முத்தமழை – 14

தீரஜ் சென்றதும், மெல்ல புதரை விட்டு வெளியில் வந்த ஜான்வி, கீழே உடைந்துக் கிடந்த மொபைலை குனிந்து எடுத்தாள். அதுவும் டிஸ்பிளே உடைந்திருக்க, “ச்ச, இவருக்கு என் மொபைல் மேல அப்படி என்னத்தான் கோவமோ” என்றப்படி ஒரு பெருமூச்சை வெளியிட்டாள்.

அதற்குள்ளாக, அவள் இடையோரம் ஒரு கரம் அழுத்திப் படிய, திடுக்கிட்டு அவள் திரும்ப முயற்சிக்க, அதற்குள், அவளை தன்னை நோக்கி இழுத்துப் பிடித்தான் தீரஜ் வர்மன்.

நொடியில் நடந்திருந்த நிகழ்வில், இவள் மூளை வேலை நிறுத்தம் செய்திருக்க, அங்கே அவள் வயிற்றில் பதிந்திருந்த கரம் மேலும் அழுத்தமாய் பதிந்தது.

“யாரு நீ? எதுக்கு என் பின்னாடியே வர்ற? உனக்கு என்ன வேணும்?” என்று அவள் காதோரம் அவனுடைய கரகரப்பான குரல் கேட்டது. அவன் மீது வந்த மது வாசனை, அவன் குடித்திருப்பதை சொல்ல, இவளோ, வேகமாய் அவனை விட்டு விலக முயன்றாள்.

ஆனால், அவனோ, அவளை விடாது மேலும் தன் பக்கம் இழுத்துப் பிடித்தவன், “சொல்லுடி. எதுக்கு என் முன்னாடி திரும்ப திரும்ப வந்து நிக்கிற” என்றான்.

“இல்ல. நான் அது வந்து” என்று திக்கி திணறியவளுக்கு, அவனை எதிர்த்து பேச்சு கூட வர மறுத்தது. “என்ன? இந்த தீரஜ் வர்மன டிஸ்டர்ப் பண்ணிட்டு, ஒருத்தரால நிம்மதியா இருந்துட முடியும்னு நினைக்கிறீயா? சொல்லு. யார் சொல்லி என் பின்னாடி வர்ற” என்று கத்தினான்.

“இவர் என்ன பேசுறாரு?” என்று தனக்குள் கேட்டவளுக்கு, ஏனோ வார்த்தைதான் வெளிவர மறுத்தது. 

இப்போது அவள் வயிற்றில் பதிந்திருந்த கரத்தை மேலும் அழுத்தம் கூட்டி பிடித்தவன், “உனக்கு நான் வேணும்ல. சரி. கொடுத்திடலாம். இதுக்குத்தான என் பின்னாடியே வர்ற” என்றவன், இப்போது அவளை நொடியில் தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

“என்ன?” என்று மிரண்டவள், அப்போதே தன் வாயைத் திறந்து, “ஐயோ சார். நான் எதுவுமே பண்ணல. ப்ளீஸ் விட்டுடுங்க” என்று அவன் மேலிருந்து துள்ளினாள்.

ஆனால் அவன் அதை கேட்க வேண்டுமே, விறுவிறுவென்று அங்கிருந்த கெஸ்டவுசிற்குள் இவளைத் தூக்கிக் கொண்டு சென்றான். அவளின் நேரத்துக்கு அப்போதென்று பார்த்து, ஒருத்தர் கூட இல்லை.

அவனோ போதையில் தான் இருந்தான். ஆனால் அவன் நடையில் கூட சிறு தடுமாற்றம் இல்லை. அதனால், அவனை அவளால் இம்மியளவு கூட அசைக்க முடியவில்லை.

அங்கிருந்த ஒரு பெரிய அறைக்குள் சென்று கதவை காலால் எட்டி மூடியவன், இப்போது அவளை கட்டிலில் சென்று பொத்தென்று போட்டான்.

அங்கிருந்து அவள் எழும் முன்னே, இப்போது அவளின் அருகிலேயே விழுந்தவன், அவள் இடையைப் பிடித்து நகரவிடாது செய்தான்.

அவனின் பிடி அத்தனை வலியைக் கொடுக்க, அவளோ, “சார். ப்ளீஸ் சார். என்னை விட்டுடுங்க. இனிமே உங்க கண்ணு முன்னாடியே நான் வர மாட்டேன் சார்” என்று அழாத குறையாய் கெஞ்சினாள்.

“இத நீ என் கண்ணு முன்னாடி வர்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும். இந்த தீரஜ உன் வலையில விழ வெச்சிடலாம்னுதான நினைச்ச?” என்று கேட்டவனுடைய கண்களில், கோவம் அப்பட்டமாய் தெரிந்தது.

உண்மையில் இப்படி ஒரு பெண்ணை அவன் தொட்டு தூக்குவது எல்லாம் அவன் அகராதியிலேயே நடந்தது கிடையாது. ஆனால், அவளிடம் மட்டும் ஏன், அவன் அவனின் ஆண்மையின் வீரத்தை காட்ட துடிக்கிறான் என்று அவனே அறிந்திருக்கவில்லை.

“ஐயோ. சார் நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல சார். நீங்க ஏதோ தப்பா” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே, அவள் தாடையை அழுத்திப் பிடித்தவன், “நீ எப்படிப்பட்ட பொண்ணுன்னு இன்னிக்கு நான் பாக்குறேன்” என்றப்படி, அவள் இடையை மேலும் அழுத்திப் பிடித்தான்.

அவனின் பிடியில் அவளுக்கு வலிக்க ஆரம்பிக்க, இப்போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது. அவனோ அதை கண்டுக்கொள்ளாது, தன் சட்டையை அவசரமாய் கழட்டி தூர வீசினான்.

“ப்ளீஸ். சார் என்னை விட்டுடுங்க” என்றவளுக்கு வார்த்தையை தாண்டி, வலியில் கன்ணீர் சுரந்தது. “என்னை தொட்டு பாக்க ஆசப்பட்டத்தான? இப்போ நான் தொட்டு பாக்குறேன்” என்றவனின் கரம், அவளுடைய டாப்பை விலக்கி, அவள் வயிற்றில் பதிய, அவளோ, “அம்மா” என்று வலியில் கத்தியிருந்தாள்.

அவளின் கத்தலில், ஒரு நொடி நிறுத்தி, “என்ன கத்தி ட்ராமா பண்றீயா? இதுக்காகத்தான நீ” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “வலிக்குது சார். விட்டுடுங்க ப்ளீஸ்” என்றாள் அவள்.

ஏனோ அவள் கண்ணீர் நிறைந்த கண்கள், அவனை என்னமோ செய்தது. இப்படி எல்லாம் பெண்களிடம் அவன் அத்துமீறியது கிடையாது. அவனின் கோவத்தை கூட, அதிகாரமாய் தான் காட்டுவான்.

உண்மையில், அவனுக்கு பெண் வாடையே ஆகாது. இத்தனை ஏன், அவனுக்கு பெண்கள் நெருங்கினாலே பிடிக்காது. அவனுக்குல் ஒரு வித ஒவ்வாமை. இது குறித்து அவன் வெளிநாட்டில் படிக்கும் போது மருத்துவரிடம் கூட பேசியிருக்கிறான்.

அதென்னவோ அவனுக்கு எல்லாமே கிடைத்தும் கூட பெண்களின் மீது மட்டும் அவனுக்கு எந்த ஈர்ப்பும் வந்ததில்லை. அவர்கள் நெருங்கினாலே, இவனின் உடல் இறுகிப் போகும்.

ஆனால் இவள் மட்டும் தான் பார்த்த முதல் நாளில் இருந்து அவனின் மனதில் அவனையும் அறியாமல் நிற்கிறாள். அவள் அவனைத் தொடும் போது, அவனின் கோவம் அவளிடம் மட்டும் வேறு மாதிரியாக செல்கிறது.

இப்போது கூட, வேற ஒரு பெண்ணாக இருந்திருந்தால், பல அறை வாங்கியிருப்பாள். அந்த நொடியே அவளை அங்கிருந்து விரட்டியிருப்பான். ஆனால் இவளிடம் மட்டும், அவன் முற்றும் முழுதாய் தன் இயல்பை மீறி நடந்துக் கொண்டிருந்தான்.

அவள் கண்களில் இருந்து கண்ணீர் விடாமல் கொட்ட, இப்போதுதான் அவன் இயல்புக்கு மீண்டிருந்தான்.

அதில் அவனுக்கே தன்னை நினைத்து அத்தனை அதிர்ச்சி, சட்டென்று அவளை உதறிவிட்டு விலகி எழுந்தவன், தலை முடியை அழுந்தக் கோதினான்.

அவளோ அவன் விலகியது கூட தெரியாது, கண்ணை மூடி அழுது கொண்டிருக்க, இப்போது அவனோ அவளைப் பார்த்தான்.

இவன் பிடித்து இழுத்ததில், அவளுடைய இடையின் பக்கம், உடை சற்று கிழிந்திருக்க, அப்போதுதான். அவள் வயிற்றில் இருந்த காயத்தை கவனித்தான்.

காலையில் அவன் பார்க்கும் போது, அங்கே வெறும் மச்சம் மட்டும் தான் இருந்தது. அது அவன் மனதில் அப்பட்டமாக பதிந்திருந்தது.

அப்படியானால் நீச்சல்குளத்தில் விழும் போதுதான் அவளுக்கு அடிப்பட்டிருக்கும் என்று சட்டென்று சுதாரித்தான். அதில் இப்போது அவனுக்கோ மேலும் எரிச்சல் கூடியது.

“சிட். நான் எதுக்கு அவெள்ள பத்தி இவ்ளோ யோசிக்கிறேன்” என்றவன் அவசரமாய் கழட்டி எறிந்த சட்டையை எடுத்து அணிந்தான்.

அவளோ இப்போதும் அப்படியே படுத்திருக்க, அருகில் கிடந்த அவனுடைய கோர்ட்டை எடுத்து அவளின் மீது தூக்கி எறிந்தான்.

அதில் அவள் திடுக்கிட்டு கண்ணைத் திறந்துப் பார்க்க, அவன் அருகில் இல்லை. அதில் வேகமாய் எழுந்து பார்த்தாள்.

அவனோ, அத்தனை கோவமாய் அவளை முறைத்துக் கொண்டிருந்தான். அதில் இவள் எச்சிலைக் கூட்டி விழுங்க, அவனோ, “இன்னொரு தடவ என் கண்ணு முன்னாடி வரக் கூடாது” என்றான்.

“ம்ஹூம் மாட்டேன்” என்று அவள் வேகமாய் தலையாட்ட, “போ” என்று கத்தினான். அவனின் கத்தலில் மேலும் நடுங்கி, அவள் அங்கிருந்து நடக்கப் போக, ஏனோ பதட்டத்தில், அவளால் நடக்க கூட முடியவில்லை.

அதிலும் அவனின் பிடியில், காயம் பெரிதாகியிருக்க, அன்னிட்சையாய் வயிற்றைப் பிடித்தாள்.

அதில் இவனுக்கோ இன்னும் எரிச்சல் கூடியது. “கெளம்புறீயா? இல்ல” என்று அவன் வேகமாய் அவளை நெருங்க, “ஐயோ இல்ல” என்று வேகமாய் சென்றவள், மூடியிருந்த கதவில் இடித்துக் கொண்டாள்.

அவசரத்தில், அவளுக்கு கதவின் தாழ்பாள் எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது தடவ, இப்போது அவனோ, ஒரு வித எரிச்சலுடன் அவளைப் பார்த்தான்.

“முதல்ல இத எடுத்து போடு” என்று அவன் உறும, “என்ன?” என்றவளுக்கு எதுவுமே புரியவில்லை.

அதில் அவனோ, கட்டிலில் கிடந்த கோர்ட்டை எடுத்து அவள் மீது மீண்டும் எறிந்தான். “உன் கை பட்ட பொருள, நீயே எடுத்துட்டு போ” என்று சொல்லவும், அவளும் அவசரமாய் அதை அணிந்துக் கொண்டாள்.

இப்போது அவளை மீண்டும் மேலிருந்து கீழாய் பார்த்தான். அவளிடம் ஏதோ ஒன்று இருப்பதாக தோன்றியது.

பின் மேஜையில் இருந்த ரிமோட்டை எடுத்து கதவை திறந்து விட்டவன், “அப்படியே, இங்க இருந்து ஓடிப் போயிடனும்” என்று சொல்லிவிட்டு குளியலறைக்குள் சென்றான்.

அவளும் விட்டால் போதும் என்று, வேகமாய் ஹெஸ்டவுஸில் இருந்து மூச்சுவாங்க ஓடி வந்தாள்.

இன்னும் கூட நடந்த விஷயங்கள் எதையும் அவளால் யூகித்துப் பார்க்க கூட முடியவில்லை. இப்படி எல்லாம் அவள் வாழ்க்கையில் இதற்கு முன் நடந்ததும் கிடையாது.

வயிறு வேறு பயங்கரமாய் வலிக்க, அந்த நள்ளிரவில், அவளால் அங்கிருந்து உடனேவும் செல்ல முடியவில்லை.

யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்றால், அவளிடம் இருந்த மொபைலும் உடைந்துப் போயிருந்தது. மொத்தமாய், என்ன செய்வது என்று புரியாது, அப்படியே அங்கிருந்த தோட்டத்தில் புல் தரையில் அமர்ந்துவிட்டாள்.

இப்போது அதை, ஜன்னல் வழியே தீரஜ் பார்த்தான். அவனின் கோவம் கூட, இப்போது அதே எரிச்சலுடன், ஜித்தேஷுக்கு கால் செய்ய நினைத்தான்.

பின், “நோ வே. நான் எதுக்கு அவள பத்தி யோசிக்கனும். அவ யாரு முதல்ல? இதுக்கப்புறம் அவ இந்த தீரஜ் முன்னாடி வர மாட்டா” என்று கர்வமாய் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

மீண்டும் அவனின் பார்வை அவளை தொடர, சட்டென்று ஜன்னல் திரை சீலை இழுத்து விட்டவன், இப்போது அங்கே அவளுடைய பிரேஸ்லெட் அறுந்து கிடப்பதைப் பார்த்தான்.

அதை எடுத்துப் பார்த்தவனின் மணக்கண்ணில், மீண்டும் அந்த இடுப்பு மச்சம் நினைவுக்கு வர, “இந்த செயின் எப்படி பத்தும்” என்று விபரீதமாய் யோசித்தான்.

அதில் அவனின் மனமே, “டேய் என்னடா சொல்ற? அது ப்ரேஸ்லெட்டா” என்று அலறியது.

அப்போதே அவனுக்கும், அவனின் எண்ணம், அவனையும் மீறி எங்கோ சென்றிருப்பது புரிய, “ச்சீ. எதுவா இருந்தா என்ன?” என்று தூக்கி குப்பைத் தொட்டியில் வீசியிருந்தான்.

இங்கே ஜான்வியோ, ஒரு வழியாக, அங்கிருந்து எழுந்து, தட்டு தடுமாறி, பின் வாசல் வழியாக, மேலே இருந்து அவளுடைய அறைக்கு வந்து சேர்ந்தாள்.

இன்னும் கூட அவள் உடல் நடுங்கிக் கொண்டு தான் இருந்தது. உள் பக்கம் தாழ்பாள் போட்டுக் கொண்டவள், அப்படியே சென்று அங்கிருந்த படுக்கையில் படுத்து விட்டாள்.

ஏனெனில், இப்போதைக்கு அவள் எது பற்றியும் யோசிக்கும் மனநிலையில் இல்லை. உறக்கம் இல்லாமல், அவளால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூட யோசிக்க முடியாது.

அதனாலையே, அப்படியே அவனுடைய கோர்ட்டை கூட கழட்டாது, உறங்கிப் போயிருந்தாள்.

ஆனாலும், அவளின் ஆழ்மனம் உறக்கத்திலேயே, “வேணாம் சார். நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல. நான் உங்கள பாலோ பண்ணல” என்று புலம்பிக் கொண்டிருந்தது.

இத்தனைக்கு பிறகும் ஒருவளால் உறங்க முடியுமா? ஆம் முடியும் என்பது போல் தான் அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அங்கே படுக்கையில் படுத்த தீரஜூக்குத்தான் சுத்தமாய் உறக்கம் கெட்டுப் போனது. அதில் அவள் மீது இன்னும் கூட அவனுடைய வன்மம் கூடியது.

(க்கும், காரணமே இல்லாதப்பையே நம்ம ஹீரோ, அவ மேல இவ்ளோ கோவப்படுறாரே. இதுல, தொக்கா ஒரு காரணத்த, நம்ம ஹீரோயினே அவனுக்கு க்ரீயேட் பண்ணிக் கொடுத்தா, அப்போ நம்ம ஹீரோ என்னப் பண்ணுவாரு? சரி அது எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அப்புறம் இன்னும் ஒரு எபிசோட்ல இருந்து, எபிசோட்ஸ் எல்லாம் லாக் ஆக ஆரம்பிச்சிடும். இண்டர்னேசனல் யூசர்ஸ். மோஸ்ட்லி debit/credit card use பண்ணி pay பண்ணுங்க. உங்களுக்கு pay பண்றதுலையோ, இல்ல சப்ஸ்கிரிப்சன் பண்றதுலையோ ப்ராபளம் இருந்தா lovebeatnovels@gmail.com க்கு மெயில் பண்ணுங்க. உடனே எங்க டீம் சரி பண்ணுவாங்க. அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தீருமா?..

Author:    1 Sarmi SS
Comments   3

*** முத்தமழை – 14 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com