தியா ஸ்ரீயிடம் ஏதோ பேச, அப்போது அங்கு வந்த வெயிட்டர் ஶ்ரீநிதியைப் பார்த்ததும், “மேம், நீங்களா? ஐயோ, உங்கள நான் நேர்ல பார்ப்பேன்னு கனவுலக்கூட நினைச்சது இல்ல” என்று ஆர்வமிகுதியில் பொங்கியிருந்தான்.
பார்க்கவே கிராமத்தில் இருந்து வந்த பையன் போல் தெரிந்தான். அவனுடைய பேச்சுமே, அத்தனை எதார்த்தமாய் தான் இருந்தது.
அதற்குள் அங்கும் வேலைப் பார்க்கும் இன்னொருவன் வந்து, “டேய், இப்படில்லாம் நீ பிகேவ் பண்ணா உன்னை வேலைய விட்டு தூக்கிடுவாங்கடா.” என்று எச்சரித்தான்.
ஏனெனில், அது மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டல். அங்கே பிரபலமானவர்கள் வருவதெல்லாம் மிக மிக சாதாரணம். அதனாலையே அங்கு வேலைப் பார்ப்பவர்களுக்கு, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை, அங்கு வருபவர்களிடம் காட்ட கூடாது என்ற ரூல்ஸ் போடப்பட்டிருந்தது.
இப்படி எல்லாம் செய்தால், பிரபலங்களின் ப்ரைவசி மட்டும் அல்லாது, ஹோட்டலுடைய ரெபிடேஷனும், கெட்டுப் போகும். அதனாலையே, அங்கு வேலைப்பார்ப்பவர்களுக்கு அத்தனை ரெஸ்ட்ரிக்சன் இருந்தது.
ஆனால் அதையும் மீறி, அவன் ஸ்ரீயை பார்த்த ஆர்வத்தில் பொங்கியிருக்க, அவனின் நண்பனோ தடுக்க முயன்றான்.
ஆனால் அவனோ “போடா, இந்த வேல இல்லன்னா ஆயிரம் வேல. ஆனா என் தலைவிய பார்க்க முடியுமா?” என்று அவனை தள்ளிவிட்டு இவளருகில் வந்து, “மேம், நான் உங்களோட பெரிய பேன் மேம். உங்களோட பர்த்டேக்கு எங்க ஊருக்கே கேக் கொடுத்தேன்” என்று அவன் பேசிக் கொண்டே சென்றான்.
“வாட் இஸ் திஸ்? இதென்ன ஸ்டார் ஹோட்டலா? இல்ல வேற எதுவுமா? கொஞ்சம் கூட ப்ரைவசி கிடையாதா” என்று ஆதி கோவமாக கத்த, மேனஜர் அடித்து பிடித்து அங்கு வந்தார்.
அதற்குள் அங்கிருந்த காட்ஸ் எல்லாம் ஒடிவந்து அந்த வெயிட்டரை பிடிக்க, அவனோ அப்போதும் விடாமல், “மேம், ஒரே ஒரு போட்டோ மேம். பிளீஸ் மேம்” என்று கெஞ்சினான்.
அவர்களோ, அவனை வெளியில் இழுத்து செல்லப் போக, “லீவ் ஹிம்” என்றாள் ஸ்ரீநிதி.
“ஹேய் நித்தி! என்ன பண்ற? இப்படில்லாம் இடம் கொடுக்காத. அப்புறம் உனக்குன்னு ஒரு பிரைவேட் ஸ்பேஸே இருக்காது” என்றான் ஆதி
அவளோ அதை சற்றும் கண்டுக்கொள்ளாமல் அவனை விட சொல்ல, அந்த காட்ஸோ மேனஜரைப் பார்த்தனர்.
அதில் ஸ்ரீயோ, “அவரை விடுங்கன்னு சொன்னேன்” என்றாள். உடனே அவர்களும் விடுவிக்க, அவனிடம் சென்றவள், “தாங்கியூ பார் யுவர் லவ் அன்ட் அப்பக்க்ஷன்” என்றாள்.
அதை அவனால் நம்பவே முடியவில்லை. இதுவரை வெறும் திரையில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த, அவனுடைய தேவதை, இப்போது அவனிடம் நிஜமாக பேசுகிறாள். அதிலேயே அவன் அப்படியே தேங்கி நின்றான்.
அதில் மெலிதாய் அவனைப் பார்த்து புன்னகைத்தவள், “தியா, டேக் தி போட்டோ” என்று அவனின் அருகில் சென்று நின்றாள்.
உடனே தியாவும், அந்த ஒருவனின் மொபைலை வாங்கி, இருவரையும் சேர்த்து போட்டோ எடுத்துக் கொடுத்தாள்.
அவனால் இப்போது கூட நம்பமுடியவில்லை.“வாவ் மேம், தாங்க்ஸ் மேம்” என்று சந்தோசத்தில் அவன் துள்ளிக் குதித்தான்.
“நவ் ஆர் யூ ஹாப்பி?” என்று ஸ்ரீ அத்தனை மென்மையாய் கேட்க, “யா எஸ் மேம்” என்றவனின் முகத்தில் அத்தனை பூரிப்பு. ஏதோ சாதிக்க முடியாததை சாதித்தது போல் இருந்தது.
“அப்போ இப்பயாச்சும் எங்க ஆர்டர் எடுத்துகிறீங்களா? பிகாஸ் ஐயம் வெரி ஹங்ரி நவ்” என்று அழகாக அவள் சொல்ல, “ஐயோ மன்னிச்சிடுங்க மேம், இப்பவே” என்று அவன் வேகமாக செல்ல முயன்றான்.
ஆனால் ஹோட்டல் மேனஜர் அவனை அத்தனை முறைக்க, அதில் அவன் அப்படியே தேங்கி நிற்க, “கோ ஹெட், உங்க மேனஜர் ஒன்னும் சொல்ல மாட்டாரு” என்றாள் ஸ்ரீநிதி.
அதில் ஆதிக்கோ எரிச்சல், இருந்தாலும், எரிச்சலை மறைத்து விட்டு, மேனஜரிடம் கண் காட்டினாள். அதில் மேனஜரும், “டூ இட்” என்று சொல்லிவிட்டு செல்ல, அவனும் சந்தோசமாக அங்கிருந்த மெனு லிஸ்டை எடுத்து வாசித்தான்.
அதற்குள் அவனை இடைமறித்த ஆதியோ “சால் வி?” என்று ஆதி ஶ்ரீநிதியிடம் கேட்க, “யா பைன், யூ கேன் ஆர்டர்” என்றாள்.
ஆதியே நால்வருக்கும் தேவையானதை ஆர்டர் செய்தான். அதன் பின் அனைவரும் படத்தை பற்றி பேசியப்படி சாப்பிட்டு முடித்தனர்.
ஆதி பில் பே செய்திருக்க, ஸ்ரீயோ அந்த வெயிட்டரை அழைத்து டிப்ஸ் கொடுத்தாள்.
ஆனால் அவனோ அதை வாங்காது “அய்யோ, இதெல்லாம் வேணாம் மேம். ஒரு சின்ன ரெகுவஸ்ட் மட்டும்” என்றான்.
அவனுடைய அந்த செய்கை அவளை சுவாரஸ்யப்படுத்தியிருக்க, “ஏதாச்சும் என்கிட்ட சொல்லனுமா” என்றாள்.
“ஒரு ரசிகனா எனக்கு மட்டும் இல்ல மேம், வெளிய இருக்கிற அம்புட்டு பேருக்கும் இப்ப இருக்கிற ஒரே ஆசை, நீங்களும் எங்க தலைவன் தீராவும் சேர்ந்து ஒரு படம் பண்ணனும். அது மட்டும் நடந்தா நான் பத்து ஊருக்கு கட் அவுட் வைப்பேன்” என்றான்.
அதற்குள் ஸ்ரீநிதியின் மொபைல் அடிக்க, அவனிடம் ஒரு புன்னகையை பரிசலித்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அடுத்த நாள் காலையில் “என்னாச்சி மேடம்? ஏன் இப்படி காலையிலேயோ அப்சட்ல இருக்கீங்க?” என்று தியா கேட்க, தன் முன்னே இருந்த நியூஸ் பேப்பரை எடுத்து அவள் முன் நீட்டினாள் ஸ்ரீநிதி.
உடனே அதை வாங்கி வெள்ளித்திரை பக்கத்தை புரட்ட, அதில் நேற்று ஆதியும் இவளும் சேர்ந்து போனதை வைத்து அவரவர் அவர் இஷ்டத்துக்கு கதை எழுதிப் போட்டிருந்தனர்.
“பிரபல நடிகை, பிரபல இயக்குநருடன் ரகசிய சந்திப்பு! ரீல் படத்திற்காகவா? இல்லை ரியல் லைப்பிற்காகவா?” என்று ஹெட்லைன் போட்டு சில வரிகளை கிறுக்கியிருந்தனர்.
ஸ்ரீக்கோ அத்தனை எரிச்சல், தியாவோ அந்த பேப்பரின் பின் பக்கத்தை திருப்பினாள்.
“தீரேந்திரனின் தீரா ஆட்டம்!” என்று தலைப்புச் செய்தியைப் பார்த்ததும் தியா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.
அவள் சிரிக்கவும், “ஏய், இப்ப எதுக்கு நீ சிரிக்கிற?” என்று ஸ்ரீநிதி கோவமாய் கேட்க, “ஐயோ, ஐயோ, இல்ல மேடம். ரெண்டு வரியில உங்க பேர்கூட சொல்லாம போட்ட நியூஸ பார்த்தே நீங்க இப்படி அப்சட்டா இருக்கீங்களே? இங்கப்பாருங்க, தமிழ்ல மட்டுமில்ல ஹிந்து பேப்பர்ல கூட இவரு நியூஸ் தான்” என்று தீரனின் செய்தியை எடுத்துக் காமித்தாள் தியா.
அதைப் பார்த்ததும் அவள் முகம் சுழிக்க, “மேடம் உண்மைய சொல்லனும்னா நீங்க நம்ம தீரா சாருக்கு தேங்க்ஸ் சொல்லனும்” என்றாள் தியா.
“எதுக்கு?” என்று புரியாமல் ஸ்ரீநிதி கேட்க, “ஆமா மேடம், இவர் நியூஸ் டாப்ல இருக்கிற வரைக்கும் உங்க நியூஸ் எல்லாம் பக்கத்து வீடு வரைக்கும் கூட போகாது. இன்னும் ஒரு மாச கண்டன்ட் இவர்தான். இனிமேல் இவர் பர்ஸ்ட் லவ், செகன்ட் லவ்வு, பிளாப் மூவி, ஹிட் மூவின்னு எல்லாத்தையும் மறுபடியும் முதல்ல இருந்து கண்டுப்பிடிச்சி நியூஸ் ஆர்டிகிள்னு இவரைத்தான் சுத்தும். சோ நீங்க கவலைப்படாதீங்க” என்றாள் தியா.
அப்போதே அவன் புகைப்படத்தை பார்த்தாள். பார்த்தவுடன் மயங்கும் தோற்றம் தான். அவன் முகத்தில் இருந்த புன்னகை நிச்சயம், எந்த பெண்ணையும் வசமிளக்க வைக்கும். ஆனால் அவளோ சிறு ஆராய்ச்சியுடன் தான் பார்த்தாள்.
தீடீரென அந்த ரசிகன், “தீரா சாரோட ஒரு படம் சேர்ந்து பண்ணுங்க” என்று கேட்டது நினைவில் வந்தது.
“இவன் கூடவா? அப்புறம் நம்ம நியூஸ் பக்கத்து நாடு வரைக்கும் போயிடும்” என்று மனதினுள் நினைத்தவள், அதை ஓரமாக வைத்து விட்டு அவள் எப்போதும் செல்லும் அந்த அநாதை ஆசிரமத்திற்கு கிளம்பினாள்.
அதே நேரம் அங்கே “என்ன ஆதித்யா? கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க. நம்ம ஆல்ரெடி படத்தோட கிளைமேக்ஸ்கு வந்துட்டோம். இந்நேரத்துல வீணா ஹீரோயின் கூட பகைச்சிக்கிட்டா நமக்குத்தான் பிரச்சனை!” என்று அந்த புரோடியூசர் சொல்ல, “யா, எஸ் சார். நானும் அதே தான் சொல்றேன். ஆல்ரெடி கிளைமாக்ஸ்கு வந்துட்டோம். இப்ப நம்ம ஹீரோயின் சொல்ற மாதிரியெல்லாம் சீன் சேஞ் பண்ண முடியாது. அதுக்கும் மேல ஹீரோ புது முகமா இருக்கலாம். ஆனா எனக்கு தெரிஞ்சி உங்க ஹீரோயின் வாங்குன டேக் கூட இவரு வாங்கல. அப்படி இருக்கிறப்ப திறமைக்கு அடி பணியலாம், ஆனா திமிருக்கு நோ நெவர்” என்றான் ஆதி.
“மிஸ்டர் ஆதித்யா! இந்த கதைக்கு நான் தான் புரோடியூசர். உங்களுக்கு இது நியாபகம் இருக்கா இல்லையா?” என்று அவர் கடுப்பாய் கேட்க,
“இருக்கு சார், அதனாலத்தான் நானும் இவ்வளவு பொறுமையா சொல்லிட்டு இருக்கேன். அதுக்கும் மேல இந்த கத உங்களுக்கு சக்சஸ் கொடுக்குமா இல்லையான்னு மட்டும் யோசிங்க. அத விட்டுட்டு ஹீரோயினுக்கு சப்போர்டா, இல்லையான்னு பார்க்காதீங்க. இந்த கதைய உங்ககிட்ட சொல்லித்தான் நான் இந்த படத்துக்கு ஒகே வாங்குனதா எனக்கு நியாபகம்” என்றான்.
“ஆதி நான் என்ன சொல்ல வரேன்னா” என்று அவர் முடிக்கும் முன்னே, “அப்போ, நான் வேணும்னா வேற ப்ரோடியூசர் பாத்துக்கட்டுமா” என்று ஆதித்யா நக்கலாக கேட்க, அவரோ ஒரு நொடி நிதானித்தார்.
ஏனெனில், இவனையும் பகைத்துக் கொள்ள முடியாதே. அதனால் “ம், ஒகே ஆதித்யா. டூ வாட் எவர் யூ திங். பட் படத்தோட ரிலீஸுக்கு இதுனால எந்த பாதிப்பும் வரக்கூடாது. அதுக்கு நீங்கத்தான் முழு பொறுப்பு” என்றார்.
“ஒகே பைன் சார்” என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து ஹீரோவிடம் சில காட்சிகளை வேற மாதிரி நடிக்க விவரித்துக் கொண்டிருந்தான்.
அந்நேரம், “ஹாய் ஆதி” என்று ஒரு நவநாகரீக உடையில் வந்த மும்பை நடிகை பெலானா அவனை கட்டிக் கொண்டாள்.
உடனே அவனும், அவளை திரும்பி அணைத்து, “தாங்கியூ சோ மச் பார் யுவர் பிரசன்ஸ்” என்றான்.
அதில், “தட்ஸ் மை ப்ளசர் மேன்” என்று அவள் சொல்ல, “வெல்கம் டூ தமிழ் நாடு. பை தி வேய் மீட் அவர் ஹீரோ!” என்று படத்தின் கதாநாயகனை அறிமுகப்படுத்தினான்.
அவளும் அவனுக்கு கைக் கொடுத்து, “யூ வில் ப்ரைட் சூன்” என்றாள்.
அதன் பின் அவளை புரோடியூசரிடம், அழைத்து சென்ற ஆதியோ “இந்த ஷாங் இவங்க பண்ணா நல்லா இருக்கும்” என்றான்.
அப்போதே பெலனாவை பார்த்த ப்ரோடியூசரோ “வாவ், இட்ஸ் அன்பிலிபபிள் அண்ட் இது நம்ம படத்துக்கு கண்டிப்பா எக்ஸ்ட்ரா புரோமோசன்கும் யூஸ் ஆகும். குட் ஜாப் ஆதித்யா” என்று அவர் பாராட்டினார்.
“நீங்க தேங்க்ஸ நம்ம பெலானாவுக்கு தான் சொல்லனும்” என்று ஆதித்யா சொல்ல, “ஹே குட் ஜோக். எனிதிங் பார் யூ ஆதி. பிகாஸ் யுவார் மை காட்” என்றாள் பெலனா.
“ஹேய், ஒகே ஒகே. ஜஸ்ட் ரிலாக்ஸ். நவ் வி வில் டிஸ்கஸ் தி மூவி சீன்” என்று ஆதி சொல்ல, அதன் பின் அங்கே அத்தனையும் பரபரப்பாய் காட்சிகள் எடுக்கப்பட்டது.
அதே நேரம், இங்கே, “சார், நீங்க சொன்ன மாதிரி அந்தப் பொண்ணுக்கு புரோமோசனுக்கு சொல்லியாச்சி” என்று வாசு சொல்ல, “வாட் புரோமோசன்? என்ன பொண்ணு?” என்று கேட்டான் தீரா.
“சார், எஸ்டர்டே ஹோட்டல்ல பார்த்தோமே சார், அந்த ரிப்போர்டர் பொண்ணு” என்று வாசு சொல்ல, “ஓ, ஓகே. பைதி வே, கேன்சல் மை ஆல் ப்ளான், பிகாஸ் ஐயம் கோயிங் டூ கோவா டுடே” என்றான் தீரா.
“சார்” என்று வாசு தயங்க, “வாட், என்னாச்சு?” என்றான்.
“இல்ல சார், இன்னிக்கு உங்க அம்மா அப்பா நினைவு தினம். அதுக்காக நம்ம பக்கத்துல இருக்கிற ஆர்பனேஜ் ஹோம்க்கு புட் புரோவைட் பண்ணிருக்கோம்” என்று நினைவுப்படுத்தினான்.
“சோ வாட், அத நீ ஏன் இவ்வளவு சோகமா சொல்ற? அவங்க செத்து பதினைஞ்சு வருசம் ஆச்சு. என்னமோ நேத்து செத்த மாதிரி மூஞ்ச இப்படி வச்சிருக்க” என்று கிண்டலடித்துவிட்டு தன் காரில் ஏற சென்றான்.
(க்கும் சார் தெளிவா இருந்தாலே அவருக்கு ஞாபகம் இருந்திருக்காது. சரி அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
மாயம் செய்வானோ…
Keerthi S
moonum moonu thinusa irukuthunga 🤭 but interesting
Ramya Iyer
Dheera edellam romba over nalla illa 😔