ஆபிஸில் இருந்த, முகிலனோ, வழக்கத்திற்கு மாறாக. சிரித்த முகமாகவே சுற்றி திரிந்தான்.
அதைப் பார்த்த வேந்தனோ, “நம்ம பாஸா இது? இல்ல இல்ல. இது நம்ம கனவு. அய்யய்யோ ஆபிஸ் நேரத்துல இப்படி தூங்கிட்டு இருக்கேனே. பாஸ் பார்த்தா என்னாகுறது?” என்று வாய் விட்டே புலம்பினான்.
அதில், “ஹலோ ஹலோ. மிஸ்டர் வேந்தன். கண்ணைத் திறந்து கனவு கண்டுகிட்டிருக்கிறவுங்கள பார்த்திருக்கேன். ஆனா முழிச்சிக்கிட்டு இருக்கிறப்பயே, நான் தூங்கிட்டு இருக்கேன்-னு சொல்ற ஆள இப்பத்தான் பார்க்குறேன்” என்று முகிலன் கிண்டலாய் கேட்டான்.
இப்படி எல்லாம் அவன் பேசி, வேந்தன் பார்த்ததே கிடையாது. எப்போது பார்த்தாலும், முறைத்துக் கொண்டேதான் இருப்பான்.
அதனால் அவன் கேலிப்பேச்சை முதன் முதலாக கேட்டவன், ஆச்சர்யமாய் முகிலனை பார்த்தான்.
“என்ன வேந்தன்? இன்னிக்கு என்ன பார்க்கிறத தவிற, வேற வேலை இல்லையா என்ன?” என்று முகிலன் அதையும் சிரித்தப்படிதான் கேட்டான்.
“ஐயோ இல்ல பாஸ். நான் கிளம்புறேன்” என்று பதட்டமாக வேந்தன் அங்கிருந்து செல்ல முயன்றான்.
“ஒரு நிமிஷம் மிஸ்டர் வேந்தன். நான் கொஞ்சம் தனியா இருக்கனும், சோ யாரையும் என் கேபினுக்குள்ள அலோ பண்ணாதீங்க” என்று முகிலன் சொல்ல, அவனும் “சரி பாஸ்” என்று அங்கிருந்து கிளம்பினான்.
அவன் சென்றதும், அப்படியே அந்த சீட்டில் சாய்ந்தமர்ந்தான். நீண்ட நாட்களுக்கு பின் மனம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.
ஆனால் அதெல்லாம் அடுத்த சில நொடிகள் தான். அந்த அமைதியை கலைக்கும் விதமாக, மின்னலென உள்ளே நுழைந்த மித்ராவை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவள் பின்னே. “மேடம். ஒரு செகன்ட்” என்று வேந்தன் கெஞ்சிக் கொண்டிருக்க. அதைக் காதில் வாங்காது கேபினுக்குள் நுழைந்த மித்ரா, முகிலனை தீயாய் முறைத்தாள்.
அதில் முகிலன் வேந்தனைப் பார்க்க, “இல்ல சார். மேடம் தான் நான் சொல்லியும் கேக்காம” என்று சிறு பதட்டத்துடன் கூறினான்.
அதில், “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று முகிலன் கண்ணைக் காமிக்க. வேந்தன் அங்கிருந்து சென்றான்.
அவன் சென்றதும் இப்போது முகிலனோ, “வாங்க மித்ரா. நீங்க வருவீங்க-ன்னு தெரியும். ஆனா இவ்வளவு சீக்கிரம் வருவீங்கன்னு தெரியாது” என்ற அவனின் வார்த்தைகளில் சிறு அலட்சியம் தெரிந்ததோ என்னவோ?
ஆனால் மித்ராவின் முகத்திலும், வார்த்தையிலும் அனல் வீசியது. அதில் அவன் இருக்கையில் இருந்து எழுந்திருந்தான்.
“என்ன நினைச்சீங்க என்ன பத்தி. உங்ககிட்ட பணம் இருந்தா, என்ன வேணும்னாலும், பண்ணலாம்-னு அர்த்தமா? நான் கூட நீங்க ஆபிஸ் வந்து சாரி சொன்னப்ப. உங்களப்பத்தி நல்ல விதமா நினச்சேன். ஆனா. நீங்க. ச்சே. எனக்கு சொல்லவே நாக்கு கூசுது. சத்தியமா மிஸ்டர்.முகிலன் உங்ககிட்ட இருந்து நான் இத எதிர்பார்க்கவேயில்ல. பொண்ணுங்கன்னா உங்களுக்குலாம் கிள்ளு கீரையா, உங்க இஷ்டத்துக்கு பிச்சி போட? என்ன மாதிரி மனுசங்க நீங்க” என்று எதிராளியை பேசவே விடாமல் மித்ரா பேசிக்கொண்டே சென்றாள்.
திடீரென உள் நுழைந்தவள், அவனை கண்டமேனிக்கு பேச, “மித்ரா. லெட் பி ஸ்டாபிட்” என்று அந்த அறையே அலரும் அளவுக்கு கத்தியிருந்தான்.
அவன் போட்ட அந்த சத்தத்தில், மித்ரா ஒரு நொடி தன் பேச்சை நிறுத்தினாள்.
“என்ன, ஏதோ அப்ப தப்பு என் மேல இருந்திச்சி. அதான் வந்து சாரி கேட்டேன். அதுவும் உனக்காக இல்ல. நீ பாக்கிற அந்த வேலைக்காக. இப்படி என் முன்னாடி பேசுறதுக்கு உனக்கு யாரு ரைட்ஸ் குடுத்தா? என்ன தைரியம் இருந்தா, என் கம்பெனிக்கு வந்து காரணமே இல்லாம என்னை திட்டுவ. ஆர் யூ மேட்?” என்று முகிலன் அழுத்திக் கேட்டான்.
“என்ன சத்தமா பேசிட்டா, நீ தப்பு பண்ணலன்னு ஆயிடுமா? இல்ல இது உங்க ஆபிஸ் அப்படின்றதால, நான் அமைதியா போயிடனுமா?” என்று மித்ராவும் சீறினாள்.
அதில் கடுப்பானவன், “இங்கப்பாரு. நீ வேனும்னா பெரிய வக்கிலா இருக்கலாம். ஆனா அது கோர்ட்ல. இது என்னோட ஆபிஸ். ஆர் யூ கெட் இட்” என்று முகிலன் முடிந்த அளவுக்கு பொறுமையை இழுத்து பிடித்து பேசினான்.
“ஆமா. இது உங்க ஆபிஸ் தான். ஒரு வேள இதுவே கோர்டா இருந்திச்சின்னா, நான் கேட்கிறதும் வேற மாதிரிதான் இருந்திருக்கும்” என்று அவளும் அசராது கூறினாள்.
அவ்வளவுத்தான், முகிலனின் பொறுமை எல்லாம் காற்றில் பறக்க ஆரம்பித்தது.
“என்னடி, இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு, இங்க வந்து இப்படி கத்துற?” என்று அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான்.
“எதுவுமே தெரியாத மாதிரி கேட்கிறதுக்கு எப்படித்தான் உங்களால முடியுதோ?” என்று ஒரு லெட்டரை எடுத்து அவள் டேபிளில் போட்டாள்.
அதைப் பார்த்தவனோ, “இதுல என்ன தப்பு இருக்கு? உனக்கு ஒகே-ன்னா ஒகே சொல்லு. இல்லன்னா. ஐயம் நாட் இன்ட்ரஸ்டடுனு சொல்லு. உன்ன விட்டா வேற ஆளே எனக்கு கிடைக்காது பாரு. நான் ம்ன்னு ஒரு வார்த்த சொன்னா போதும், அம்புட்டு பேரும் வரிசையில வந்து நிப்பாங்க” என்றான்.
“அப்போ,. அப்படி வந்து வரிசையில நிக்கிறவுங்களுக்கு இந்த லெட்டர கொடுங்க. என்கிட்டலாம் வச்சுக்காதீங்க” என்று எரிச்சலாய் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றாள்.
அவள் பாட்டுக்கு அவள் இஷ்டத்துக்கு பேசிவிட்டு அவள் செல்ல, அவள் கதவை திறக்கும் முன், அவளுக்கு முன்னால் வந்திருந்தான் முகிலன்.
அதில் அவள் சற்று அதிர்ந்து அவனை நிமிர்ந்துப் பார்க்க, அவளை நெருங்கி, அவள் கையை இறுகப்பிடித்தான்.
அவன் தொட்டதும், உருகிய மனதை கஷ்டப்பட்டு, அடக்கி, முகத்தில் அதே கோபத்தைக் காட்டினாள்.
“இப்ப கைய விடப்போறீங்களா, இல்லையா?” என்று மித்ரா கோவமாய் கேட்டாள்.
“விட முடியாது” என்று சொல்லியவனோ கூலாக அந்த அறைக் கதவின் மீது சாய்ந்து நின்று, “உன்னால என்ன பண்ண முடியும்?” என்று மிரட்டலாய் கேட்டான்..
அவன் மிரட்டலில் சற்று பயந்தாலும், அதை சற்றும் முகத்தில் காட்டாமல், “என்னால, என்ன வேணும்னாலும் பண்ண முடியும். ஏன் உங்கள கொல்ல கூட முடியும்” என்று அவளும் விடாது கூறினாள்.
அதைக் கேட்டவனோ, “வாவ். இன்ட்ரஸ்டிங்” என்று சொல்லியப்படி மேலும் அவளை நெருங்கி வர, இவளுக்கோ இதயம் பல மடங்கு வேகமாக துடித்தது.
அதில் அன்னிட்சையாய் அவள் பின்னோக்கி நகர, இவனும் அவளை நெருங்கிக்கொண்டே போக, ஒரு கட்டத்தில் நகர முடியாமல் கபோர்டில் முட்டி நின்றாள் மித்ரா.
“இப்பக்கூட உனக்கு பயம் வரலையா?” என்று முகிலன் மித்ராவின் கண்களை நேருக்கு நேர் பார்த்து கேட்க, அவனுக்கு சற்றும் சலிக்காமல், “தப்பு பண்ணா தான் பயப்படனும். இப்ப தப்பு பண்ணிட்டு இருக்கிறது நீங்க” என்று அவன் கேட்ட கேள்வியில் அவனையே சிக்க வைத்தாள் அவள்.
அதில் நக்கலாய் சிரித்தவன், “ம். வக்கில் ஆச்சே.பேச சொல்லியாக கொடுக்கனும்? இந்த பேச்சு தான், என்ன உன்கிட்ட அந்த லெட்டர கொடுக்க வச்சிச்சி” என்று அவள் உதட்டை பார்த்துக்கொண்டே அவன் கூறினான்.
அதில் மித்ராவுக்கோ கோவம் கூடியது.
“இப்பக்கூட உங்களுக்கு அப்படி ஒரு லெட்டர கொடுத்ததுல வருத்தமே இல்லல்ல. நீங்களாம்” என்று கை நீட்டி அவள் ஏதோ பேசப் போக அவள் மறுகையையும், தன் கைக்குள் கொண்டு வந்தான்.
அதில் அவள் கரத்தை விலக்கி கொள்ள பார்க்க, அவனோ அவளை மேலும் நெருங்கினான். அதில் மித்ராவிற்கு, அந்த ஏசி அறையிலும் வேர்த்துக் கொட்டியது.
அவள் வியர்வையைப் பார்த்தவனோ, இப்போது மெல்ல அவளின் ஒரு கையை விட்டான்.
ஆனாலும் அவளின் மறு கை அவனிடம் சிக்கியிருக்க, அவளால் நகர முடியவில்லை.
அதில் தன் சட்டைப்பையில் இருந்த கைக்குட்டையை எடுத்து அவள் நெற்றியில் பூத்த வியர்வையை மெல்ல துடைக்கப் போக, அவளோ முகத்தை பின் நோக்கி இழுத்தாள்.
அதில், பிடித்திருந்த கரத்தை மேலும் அழுத்திப் பிடித்து, அவளை நெருங்கி அவள் நெற்றியை துடைத்தான்.
அதில் அவனின் மூச்சுக்காற்று, அவள் முகத்தில் வீச, நிச்சயம் மித்ராவின் மனம் படாதபாடு பட்டது. அதில் இன்னுமே அவளுக்கு மூச்சு வாங்க, அதைப் பார்த்தவனோ, அவள் வியர்வையை துடைத்தப்படியே, “பாருடா. மித்ரா மேடமுக்கு ஏசி ரூம் லையும் வேர்க்குது” என்றான்.
அவனின் பேச்சில் சுயம் பெற்றவள், அவன் கையை கோவமாய் தட்டிவிட்டாள்.
அதில், “ச்சே. ச்சே. உங்களுக்கு நல்லது பண்ணாலே பிடிக்காது போலயே. எனக்கும் நல்லது பண்ணி பெருசா பழக்கமில்ல. சோ நமக்கு வராதத எதுக்கு செய்யனும். பேசாம நமக்கு வர்றதையே செய்வோம்” என்று கைக்குட்டையை கீழே போட்டான்.
அதில் மித்ரா அவனை கேள்வியாய் பார்க்க, அவன் விரல் கொண்டு அவள் முகத்தில் விழுந்த முடியை மெல்ல விலக்கினான்.
அவனின் செயலில் இங்கே, இவளுக்கோ, மூச்சு முட்டுவது போல் இருந்தது.
அவள் நினைத்தால், அவனை தள்ளிவிட முடியும்.
ஆனால் அவனை தள்ளிவிட்டு செல்லவும் முடியாமல், அவன் நெருக்கத்தை அனுபவிக்கவும் முடியாமல், அவள் உள்ளம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் முகிலனுக்கோ, அவளின் அந்த நெருக்கமும், வாசமும், மேலும் மேலும் அவளுள் புதைய சொல்லி அடம்பிடித்தது.
அவனே நினைத்தாலும், அவன் கரங்களை, அவள் கைகளில் இருந்து, பிரிக்க முடியவில்லை.
“டேய் முகில். என்ன பண்ணிட்டு இருக்க” என்று அவன் மூளை பலமுறை எச்சரித்தும், அவன் மனம், அவளை நெருங்குவதை, தடுக்க முடியவில்லை.
அவள் விலக விலக. இவனுக்கோ, அவளை விலகவே விடக்கூடாது என்ற எண்ணம் மனதில் ஆணி அடித்தாற் போல் பதிந்தது.
இருவருக்கும், நூலிடைத்தான் இடைவெளி. அவள் சற்று அசைந்தாலும், அவள், அவன் மேல் பதிய வேண்டும். அதனாலையே அவள் அசையாமல் இருக்க. அது அவனுக்கு சாதகமாகிப் போனது.
அவள் மருண்ட விழிகளை பார்க்க, பார்க்க. இவனுக்குள் எதையோ சாதித்த உணர்வு மேலோங்க, கன்னக்குழி தெரிய அழகாய் புன்னகைத்தான்.
அவன் கன்னக்குழி அழகில் அவனுள் மொத்தமாய் விழ துடித்த அவள் மனதை முடிந்த அளவுக்கு தனக்குள் புதைத்தாள் மித்ரா.
ஆனால் அவனோ, அவனையும் மீறி, அவன் பார்வை, அங்குல அங்குலமாய் அவள் மேல் பாய்ந்தது.
உச்சியில் தொடங்கி உள்ளங்கால் வரை தன் பார்வையை செலுத்தியவன், அப்போதே அவள் சேலையில் இருப்பதையே கவனித்தான்.
அரக்கு நிற காட்டன் சேலையை, அவள் கச்சிதமாக கட்டியிருந்த விதத்தில், அவன் மனம், மறுமுறை அவளழகில் குதித்து எழுந்தது.
“சும்மா சொல்லக்கூடாது. மித்ரா மேடம். நீங்க உண்மையாவே அழகு தான். எந்த ஆங்கிள்ல பார்த்தாலும், செம்ம ஹிக்கா இருக்கு” என்று சொல்லிக்கொண்டே அவள் முகத்தில், அவன் விரல் கோலமிட ஆரம்பித்தான்.
அப்போதே தன்னிலை பெற்றவள், அவனை தள்ளிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அவள் தள்ளியப் பின்னே தன்னிலை பெற்றவனும் “சிட்.நான் எப்படி. ஓ மை காட்” என்று தலையைப்பிடித்தான்.
அடுத்த நொடி, சற்று கோவமாய் அவளைப் பார்த்து, “உன்னாலதான். என்ன? இப்படி வந்து என்ன மயக்கலாம்னு ஐடியாவா?” என்று அவன் மேல் உள்ள தப்பை யாரிடம் காட்ட என்று தெரியாமல், அவளிடமே காட்டினான்.
ஆனால் அவனின் வார்த்தையில் சீண்டப்பட்டவள், வேகமாக அவனருகில் வந்து, அவன் சட்டை காலரை இழுத்துப் பிடித்தாள்.
(ரைட்டு அடுத்த சண்டை ஆரம்பிச்சிட்டாங்க போலையே. சரி அடுத்து என்னாகப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தொடரும்…
Keerthi S
nalla pidichi naalu arai kudu da ma avanuku