என் சகலமும் நீயே – டீஸர்

கதாநாயகன் – முகிலன்

கதாநாயகி – மித்ரா

“இப்ப என்னதாண்டி, பிரச்சனை உனக்கு? அதையாச்சும் சொல்லித்தொலையேன்” என்று கேட்பவனுக்கு தெரியாது. அந்த பிரச்சனையின் ஆணி வேரே அவன் தான் என்று... 

கேள்வியும் அவனே, அந்த பதிலும் அவனே என்று அவனறிவானோ? இல்லையோ? அவளறிவாளே... 

கேள்வியோடு தொடங்கும் வாழ்வும், வாழ்க்கையிலேயே மறைந்திருக்கும் பதிலுமாய் ஓர் பயணம்...

காலங்கள் கடந்தும், காயங்கள் கடந்தும், என் வாழ்க்கையின் வசந்தமாய் மின்னும், என் சகலமும் நீயே...

“இளமுகிலன்” கட்டிளங்காளையாய் சுற்றித்திரியும், இருபத்தி ஏழு வயது நிரம்பிய இளங்கன்று அவன்... பால் வெள்ளைக்கு சற்று குறைவான நிறமும், ஆறடிக்கும், சற்று அதிகமான உயரமும், தவறாது செய்யும் உடன் பயிற்சியின் பலனால், கிடைத்த வலுவான தேகமும், ஓர் பார்வையிலேயே எதிராளியை அடக்கி ஆளும் திறனும், கோபத்தில் தீக்குழம்பாகவும், பாசத்தில் பசும்பாலாகவும் திகழும் விசித்திரமானவன். நெற்றி முடிச்சுகளின் தீவிரமும், விழிப்பார்வையின் கூர்மையும், சொல்லும் அவன் அழுத்தக்காரன் என்று...  அவன் இதழ் விரித்து சிரிக்கும் பொழுது கண்ணத்தில் விழும் கன்னக்குழி சொல்லும் அவன் பேரழகன் என்று... சொடக்கு போடும் நேரத்தில் வந்து விழும் பாவைகளை, உதடு சுழித்து, கேலிப்பார்வை பார்க்கும் அவன் கண்கள் சொல்லும் அவன் சற்று குறும்புக்காரன் என்று... அவனை புரிந்துக் கொள்ள முயற்சிப்பவர்களுக்கு என்றுமே புரியாத புதிர் அவன்... 

“மித்ரயாழினி” நட்புக்காக உயிரையும் கொடுக்கும் நட்பினங்களின் செல்லப்பிள்ளை அவள்... பாலில் குளித்த ரோஜா மலர் போல் அவள் நிறம்.. சுண்டினால் மட்டும் அல்ல, சுண்டி பேசினாலே சிவந்து விடும் அவள் முகம்... அது கோபத்திலா? இல்லை தாக்கத்திலா? என்பதை எதிராளியே முடிவு செய்ய முடியும்... குறும்புகளுக்கு சொந்தக்காரி, என்று சொல்லவே முடியாத அளவுக்கு அவள் அழுத்தக்காரி... அவளை கடந்து செல்லும் அத்தனை பேரும் நிச்சயம் ஒரு நொடி அவள் அழகில் மூழ்கிவிட்டே செல்வார்கள்... பேரழகிற்கு போட்டியாய் நிற்கும் அவளுக்கு, தான் ஒரு அழகி என்பதே நினைவில் இருக்காது... இயல்பிலேயே சிரிக்கும் அவள் கண்களுக்கு, நேரெதிராய்’ உதடுகள் சிரிப்பை மறந்து, இறுக்கத்துடனே இருக்கும்... பாசம் காட்ட தெரிந்த அளவுக்கு, பாவம் மோசம் செய்தால் அதை மறை(ற)க்கத்  தெரியாது... துணிச்சலுக்கும் துடுக்குத்தனத்துக்கும் நூலிடை தான் வித்தியாசம்.... ஆனால் துணிச்சல் பிரச்சனையை முடிக்க வழி வகுக்கும், துடுக்குத்தனம் பிரச்சனையை துவங்க வழி வகுக்கும்... என்பது அவள் கொள்கை... 

இவர்கள் இருவர் தான் இந்தக் கதையின் கருக்கள்... யார் இவர்கள்? இந்த நேரெதிர் பிறவிகளுக்கிடையில், இருக்கும் உறவின் பெயர் என்ன? நேஷமா? பாசமா? இல்லை கோவமா? துரோகமா? இல்லை முன் பின் தெரியாதவர்களா? இல்லை தெரிந்தும் அறியாதவர்களா? இவர்களைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இவர்களுடன் பயணிப்போம்... ஆம் பயணம் தான்... இவர்களின் சுவாசத்தில் முளைத்த ,அந்த நேசத்தை தேடி, ஓர் பயணம்... வாருங்கள் இவர்களுடன் நாமும் இணைந்து, ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வோம்...  இந்த ஸ்டோரியை தொடர்ந்து படிக்க, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Author:    1 Sarmi SS
Comments   5

*** என் சகலமும் நீயே – டீஸர் - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com