“சார், உங்கள பார்க்க நம்ம நரேன் சார் வந்திருக்காரு” என்று வாசு சொல்ல, “என்ன நம்ம புரோடியூசரா? வர சொல்லு” என்று பாதி சூட்டிங்கை நிறுத்திவிட்டு அவன் வேகமாய் சென்றான்.
அதைப் பார்த்த சிலர், “என்னது நம்ம ஹீரோக்கு இப்படியெல்லாம் ஒரு புரோடியூசருக்கு மரியாதை கொடுக்க தெரியுமா?” என்று கேட்க, “ஏய், நரேன் சார் யாருன்னு தெரியுமா? அவர் தான் நம்ம தீரா சாருக்கு முதல் ஹிட் படம் கொடுத்தது” என்றான் ஒருவன்.
அதற்குள் இன்னொருவனோ, “அதுவும் அதுக்கு பேர் மரியாத எல்லாம் இல்ல, சாருக்கு அவர ரொம்ப பிடிக்கும்” என்றான்.
“வாங்க, வாங்க, நரேன் சார். பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு” என்று தீரா கேட்க, அவரோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
“என்னாச்சு சார்? வாங்க முதல்ல” என்று கேரவானுக்கு அழைத்து சென்றவன், வாசுவிடம் இருவருக்கும் குடிக்க சில ஜூஸ்களை வர சொல்லிவிட அவன் அங்கிருந்து சென்றான்.
அவர் அப்போதும் அமைதியாக இருக்க, “என்ன சார்? எதுவும் பண பிரச்சனையா? ஏன்னா நானும் கேள்வி பட்டேன், லாஸ்டா நீங்க எடுத்த படங்கள் பெருசா ஓடலன்னு. அதனாலும் எதுவும் பிரச்சனையா?” என்று அவர் முகத்தை வைத்தே கண்டுப்பிடித்து கேட்டான்.
“பண உதவி கேட்டு உன்கிட்ட வரலப்பா. ஆனா எனக்கு நீ வேற ஒரு உதவி பண்ணனும்” என்று நரேன் கேட்க, “ம், நீங்க ஏன் அத உதவின்னு சொல்றீங்க? அது என்னோட கடமை, என்னை செய்யனும்னு சொல்லுங்க” என்றான் தீரா.
“என் புரோடக்க்ஷன்ல நீ ஒரு படம் பண்ணித்தரனும் பா” என்று தயக்கத்தோடு அவர் கேட்க, “அட என்ன சார் நீங்க? இத கேட்கிறதுக்கு எதுக்கு இவ்வளவு தயக்கம்? ஒரு படம் என்ன, பத்து படம் பண்ணித் தரேன்” என்று தீரா சொல்ல, சரியாக அன்னேரம், வாசு ஜூஸ் கிளாஸுடன் அங்கு வந்தான்.
“உண்மையாவா?” என்று நரேன் ஆச்சர்யமாக கேட்க, “நீங்க இவ்வளவு சர்பிரைஸ் ஆகுறதுக்கு எதுவுமே இல்ல. நீங்க ஒரு கதைக்கு புரோடியூஸ் பண்றீங்க அப்படின்னா அது சூப்பராத்தான் இருக்கும். நீங்க எனக்கு இன்னொரு ஹிட் படம் தரேன்ன்னு சொல்லுறத நான் வேணாம்னா சொல்லுவேன்? எப்ப சூட்டிங்னு சொல்லுங்க வந்துடறேன்” என்றான் தீரா.
“உண்மையாவே ரொம்ப நன்றி” என்று நரேன் சொல்ல, “அட என்ன பாஸ் நீங்க வேற? இப்படி பொசுக்கு பொசுக்குன்னு தாங்க்ஸ் சொல்லிட்டு! இதுக்கு படத்தோட சக்ஸஸ் பார்டில எக்ஸ்ட்ரா கவனிச்சா போதும்” என்று அவன் கண்ணடித்து கேலியாய் கூறினான்.
அதற்குள் வாசு வந்து, “ஆமா சார், டைரக்டர் யாரு? இல்ல டைரக்க்ஷனும் நீங்களே பார்க்க போறீங்களா?” என்று விளையாட்டாக கேட்க, “ம், அட சொல்ல மறந்துட்டேனே! நம்ம ஆதித்யா தான்பா” என்றார்.
“ம், நாட் பேட். ஒகே, நீங்க வந்த மேட்டர் முடிஞ்சிருச்சின்னா நம்ம லஞ்சுக்கு வெளிய போகலாம்” என்று தீரன் சொல்ல, “இல்ல, இருக்கட்டும்” என்று அவர் தயங்கினார்.
“நோ வேய்! கண்டிப்பா இன்னிக்கு லஞ்ச் சாப்டுத்துதான் போகனும்” என்று தீரன் சொல்ல, அவரும் மறுப்பு சொல்லாமல் சம்மதித்தார்.
இங்கே ஸ்ரீநிதி என்ன செய்வது என்று புரியாமல் திணறிக்கொண்டிருக்க, அந்நேரம் இதை ஏதும் அறியாத ஆதி அவளிடம் சமாதானம் பேச வீட்டிற்கு எதார்த்தமாக வந்தான்.
அவனைப்பார்த்ததும் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அவனை சூழ்ந்தனர். ஏற்கனவே அவள் என்ன சொலது என்று திணறிக் கொண்டிருந்தாள். இவனின் வருகை அவர்களுக்கு சக்கரைப்பொங்கலையும் இவளுக்கு மிளாகாய் வத்தலையும் தந்தது.
“வாட் இஸ் திஸ், தியா? ஆதி இப்ப இங்க எதுக்கு வந்தாரு?” என்று ஸ்ரீநிதி கோவமாக கேட்க, “ஐயோ மேம், பிராமிஸா எனக்கு எதுவும் தெரியாது” என்று மனதினுள் புலம்பியவள் ஸ்ரீயை பாவமாய் பார்த்தாள்.
அதற்குள் ஸ்ரீயும் கீழிறங்கி வர, ஒவ்வொருவரும் அவரவர் இஷ்டத்திற்கு கேள்விகள் கேட்க, ஒரு கட்டத்தில், “உங்களுக்கான பதில ஒரு பத்து நிமிஷத்துல வந்து சொல்றோம்” என்றான் ஆதி.
அதைக் கேட்டு ஸ்ரீக்கு தான் பற்றிக்கொண்டு வந்தது. அவளும் வேறு வழியில்லாமல் அவனுடன் செல்ல, “இங்கபாரு நித்தி, எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். இதை நானும் நிறையா டைம் சொல்ல நினைச்சிருக்கேன், ஆனா சொல்ல முடியாம போயிருச்சி. என்னிக்கா இருந்தாலும் நீ ஒருத்தர கல்யாணம் பண்ணப்போறதான? அது ஏன் நானா இருக்க கூடாது? நான் இந்த சந்தர்ப்பத்துல இப்படி கேட்கக்கூடாது, இருந்தாலும் எனக்கு இத விட்டா வேற வழி தெரியல, அதான் சொல்லிட்டேன். நீ டைம் எடுத்துக்கோ, உனக்கும் என்னை பிடிச்சிருந்தா எஸ் சொல்லு, இல்லன்னா கீழ இருக்கிற பத்திரிக்கைக்காரங்களை நான் சமாளிச்சிக்கிறேன்” என்று சொல்லியவன் அங்கிருந்து கீழே சென்றான்.
இவளுக்குத்தான் என்ன முடிவு எடுப்பது என்றே புரியவில்லை. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் திருமண முடிவை எடுப்பது சரியா தவறா என்று எதுவுமே புரியவில்லை.
ஆனால் அவளுக்கு அப்போது தோன்றியது ஒன்றுத்தான், இதிலிருந்து தப்பித்தால் போதும் என்பதுதான். தியா கூறியதையும் நினைத்துப் பார்த்தவள் ஒரு முடிவை எடுத்தாள்.
கீழே சென்ற ஆதி பத்திரிக்கையாளர்களின் முன், “எங்களுக்குள்ள நீங்க நினைக்கிற மாதிரி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்த ஸ்ரீநிதி, “சீக்கிரம் எங்களோட என்கேஜ்மன்ட் தேதிய சொல்றோம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
ஆதிக்கு ஆச்சர்யம் என்றால் நம் தியாவுக்கோ மயக்கம் வராத குறைத்தான்.
அங்கே லஞ்ச் முடித்து திரும்பும் போதே வாசு அந்த அதி முக்கிய கேள்வியைக் கேட்டான்.
“ஆமா சார், கதை என்ன, டைரக்க்ஷன் யாரு, ஏன் காமெடிக்கு யாருன்ற வரைக்கும் சொன்னீங்களே? ஆனா இந்த படத்தோட ஹீரோயின் யாருன்னு சொல்லவே இல்லையே” என்று வாசு கேட்டான்.
“அட ஆமப்பா, அத மறந்துட்டேன் பாரு. நம்ம ஸ்ரீநிதி” என்று அவர் சொல்ல, காரை ஓட்டிக்கொண்டிருந்த தீரன் சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.
"என்னாச்சு தீரன்?” “சார்?" என்று இருவரும் ஒரே சமயத்தில் கேட்க, "என்ன பேர் சொன்னீங்க?" என்று கேட்டான்.
"ஸ்ரீநிதி, லாஸ்டா அந்தப்பொண்ணு நடிச்ச படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிச்சிருக்கு" என்று நரேன் சொல்ல, "அவங்கத்தான் ஹீரோயின்னு முடிவு பண்ணிட்டீங்களா?" என்று கேட்டான்.
"ஏன் பா, உனக்கும் அந்த ஹீரோயினுக்கும் எதுவும் பிரச்சனையா?" என்று நரேன் சந்தேகமாக கேட்க, "ஹா ஹா, இந்த தீரன் கூட பிரச்சனை பண்ற அளவுக்கு அந்த ஹீரோயின் இன்னும் வளரலன்னு நினைக்கிறேன். பை தி வே, கதையில என்னோட ரோல் என்ன அப்படின்னு பாப்பேன்னே தவிர, ஹீரோயின் யாருன்னு பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. பிகாஸ் நான் தான் ஹீரோன்னு சொன்னாலே எல்லா ஹீரோயினும் லைன்ல வந்து நிப்பாங்க" என்று அவன் அசால்டாக கூறினான்.
"இல்லப்பா, உனக்கு பிடிக்கலன்னா" என்று நரேன் இழுக்க, "நோ நோ வேய்! நீங்க தாராளமா அந்த ஸ், ஸி, ஸ்ரீயவே போடுங்க" என்றான் தீரன்.
"தட்ஸ் மை பாய்" என்று நரேன் சொல்ல, "பார்த்து சார், யாராச்சும் இத கேட்டு தப்பா எழுதிடப் போறாங்க" என்று வாசு கிண்டலடிக்க, மூவரும் சிரித்தனர்.
ஆனால் தீரன் மனதினுள் அவனையே அறியாமல் அந்த பெயரை பதித்துக்கொண்டானோ என்னவோ?
அங்கே "மேம், நீங்க சீரியஸாத்தான் சொல்றீங்களா? உங்களுக்கு ஆதி சார கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?" என்று இதோடு ஒரு நூறு முறை தியா கேட்டிருப்பாள்.
ஆனால் ஸ்ரீயின் வாயில் இருந்து தான் ஒரு முறைக் கூட பதில் வருவேனா என்று அடம்பிடித்தது.
"மேம்" என்று தியா மறுபடியும் கூப்பிட, "ஏய், இப்ப என்ன? நீதான கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆதி நல்லவரு வல்லவருன்னு கிளாஸ் எடுத்த? அதுக்குள்ள இப்படி கேட்கிற?" என்று கேட்டாள்.
"இல்ல மேம், அது உண்மதான். ஆனா கல்யாணம்ன்றது ரெண்டு மனசு சம்பந்தப்பட்டது. உங்களுக்கு உண்மையாவே ஆதி சார பிடிச்சிருக்கா? பிகாஸ் நான் இதுக்கு முன்னாடி கேட்டப்பக்கூட நீங்க அவர் ஜஸ்ட் பிரண்ட் மட்டும்னு தான சொன்னீங்க, அதான்" என்று தியா இழுத்தாள்.
"ஹேய், இப்பவும் அவரு எனக்கு பிரண்ட் மட்டும் தான்" என்று ஸ்ரீநிதி சொல்ல, "என்ன?" என்று புரியாமல் தியா பார்த்தாள்.
"நீ சொன்னது தான். எப்படியும் யாரையோ நான் கல்யாணம் பண்ணாட்டியும் இந்த மீடியா காரங்களே பண்ணி வைக்கப் போறாங்க, அது ஏன் இவரா இருக்கக்கூடாது? அதுக்கும் மேல எனக்கு இப்போதைக்கு இந்தப் பிரச்சனைய முடிக்கிறதுக்கு வேற வழி தெரியல. நான் இல்லன்னு சொன்னா அவங்க கேட்கவா போறாங்க? அதுக்கும் சேர்த்து நாலு பக்கத்துக்கு எழுதுவாங்க. இப்ப ஒரு பக்கத்தோட முடிஞ்சு போச்சி" என்றாள்.
அதைக் கேட்ட தியாவோ "ஐயோ மேம், காதல் கல்யாணம் அப்படின்றது வெறும் ஒரு பக்கத்துல முடியிற ஒரு பக்க கதை கிடையாது மேம். அது முடிவே இல்லாத பந்தம்னு எப்படி மேடமுக்கு புரிய வைக்கிறது?" என்று புரியாமல் குழம்பினாள்.
ஒரு வேளை ஸ்ரீக்கும், குடும்பம் என்று ஒன்று இருந்திருந்தால், அன்னை, தந்தை என்று அவர்கள் அரவணைப்புக்குள் வளர்ந்திருந்தால், அதெல்லாம் புரிந்திருக்குமோ என்னமோ?
"என்ன தியா? நான் குழப்பமா இருக்கிறப்ப நீ தெளிவா பேசுவ. இப்ப என்ன உன் மூஞ்சில இவ்வளவு குழப்பம்?" என்று ஸ்ரீ கேட்க, "இல்ல இல்ல மேம், நீங்களே இவ்வளவு தெளிவா இருக்கிறப்ப எனக்கென்ன மேம்?" என்றாள் தியா.
ஆனால் மனதினுள், "இதுக்கு மேல நம்ம மேம் மனசுல இடம் பிடிக்கிறது நம்ம டைரக்டர் சார் கைல தான் இருக்கு. ஐயோ, அவருக்கு வேற லவ் படம் எடுக்க மட்டும் தான தெரியும், என்னை இவங்க ரெண்டு பேருக்கும் லவ்க்கு பாடம் எடுக்க வச்சிடுவாங்க போலயே! கடவுளே நீ தான் என்னை காப்பாத்தனும்" என்று தியா புலம்பினாள்.
இங்கே அவள் புலம்பலுக்கு சொந்தக்காரனோ பளாரென்று ஒரு அடியை அவன் அப்பாவிடம் இருந்து வாங்கியிருந்தான்.
"என்னங்க" என்று அவன் அம்மாவும், "அப்பா" என்று அவன் தங்கையும் கூப்பிட, "பேசாதீங்க, எல்லாம் உங்கள சொல்லனும். அவன ஆரம்பத்துலையே இந்த சினிமா எல்லாம் வேணாம் என் கூட வந்து பிஸ்னஸ் பாருன்னு சொன்னேன். ஆனா நீதான் அவனோட ஆசை லட்சியம்னு என்கிட்ட பேசுன. ஆனா இப்ப பாரு, உன் பிள்ளை என்ன பண்ணிட்டு வந்திருக்கான்னு! உனக்கும் எனக்கும் பொண்ணு பார்க்கிற சிரமத்தைக்கூட கொடுக்கல. ஏன், சொந்தக்காரங்களோட சேர்த்து நமக்கும் அவன் கல்யாண பத்திரிக்கையை டிவி மூலமா சொல்லிட்டு வந்திருக்கான்" என்று கத்தினார்.
"அப்பா, சாரிப்பா. இது எல்லாமே கோ இன்சீடன்டா நடந்ததுப்பா. ஒரு வேளை நான் மட்டும் அப்படி சொல்லலன்னா நம்ம குடும்பத்துக்கு இத விட பெரிய கெட்டப்பேரு வந்திரும்பா. அதுக்கும் மேல எனக்கு நித்திய பிடி" என்று அவன் சொல்லும் முன், "எனக்கு கூட அந்த நித்திய ரொம்ப பிடிக்கும்பா. அவங்க எனக்கு அண்ணியா வந்தா நல்லா இருக்கும் பா" என்றாள் அக்சயா.
அதில் தங்கையை அவன் பார்க்க, "ஐயோ அண்ணா, உனக்கென்ன பையத்தியமா பிடிச்சிருக்கு? இப்ப மட்டும் நீ லவ்வு கிவ்வுன்னு ஏதாச்சும் சொன்ன இந்தப் பிரச்சனை ஜவ்வா இழுத்திரும்" என்று அவனுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் கூறினாள்.
"ஆமாங்க, நான் கூட அந்தப் பொண்ண பார்த்திருக்கேன். இப்ப அந்த பொண்ணுக்கு என்ன குறை? நம்மளே பார்த்தாலும் இவ்வளவு அழகா ஒரு பொண்ணை பார்க்க முடியுமா?" என்று அவன் அம்மா தன் பங்கிற்கு ஆதரவு கரம் நீட்டினார்.
"ரெண்டு பேரும் என்ன சொல்லிட்டு இருக்கீங்க? அழகு மட்டும் போதுமா ஒரு வாழ்க்கைக்கு? இது என்ன அவன் படத்துக்கு ஹீரோயின் செலக்ட் பண்றதுன்னு நினைச்சீங்களா? கல்யாணம்! இது வாழ்க்கை முழுசா நம்ம குடும்பத்துல வாழப் போற பொண்ணுக்குன்னு சில பழக்க வழக்கம், குணம் இதெல்லாம் இருக்கனும்" என்று அமர்நாத் சொல்ல, "அப்பா, நித்தியும் நல்ல பொண்ணுத்தான் பா" என்றான் ஆதி.
"நல்ல பொண்ணா? அதுவும் மீடியாவுல? அதெல்லாத்துக்கும் மேல ஒரு நடிகை இந்த வீட்டுக்கு மருமகளா வரவே முடியாது" என்று முடிவாக அவர் சொல்ல, ஆதிக்கு மட்டுமல்ல, சுபத்ரா, அக்சயாவுக்கு கூட என்ன செய்வதென்று தெரியவில்லை.
(அடுத்து என்ன நடக்க போகுது? ஆதி, அவங்க அப்பாவ சமாளிப்பானா? இல்லையா? சரி அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
மாயம் செய்வானோ?..
Keerthi S
neenga bayapadathinga sir nithi unga veetu marumagala vara maata
Anitha Satheesh
nice