ஜாலம் – 8

ஸ்ரீயை தியா அங்கிருந்து அழைத்துக் கொண்டு வெளியில் வருவதற்கும் ஆதி அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. 

அவனைப் பார்த்ததும், “வாங்க சார், ரொம்ப சீக்கிரமா வந்துட்டீங்க” என்று தியா நக்கலாக சொல்ல, “என்னாச்சி? நித்தி ஏன் இப்படி இருக்கா?” என்று ஆதி பதட்டமாய் கேட்டான்.

அவளுக்கோ இன்னும் கூட கோவம் குறைந்திருக்கவில்லை. ஒரு வித எரிச்சலுடன் பார்க் பெஞ்சில் சென்று அமர்ந்துவிட்டாள்.

உடனே ஆதியும் வேகமாய் அவன் காரில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அவளருகில் சென்றமர்ந்தான். 

“மேடம், ரிலாக்ஸ் மேடம்” என்று தியாவும சொல்லிக் கொண்டிருக்க, உச்சக்கட்ட கோவத்தினால் அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது. அதில் அப்படியே ஆதியின் மேல் சாய்ந்தான். 

அதில் அவன் பதறிப்போய், “என்னாச்சி நித்தி? இங்கப்பாரு” என்று அவள் கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சிக்க, தியாவிற்குமே பதட்டமாகிப் போனது.

சில பல நிமிடங்களுக்கு பின் கண் விழித்துப்பார்க்க, அவள் அவளின் வீட்டில் இருந்தாள். தியா அவள் அருகில் அமர்ந்திருந்தாள். ஆதி அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்தான்.

அவளுக்கு எதுவுமே சில நொடிகளுக்கு புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் நடந்ததை நினைத்துப் பார்த்தவளுக்கு மறுபடியும் கோவம் தான் வந்தது. 

அதை உணர்ந்த ஆதி, “ஏய் நித்தி, மறுபடியும் மயங்கி விழுந்துறாத. அப்புறம் மறுபடியும் அந்த டாக்டர எழுப்புனா அவங்க என் மேல் போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்திருவாங்க” என்றான்.

அதில் அவள் புரியாமல் பார்க்க, “இல்ல மேடம், நீங்க மயங்கி விழுந்ததும் உங்கள ஹாஸ்பிடல்க்கு தான் கூப்டு போலாம்னு நினைச்சோம். ஆனா அங்க நடந்த கலாட்டால உங்க மேல புல்லா டிரிங்க்ஸ் கொட்டிருந்திச்சி. அதுக்கும் மேல வீணா பிராபளம் ஆகும்னு சார்க்கு தெரிஞ்ச டாக்டர வீட்டுக்கு கூப்டு வந்தோம். பாவம் அப்பவே மணி 11. அததான் சொல்றாரு” என்று விளக்கம் கொடுத்தாள்.

வராத சிரிப்பை கஷ்டப்பட்டு கொண்டு வர அவள் முயற்சிக்க, அதற்குள், “உன்னை யாரு இப்படி தனியா அங்கலாம் போக சொன்னது?” என்று ஆதி கோவமாய் கேட்டான். 

ஆனால் அவளோ எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள். அந்த அமைதிக்கு காரணம் என்ன என்பதை தியா அறிவாள். பாவம் ஆதி கவனிக்க தவறினான். 

“அப்புறம் என்ன? அவனையே அதுக்குத்தான போன் பண்ணி கூப்டாங்க, ஆனா சாரு லேட்டா வந்துட்டு பேச்சைப் பாரு” இது தியா மயின்ட் வாய்ஸ்.

அதன் பின் சகஜமான சில பேச்சுகளுக்கு பின் ஆதி அங்கிருந்து கிளம்பினான். இங்கே தியாவும் ஸ்ரீயும் கூட அங்கே நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு உறக்கத்திற்கு சென்றனர்.

அடுத்த நாள் காலை “என்ன வாசு? வழக்கமா நான் ஹால்ல இருந்து காருக்கு வர்றதுக்கு முன்னாடியே நீ ஒரு பத்து நியூஸ் பேப்பர கையில வச்சிட்டு, இதுல அப்படி போட்டுருக்கு, அதுல அப்படி போட்டுருக்குன்னு சொல்லுவ? இன்னிக்கு என்னாச்சு?” என்று தன் கார் சாவியை சுழற்றிக்கொண்டே கேட்டான் தீரன். 

“இன்னிக்கு எந்த நியூஸும் வரல சார்” என்று வாசு சொல்ல, சுழற்றிய சாவியை நிறுத்தியவன், “மட்லப்” என்றான். 

“இல்ல சார், இன்னிக்கு உங்கள பத்தி எதுவும் வரல.” என்று வாசு சொல்ல, “சோ சேட்! அப்போ நான் நேத்து யாருக்கும் எந்த கன்டன்டும் கொடுக்கலையா? ஐயோ பாவம்! அப்போ இந்த மீடியா காரங்க எல்லாம் அப்படி எத ஹெட் நியூஸா போட்டுருக்காங்க?” என்று நக்கலாய் கேட்டான் தீரன்.

அதில், வாசுவோ, “அ, த், அ, து” என்று தயங்க, “என்ன? என்கூட சேர்ந்து சுத்துறதுக்காக உன்னப் பத்தியும் நியூஸ் போட்டுட்டாங்களா?” என்று அவன் கையில் இருந்த மேகஷின்ஸ் மற்றும் பத்திரிக்கையை அவன் வாங்கிப் பார்த்தான். 

அதன் முதல் பக்கத்தில், “இதுவரை கிசுகிசுவில் சிக்காத நாயகி! காதலில் சிக்கி விட்டாரா? அதுவும் இந்த அப்பாவி இயக்குனரா?” என்ற தலைப்பை வாசித்ததும் சிரிப்புத்தான் வந்தது. அந்த புன்னகையுடனே அவன் அடுத்த பக்கத்தை திருப்ப, அவன் கைகள் தன் கூலரை தானாக கழட்டியது. 

அதில் ஸ்ரீநிதி ஆதியின் தோளில் சாய்ந்திருக்க, அவன் அவளை அணைத்திருப்பது போல் இருந்த அந்தப் புகைப்படத்தை நொடிக்கும் மேலாக அசையாது பார்த்திருந்தவனை வாசுவின் குரல் கலைத்தது.

“இந்தப் பொண்ணு ஹீரோயினா?” என்று மறுபடியும் அந்த கூலரை மாட்டிக் கொண்டே அவன் கேட்க, “என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? ஹீரோல நீங்க எப்படி டாப்போ அதே மாதிரி ஹீரோயின்ல இவங்கதான் சார் டாப்பு” என்றான் வாசு.

“என்ன வாசு? என்கிட்ட வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி அந்தப் பொண்ணு, ஐ மீன் தட் கேர்ள் நேம்” என்று மறுபடியும் பத்திரிக்கையை பார்த்தவனின் கண்களில் ஸ்ரீநிதி என்ற பெயர் கூட பாதி தான் தெரிந்ததோ என்னவோ? 

“ஸ்ரீ” என்று அவன் உதடுகள் மெல்ல முணுமுணுக்க, “அந்த ஸ்ரீகிட்ட வேல பார்த்தியா இப்படி பாராட்டுற?” என்று நக்கலாக கேட்டான். 

“இல்ல சார், இப்ப ரீசன்டா அவங்கத்தான் பாப்புலரா இருக்காங்க” என்று வாசு சொல்ல,

“ஓ இசிட்? நில்லு அத செக் பண்ணுவோம்” என்று தோட்ட வேலைப் பார்க்கும் ஒருவரை அழைத்து அந்த பேப்பரை காமித்து, “இந்த ஹீரோயின உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான்.

அதற்கு அவரோ, “ம், நல்லாத்தெரியுமே! எங்க வீட்டுல எல்லாருக்கும் இந்தப் பொண்ணோ ரொம்ப பிடிக்கும். அதுலையும் என் பையன் ரூம் புல்லா இந்த பொண்ணு போட்டோவ தான் ஒட்டி வச்சிருப்பான். அடிக்கடி நிதி நிதின்னு கூட உளறுவான் தம்பி” என்று அவர் பாட்டுக்கு பாராட்டு விழா நடத்தினார். 

அதில் ஏக கடுப்பானவன், “நிதி நிதின்னா? இந்த மாசம் உங்களோட நிதி கட்டு! புரியல. வழக்கமா சேலரி போக எக்ஸ்ட்ரா பன்ட், அதான் நிதி வரும்ல? உங்க ஸ்டைல்ல சொல்லனும்னா ம், பேட்டா கட்டு” என்று சொல்லிவிட்டு அவன் செல்ல, “ஐயோ தம்பி” என்று அவர் தலையில் கை வைத்தார்.

அடுத்ததாக அவன் அங்குள்ள வாட்ச்மேனை அழைத்து அந்தப்புகைப்படத்தை காமிக்க, ஏற்கனவே தோட்டக்காரன் வாங்கி கட்டியதைத் தான் அவன் பார்த்தானே. 

அதனால் அவன் வேகமாக, “இந்த ஸ்ரீநிதி பொண்ண எனக்கு தெரியாது. நான் எந்த சினிமாவுலையும் இவங்கள பார்த்ததே கிடையாது” என்று சொல்ல, “அப்போ உனக்கு இது யாருன்னு தெரியாது? ம், அப்புறம் எப்படி இவங்க சினிமாவுல இருக்காங்கன்னு உனக்குத் தெரியும்?” என்று கேட்டான். 

“அ, த், து” என்று அவன் உளற, “சரி, அதகூட விடுவோம். அந்த பொண்ணு பேரு ஸ்ரீன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டவன், “அவருக்கு வெறும் பேட்டாதான் கட்டு, ஆனா உனக்கு இந்த மாசம் சாலரியே கட்டு” என்று சொல்லிவிட்டு மறுபக்கம் திரும்பினான்.

அங்கே சமையல் கார அம்மா இவனைப் பார்த்ததும் வேகமாக சமையலறைக்குள் நுழைய போக, அதற்குள் அவரை நெருங்கியவன், “என்ன எஸ்கேப்பா?” என்று போட்டோவை காமித்தான். 

அவருக்கோ என்ன சொல்வதென்றே புரியாமல் விழிக்க, அதற்குள் அவரின் மகன், “எனக்கு தெரியுமே! நான் இந்த அக்காவ நிறையா படத்துல பார்த்திருக்கேன்” என்று சொல்ல, அந்தம்மா அந்த சிறுவனின் வாயை மூடினார். 

அதற்குள் தீரன், “ஆமா, உனக்கு அந்த அக்காவ ரொம்ப பிடிக்குமா?” என்று தீரன் கேட்க, “இல்ல, எனக்கு பொண்ணுங்க பிடிக்காது. ஹீரோ தான் கெத்து. எனக்கு உங்கள மாதிரி பெரிய ஹீரோவா வரணும்” என்றான் அவன்.

“சுத்தம்! இந்தப்பையன் பேசுன பேச்சுக்கு அந்தம்மாக்கு வேல கட்டு” என்று வாசு நினைக்க, ஆனால் தீரனோ, “ம், குட். வாசு, இந்த மாசத்துல இருந்து இந்த அம்மாக்கு சம்பளம் ஐயாயிரம் ஏத்திக்குடு” என்று சொல்லியவன் மீண்டும் அந்தப் புகைப்படத்தை பார்த்தான். 

“ஓ ஓகே, தினம் ஒரு புதிய தகவல். ம், இதையும் தெரிந்துக்கொள்வோம்” என்று சொல்லியவன் வாசுவை அழைத்துக்கொண்டு அவன் வேலையைத் தொடர்ந்தான்.

இங்கே ஸ்ரீநிதிக்கோ காலையில் இருந்து ஒரு ஆயிரம் போன் கால் வந்திருக்கும்.

“உண்மையா? கங்கிராட்ஸ், சொல்லவே இல்ல” என்று பாஸிட்டிவ் கருத்துகளைப் போல், “என்னமோ எங்ககிட்ட மட்டும் அப்படி பிகேவ் பண்ண? இப்ப நீ மட்டும் என்னவாம்?” என்று சில பொறாமை தீக்கள் மறு பக்கமும், பல ரசிகர்களின் இதயம் சுக்குநூறாக கிளிக்கப்பட்ட சத்தங்கள் என்று, தன் இருகாதுகளையும் இறுக்க மூடியவளின் மனம் ஒரு நிலையில் இல்லை.

அங்கே ஆதிக்கோ இதை எப்படி எடுத்துக்கொள்வது என்றே புரியவில்லை. உண்மையில் அவன் இதற்காக சந்தோஷம் தான் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவளிடம் காதலை சொல்லி, அவள் சம்மதத்தோடு கல்யாண பத்திரிக்கையில் பதிவாக வேண்டிய புகைப்படம் இப்படி நாலு பக்கத்திற்கு நாலு பேர் பேசுவது போல் வந்தது அவனுக்குமே பிடிக்கவில்லை.

அதற்கும் மேல் அவன் குடும்பத்தில் மீடியா என்று பார்த்தால் அவன் ஒருவன் மட்டும் தான். அவரின் அப்பா ஒரு பிஸ்னஸ் மேன். அதுவும் மிக நியாயமான முறையில் மட்டுமே சம்பாதிக்கும் ஒரு அற்புத பிறவி. அதற்கும் மேல் சமூகம், கட்டுப்பாடு, நெறிமுறை என்று சரியான அந்தக்காலத்து ஆளு. அம்மா ஒரு கிளாசிகள் டான்சர், அதாவது வெறும் பயிற்சியோடு சரி, கடைசியாக தனி அறையில் அவர் ஆடியது எப்போது என்று கேட்டால் கூட நினைவிருக்காது, அந்த அளவுக்கு அவனின் அப்பா அக்மார்க் தயிர்சாதம். 

இவன் ஒரு நடிகையை காதலிக்கிறான் என்று தெரிந்தாலே வீடு ரெண்டாகும், இதில் இப்படியெல்லாம் நடந்தால் சொல்லவே வேண்டாம். ஆதியும் கூட என்னதான் மீடியா சினிமா என்று திரிந்தாலும் அக்மார்க் அப்பா பையன்.

குடும்ப கெளரவம் என்ற ஒற்றை வார்த்தையை காக்கவே போராடிக் கொண்டிருக்கும், இவனின் குடும்பத்தில், கட்டுப்பாடு என்றால், என்ன என்று கேட்கும் ஒரு நடிகைக்கு இடம் கிடைக்குமா? இதையெல்லாம் சிந்தித்து பார்த்திருந்தால் அவன் எப்போதோ விலகியிருப்பான். ஆனால் காதல் யாரை விட்டது?

“மேடம், நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அப்புறம் இததான் பண்ணனும்னு கூட இல்ல. பொதுவாவே இந்த பிரஸ் காரங்ககிட்ட நம்ம இல்ல இல்லன்னு சொல்ற வரைக்கும் தான் அவங்க அது பின்னாடியே போவாங்க. ஒரு தடவ ஆமா இப்படித்தான்ன்னு சொல்லிட்டா அப்புறம் அத கண்டுக்கவே மாட்டாங்க” என்று தியா சொல்ல, “இப்ப என்ன? நானே போயி பிரஸ் காரங்ககிட்ட நான் மயக்கத்துல அவர் தோள்ல சாயல, அவர்கிட்ட மயங்கி அவர் மேல விழுந்துட்டேன்னு சொல்லனுமா?” என்று கோவமாய் கேட்டாள். 

ஸ்ரீயின் கோவத்தில் “அய்யோ அப்படி சொல்லல மேடம். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஆதி சார் ரொம்ப நல்லவரு. அதுவும் லேடிஸ் விசயத்துல பக்கா ஜென்டில்மேன். அதெல்லாத்துக்கும் மேல அவருக்கு கூட உங்க மேல ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கு” என்று தியா இழுக்க, அதைக் கேட்டு ஸ்ரீ அவளை முறைத்தாள்.

“இல்ல, இல்ல மேடம். அப்படித்தான் எனக்கு தோணுது. எப்படியும் ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க போறீங்க, அது ஏன் இவரா இருக்கக்கூடாது?” என்று தியா சொல்ல,

“இங்கப்பாரு தியா, உன்கிட்ட ஏற்கனவே என்னைப் பத்தி சொல்லிட்டேன். அதுக்கும் மேல எனக்கு இப்போதைக்கு இந்த கல்யாணம், குடும்பம், இது மேலலாம் பெருசா எந்த நம்பிக்கையும் இல்ல. இப்படி ஒரு கிசு கிசுக்கு பயந்து நான் ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் நான் எத்தனைப் பேரை கல்யாணம் பண்றது? வரிசையா இவங்க இஷ்டத்துக்கு எழுதிட்டே இருப்பாங்க, நான் பண்ணிட்டே இருக்கனுமா?” என்று கேட்டாள்.

“சரிங்க மேடம், இந்த விசயத்துல நீங்க இப்படி தெளிவா இருந்தா சந்தோஷம் தான்” என்று சொல்லியவள் ஏதார்த்தமாய் ஜன்னலைப் பார்த்து, “ஆனா கண்டிப்பா இவனுங்க இருக்க விடமாட்டாங்க” என்றாள். 

“என்ன?” என்று அவளும் பார்க்க, அங்கே பத்திரிக்கை கூட்டம் ஒருபக்கமும் ரசிகர்களின் கூட்டம் மறுபக்கமும் சில சினிமா நட்பு வட்டாரங்கள் கூட கையில் பொக்கேவுடன் வந்திருந்தனர்.

(அடுத்து ஸ்ரீ என்ன செய்ய போகிறாள்? ஆதி இப்போதாவது தன் காதலை அவளிடம் சொல்வானா? தீரன் இவர்களுக்கு இடையில் வருவானா? சரி அடுத்து என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

மாயம் செய்வானோ?..

Author:    1 Sarmi SS
Comments   3

*** ஜாலம் – 8 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com