ஜாலம் – 2

“நோ. நோ. நோ வேய். என்னால இந்த சீன் நடிக்க முடியாது” என்று அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்தான் தீரா. அவனிடம் ஏறக்குறைய கெஞ்சிக் கொண்டிருந்தார் அந்தப் படத்தின் இயக்குனர்.

அதற்குள் அங்கு வந்த புரோடியூசர், அவன் ஏன் கோவமாய் செல்கிறான், என்று எதுவுமே தெரியாமல், அவனை சமாதானப்படுத்தும் முயற்சியில், இந்த இளம் இயக்குனரை திட்ட ஆரம்பித்தார்.

“இங்கப்பாரு. நான் ஒன்னும் உன் கதைக்காக, உனக்கு சான்ஸ் கொடுக்கல. சார் ஹீரோ, அப்படின்ற ஒரே காரணத்துக்காகத்தான், ஒகே சொன்னேன். அப்படி இருக்கிறப்ப, அவருக்கு ஒரு சீன் பிடிக்கலன்னா, மாத்த வேண்டியதுதான. அத விட்டுட்டு எதுக்கு இப்படி பண்ற? நான் நினைச்சா, இப்பவே உன்னை தூக்கிட்டு நல்ல எக்ஸ்பீரியன்ஸான ஒரு டைரக்டர் வச்சி படத்த முடிப்பேன்” என்றார் அந்த ப்ரோடியூசர்.

“ஹேய் ஹேய். ஸ்டாப்” என்று சொல்லிய தீரா, அந்த ப்ரோடியூசரைப் பார்த்து “பை தி வே, ஹூ ஆர் யூ” என்று தன் கூலரை மெல்ல கழட்டி சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டே கேட்டான்.

அதில் அந்த புரோடியூசர்க்கு தூக்கி வாரிப் போட்டது. அங்கே நின்றிருந்த அத்தனை பேரும் சிரிக்க ஆரம்பிக்க, அவருக்கு அவமானமாய் போனது. உடனே அதற்க்கும் அந்த டைரக்டரைத்தான் முறைத்தார்.

“ஏய், சார்க்கு இந்த படத்தோட புரோடியூசர் யாருன்னு கூட நீ சொல்லலையா?” என்று அவர் கோவமாக கேட்க, “ப்ரோடியூசர் நீங்களா? அப்போ நான் யாரு?” என்று தீரன் நக்கலாய் கேட்டான்.

அதில் ப்ரோடியூசருக்கே ஒரு நொடி எதுவுமே புரியவில்லை. “சார். நான் தான் இந்த படத்தோட” என்று அவர் சொல்ல முயன்றார்.

அதற்குள் “சரி. நீங்க யாரா வேணும்னாலும் இருந்திட்டு போங்க. ஆனா, இங்க என்ன நடந்திச்சின்னு முதல்ல உங்களுக்கு தெரியுமா? எதுவுமே தெரியாம, நீங்க இப்படி அவன்ன திட்டுனா, நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன்னா?” என்று கேட்டான்.

“இல்ல சார். அது நான்” என்ற ப்ரோடியூசருக்கோ என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை.

அதற்குள் எதையோ யோசித்த தீரா, “அப்புறம் என்ன சொன்னீங்க, இந்த கதைக்காக நீங்க ஓகே சொல்லலையா? இந்த தீரேந்திரன் ஒரு கதைக்கு ஒகே சொல்லிருக்கான் அப்படின்னா, அது தான் இந்த பீல்டுல இருக்கிற பெஸ்ட்னு அர்த்தம். ஆனா, அந்த கதைய கூட நீங்க மதிக்காம பேசிருக்கீங்க” என்றான்.

“ஐயோ அப்படி இல்ல சார். அது வந்து” என்று ப்ரோடியூசர் அவன் அடுத்து என்ன செய்வானோ என்ற பதட்டத்தில், கிட்டதட்ட கெஞ்சவே செய்தார். 

ஆனால் அவனோ அதை சற்றும் கண்டுக் கொள்ளாமல், “நீங்க என்ன சொல்றது? இப்ப நான் சொல்றேன். இந்த கதைக்கு நீங்க புரோடியூசர் கிடையாது. கெட் லாஸ்ட்” என்று சொல்லிவிட்டு, டைரக்டரிடம், “எனக்கு இந்த ப்ரோடியூசர பிடிக்கல. சோ பெட்டரான ப்ரோடியூசர செலக்ட் பண்ணு” என்றான்.

“சார்” என்று ப்ரோடியூசர் பதற, அவனோ அவரை பொருட்டாய் கூட மதிக்காது, கூலரை மாட்டிக் கொண்டே, காரில் ஏறி அங்கிருந்து சென்றான் தீரேந்திரன்.

அதே நேரம் அங்கே இன்னொரு சூட்டிங்கில், “மேடம், சீன் என்னன்னா? உங்க பின்னாடி ரொம்ப நாளா ஒரு பொறுக்கி சுத்திட்டு இருப்பான். நீங்களும் உங்க பிரண்ட்ம் அவனுக்கு இன்னிக்கு பாடம் சொல்லிக்கொடுக்கனும்னு முடிவுல இருப்பீங்க. அந்நேரம் உங்க பின்னாடி இருந்து நம்ம ஹீரோ உங்களை கூப்பிட, நீங்க அந்த ரவுடின்னு நினைச்சி, பளாருன்னு அறையனும். இதுதான்” என்றான் உதவி இயக்குநர்.

“அவ்வளவுத்தான பண்ணிடலாம்” என்று ஸ்ரீ சொல்ல, “சரி மேடம், நான் சாருக்கு சீன்ன சொல்லிட்டு வந்துட்றேன்” என்று அந்த ஹீரோவிடம் சென்றான். 

அங்கே அவனோ காதல் காட்சி தான் எடுக்கப்போகிறார்கள் என்ற நினைப்பில், “நான் ஆல்ரெடி சீன் பேப்பர் படிச்சிட்டேன். அப்படியே தப்பு விட்டாலும், ரெண்டு மூனு டேக் போனா இப்ப என்னாகப்போது?” என்று அசால்டாக சொல்லிவிட்டு, ஹீரோயினை பார்த்துக்கொண்டே ஆதியின் அருகில் அமர்ந்தான்.

அதைப் பார்த்த ஆதி மனதினுள் சிரித்துக் கொள்ள, அதே போல் சீன் ஆரம்பித்தது. 

அவள் மேல், அந்த ஹீரோ கை வைக்கும் முன்னே பளார் என்று அவள் அறைய, பேய் அடித்தாற் போல் அவளைப் பார்த்தான். 

இவளோ, நக்கலாக, “இன்னும் ரியாலிஸ்டிக் பீல் பத்தலன்னு நினைக்கிறேன். நம்ம வேணும்னா ஒன்ஸ் மோர்போவோமா?” என்று கேட்டாள்.

“என்ன” என்று அவன் செயலாற்றும் முன்னே, அந்த டைரக்டர் “ஒன் மோர்” என்று சொல்லியிருக்க, அப்புறம் என்ன! ஒரே நகைச்சுவைத்தான்.

ஒரு வழியாய் சீன் முடித்துவிட்டு, ஆதியிடம் வந்தவள், “என்ன ஆதி? இதெல்லாம் உங்க வேலதானா? அப்படி என்ன அந்த ஹீரோ மேல உங்களுக்கு கோவம். என்னைய வச்சே அடிக்க வைக்கிறீங்க?” என்று கேலியாய் கேட்டாள்.

“எனக்கு அவரு மேல கோவம் இருக்கிறதெல்லாம் இருக்கட்டும். ஸ்ரீநிதிக்கு அப்படி என்ன அந்த ஹீரோ மேல அப்படி ஒரு பாசம்? ஒன் மோர், டூ மோர்னு கேட்டு வாங்கி அடிக்கிறீங்க” என்று இவனும் அதே கிண்டலோடு கேட்டான்.

அதற்குள் அங்கு வந்த புரோடியூசர், “தம்பி, இன்னிக்கு எங்க கூட லஞ்ச் சாப்டுத்தான் போகனும்” என்றார்.

அதற்குள் இவள், “ஒகே சார். நீங்க பாருங்க, நான் கிளம்புறேன்” என்று எழுந்தாள்.

“நோ நோ, ஶ்ரீநிதி, இன்னிக்கு என்னோட ஸ்பான்சர். நம்ம எல்லாரும் தாஜ் போறோம்” என்று அவர் சொல்ல, அவளுக்கும் மறுக்கும் வாய்ப்பில்லாமல் போனது. 

“ஒகே சார், நீங்க முன்னாடி போங்க, நான் என் கார்ல வரேன்” என்று ஸ்ரீநிதி சொல்ல,

“அதென்ன சார்? நம்ம எல்லாரும் ஒரே இடத்துக்குத்தான போகனும், அப்படி இருக்கிறப்ப இங்க இருந்து தனித்தனியா ஏன் போகனும்? நம்ம மொத்தமா போகலாம். அப்படி போறப்ப இன்னொரு சில்வர் சூப்ளி மூவி கூட அதன் மூலமா கிடைக்கலாம்!” என்றான் ஆதி.

அதில் ப்ரோடியூசரின் முகமும் பளிச்சிட, அதே நேரம் அங்கே தாஜ் ஹோட்டலில், ஒரு கையில் கிளாஸ், மறு கையில் ஒரு மங்கையுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்தான் தீரா.

அவனுக்கே தெரியாமல் அதை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாள் ஒரு பத்திரிக்கை பெண்மணி. அவளருகில் நின்றுக்கொண்டிருந்தவனோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான்.

“ஹேய் இதெல்லாம் தேவையா” என்று அவன் கேட்க, “நீ எல்லாம் எப்படி, இந்த பீல்டுக்கு வந்த” என்று கடுப்பாய் சொல்லியவள், அடுத்தடுத்து தீரன் அந்தப் பெண்ணுடன் நெருக்கமாய் இருப்பதைத்தான் வளைத்து வளைத்து போட்டோ எடுத்தாள்

அதுவரை வேறு ஒரு பெண்ணுடன் ஆடிக்கொண்டிருந்த தீரா, சட்டென்று இவளருகில் வந்து, இவள் கையைப் பிடித்து மேடை ஏறி நடனம் ஆட ஆரம்பித்தான். 

இவள் தடுக்க முயன்றாளா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்றுத்தான் சொல்ல வேண்டும். அவன் பரிஷம் தீண்டியவுடனே மங்கை மயங்குவது வெகு இயல்பு, அப்படியிருக்க இவள் மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன?

அவள் அவனிடம் மயங்கி, வந்த வேலையை மறந்திருக்க, தீரனோ அவளுடன் ஆடிக்கொண்டே அவள் மறைத்து வைத்திருந்த கேமராவை எடுத்தான். 

அதைக் கூட, அவள் உணராது, ஆடவனின் தொடுகையில் உருகி அவள் ஆடிக் கொண்டிருக்க, அவனோ அந்த ஹிட்டன் கேமராவை தன் மேனஜரிடம் தூக்கி போட்டு, “இப்ப எடு போட்டோவ?” என்றான். 

அப்போதே தான் இங்கு எதற்கு வந்தோம் என்பதே அவளுக்கு நினைவு வந்தது.

அதில் அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க, அவன் பிடித்திருந்த அவள் கை பயத்தில் நடுங்க ஆரம்பித்தது.

“என்னாச்சு பேப்ஸ்? ஏன் இப்படி கை நடுங்குது? நான் தான ட்ரிங் பண்றேன்!” என்று நக்கலாக அவள் காதோரம்  நெருங்கி கேட்டான்.

“இ, இல்ல், இல்ல. ச, சா, ர், அ, த், அ, து” என்ற அவளுடைய வார்த்தைகள் எல்லாம் அத்தனை தடுமாறியது.

ஆனால் அவனோ “ஹேய், இங்கப்பாரு. எனக்கு கோடி கணக்குல பேன்ஸ் இருக்காங்க. அவங்களுக்கு என்னோட போட்டோ அப்டேட் ரொம்ப பெரிய விஷயம். அப்படியிருக்கிறப்ப நீ கேவலம் இப்படி இத்துனூன்டு பென் கேமரால எடுத்தா எப்படி? இந்தா” என்று தன் ஆப்பிள் ஐ போனை அவளிடம் தூக்கிப் போட்டான். 

அவளோ புரியாது அவனைப் பார்க்க, “இதுல எடு, போட்டோ ஹச் டில வரும்” என்று நக்கலாய் கூறினான்.

அதற்குள் “சாரி சார், நாங்க இனிமேல் இப்படி பண்ணமாட்டோம்” என்று அவள் உடன் வந்தவன் வேகமாக வந்து சொல்ல, அவன் பாக்கெட்டில் இருந்த ஐடி கார்டை பார்த்து, “இனிமேல் உனக்கு இந்த ஐடி தேவைப்படாது” என்று அதை தூக்கி எறிந்தான். 

அதில் திடுக்கிட்டு அவன் முழிக்க, தீரனோ அவளிடம் திரும்பி, “இங்கப்பாரு, என்னை பாலோ பண்ணது தப்பு இல்ல. ஆனா இப்படி ஒரு டம்மி பீஸ கூட வச்சிட்டு வந்த பாரு, அதான் உன் தப்பு. சரி, அந்த தப்ப நான் சரி பண்றேன். இந்தா உன் கேமரா, நான் ஸ்டில் தரேன். கண்டிப்பா உனக்கு ப்ரோமோசன் கிடைக்கும்” என்றான்.

போதையில் இருந்தாலும் தெளிவாகவே பேசிவிட்டு, அவன் புக் செய்திருந்த அறைக்கு செல்வதற்கும், இங்கே ஆதி, ஶ்ரீநிதி அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

ஆதியையும் ஸ்ரீநிதியையும் அங்கே சற்றும் எதிர்ப்பார்க்காத ஹோட்டல் மேனஜர் வேகமாக ஓடிவந்து அவர்களை வரவேற்றார். 

அந்நேரம் தீரனின் மேனஜர் ஆதியை பார்த்தவுடன், “என்ன சார்? எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரிக்க, “யா, பைன். என்ன இந்தப்பக்கம்?” என்று கேட்டான் ஆதி.

“ராமன் இருக்கிற இடத்துலத்தான அனுமன் இருக்கனும்” என்று அந்த மேனஜர் சொல்ல, “ஓ, அப்போ அந்த ராமனுக்கு இன்னிக்கு எந்த சீதை?” என்று நக்கலாய் கேட்டான் ஆதி.

அதில் அந்த மேனஜரோ சிரித்தப்படி, “அழகா இருக்குற பொண்ணுங்க எல்லாமே சீததான சார்” என்றான்.

“உங்க ராமனுக்குத்தான் போஸ்டர்ல பொண்ணு போட்டோ இருந்தாலே, மூட் வந்துடுமே’ என்று நக்கலாய் கூறினான் ஆதி. 

ஏனோ அவர்களின் அந்தப் பேச்சு ஶ்ரீநிதிக்கு சற்றும் பிடிக்கவில்லை என்பது அவள் முக பாவணையிலேயே தெளிவாக ஆதிக்கு புரிந்தது.

அதனால் “ஒகே வாசு! நம்ம அப்புறம் ஒரு நாள் பார்க்கலாம்” என்று ஆதி சொல்ல,

“ம், புரியிது. நீங்க கன்டினியூ” என்று ஆதியையும், ஶ்ரீநிதியையும் ஓரப்பார்வையில் பார்த்து கண்ணடித்து சொல்லிவிட்டு அவன் சென்றான். 

ஆனால் ஸ்ரீக்குத்தான் அங்கு நிற்கவே பிடிக்கவில்லை. வேகமாக தியாவின் அருகில் சென்றமர்ந்தாள்.

“என்னாச்சு மேடம்? ஏன் சடனா அப்சட்டா தெரியிறீங்க” என்று தியா கேட்க, “ம் ஒன்னும் இல்ல” என்றாள்.

ஆதியோ, “ஐயோ இவ முன்னாடி அப்படி நான் பேசியிருக்க கூடாது” என்று தனக்குள் சொல்லியப்படி அவளின் அருகில் சென்றான். அதற்குள் அவளருகில் அமரப்போன ஆதியை புரோடியூசர் தன்னருகில் அமர்த்திக் கொண்டார். 

(ரைட்டு, பட் தீராவ பத்தி பேசுனா, நம்ம ஹீரோயின் எதுக்கு இவ்ளோ அப்சட்டாகுறாங்க? சரி அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி, இந்த கதையோட ஸ்டார்ட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லிடுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

மாயம் செய்வானோ?..

Author:    1 Sarmi SS
Comments   2

*** ஜாலம் – 2 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com