காதல் – 6

முகிலன் கேட்ட கேள்விக்கு வேந்தன் அமைதியாய் இருக்கவும் “ஐ வான்ட் ஆன்சர்” என்று சற்று குரலை தாழ்த்திக் கேட்டான்.

“இல்ல பாஸ். அது நேத்து இங்க நடந்த பிரச்சனையால” என்று வேந்தன் சொல்ல தயங்கினான்.

“அவன் என்ன சொன்னான்?” என்று முகிலன் அதையே திருப்பிக் கேட்டான். கோவமாகவெல்லாம் கேட்கவில்லை. சாதாரணமாகத்தான் கேட்டான்.

அதனால் வேந்தனும், “அவரோட ஹெல்ப் இல்லாம நீங்க பினிஷ் பண்ண முடியாது. அதுக்கும் மேல. இது லீகல் டாக்குமென்ட்ஸ், இதைப்பத்தி உங்க பாஸ்-க்கு என்ன தெரியும்? உங்க பாஸோட ஆர்டர் எல்லாம், உங்க ஆபிஸோட வச்சிக்க சொல்லு. இது கோர்ட் விவகாரம். இதுல எல்லாம், உங்க பாஸோட அதிகாரம் செல்லுபடியாகாது” என்று அவர் சொல்லியதை அச்சு பிசுங்காமல் அப்படியே கூறினான்.

அடுத்த நொடி, அத்தனை சாதாரணமாய், “சஸ்பெண்ட் ஹிம். அன்ட் அவனோட எல்லா அக்கவுன்ட்ஸையும் இன்னும் டேட்டி மினிட்ஸ் ல கிளீயர் பண்ணிட்டு, அவன் இடத்துக்கு வேற ஒருத்தரை உடனே அப்பாயின்மென்ட் பண்ணுங்க” என்றான் முகிலன். 

அவன் முகத்தில் தெரிந்த அழுத்தம் அவன் பேசிய வார்த்தையில் சுத்தமாய் இல்லை.

“பாஸ். நீங்க சொல்ற மாதிரி. அவர் ஒன்னும் சாதாரண போஸ்டிங்ல இல்ல. அவர் தான் நம்ம கம்பெனியோட லீகல் அட்வைஸர். அதுமட்டுமில்ல. இப்ப அவர உடனே வேலைய விட்டு தூக்குனா, லீகல்லா நம்ம நிறைய பிராப்ளம் பேஸ் பண்ண வேண்டியிருக்கும், ஏன் நீங்களே கூட கோர்ட் வரைக்கும் போக வேண்டியிருக்கும், அதுக்கும் மேல, டக்குன்னு ஒருத்தரை எல்லாம் அப்படி அப்பாயிண்ட் பண்ண முடியாது பாஸ்” என்று வேந்தன் பொறுமையாய் அவனுக்கு புரியுமாறு எடுத்துக் கூறினான்.

ஆனால் அவன் சொல்லி கேட்பவனா இவன்? 

“மிஸ்டர்.வேந்தன் நான் சொன்னது உங்களுக்கு புரியலன்னு நினைக்கிறேன். இப்ப அவரைத்தான். வேலைய விட்டு தூக்க சொன்னேன். இன்னும் ஒருவார்த்தை எக்ஸ்ட்ராவ பேசுனீங்கன்னா, நீங்களும் அவர் கூடவே போக வேண்டியிருக்கும்” என்றான்.

“என்னது” என்று வேந்தன் அதிர்ச்சியாக, கட்டியிருந்த டை-யை கழட்டிக் கொண்டே “உங்களுக்கு பிப்டீன் மினிட்ஸ் டைம். அதுக்குள்ள. அவனோட. சாரி. அவரோட டிஸ்மிஸ் லெட்டர் என் டேபிள்ல இருக்கனும்” என்றான் முகிலன்.

அவன் சொல்லியபின் அதற்கு மறு பேச்சு பேச யார் இருக்கிறார்கள். அதனால் அடுத்த பதினைந்தாவது நிமிடம், அவனின் டிஸ்மிஸ் லெட்டர் அன்ட் கிளீயர் டாக்குமென்ட்ஸ் எல்லாம் ரெடியாக இருந்தது.  

அதைப் பார்த்த முகிலனோ, “ம் குட். நெக்ஸ்ட். இன்னும் அரை மணி நேரத்துல, இங்க இருக்கிற டாப் பெஸ்ட் லாயர் எல்லாம் என் முன்னாடி இருக்கனும்” என்றான்.

“ஐயோ! இவர் எல்லாம் தெரிஞ்சித்தான் பேசுறாரா? இதெப்டி சாத்தியம்” என்று வேந்தன் முழித்தான். 

அதற்குள் கையில் இருந்த ஒரு லிஸ்டை தூக்கி வேந்தனிடம் நீட்டியவன், “இந்த அஞ்சு பேர் தான், இங்க இருக்கிறதுல டாப் லாயர்ஸ். இதுல அவங்களோட ஆபிஸ் அட்ரஸ் & கான்டக்ட் நம்பர்ஸ் இருக்கு. பத்து நிமிசத்துல இத ரெடி பண்ண முடிஞ்ச எனக்கு, அவங்கள இங்க வர வைக்கிறது பெரிய விசயம் கிடையாது. ஆனா நான் எப்பவும் அடுத்தவுங்க வேலையில தலையிட மாட்டேன். நெக்ஸ்ட். என் கம்பேனி நேம்ம மட்டும் சொல்லு, அத்தனப் பேரும் அடுத்த அஞ்சாவது நிமிஷம் இங்க வந்து நிப்பாங்க” என்றான்.

அவன் கூறியது போலவே அடுத்த அரை மணி நேரத்தில் அவன் ஆபிஸி-ல் குவிந்திருந்தனர். 

“பாஸ் நீங்க சொன்ன அந்த அஞ்சு பேரும் வந்துட்டாங்க. ஒவ்வொருத்தரா வர சொல்லவா?” என்று வேந்தன் அவனிடம் கேட்டான்.

“நோ. அஞ்சு பேரையும் உள்ள வர சொல்லு. அப்படியே அந்த மூர்த்தி சார்-ரையும் இவங்க கிளம்பினதும் வர சொல்லு” என்று சொல்லிவிட்டு முகிலன் தன் வேலையை தொடர்ந்தான்.

அதே நேரம் அங்கே மதியோ, “சார். உங்களுக்கு ஒரு நியூஸ் சொல்லவா” என்று இஷாந்திடம் கேட்டாள்

“வேணாம்னு சொன்னா, நீ கேட்கப் போறீயா? இல்லதான” என்றான்.

அதில் மதியோ அசடு வழியோ, இப்போது அவனோ சற்று சலிப்புடன் “சொல்லு! என்ன! உன்னோட அந்த பாவரேட் மேடம், புதுசா எதுவும் கேஸ் எடுத்துருக்காங்களா” என்றான் இஷாந்த்.

அதைக் கேட்டதும், சற்று ஆச்சர்யமாய் “எப்படி சார்?” என்றாள் மதி.

“ம் உன் மூளை அந்த அளவுக்கு மட்டும் தான் வேலை செய்யும். எனக்கு தெரிஞ்சி நீ வக்கில்-க்கு படிச்சிருக்க கூடாது. ஜர்னலிஸ்ட்க்கோ, இல்ல கதாசிரியராவோ, போயிருக்கலாம்” என்று இஷாந்த் எரிச்சலாய் கூறினான்.

“சார். போங்க சார். ஆயிரம் தான் சொன்னாலும், மித்ரா மேடம் கிரேட் சார். உங்களுக்கெல்லாம் தைரியம் வந்துச்சா, அந்த பெரியவர் கேஸை எடுத்து நடத்த? ஆனா மித்ரா மேடம் தைரியமா எடுத்துருக்காங்க. அது மட்டுமில்ல. அந்த கேஸ் முடியிற வரைக்கும் வேற கேஸ் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்” என்று மதி மித்ராவின் புகழை வாசித்தாள்.

“ஏய் தெரியாமத்தான் கேட்கிறேன். நான் உனக்கு சம்பளம் கொடுக்கிறேனா? இல்ல அவ உனக்கு சம்பளம் கொடுக்கிறாளா? எப்ப பார்த்தாலும் அவ புராணத்தையே பாடிக்கிட்டு இருக்க?” என்று சற்று கடுப்பாய் கேட்டான் இஷாந்த்

“ம். உண்மைய சொன்னா, உங்களுக்கெல்லாம் பிடிக்காதே. ஏதோ அவங்க ஒரு கேஸ் முடியிற வரைக்கும் மத்த கேஸ் எடுக்கிறதில்ல. இல்லன்னா, உங்களுக்கெல்லாம் ஒரு கேஸும் கிடைக்காது” என்று மதி  மனதினுள் முனுமுனுத்தாள்.

“ம். உன் மயின்ட் வாய்ஸ் இங்க வரைக்கும் நல்லா கேட்குது. ஒரு நாள் அந்த மித்ரா வ எதிர்த்து, நான் வாதாடி ஜெயிக்கல, என் பேர மாத்திக்கிறேன்” என்றான் இஷாந்த்.

“ம். அப்போ. கஜினி முகமதுன்னு தான் பேர மாத்தனும்” என்று அவள் மெல்ல சொல்ல. இஷாந்த் அவளை முறைத்தான்.

அதே நேரம் அங்கே முகிலனின் அலுவலகத்தில், இருந்த ஐந்து வக்கில்களும் “இல்ல சார். சட்டப்படி ஒரு லீகல் அட்வைசர உடனே மாத்த முடியாது. அப்படிப் பண்ணா, நீங்க அவருக்கு காம்பன்சேசன்-னா அவர் கேட்கிறத கொடுக்கனும், அதுக்கும் மேல கோர்ட்-க்கு போனா கூட, உங்களுக்கு லீகலா நிறையா பிராப்ளம் வரும். முக்கியமா கோர்ட் பர்மிஷன் வர்ற வரைக்கும், உங்களால, நியூ பிராஜக்ட்ஸ் சைன் பண்ண முடியாது, பல கோடி லாஸ் ஆகும், அது போக உங்க ரெபிடேஷனும் இதனால ஸ்பாயில் ஆகும்” என்று சட்டப் பக்கத்தில் இருப்பதைக் கூறினர்.

அவர்கள் சொல்லியதைக் கேட்ட முகிலனுடைய கோவம் கடகடவென்று கூடியது.

அவனுக்கெல்லாம், அவனின் எதிரில் இருப்பவர்கள் கூட, அவன் நினைக்கும்படியான பதிலைத்தான் கூற வேண்டும். அப்படி இருக்க, இவர்கள் ஐந்து பேரும், அதற்கு மாறாக பேச, முகிலனின் பிபி தாறுமாறாய் கூடியது.

அதில், “நீங்களாம் என்ன சிட்டிலேயே டாப் லாயர்ஸ்? உங்களால முடியலன்னா சொல்லுங்க டெல்லி, மும்பைல இருந்து உடனே அடுத்த பிளைட்ல என்னால லாயர்ஸ இறக்க முடியும்” என்று சற்று கடுப்பாய் கூறினான். 

உடனே அவர்களோ “சார். நாங்க சொல்றோம்-னு தப்பா எடுத்துக்காதீங்க. ஜஸ்ட் ஒரு மாசம் மட்டும் அவர அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அதுக்குள்ள இத சரி பண்ணிடலாம். அதுமட்டுமில்ல. மூர்த்தி சார் தான் இங்க இருக்கிறதுலையே டாப் லாயர். புரிஞ்சிக்கோங்க” என்றனர்.

அதில் இன்னும் கடுப்பான முகிலனோ, “உங்கள நான் இங்க கூப்டது, உங்களால இந்த பிரச்சனைய சால்வ் பண்ண முடியுமா, முடியாதான்னு கேட்கிறதுக்கு தான். எனக்கு அட்வைஸ் பண்றதுக்கு இல்ல. சோ ஆல் ஆப் யூ கோ” என்று கத்தினான்.

அதில் சற்று பதட்டப்பட்டாலும், அதை வெளிக்காட்டாது “சார் நாங்க சொல்றத சொல்லிட்டோம். அப்புறம் உங்க விருப்பம்” என்று சொல்லிவிட்டு அனைவரும் அங்கிருந்து சென்றிருந்தனர். 

அவர்கள் சென்றிருக்க, இப்போது வேந்தனோ முகிலனிடம் வந்து, “சார் அந்த மூர்த்தி சார் வந்திருக்காரு” என்றான்.

“ம் வர சொல்லு” என்று முகிலன் எரிச்சலாய் சொல்ல, அதன் பின் உள்ளே நுழைந்த லாயர் மூர்த்தி, தெனாவட்டாக நின்றான். 

அவன் நிற்கும் தோற்றமே, என்னை மீறி உன்னால் எதையும் செய்ய முடியாது என்பது போல் தான் இருந்தது.

ஆனால் அதற்கு முகிலனோ அசராமல், “உங்களோட டிஸ்மிஸ் லெட்டரை எடுத்திட்டு நீங்க கிளம்பலாம்” என்றான்.

அதைக் கேட்ட மூர்த்திக்கு அத்தனை அதிர்ச்சி. ஏனெனில் அவன் எதிர்பார்த்தவரை, முகிலன் இப்போது மூர்த்தியிடம் தன்மையாக பேசி, இந்த வேலையில் தொடர சொல்வான் என்று தான் நினைத்தான்.

ஆனால் இவன் அசராது அவனை வெளிய போக சொல்ல, மூர்த்தியின் நிதானம் தடுமாறியது.

அதில் “மிஸ்டர். முகிலன் நீங்க தப்பு பண்றீங்க. உங்களோட லீகல் & அன்லீகல் டீலீங்க்ஸ் எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும். இப்பக்கூட நான் இங்க இருந்து கிளம்பிட்டா, உங்களோட ஆம்போனன்ட் கம்பெனில போயி தாராளமா ஜாயின் பண்ணிப்பேன். நஷ்டம் உங்களுக்குத்தான்” என்று சற்று மிரட்டலாய் கூறினான்.

அதற்கும் சற்றும் அசராமல், “ஆல்ரெடி நீங்க அந்த கம்பெனியோட ஜாயின் பண்ணிட்டீங்கன்னு எனக்கு தெரியும் மிஸ்டர் மூர்த்தி. முழுசா இதுவரைக்கும் உங்களால இந்த கம்பெனிக்கு வந்த நஷ்டம் 500 கோடி. அதனால உங்களுக்கு கிடைச்ச லாபம் 50 கோடி. இன்னிக்கு காலையில கூட நீங்க ஒரு டீலிங் முடிச்சு, ஐம்பது லட்சம் வாங்கிட்டு வந்து தான், என் முன்னாடி உட்கார்ந்திருக்கீங்க. இதெல்லாம் கூடவா எனக்கு தெரியாது-ன்னு நினைச்சீங்க மிஸ்டர் மூர்த்தி?” என்று கேட்டப்படி சீட்டில் சாய்ந்தமர்ந்தான் முகிலன்.

உண்மை வெளிப்பட்டதில், மூர்த்தியின் முகம் ரத்தப்பசையின்றி வெளிறிப் போனது.

அதைப் பார்த்து நக்கலாய் சிரித்த முகிலன், “நீங்க அந்த கம்பெனியோட டீல் பேசுன அடுத்த செகன்ட்-டே எனக்கு நியூஸ் வந்திருச்சி. தெரிஞ்சும் நான் ஏன் சும்மா இருந்தேன்னு பார்க்கிறீங்களா? எனக்கு எப்பவும் அடுத்தவுங்க வேலையில தலையிடுறது பிடிக்காது. அது போக இந்த ஐநூறு கோடியெல்லாம் எனக்கு சம்பாதிக்க ஒரு நாள் போதும். ஆனா உங்களுக்கு? இப்ப என்ன நினைக்கிறீங்க? நீங்க வெளியில் போனதும், அந்த கம்பெனி உங்களை சேர்த்துக்கும்னா?” என்று கேட்டான்.

அவன் முகத்தில் இருந்த புன்னகையைப் பார்த்த மூர்த்திக்கு, அந்த ஏசி அறையிலும் வியர்க்க துவங்கியது. 

அதில் அவனைப் பார்த்தப்படி எழுந்து  “ச்சே ச்சே. உங்க வக்கில் மூளைய விட, எங்க கார்பரேட் மூளை அதிகமா வேலை செய்யும். நீங்க வேனும்னா, தப்பு பண்றவனையும், கொலை பண்றவனையும் கூடவே வச்சி சுத்தலாம். அது உங்க தொழில். ஆனா எங்க பிஸ்னஸ்ல எதிரிக்கு இருக்கிற மரியாத, எப்பவுமே துரோகிக்கு இருக்காது. நீங்க இந்த கம்பெனிய விட்டு போன அடுத்த செகன்டே உங்களுக்கு பிராபளம் ஸ்டார்ட் ஆகிடும். சோ, கோ அன்ட் என்ஜாய் மிஸ்டர் மூர்த்தி.” என்று மேஜையின் மீது கம்பீரமாய் சாய்ந்து நின்றான்.

அவன் சொல்லியதை தன் மூளைக்குள் ஏற்றிக் கொள்ளவே அவனுக்கு சில கணங்கள் தேவைப்பட்டது.

அதற்குள், முகிலனோ ஸ்டைலாக தன் கடிகாரத்தை பார்த்து “யுவர் டைம் இஸ் ஓவர். கெட் அவுட் பிரம் ஹியர்” என்று சொல்ல, மூர்த்தியும் பேயறைந்தார் போல் அங்கிருந்து சென்றிருந்தார். ஏனெனில் அங்கே அவர் மேலே நின்றால், அடுத்து முகிலன் என்ன செய்வான் என்று தெரியாதே. அதனாலையே கிளம்பிவிட்டார்.

அதே நேரம் அவனுக்கு உடனே வேறு லாயர் கிடைக்கமாட்டார் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கவே சென்றது.

இங்கே அவர் சென்ற அடுத்த நொடியே தன் மும்பை லாயர்-க்கு கால் செய்து, இவன் விவரத்தை கூறினான். 

அதைக் கேட்ட அவரோ “இப்போதைக்கு அந்த லாயர், பர்தரா வேற எதுவும் மூவ் பண்ண முடியாத அளவுக்கு, அங்க இருக்கிற லாயரை வச்சி, பார்மாலிட்டீஸ் கிளியர் பண்ணுங்க. அதான் சேப். ஆனா நீங்க செலக்ட் பண்ற அந்த லாயர் கண்டிப்பா. இவரை விட கிளவரா இருக்கனும், இப்ப இருக்கிற ஸ்டேஜ்-க்கு என்னால உடனே வந்து சென்னை-ல ஆஜராக முடியாது. அதுக்கு லீகலா சோ மெனி பிராபளம்ஸ் வரும். சோ ஐ ஹோப், யூ கேன் அன்டர்ஸாடான்ட் மை சிட்சுவேஷன்” என்று அவரும் போனை வைத்து விட, முகிலன், தீவிரமான யோசனைக்கு சென்றான். 

அதே நேரம் அங்கே வீட்டில், “மித்துமா. இன்னும் சாப்பிட வராமா என்ன பண்ற?” என்ற தன் அன்னையின் குரலில் கனவு கலைந்து நிஜ உலகிற்கு வந்தாள் மித்ரா. 

அதில் நெற்றியை நீவியவள், “இதோ வரேம்மா” என்று அவள் அங்கு செல்ல. அவளுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. 

என்ன அதிர்ச்சி? இவர்களின் சந்திப்பு என்னும் நிகழ்வு, இவர்கள் வாழ்வில் வசந்தத்தை தருமா? இல்லை வாழ்க்கையைத் தருமா? அவன் தேடலின் முடிவு இவளா? இல்லை இவள் முடிவின் தேடல் அவனா? என்பதை வரும் அத்தியாயங்களில் காண்போம்.

நேசம் தொடரும்.

Author:    1 Sarmi SS
Comments   3

*** காதல் – 6 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com