காதல் – 7

“மித்துமா என்ற தன் அன்னையின் அழைப்பில், கையில் இருந்த பைலை, கபோர்டில் வைத்துவிட்டு, டைனிங் ஹாலுக்கு சென்றாள் மித்ரா.

அங்கே அவள் தாத்தாவும், அம்மாவும், பயங்கர பதட்டத்தில் இருந்தனர், 

அதைக் கண்டும் காணாதது போல், சேரை இழுத்துப்போட்டு, அவள் சாப்பாட்டை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

“அப்பா. நீங்களே உங்க பேத்திகிட்ட கேளுங்க” என்று கிருபாவதி மெதுவாக ஆரம்பித்தார். 

“நான் எப்படிமா? நீயே” என்று இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி யார் பேசுவது என அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டிருந்தனர்.

அவளும் அவர்களாக, ஆரம்பிக்கட்டும் என்று பொறுமையாய் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவர்கள் ஆரம்பிப்பதாக தெரியவில்லை.

அதனால், “சொல்லுங்க தாத்தா. அம்மா என்ன சொல்ல சொல்றாங்க?” என்று மித்ரா சாப்பிட்டப்படியே கேட்டாள்.

“இல்லம்மா. அது” என்று அவர் சற்று தயங்கியப்படி மீண்டும், கிருபாவைத்தான் பார்த்தார்.

“நீங்க தயங்குறத பாத்தா, ஏதோ எனக்கு பிடிக்காத எதையோ சொல்ல போறீங்கன்னு நினைக்கிறேன். சரி சொல்லுங்க, என்னன்னு நான் தெரிஞ்சிகிறேன்” என்றாள் மித்ரா.

“இல்ல மித்து. இப்ப ஏதோ கேஸ் எடுத்துருக்கியாமே. அதான்” என்று அவர் சொல்ல முடியாது மென்று விழுங்கினார்.

“என்ன தாத்தா? எப்பவும் நடக்கிறது தான. இதுல என்ன புதுசா இருக்கு?” என்று சாதாரணமாய் கேட்டாள்.

“இல்லம்மா. இதுல ஏதோ பெரிய பிரச்சனை இருக்காமேமா. யார் யாரோ, ஆபிஸுக்கே வந்து மிரட்டுராங்களாம்” என்று இக் வைத்தார்.

“நான் என்ன கோவில்லையா வேல பார்க்குறேன்? நல்லவங்க மட்டும் வர்றதுக்கு. ஈவன் அங்கையே இப்போலாம் கொல கொள்ளன்னு சாதாரணமா நடக்குது. அப்படி இருக்கிறப்ப, இது கோர்ட் தாத்தா. என்னோட வேலையில இதெல்லாம் பார்த்து பயந்தா, அப்புறம் நான் வேலையே பார்க்க முடியாது” என்றாள்.

“நீ பயப்பட மாட்ட மித்து. ஆனா கல்யாண வயசுல பிள்ளைய வச்சிருக்க ஒரு அம்மாவ எனக்கு பயமா இருக்கு. அதுக்கும் மேல, உன்னை பத்திரமா யார் கையிலையாவது பிடிச்சி கொடுத்துட்டா நான் சந்தோஷமா கண்ண மூடுவேன். நமக்கு என்ன காசு,பணமா இல்ல, கடவுள் புண்ணியத்துல அதுக்கு எந்த குறையும் இல்ல. அப்புறம் ஏன் நீ இந்த மாதிரி ஆபத்தான வேல பார்க்கனும்” என்று கிருபாவதி தைரியத்தை கடன் வாங்கி பேசி முடித்தார்.

ஏனெனில், அவரின் மகளிடம் பேசவேண்டும் என்றால், அவருக்கே சற்று அச்சம் தான். முன்பெல்லாம் அப்படி கிடையாது. ஆனால் இப்போது அவளுடைய பார்வைக்கே, அவர் சற்று பயப்படத்தான் செய்தார்.

ஆனால் அன்னையில் வார்த்தையில், இங்கே மித்ராவோ, தன் கோபத்தை-யும், இயலாமையும் கட்டுப்படுத்த முயற்சி செய்தாள்.

ஆனாலும் அது முடியாமல் போக, “போதும்மா. என்று வேகமாக டைனிங் டேபிளை விட்டு எழுந்தாள். 

அதில், “மித்து” என்று அவர் ஏதோ சொல்ல வர, “எனக்கு இந்த வேலை எவ்வளவு பிடிக்கும்னு தெரிஞ்சும் நீங்க இப்படி பேசுவீங்கன்னு நான் நினைக்கல, அதுக்கும் மேல, என்னை பார்த்துகிறதுக்கு எனக்கு தெரியும், வேற யாரும் புதுசா வந்து பார்த்துக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென அவள் அறைக்குள் சென்றுவிட்டாள். 

“என்னப்பா. இவ இப்படி சொல்லிட்டு போறா?” என்று கிருபாவதி சற்று கவலையாய் கேட்டார்.

பின்னே இருப்பது ஒரு மகள். கணவரும் உயிருடன் இல்லை. அவர் நன்றாக இருக்கும் போதே, இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து வைத்து விடலாம் என்று அவர் நினைக்கிறார்.

மகளோ எதற்குமே பிடிக்கொடுக்காமல் இருந்தால், ஒரு அன்னையாய் அவரால் என்னதான் செய்ய முடியும்? அதிலும் அவள் பார்க்கும் வேலையால், அவளுக்கு அத்தனை பிரச்சனை வருகிறது.

அவள் தினமும் காலை சென்று விட்டு மாலை வீடு வரும் முன், அவர் ஊரில் இருக்கும் அத்தனை கடவுளையும் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். 

“கவலப்படாதமா. என் பேத்திக்கு அவ மசை புரிஞ்சிக்கிற மாதிரி ஒரு ராஜகுமாரன் வருவான். அப்ப. நீயும், நானும் இல்ல. அவனே நம்ம மித்து மனச மாத்தி கூப்டு போவான்” என்றார் தாத்தா. 

“என்னமோப்பா, நல்லது நடந்தா சரி” என்று அவரும் சொல்லிவிட்டு சென்றார்.

அதே நேரம் அங்கே முகிலனின் அலுவலகத்தில் “பாஸ். நம்ம நெனச்ச மாதிரியே அந்த மூர்த்தி சார், நமக்கு எதிரா கேஸ் பைல் பண்ணிருக்கார். அதுக்கான நோட்டீஸ் வந்திருக்கு” என்று வேந்தன் பதட்டமாய் கூறினான்.

‘ஆமா வேந்தன். உங்களுக்கு படம் பார்க்கிற பழக்கம் எல்லாம் இருக்கா?” என்று சம்பந்தமே இல்லாமல் முகிலன் கேட்டான்.

“பாஸ்” என்று அவன் தயங்க. “சொல்லுங்க வேந்தன். லாஸ்டா என்ன படம் பார்த்தீங்க?” என்று முகிலன் மறுபடியும் கேட்டான்.

“பாப்பேன் பாஸ். லாஸ்டா, துராந்தர் பார்த்தேன்” என்று வேந்தன் சொல்ல.

“ஓ படம் நல்லா இருக்கா?” என்று முகிலன் சாதாரணமாய் கேட்டான்.

“ம் நல்லா இருக்கு சார். ஹீரோக்கு ஒரு நல்ல சக்ஸஸ் தரும்” என்றான் வேந்தன்.

“ஓ. சரி அப்போ அதுல நடிச்ச வில்லனுக்கு?” என்று திருப்பி கேட்டான்.

“ம். அவருக்கும் தான் சார்” என்றான் வேந்தன்.

“அது தான். சக்ஸஸ் அப்படின்றது ரெண்டு பேருக்கும் இருக்கும், ஆனா, மனசுல நிக்கிறது ஒருத்தர் மட்டும் தான். சோ. மூர்த்திக்கு தெரிஞ்சத அவர் பண்ணிருக்காரு. இப்ப நமக்கு தெரிஞ்சத நம்ம பண்ணுவோம். அதுக்கு முன்னாடி நம்ம இப்ப கோர்ட்க்கு போறோம்” என்றப்படி எழுந்தான் முகிலன்.

“என்ன? இப்பவா?” என்று வேந்தன் புரியாமல் அவனைப் பார்க்க, “டூ வாட் ஐ சேய். காட் இட்? என்று அழுத்தமாக கேட்க, அவனும் தலையை ஆட்டினான். 

இங்கே அப்படி என்றால், அங்கே மதியோ, “சார். நான் ஒன்னு கேட்பேன்.நீங்க கோவிச்சுக்க கூடாது” என்று சீரியஸாக பைலை பார்த்துக் கொண்டிருந்த இஷாந்திடம் கேட்டாள்.

“எப்படியும், நான் கோவபடுற மாதிரிதான் எதையாச்சும் கேட்ப. இருந்தாலும் கேளு” என்றான் இஷாந்த்.

உடனே மதி ஏதோ சொல்ல வர, அதற்குள் இஷாந்தின் பின்னால் நின்ற ஒருவனை பார்த்து, “சார் ஒரு நிமிஷம் வந்திடுறேன்” என்று வேகமாக அவனை நோக்கி ஓடினாள்.

அதில் இஷாந்தோ, “இவளுக்கு இதே வேலையா போச்சு” என்று முனுமுனுத்தான். 

அங்கே அவளோ “ஏய் சிவப்பு சட்டை” என்று கத்திக் கொண்டே ஓடினாள். ஆனால்அவனோ திரும்பவே இல்லை. 

சில நொடிகளில் அவனருகில் சென்று, அவன் கையை பிடித்து இழுத்தாள். 

பின்னாடி திரும்பி மொபைலில், பேசிக் கொண்டிருந்தவன், அவள் இழுத்தவுடன், கால் தடுமாறி கீழே விழ, அவளும் அவனுடன் சேர்ந்து கீழே விழுந்தாள்.  

“என்னாச்சி” என்று அவன் சுதாரிக்கும் முன், இவன் உடலில் பாய வேண்டிய அந்த கத்தி, இவன் சாய்ந்து நின்று கொண்டிருந்த, கார் கண்ணாடியின் மீது பாய்ந்து, கண்ணாடி துகள்கள் சிதறியது. 

அதற்குள், அங்கிருந்த காவலர்கள் அந்த கயவனை பிடிக்க. அப்போதே தன் அருகில் விழுந்து கிடந்த மதியை பார்த்தான் அந்த நெடியவன்.

பயத்தில் தன் இரு கண்களையும் மூடியிருந்தவள், கீழே விழுந்த போதும், அவள் பிடித்திருந்த அவன் கையை விடவில்லை. 

அதை ஒரு புன் சிரிப்போடு பார்த்தவன்,  அவளை தொட்டு எழுப்ப முயற்சிக்க. அதற்குள் இதைப் பார்த்த இஷாந்த் ஓடி வந்து அவளை, தன் மடியில் தாங்கினான்.

அதற்குள் அந்த நெடியவனின் அருகில் வந்த ஒருவன், “சார். ஐ திங் திஸ் பிளேஸ் இஸ் நாட் சேப். சோ! வி வில் லீவ் நவ் சார்” என்று அவன் அவனை அழைத்தான். 

அவனோ நொடி நேரத்தில் தன் உயிரை காப்பாற்றிவிட்டு, மறு நொடி வாடிய பூவாய் மயங்கி கிடங்கும் பெண்ணவளை பார்த்தான். 

அதற்குள், அங்கிருந்த காவலர்களும், “சார். கிளம்புங்க சார். நாங்க பார்த்துகிறோம்” என்று சொல்ல, வேறு வழியின்றி கிளம்பினான், அந்த மதியின் சிவப்பு சட்டை. 

“இப்ப எதுக்கு கோர்ட்-க்கு வந்தோம்? ஏன் திரும்பி போறோம்? எதையாச்சும் சொல்றாரா. ஏன் -னு கேட்கவும் முடியாது. இவர் கூட வேல பாக்கிறதுக்கு பதிலா, ஏதாச்சும் சிங்க குகையில வேலை பார்த்திடலாம்” என்று மனதினுள் புலம்பிக் கொண்டிருந்தான் வேந்தன்.

அதற்குள், “இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல, நல்ல சிங்க குகையா பார்த்து நானே சேர்த்து விடுறேன்” என்று முகிலன் கூறினான்.

“இல்ல பாஸ்” என்று அவன் நடுங்க, அவனோ காரை நிறுத்தி இறங்க கூறினான். அவனும் இறங்கினான். 

அடுத்த நொடி, இவன் வேகமாக தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

நம்பர் ஒன் பிசினஸ் மேனுக்கு நீதிமன்றத்தில் என்ன வேலை? என்று அடுத்த நாள் பேப்பரில் ஹெட்லைனில் செய்தி வந்திருந்தது. 

இன்னொரு நாளிதழில், முகிலன் குரூப் ஆப் கம்பெனிஸ் எம்-டி யின் மீது அவர் கம்பெனி லீகல் அட்வைஸர் மூர்த்தி புகார் அளித்துள்ளார்.

பத்திரிக்கையாளருக்கு மதிப்பு கொடுக்க தெரியாதவருக்கு. நீதிமன்றத்தை மட்டும் மதிக்கத் தெரியுமா என்ன? என்று வித விதமாய் அவனை பழிவாங்க நினைத்தவர்களுக்கு சக்கரைப்பொங்கல் கிடைத்தது போல் அவர்கள் இஷ்டத்திற்கு எழுதி தீட்டியிருந்தனர். 

இதை எல்லாம் பார்த்த முகிலனுக்கோ பற்றிக் கொண்டு வந்தது. ஆனாலும் முகத்தில் எதையும் காமிக்காமல் இருந்தான்.

“இப்ப என்ன பாஸ் பண்றது. கோர்ட்ல நாளைக்கு ஹியரிங். நம்ம சைடு இருக்கிற லாயர் அவ்வளவு வொர்த்தா தெரியல” என்றான் வேந்தன்.

“அவர் வொர்தா, இல்லையான்னு நாளைக்கு கோர்ட்ல தான தெரியும். அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்” என்றான் முகிலன்.

“என்னது சான்ஸா? இவர் தெரிஞ்சி தான் பேசுறாறா?” என்று வேந்தன் புரியாமல் பார்த்தான்.

முகிலனோ எந்த ஒரு பதட்டமும் இல்லாமல், கூலாக அமர்ந்திருந்தான். 

மறு நாள், கோர்ட்-க்கு முகிலன் செல்லவில்லை, வேந்தனும், அவருடைய லாயரும் சென்றிருந்தனர். 

அந்த மூர்த்தியோ, இவர்களின் லாயரை ஒரு வார்த்தை கூட பேச விடாமல், அவர் வைத்து செய்தார். 

ஆனால் முகிலனோ, மும்பையில் நடக்கும் மீட்டிங்கிற்கு சென்று புது பிராஜக்ட் ஒன்றை வென்றுவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தான்.

இங்கே பேப்பரில், இவன் போட்டோவை போட்டு, ‘வாழ்க்கையில் தோல்வியையே சந்திக்காத மிஸ்டர் முகிலன், தன்னுடைய முதல் தோல்வியை சந்திக்கப் போகிறாரா?’ என்று விவாதங்களும், செய்திகளும் தீயாய் பரவிக் கொண்டிருந்தது.

அப்போதும். முகிலன் பெரிதாக அதை எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த ஹியரிங்-கு வேறு வழியில்லாமல், முகிலன் வந்தே ஆக வேண்டுமென்று நீதிமன்றம் சொல்ல. அவனும் வந்து சேர்ந்தான். 

அவன் எப்போது வருவான்? என்று ஆவலாய் காத்திருந்த பத்திரிக்கையாளர்கள், அவன் கார் வந்தவுடன், பலா பழத்தில் ஈ மொய்ப்பது போல் அவனை சூழ்ந்தனர். 

அவனின் பாடிகார்ட்ஸ் அதை தடுக்க முயற்சிக்க, சிங்கமே ஆனாலும், அவன் இடத்தை விட்டு எறும்பு பொந்துக்குள் கைவிட்டால் கடிக்கத்தானே செய்யும் அது போல். பத்திரிக்கையாளர்களின் எறும்பு பொந்துக்குள் சிக்கினான், முகிலன். 

“என்ன சொல்லப்போறீங்க மிஸ்டர் முகிலன்?” என்று ஒரு பெண் கேட்க, முகிலனோ அவளைப் பார்த்தான். அவள் தான் சென்ற முறை அவனிடம் திட்டு வாங்கியிருந்தாள்

அதனால் “நான் பிஸ்னஸ் மேன். என் லாயர்-க்கு தான் தெரியும். உங்க சில்லி கொஸ்டின்ஸ அவர்கிட்ட கேளுங்கன்னு சொல்லப் போறிங்களா?” என்று நக்கலாக அவள் கேட்டாள்.

உள்ளே கோபம் கொந்தளித்தாலும், அமைதியாக. “அப்கோர்ஸ். நான் அப்படி சொன்னாலும், அதுல தப்பு என்ன இருக்கு?” என்றான் முகிலன்.

“என்னாச்சி மிஸ்டர் முகிலன். போன ஹியரிங்ல உங்க லாயர் வாயே திறக்கலையாமே. இந்த தடவையும் அப்படித்தானா?” என்று இன்னொருவர் கேட்டார்.

“என்ன சார்? பிஸ்னஸ்ல கிங்கா இருந்து என்ன பிராயஜனம்? இப்படி சாதாரண ஒரு லாயர் உங்க மேல கம்பிளைன்ட் கொடுக்கிற லெவல்-க்கு வச்சிட்டீங்களே?” என்று மற்றொருவர் கேட்டார்.

“எப்படியும், இன்னிக்கு கேஸ்ல அவர் தான் வின் பண்ணுவாரு. அதனால உங்களோட பழைய லாயர், பேக் பல்டி அடிச்சிட்டாராமே உண்மையா? இங்க இருக்கிற ஒரு வக்கில் கூட உங்களுக்காக வாதாட மாட்டேன்னு சொல்லிட்டாங்களாமே அது உண்மையா?” என்று அவரவர் தனக்கு தோன்றியதை எல்லாம் வரிசையாய் கேட்டனர். 

முகிலனுக்கோ, கோவம் ஒரு பக்கம். இப்போது பேசினால் வீண் பிரச்சனை என்ற எண்ணம் மறு பக்கம். 

இதெல்லாத்துக்கும் மேல் தன்னை இந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்திய அந்த மூர்த்தியின் மீது கொலைவெறியென முகிலன் நின்றிருந்தான்.

சூரியனின் முழுக் கதிர்வீச்சை தாங்க இயலாது தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், எங்கோ சென்ற பச்சைக்கிளியின் கூட்டம் தந்த நிழல் போல். அந்தக்கூட்டத்தின் நெரிசலை தகர்த்துக் கொண்டு, அவனருகில் வந்து நின்று, “யார் சொன்னா? அவருக்கு சப்போர்ட்டா, எந்த வக்கிலும் வாதாட மாட்டாங்கன்னு?” என்று அக்கினிக்குழம்பாய் கொதித்துக் கொண்டிருந்தாள், மித்ரா என்ற மித்ரயாழினி. 

(மித்ராக்கு ஏன் இத்தனைக் கோவம்? அப்படி அவளுக்கு இந்த முகிலன் யார்? இப்படி அத்தனைக்குமான கேள்விகளை அடுத்தடுத்த எபிசோடில் பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க. அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தொடரும்…

Author:    1 Sarmi SS
Comments   4

*** காதல் – 7 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com