இளந்தளிர் – 12

ஆதி, கடுப்பில் ரோட்டில் வந்து கொண்டிருக்க, நிலாவோ, எதையோ பார்த்தப்படி வேகமாய் ரோட்டை க்ராஸ் செய்ய, கடைசி நொடியில், அவளைப் பார்த்து, சடன் ப்ரேக் அடித்து நிறுத்தினான் ஆதிரன்.

அதற்குள், மாலதியும், செம்பாவும், “நிலா” என்று கத்தியிருக்க, நொடியில் நடக்கவிருந்த விபத்தை நினைத்து அதிர்ந்த இளநிலாவோ அப்படியே மயங்கி விழுந்தாள்.

அதில், வேகமாய் பைக்கை விட்டு இறங்கியவன், ஸ்டாண்டை கூட போடாது, அப்படியே விட்டுவிட்டு அவளிடம் ஓடினான்.

அதற்குள், செம்பாவும், மாலதியும் அவளிடம் சென்றிருக்க, இங்கே இவனுக்கோ ஒரு நொடி என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஏனெனில், அவன் அவளைப் பார்த்த மறு நொடியே, பைக்கை வளைத்து திருப்பியிருந்தான்.

அவன் பைக்கிற்கும், நிலாவுக்கும் இடையில் தாராளமாய் இடம் இருந்தது. அப்படி இருந்துமே அவள் மயங்கியிருக்க, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

“ஹேய் நிலா. இங்கப்பாரு” என்று செம்பா அவள் கன்னத்தை தட்ட, அதற்குள் அவன் யாரென்று தெரியாத மாலதியோ, “ரோட்டுல இப்படித்தான் கண் மண் தெரியாம ஓட்டிட்டு வருவீங்களா” என்றாள்.

அதில், இப்போது செம்பாவோ, “ஹேய் மாலதி” என்று தடுக்கப் பார்க்க, அவனோ இப்போது, “நான் ரோட்டுலத்தான் வந்துட்டு இருந்தேன். உங்க ப்ரண்ட் தான் குறுக்கால பாய்ஞ்சாங்க” என்றான் ஆதிரன்.

“என்ன? காலேஜ் ரோட்டுல இவ்ளோ ஸ்பீடா வருவீங்களா நீங்க? அவ யாரு தெரியுமா? அவ மாமா பையனுக்கு மட்டும் தெரிஞ்சா அவ்வளவுத்தான்” என்றாள் மாலதி.

அதைக் கேட்ட, ஆதியோ, இப்போது செம்பாவைப் பார்க்க, “ஐயோ! இப்படி ஆதியண்ணே, முன்ன வந்து நிப்பாகன்னு தெரியாம, நான் வேற மாலதிக்கிட்ட எக்கசக்க பில்டப்ப கொடுத்துட்டேன்னே” என்று தனக்குள் புலம்பியவள், மாலதியை தடுக்கப் பார்த்தாள்.

ஆனால் அவனோ, இப்போது, செம்பாவின் மடியில் கிடந்தவளைப் பார்த்தப்படி, “இப்போ உங்க ப்ரண்ட நான் தூக்கிட்டு போறேன். முடிஞ்சா, அவன்ன வந்து என்கிட்ட இருந்து கூட்டிட்டு போக சொல்லுங்க” என்றான்.

“ஹலோ. அவர பத்தி தெரியாம நீங்க” என்று மாலதி சொல்லி முடிக்கும் முன்னே, மாலதியின் பேக்கில் இருந்த தண்ணீரை எடுத்து இளநிலாவின் முகத்தில் தெளித்தான்.

அதில், அவளிடம் சிறு அசைவு தெரிய, “இளநிலா” என்று சிறு அழுத்தம் கூட்டி அழைத்தான் ஆதிரன்.

அவனின் சத்தத்தில், திடுக்கிட்டு கண்ணை முழித்தவள், அடுத்த நொடி எழுந்தமர்ந்தாள். அருகில் அவள் பேக்கில் இருந்து சிதறிய நோட்டை எல்லாம் அவன் எடுக்க, அதில் ஒரு நோட்டில் தானே இவள் ஆதிரன் என்று கிறுக்கி வைத்திருந்தாள்.

அதனால் வேகமாய் அவனை தடுக்க நினைத்து, அன்னிட்சையாய் அவன் கையைப் பிடித்து தடுத்தாள். அதில் அவன் அவள் பக்கம் திரும்ப, அதற்குள், “ஸ்” என்று கையை பிடித்தாள்.

அதன் பின்னே பார்க்க, கீழே விழுந்ததில், அவள் முழங்கையில் அடிப்பட்டிருக்க, வேகமாய், தன்னுடைய கர்ஷீப்பை எடுத்து, அதை அவன் துடைக்க, செம்பா அவள் நோட்டு மற்றும் பேக்கை எடுத்தாள்.

“ஹலோ. என்னப் பண்றீங்க நீங்க. அவ கைய விடுங்க” என்று மாலதி சொல்ல, நிலாவின் இடையோரம் கைக் கொடுத்து, அவளை தூக்கியிருந்தான் ஆதிரன்.

அதில் நிலா அதிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ ஏதோ சிறுமியை தூக்கி செல்வது போல், தூக்கி சென்று அருகில் இருந்த பார்க் பெஞ்சில் அமர வைத்தான்.

“ஹேய்” என்று மாலதி செல்லும் முன்னே, “ஹேய் வாய மூடுடி. அதுத்தான் நிலாவோட மாமா பையன்” என்றாள் செம்பா.

“என்னது” என்று அவள் அதிர்ச்சியாக, இங்கே ஆதியோ, சிறு கோவத்துடன், “இப்படித்தான் ரோட்ட க்ராஸ் பண்ணுவீயா நீ?” என்றான்.

“அத் அது” என்றவள் தலையை குனிந்துக் கொள்ள, “பஸ் அந்தப்பக்கமாத்தான்ன வரும். நீ எதுக்கு, இந்தப்பக்கம் ஓடுன” என்று புருவத்தை சுழித்தான்.

அதில் அவளின் பார்வையோ, அன்னிட்சையாய், அந்த ரோட்டை தாண்டி நின்றிருந்த பஞ்சுமிட்டாய் கடையைப் பார்த்தது. அவள் பார்வை சென்ற இடத்தை கவனித்தவனுக்கோ சிறு புன்னகை எட்டிப் பார்த்தது.

இருந்தாலும், அதை வெளிக்காட்டாது, கையில் இருந்த தண்ணீரை அவளுக்கு குடிக்க நீட்ட, அவளோ அவசரமாய் வாங்கி அதை குடித்தாள்.

அவளுக்கோ அத்தனைப் பதட்டம். “மெதுவா குடி” என்று அவன் சொல்ல, அதன் பின் அத்தனை மெதுவாய் குடித்தாள்.

“வேற எங்கையும் அடிப்பட்டிருக்கா” என்று ஆதி கேட்க, “ம்ஹூம்” என்று வேகமாய் தலையாட்டினாள்.

“ரோட்ட இப்படில்லாம் க்ராஸ் பண்ணக்கூடாது புரிஞ்சிதா?” என்று அவன் கேட்க, “ம்” என்று அதற்கும் தலையாட்டினாள்.

“வூட்டுக்கு எப்படி போவ” என்று அவன் கேட்க, “அத் அது” என்றவளோ, கீழே கிடந்த அவன் பைக்கைப் பார்த்தாள். “என் கூட வறீயா” என்று ஆதி கேட்க, சிறு அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

அதில் எதுவும் சொல்லாது, இப்போது அவளை விட்டு அவன் விலகி செல்ல, “என்னடி நடக்குது இங்க? இவ என்ன கிளிப்பிள்ளையாட்டம், அவரு சொல்றத எல்லாம் கேக்குறா” என்றாள் மாலதி.

“க்கும், இவ மட்டும் இல்ல. எங்க மொத்த ஊருமே, அவீக சொல்லிட்டா, மறு பேச்சு பேசாம செய்வாக” என்றாள் செம்பா.

“பாருடா. ம் பாக்கவும் செம்மையாத்தான் இருக்காரு” என்று மாலதி சொல்ல, நிலாவோ முறைத்தாள்.

“இங்க பேசுனது அவளுக்கு கேட்டிருச்சா என்ன? இப்படி மொறைக்கிறா” என்று மாலதி கேட்க, “அவ மாமன்ன பத்தி நீ மனசுல நினைச்சாக்கூட அவளுக்கு கேட்கும்” என்று சொல்லிய செம்பா நிலாவிடம் செல்ல, மாலதியும் சென்றாள்.

இங்கே பைக்கை நேரே நிறுத்தியவனோ, இப்போது ரோட்டை கடந்து அவள் கேட்ட பஞ்சு மிட்டாய் கடைக்கு சென்றான்.

இவன் வாங்கி கொண்டு வரும் போது, அங்கே கதிரவன் வந்திருக்க, இப்போது சென்றால் தேவையில்லாத சிக்கல் என்பதை புரிந்த ஆதியோ அப்படியே நின்றிருந்தான்.

அங்கே இளநிலாவுமே. அண்ணனைப் பார்த்ததும், உடனே, அவனுடன் கிளம்பிவிட்டாள்.

இப்போது கையில் பஞ்சுமிட்டாய் பாக்கெட்டோடு செம்பாவிடம் வந்தவனோ, “அவகிட்ட கொடுத்துடு” என்று அதை கொடுத்துவிட்டு அவன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.

“என்னடி? ஊரோட கட்டபொம்மன்னு சொன்ன. இப்படி பஞ்சுமிட்டாய் வாங்கி கொடுத்துட்டு போறாரு” என்று மாலதி கேட்க, “அவீக அத்தப்பொண்ணுக்கு வாங்கி கொடுத்துட்டு போறாரு. அதுல என்ன தப்பு இருக்கு” என்றாள் செம்பா.

“அப்போ இவங்களத்தான், நிலா கட்டிக்கப் போறாளா?” என்று மாலதி கேட்க, “அத நீ நிலாக்கிட்டத்தான் கேக்கனும்” என்று சொல்லிய செம்பாவும் சென்றிருந்தாள்.

வீட்டுக்கு வந்ததும், செல்வியோ, “இப்படியா விழுந்து எந்திரிச்சு வருவ. ரொம்ப வலிக்கிதா, ஆஸ்பத்திரிக்கு வேணும்னா போவோம்மா” என்று கேட்டாள்.

“அதெல்லாம் வேண்டாம்மா, வலிக்கலாம் இல்ல” என்ற நிலாவுக்கோ, ஆதி கட்டிவிட்ட, அந்த கர்ஷீப்பை கழட்ட விருப்பமில்லை. அதனாலையே ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்தாள்.

அன்னேரம் அங்கு வந்த செம்பாவோ, “இந்தாடீ” என்று பஞ்சுமிட்டாயை நீட்ட, ஆசையாய் வாங்கிக் கொண்டாள்.

அவர் அன்னை இருக்கவும், அவள் எதுவும் பேசாது, “இன்னும் சின்னப்பிள்ள கணக்கா, பஞ்சுமிட்டா வேணும்னு அடம்பிடிக்கிற அத்த” என்றாள் செம்பா.

“அத நெனச்சாத்தேன் எனக்கும் கவலையா இருக்கு. இவெள்ள ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்து, அவென் இவெள்ள எப்படி வெச்சு பாத்துப்பான்னு யோசிச்சாலே மனசு கெடந்து அடிச்சிக்கிது” என்றார் செல்வி.

“ம்மா” என்று சிறுமியாய் அவள் சொல்ல, அதற்குள் செம்பாவோ, “வெளி இடத்துல எதுக்கு அத்த கட்டிக் கொடுக்கிறீங்க. சொந்தத்துலையே, சொந்த ஊர்லையே கட்டிக்கொடுத்துட்டா, உங்க கண்ணு முன்னாடியே இருப்பாள்ள” என்றாள் செம்பா.

அதில் நிலாவோ செம்பாவை முறைக்க, “அவளுக்குன்னு இனியா ஒருத்தன் பொறந்திருக்கப் போறான். என்னோட கவல எல்லாமே நல்லவனா இருக்கனும். அம்புட்டுத்தேன்” என்று சொல்லியப்படி கிச்சனுக்குள் சென்றார்.

“ஏண்டி, ஆதியண்ணன விட, நல்லவர, இவீக பாத்திடுவாகளா” என்று செம்பா கேட்க, “ச் சும்மா சும்மா எதையாச்சும் சொல்லிட்டு இருக்காத. அம்மா கேட்டாங்கன்னா அவ்ளோத்தான்” என்றப்படி பஞ்சுமிட்டாயை சாப்பிட்டாள்.

“கொடுத்தவுடனே வாங்கிட்ட. ஆறு வாங்கி கொடுத்ததுன்னு கேக்க மாட்டீயா” என்று செம்பா கேட்க, நிலாவோ அமைதியாய் இருந்தாள்.

“என்னடி? கேக்க மாட்டீயா” என்று செம்பா கேட்க, “எனக்கு தெரியும்” என்றிருந்தாள் நிலா.

“அடிப்பாவி. யாரு, அந்த மாலதி சொன்னாளா” என்று செம்பா கேட்க, “அதெல்லாம் இல்ல. நான் கேட்டா, என் மாமா வாங்கி கொடுப்பாருன்னு எனக்கு தெரியும்” என்றாள்.

“அதேன் அம்புட்டு தெரியுதுல்ல. பொறவென்ன, அவ்ர்கிட்டையே போயி, அவர்த்தேன் வேனும்னு நீ கேட்டா, கொடுக்காமலா போயிடுவாரு” என்றாள்.

அதைக் கேட்டதும், நிலாவின் முகம் வாடிவிட, “என்னடி? அண்ணன்கிட்ட நீ போய் சொல்லு. பொறவு உன் அண்ணன் இல்ல. இந்த ஊரையே எதிர்த்துனாலும், உன்னை கட்டி தூக்கிட்டு போயிடுவாரு” என்றாள்.

“ச் லூசு மாதிரி பேசாத. என் மனசுல அப்படில்லாம் எதுவும் இல்ல” என்று அதையேத்தான் கூறினாள். “அப்போ நெஜமாவே உன் மனசுல ஆதியண்ணே இல்ல. அப்படித்தேன்ன” என்றாள் செம்பா.

ஏனோ சட்டென்று அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் அமைதியாய் இருக்கவும், “அப்போ சரி. நான் வந்த வேலைய பாக்குறேன்” என்ற செம்பாவோ, “செல்வியத்த” என்றாள்.

“ஹேய் இப்போ எதுக்கு அவீகள கூப்பிடுற” என்று நிலா முடிக்கும் முன்னே, “இந்தாடா, இந்த காப்பிய குடி” என்றப்படி அங்கு வந்தார் செல்வி.

“அத்தை. உங்ககிட்ட பேசத்தேன் வந்தேன். ஆதியண்ணே இருக்காங்கள்ல” என்று செம்பா ஆரம்பிக்க, நிலாவோ பதட்டமாய் தோழியைப் பார்த்தாள்.

“ஏன் ஆதிக்கு என்ன? மறுபடியும், இவ அண்ணன். அவன்கிட்ட போயி ஏதாச்சும் ப்ரச்சன பண்ணிட்டான்னா” என்று பதட்டமாய் கேட்டார்.

“அதெல்லாம் இல்லத்த. எங்க ப்ரோபசரோட அக்கா பொண்ணுக்கு வரன் பாத்துட்டு இருக்காங்களாம். பொண்ணு வீட்டுல நல்ல வசதியாம். எங்க மேடமுக்கு. ஆதியண்ணன ரொம்ப பிடிச்சிருக்காம். அதான் வீட்டுல வந்து பேசலாமான்னு கேக்குறாங்க” என்றவள், விவரத்தை எல்லாம் கொட்டியிருந்தாள்.

அதில் நிலாவுடைய மனம் நெருப்பாய் எரிந்ததை, செல்வி அறியவில்லை. ஆனால் செம்பா தோழியின் முகமாற்றத்தை கவனித்தப்படித்தான் இருந்தாள்.

அவள் சொல்லியதை எல்லாம் கேட்ட செல்வியோ, “எங்க அக்காவும், அவன்கிட்ட கல்யாணத்த பண்ணிக்க சொல்லித்தேன் சுத்திட்டு இருக்கு. அவன் மனசுல என்ன இருக்கோ? செரி அக்காக்கிட்ட. அவீககிட்ட வேணும்னா பேச சொல்றேன். அவங்க எதுவும் நம்பர் கொடுத்தாங்களா” என்று கேட்டார்.

“ஆமா. நிலாக்கிட்டத்தான் இருக்கு” என்று செம்பா சொல்ல, நிலாவுக்கோ அதை எடுத்து கொடுக்க கூட முடியவில்லை.

“எங்க வச்சிருக்க நிலா” என்று அன்னை கேட்கவும். அவள் தன் பேக்கை காட்ட, செம்பாவே சென்று, அதை எடுத்து செல்வியிடம் கொடுத்தாள்.

நிலாவோ அமைதியாகவே இருக்க, செல்வியோ, “செரி. இப்பவே போயி என் அக்காட்ட பேசிட்டு வந்துடுறேன். பொறவு, இவ அண்ணன், இல்ல அப்பா வந்துட்டா ப்ரச்சனையாகிடும்” என்று கிளம்பினார்.

அவள் சென்றதும், இப்போது செம்பாவோ, “என்ன? என் மேல கோவமா இருக்கீயா என்ன?” என்று கேட்டாள்.

“என் மாமாக்கு, அவீகள பிடிக்காது” என்று நிலா சொல்ல, “என்ன” என்று புரியாது கேட்டாள் செம்பா.

ஆனால் நிலாவோ பதில் சொல்லாது அவளுடைய அறைக்கு சென்றுவிட்டாள். “என்ன இவ? இப்படி நம்ம ஏதாச்சும் பண்ணா, அவங்க அம்மாக்கிட்ட வேண்டாம்னு சொல்லுவான்னு பாத்தா, இப்பவும் இப்படியே இருக்கா” என்று தனக்குள் புலம்பியப்படி செம்பா சென்றுவிட்டாள்.

இங்கே தாமரைக்கோ அத்தனை வருத்தம். “ஏண்டி? எம் பேரனுக்கு, உன் பொண்ண கட்டி வைக்கனும்னு தோணவே இல்லையா? நீயே அவெனுக்கு பொண்ண பாத்துட்டு வந்து நிக்குறவ” என்றார்.

“அட என்னக்கா, எல்லாம் தெரிஞ்சு நீயே இப்படி பேசுனா எப்படி? அதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது. நடக்காதது மேல எல்லாம் ஆசைய வளத்துக்க கூடாது. பொண்ணு நல்லப்பொண்ணா இருந்தா, பாத்து முடிக்கா. வசதியான வீட்டு பொண்ணுன்னு சொன்னாங்க. நம்ம ஆதிக்கு பொருத்தமா இருப்பான்னு தோணுது” என்று சொல்லிவிட்டு நிமிர, அங்கே நின்றிருந்தான் ஆதி.

(ரைட்டு அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

இம்சிக்குமா?..

Author:    1 Sarmi SS
Comments   4

*** இளந்தளிர் – 12 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com