“என்ன ஆதி சார்? இப்ப வந்து இப்படி சொல்றீங்க?” என்று தியா பதட்டமாக கேட்க, “பிளீஸ் தியா, நீ தான் கொஞ்சம் நித்திக்கு புரிய வைக்கனும்” என்றான் ஆதி.
“சார், ஒரு ஐம்பது ரூபாய்க்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துட்டு எரிமலைக்குள்ள குதிக்க சொல்றதெல்லாம் அநியாயம்” என்று அவள் சொல்ல, “இல்ல தியா, நானே நித்திகிட்ட சொல்லிருப்பேன், ஆனா அவளைப் பத்தி தான் உனக்கே தெரியுமே? ஏற்கனவே கோவத்துல இருக்கா? இப்பப் போயி நான் இந்த விசயத்தை சொன்னா அவ எப்படி எடுத்துப்பான்னே தெரியல” என்றான்.
“ம், சரி, சரி, உங்களைப் பார்த்தாலும் கொஞ்சம் பாவமாத்தான் இருக்கு! அதனால ட்ரைப் பண்ணி பார்க்கிறேன்” என்று அவள் சொல்ல, “சரி தியா, எனக்கு சூட்டிங்கு லேட் ஆயிருச்சி” என்று ஆதி சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்தான்.
“ஆதி சார், ஒரு நிமிஷம், நேத்து அந்த பிளட் கொடுத்தது” என்று தியா விசயத்தை சொல்ல வந்தாள்.
அதற்குள் ஆதியின் மொபைலுக்கு வாசுவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“என்ன வாசு கால் பண்றான்?” என்று தனக்குள் யோசித்தவன், தியாவைப் பார்த்து, “ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு மொபைலை அட்டன்ட் செய்து பேசினான்.
“சொல்லுங்க வாசு, இல்ல இல்ல ஆஞ்சநேயர்” என்று ஆதி கிண்டலாக சொல்ல, “சார், நீங்க வேற, ஆர்ட் டேரக்டர் கிட்ட சூட்டிங் லொகேஷனுக்கு ஒரு பிளேஸ் கேட்டிருங்க தான? நான் இப்ப அங்க தான் இருக்கேன், நீங்களும் வந்தா பார்த்திடலாம்” என்றான் வாசு.
“ஓ ஓகே ஓகே வாசு, எனக்கு இப்ப அர்ஜண்டா ஒரு ஆட் சூட் இருக்கு, சோ நான் அத முடிச்சிட்டு அங்க வரேன்” என்று ஆதி கூறினான்.
“சார் அப்போ நான் லொகேஷன் அனுப்புறேன், நீங்க ஆர்ட் டேரக்டர் கூட போயி பார்த்திட்டு வந்திருங்க” என்று வாசு கூறினான்.
“சரி, சரி, வாசு, நீதான் உன் ராமன் போட்ட கோட்ட தாண்ட மாட்டீயே? நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஆதி போனை வைத்தான்.
“ஓ, வாசுவும், ஆதி சாரும் இவ்வளவு க்ளோஸா?” என்று தியா தனக்குள் யோசித்தாள். “ம், ஒகே தியா, நான் கிளம்புறேன்” என்று ஆதி அங்கிருந்து கிளம்பினான்.
ஆதி சென்ற பின், “நல்ல வேள தியா, நீ இப்ப தீரா சார் பத்தி எதையும் ஆதி சார் கிட்ட சொல்லல?” என்று தியா தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
அதன் பின் தீரா அன்று மிகுந்த ஆர்வமாக சூட்டிங் ஸ்பாட் கிளம்பி கொண்டிருந்தான்.
“என்னாச்சு வாசு? எங்க போயிருந்த?” என்று தீரன் சிரித்த முகமாக கேட்டான். “இல்ல சார், அது” என்று வாசு தயங்கினான்.
“என்ன வாசு? நீ ஏன் இப்படி தயங்குற? உன் பிரண்டுக்கு எதுவும் ஹெல்ப் பண்ண போனீயா?” என்று தீரன் தன் தலையை வாரிக்கொண்டே கேட்டான்.
“அதெப்டி சார் உங்களுக்கு அதுக்குள்ள?” என்று வாசு தடுமாறினான். “ஏய், கூல் மேன். நம்ம பீல்டை பொறுத்தவரைக்கும் யாரும் யாருக்கும் நிரந்தர நண்பனும் இல்ல நிரந்தர எதிரியும் கிடையாது. சோ பிஸ்னஸ் இஸ் தி பிஸ்னஸ் தட்ஸ் ஆல்!” என்று தீரன் கூலாக கூறினான்.
“சாரி சார்” என்று வாசு ஏதோ சொல்ல வந்தான்.
“வாசு, நீ என் வேலையில ஏதாச்சும் தப்பு பண்ணா நீ சாரி கேட்கிறதுக்கு கூட என் முன்னாடி நிக்க முடியாது. ஆனா இது உன்னோட தனிப்பட்ட வேலை, அதுக்காகலாம் நீ சாரி சொல்ல வேண்டிய அவசியமே இல்ல” என்று தீரன் கூலாக சொல்லிவிட்டு தன் காரை நோக்கி சென்றான்.
கார் கதவில் கையை வைத்த தீரன் பின் திரும்பி, “பட் வாசு, அந்த தனிப்பட்ட வேலையால என் வேலை பாதிக்கப்பட்டா ஐ கான்ட்” என்று சொல்லிவிட்டு காரில் ஏறினான்.
“இவர் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே?” என்று வாசு மனதினுள் சொல்லிக் கொண்டான்.
அதே நேரம் ஸ்ரீ தியாவிற்கு தொடர்ந்து கால் செய்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் போனை அட்டன்ட் செய்த தியா, “ஹலோ மேம்” என்று ஒரு வார்த்தை பேசும் முன், “என்ன தியா? எங்க போன? உனக்கு எவ்வளவு டைம் கால் பண்றது? சூட்டிங்கு வேற லேட் ஆயிருச்சி! போறப்ப எங்க போறேன்னு சொல்லிட்டு போகலன்னாக்கூட எப்ப வருவேன்னு சொல்லிட்டு போயிருக்கலாமே! புரோடியூசர் உனக்கு ட்ரை பண்ணி பார்த்து லைன் கிடைக்கலன்னு எனக்கே கால் பண்ணிட்டாரு. இப்ப எங்க இருக்க நீ?” என்று ஸ்ரீ கடகடவென பொரிந்தாள்.
“ஐயோ, கூல், கூல் மேம். கொஞ்சம் கேப் விட்டாதான பதில் சொல்ல முடியும்” என்று தியா கூறினாள். “டோன்ட் பிளே தியா, வேர் ஆர் யூ?” என்று ஸ்ரீ சற்று அதட்டலாகவே கேட்டாள்.
“ம், பிகைன்ட் யூ மேம்” என்று தியாவும் அதே கேலியுடன் கூறினாள். “வாட்? என் பின்னாடியா?” என்று ஸ்ரீ வேகமாக திரும்பி பார்த்தாள்.
“சாரி, சாரி மேம், கொஞ்சம் லேட் ஆயிருச்சி” என்று தியா தன் காதுகளைப் பிடித்து மன்னிப்பு கேட்டாள். அவள் முகத்தைப் பார்த்த ஸ்ரீயும் சற்று நார்மலாகி, “சரி வா, ஒன்ஸ் அகைன் இப்படி பண்ணாத” என்று கூறினாள்.
அதன் பின் இருவரும் அவர்கள் காரில் ஏறி சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றனர். செல்லும் வழியில் தியா ஸ்ரீயிடம் ஆதி கூறியதைப் பற்றி பேச முயற்சித்தாள். ஆனால் ஸ்ரீ தியாவை பேச விடாமல் இன்று தன்னுடைய செடியூல்லைப் பற்றி கேட்டுக் கொண்டு வந்தாள். ஒரு கட்டத்தில் தியா மனதினுள்,“சுத்தம், இன்னிக்கு ஆதி சார் செத்தாரு” என்று நினைக்க மட்டுமே அவளால் முடிந்தது.
இவர்களின் கார் உள்ளே நுழையும் போதே “ஹீரோயின் வந்தாச்சு” என்ற சத்தம் தான் கேட்டது.
“வாங்க, வாங்க மேம், உங்களுக்காகத்தான் வெயிட்டிங். காஸ்டியூம் மட்டும் சேஞ் பண்ணிட்டு வந்திருங்க” என்று அஸிஸ்டன்ட் டைரக்டர் கூறினார்.
“ம், ஒகே விஜய். பை தி வேய், கன்டினியூட்டி காஸ்டியூம் தான?” என்று ஸ்ரீ தன் சந்தேகத்தை கேட்டாள். “இல்ல மேம், பைனல் ஷாட்” என்று அஸிஸ்டன்ட் டைரக்டர் சற்று நினைவுப் படுத்தினார். “ஓ, யா, ஒகே” என்று ஸ்ரீயும் தியாவும் கேரவானுக்கு சென்றனர்.
அங்கே காஸ்டியூம் டிசைனரும் அவருடைய அஸிஸ்டன்டும் பதட்டமாக நின்றுக் கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த தியா, “என்னாச்சு ஸ்ரேயா? ஏன் இங்க நிக்கிறீங்க?” என்று கேட்டாள்.
“அது வந்து தியா!” என்று காஸ்டியூம் டிசைனர் தயங்கினார். “என்னாச்சு ஸ்ரேயா? எனி திங் சீரியஸ்?” என்று ஸ்ரீ கேட்டாள். “அது வந்து மேம், உங்களுக்குன்னு ஸ்பெஷலா டிசைன் பண்ண காஸ்டியூம் சைஸ் வேரி ஆயிருச்சி. அதை சரி பண்ண ஒன் டே ஆகும். இப்போ என்ன பண்றதுன்னு தெரியல. நானும் என் பொட்டிக்ல இருந்து எல்லா காஸ்டியூமும் கொண்டு வந்து செக் பண்ணிட்டேன், பட் எதுவும் சூட் ஆகல” என்று ஷ்ரேயா கூறினாள்.
“ம், ஒகே ஷ்ரேயா, அப்போ நான் வேணும்னா டைரக்டர்ட சொல்லி இந்த சீன்ன நாளைக்கு மாத்த சொல்றேன்” என்று ஸ்ரீ கூறினாள்.
“இல்ல மேம், இன்னிக்கோட ஹீரோ சாருக்கு கால் சீட் முடியுது. அதனாலத்தான் இந்த சீனே இன்னிக்கு சேஞ் பண்ணிருக்காங்க” என்று ஷ்ரேயா கவலையாகக் கூறினாள்.
“அச்சோ? இப்ப என்னப் பண்றது?” என்று ஸ்ரீ யோசிக்கும் போதே, “எக்ஸ் கியூஸ் மி மேம், உங்களுக்கு காலையிலேயே ஒரு பார்சல் வந்திச்சு!” என்று ஒரு கவரை அஸிஸ்டன்ட் டைரக்டர் நீட்டினார்.
“ம், ஒகே” என்று ஸ்ரீ சொல்லிவிட்டு தியாவிடம் அந்த கவரை வாங்க சொன்னாள். “சரி ஸ்ரேயா! நீங்க கொண்டு வந்திருக்க காஸ்டியூம் எதுவும் எனக்கு மேட்ச் ஆகுதான்னு நான் செக் பண்றேன்” என்று ஸ்ரீ சொல்லிவிட்டு கேரவனுக்குள் நுழைந்தாள்.
அவளைத் தொடர்ந்து மற்ற மூவரும் கேரவன் வண்டிக்குள் சென்றனர். அனைத்து உடைகளையும் ஸ்ரீ பார்த்தாள், ஆனால் எந்த உடையும் அவளுக்கு சரியாக பொருந்தவில்லை!
“ஸ்ப்பா, முடியல” என்று தியா தன் தலையில் கை வைக்க, அப்போது தெரியாமல் அந்த பார்சலில் இருந்த கவர் கீழே விழுந்தது.
அதை தியா எடுக்க முயற்சிக்க, அதனுள்ளே இருந்த பிங்க் நிற கவுன் வெளியில் மொத்தமாக விழுந்தது.
அதைப் பார்த்த ஸ்ரீ, “வாவ்” என்று தன்னை மறந்து கூறினாள். அப்போதே தியாவில் ஆரம்பித்து மீதி இருவரும் அந்த ஆடையைக் கவனித்தனர்.
அதை தன் கையில் எடுத்துப் பார்த்த ஸ்ரீ, “இந்த ட்ரஸ் நல்லா இருக்கே!” என்று கூறினாள். “ஆமா மேம், இது கண்டிப்பா செட்டாகும். ஆனா இது யார் சென்ட் பண்ணது?” என்று தியா யோசனையாக கேட்டாள்.
“மே பி என் ஸ்டூடியோல இருந்து கூட அனுப்பியிருக்கலாம்” என்று ஷ்ரேயா கூறினாள்.
“வாட்டெவர் மேம், நீங்க இதை போட்டு பாருங்க” என்று ஸ்ரேயாவின் அஸிஸ்டென்ட் கூறினாள்.
அதற்குள், “மேம், ரெடியா?” என்று வெளியில் இருந்து அஸிஸ்டன்ட் டைரக்டர் விஜய் கேட்டான்.
“ஒகே தியா! நீங்க மூனு பேரும் போங்க, நான் ரெடியாகிட்டு வரேன்” என்று மூவரையும் அனுப்பினாள்.
அதே நேரம் படப்பிடிப்புக்கான வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடந்துக் கொண்டிருந்தது.
“என்ன சார் சொல்றீங்க? இப்படி லாஸ்ட் மினிட்ல சொன்னா என்ன அர்த்தம்?” என்று படத்தின் ஹீரோ இயக்குனரிடம் கார சாரமாக கேட்டான்.
“ஆல்ரெடி உங்ககிட்ட சொல்லிருந்தோமே சார்” என்று இயக்குனர் கூறினார். “ஆமா சொன்னீங்க, ஆனா இந்த ப்ரீஸ்ல அவர் வருவாருன்னு சொல்லவே இல்லையே” என்று சற்று பதட்டமாக ஹீரோ கேட்டார்.
அதற்குள், “என்ன பிரச்சனை? ஹீரோ சார் என்ன சொல்றாரு?” என்று கேட்டுக் கொண்டே புரோடியூசர் வந்தார்.
“இல்ல சார், அது” என்று டைரக்டர் சற்று தயங்கினார். “அவருக்கு கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க டைரக்டர்! இந்த சீன்காக மட்டும் தான் இந்த படத்தையே நான் புரோடியூஸ் பண்றேன்” என்று தெள்ளத் தெளிவாக கூறினார்.
அதன் பின் ஹீரோ மறு வார்த்தை பேசாமல் அமைதியாக அங்கிருந்து சென்றார்.
சரியாக அந்த ஹீரோ அங்கிருந்து நகர, அந்த இடத்தில் நம் தீரன் வந்து நின்றான். தீரனைப் பார்த்து சந்தோஷப்பட்ட புரோடியூசர், “வாவ், கிரேட் டூ மீட் யூ தீரா” என்று கூறினார்.
“யா, பட் உங்களுக்கு ஜஸ்ட் ஒன் ஹவர் தான் சார் பர்மிஷன் கொடுத்திருக்கேன்” என்று தீரன் கூறினான்.
“ம், எஸ் தீரா, ஐ நோ. ஆல்ரெடி எல்லாம் ரெடி, நீங்க வர்றதுக்காகத்தான் வெயிட்டிங்” என்று புரோடியூசர் கூறினார்.
“அப்போ ஸ்டார்ட் பண்ணலாம்” என்று தீரன் கூறினான். “ஹீரோயின குயிக்கா வர சொல்லுங்க” என்று புரோடியூசர் அவசரப்படுத்தினார்.
“சார், நான் முதல்ல தீரா சாருக்கு குளோசப் ஷாட் எடுத்துக்கிறேன்” என்று டைரக்டர் கூறினார்.
அதன் பின் டைரக்டர் தீராவிடம் சென்று, “சார், இது தான் சீன், ஹீரோயின் வருவாங்க! அவங்களப் பார்த்து நீங்க ப்ரீஸ் ஆகுறீங்க! அதே மாதிரி அவங்களும்” என்று ஏதோ கூற வந்தார்.
ஆனால் அவரை பேச விடாமல், “டைரக்டர், சீன் நீங்க சொல்ல வேணாம், நான் செய்றேன், நீங்க அத பிக்ஸ் பண்ணிக்கோங்க” என்று தீரன் கூலாக கூறினான்.
“சுத்தம், இன்னிக்கு சூட் நடந்த மாதிரித்தான்” என்று விஜய் மனதில் நினைத்துக் கொண்டான்.
“ஒகே, ரெடி, ஸ்டார்ட், ஆக்க்ஷன்” என்று டைரக்டர் சொல்வதற்கும், சரியாக அந்த பனி மூட்டங்களுக்கு நடுவில், “வந்துட்டேன் சார்” என்று சொல்லிக்கொண்டு ஸ்ரீ அந்த பிங்க் நிற கவுனில் தேவதைகளின் செல்லப் பிள்ளையாய் வருவதற்கும் சரியாக இருந்தது.
ஒரு நொடி அங்கு நின்றிருந்த அனைவருமே ஸ்ரீயின் அழகில் மெய் மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். சுற்றி இருந்தவர்களின் பார்வையிலேயே தீரன் மெதுவாக திரும்பினான்.
ஒரு நொடி அவன் கண்கள் ஸ்ரீயின் அழகில் இமைக்க கூட முடியாமல் தடுமாறியது.
(ஸ்ரீயின் அழகில் மயங்குவானா தீரன்? இல்லை தீரனின் வலையில் வீழ்வாளா ஸ்ரீ? அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அப்புறம் அடுத்த எபிசோட்ல இருந்து, எபிசோட்ஸ் எல்லாம் லாக் ஆக ஆரம்பிச்சிடும். இண்டர்னேசனல் யூசர்ஸ். மோஸ்ட்லி debit/credit card use பண்ணி pay பண்ணுங்க. உங்களுக்கு pay பண்றதுலையோ, இல்ல சப்ஸ்கிரிப்சன் பண்றதுலையோ ப்ராபளம் இருந்தா lovebeatnovels@gmail.com க்கு மெயில் பண்ணுங்க. இல்லன்னா ஹெல்ப்லைன் வாட்சப் நம்பர் +916374401933 நம்பருக்கு வாட்சப் பண்ணுங்க. உடனே எங்க டீம் சரி பண்ணுவாங்க. அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
மாயம் செய்வானோ?..
Keerthi S
semma scene ❤
deepika saravanan
super
Anitha Satheesh
nice