikala enga nilaa va pidikalaya avanukku😡😡
Karthiga p
yathu adi love pandrana 🤔 vaipiliye 😌
Malathi Malathi
aga motham mamanu athai ponnum sernthu enga mandaiya urutta plan pannitenga nadathunga
Rasi Kavi
Enakkennamo intha marriage kathaiya nippadda than Aadhi ippidi solli iruppano nu thonuthu. Paakkalam enna nadakkuthu nu
Ammu Sathish
சூப்பர்
Rathi meena
enaku pudikala hero vera ponna pathutanu soltrathu 😏😏😏
Arockia Ammu
enakku romba kazhtama aagiduchu kannellam kalangiduchu hero innoru ponna pidikkumnu solrathai ennala accept pannikka mudiyala both hero’s not deserve both heroine’s antha season la avan love pannalanalum marriage pannikka aasai pattu phone la kadalai pottu oor suthura alavukku vanthan ithula sir virumburaru very good whatever in my view both of them not pure for both heroines because rendu nilavum manasula vera oruthangala ninaichathu kooda kidaiyathu but rendu herovum vera ponna marriage pannikka aasai padranga so their love not that much pure