தாபம் – 15

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

”பேச்செல்லாம் போர்வீரனுக்கானது போல் தான் இருக்கிறது. ஆனால் என் பார்வைக்கு அப்படி எதுவும் பெரிதாக தெரியவில்லை” என்றான் இளவரசன். 

அதற்கு முக்கிய காரணம் மகதீரன், சற்று உயரம் கம்மி. ஆனால், அவனுடைய வீரமும், திறமையும் வானளவுக்கு உயர்ந்தது என்று இளவரசிக்கு மட்டும் அல்ல, அந்நாட்டின் சிறு பேதைக்கு கூட தெரியும்.

அதனால், “செயலும், போர்வீரனுக்கு உண்டானது போல் தான் இருக்கும். வேண்டுமானால், போட்டியிட்டு பாருங்கள்” என்று வேகமாக கூறினாள் இளவரசி.

ஆயிரம் தான் உடையவனாக இருந்தாலும், தன் ஆருயிர் தோழனை, சீண்டுவதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் மகதீரனுக்கு ஆதரவாக பேசினாள்.

அதில் இளவரசனுடைய பொறுமை காற்றில் பறக்க, “போட்டியா? நாளை இந் நாட்டையும் சேர்த்து ஆளப் போறவன், இப்படி ஒரு சாமனியன் உடன் போட்டி போடுவதா?” என்று கோவமாக கேட்டான் இளவரசன்.

அதில், “இந்நாட்டை எம் இளவரசித்தான் ஆள்வார். எம் நாட்டை ஆட்சிக் கொள்ளலாம், என்று நினைக்கும் உம் நினைப்பை இங்கேயே புதைத்துவிடுங்கள் இளவரசரே” என்று கோவமாக கூறினான் மகதீரன்.

“என்ன? நான் எம் நினைப்பை புதைக்க வேண்டுமா? நான் நினைத்தால், உம் உடலுடன் சேர்ந்து உயிரும் இம்மண்ணில் புதைந்துப் போகும்” என்று கோவமாக கூறினான் இளவரசன்.

”அதையும் பார்த்து விடலாம்” என்று மகதீரனும், வேகமாக அந்த மரத்தில் சொருகியிருந்த ஈட்டியை கரத்தில் எடுத்தான்.

அதற்குள், “தமையனே தாங்கள் இங்கே?” என்று சொல்லியப்படி ஓடி வந்தாள் தேவி.

தேவியைப் பார்த்தவுடனே, பிடித்திருந்த ஈட்டியை நழுவ விட, அதைக் கவனித்த இளவரசி, “நல்ல வேளை நீ வந்தாய். இல்லையென்றால், இவர்கள் இருவரும், நம் தேசத்தை போர் பூமியாக மாற்றியிருப்பார்கள்” என்று கூறினாள் இளவரசி.

“என்ன கூறுகிறாய் நீ?” என்று புரியாமல் தேவி பார்க்க, “வா தங்கையே. நாம் இங்கிருந்து செல்வோம்” என்று கோவமாக கரத்தைப் பிடித்திழுத்தான் இளவரசன்.

ஏனோ இளவரசரின் பாராமுகம், இளவரசியை வெகுவாக தாக்க, “நில் தேவி” என்றாள். அதில் தன் தமையனின் கரத்தில் இருந்து விலகி, “என்னவாயிற்று ஆரு?” என்றாள் தேவி.

“இல்லை. அரண்மனை வரை வருகிறேன் என்று கூறினாய். இப்போது தமையனைப் பார்த்தவுடன், இக்காட்டில் என்னை தனியே விட்டு விட்டு செல்கிறாய்?” என்று தேவியிடம் கேட்பது போல், இளவரசனைப் பார்த்தாள்.

”என்ன? நான் என் தோழி ஆரு-விடம் தானே பேசிக் கொண்டிருக்கிறேன். இல்லை. தனியாய் நின்றிருந்த என் தோழியின் உடலில் வேறேனும் பூதம் புகுந்துவிட்டதா?” என்று கிண்டலாக கேட்டாள் தேவி.

“ச். என்ன கேலி இது தேவி? உன்னால் என் துணையாய் வர முடியுமா? இல்லை முடியாதா?” என்று கோவமாக கேட்டாள் இளவரசி.

“நீ கேட்டு நான் மறுப்பேனா?” என்று இளவரசியிடம் சொல்லியவள், சற்று இளவரசனின் பக்கம் திரும்பி, ”தமையனே தம்முடன் ஆரு-வையும் அழைத்து செல்வோம்” என்றாள் தேவி.

“எதற்கு? அதான், இன்னாட்டு இளவரசியை காக்க, படைத் தளபதியே உடன் இருக்கிறாரே? அதன் பின் நம் பாதுகாப்பு அவர்களுக்கு எதுக்கு?” என்று கோவமாக சொல்லியப்படி, இளவரசன் முகத்தை திருப்பினான்.

அதில் இளவரசியின் முகம் சட்டென்று வாட, அதற்குள், “ஆம் இளவரசி தாம் உம்முடன் இருக்கிறேன் அல்லவா? வாருங்கள்” என்று கூறினான் மகதீரன்.

அதில் மகதீரனை முடிந்த மட்டும் முறைத்தவன், இளவரசியின் முகத்தைக் கூட பார்க்காமல், தேவியின் கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

செல்லும் அவனையே பார்த்தப்படி நின்றுக் கொண்டிருந்த இளவரசியை, மகதீரனின் குரல் நடப்புக்கு கொண்டு வர, அவளையும் அறியாமல் அவள் கண்ணில் கண்ணீர் சுரந்தது. சரியாக அன்னேரம், மரத்தில் இருந்து பொத்தென்று ஒரு அணில் கீழே விழ, அதில் கடந்த கால நிகழ்வில் இருந்து அபியும், ருத்ரா-வும் வெளியில் வந்தனர்.

சில நொடிகள் இருவருக்கும் எதுவுமே புரியவில்லை. அது ஏனோ, இருவரும் சந்தித்த நாளில் இருந்தே, திடீர் திடீரென்று ஏதேதோ நினைவுகள் வருகிறது. ஆனால், எதுவும் தெளிவாக தெரியாமல், மங்கலான தோற்றத்திலேயே இருக்கிறது. அதிலும் நினைவு திரும்பியதும், கண்ட கனவு எதுவும் நினைவடுக்கில் இருப்பதில்லை. இப்போதுமே, இருவருக்கும் என்ன நடந்தது என்று புரியவில்லை.

ஒரு வித குழப்பத்துடனே, அபி, ருத்ரா-வைப் பார்க்க, ருத்ரா-வும் ஒரு வித குழப்பத்துடனே அபியைப் பார்த்தாள்.

“சம்திங் இஸ் ராங்” என்று அபி சொல்ல, “முதல்ல நம்ம இங்க இருந்து கிளம்பலாம்” என்றாள் ருத்ரா.

“ம் ஆமா. வா” என்று அபி எழுந்து முன் செல்ல, ருத்ரா-வும் அவனை தொடர்ந்து சென்றாள்.

ஏனோ இருவரின் கால் தடமும், அப்பூமியில் பதிந்த உடனே அந்த இடமெல்லாம் பூஞ்சோலையாய் பூத்துக் குலுங்கியது. ஆனால் அடுத்த நொடியே, சிவந்த விழியோனின் உக்கிரத்தால் கருகி மண்ணில் வீழ்ந்தது.

”சாபவிமோச்சனமே இல்லாத பாவத்திற்கு, பதில் சாபம் மட்டுமே” என்று சிவந்த விழியோன் கோவமாக கத்தினான். ஏனோ இப்போது அவர்கள் இருக்கும் காட்டிற்குள், சிவந்த விழியோனின் சக்தி செயல்படவில்லை.

அதனால், அவளை கண்கானிக்க மட்டுமே அவனால் முடிந்தது. அதிலும் அபியுடன் அவளுடைய நெருக்கம் அதிகரிக்க, அதிகரிக்க அவனுடைய கோவம் கூடிக்கொண்டே சென்றது.

“அபி நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” என்று கேட்டாள் ருத்ரா.

“என்ன கேட்கனும்? இந்த காட்டுக்கு வழியை மட்டும் கேட்காத. எனக்கு அது தெரியாது” என்றான் அபி.

”ச் அது இல்ல அபி. இந்த இடத்துக்கு ஏற்கனவே நீங்க வந்த மாதிரி இருக்கா?” என்று கேட்டாள் ருத்ரா.

“ச். வந்திருந்தா சரியா வழியை கண்டுப்பிடிச்சிருக்க மாட்டேன்னா?” என்று அபி சொல்ல, “ஆனா எனக்கு இங்க வந்த மாதிரி இருக்கு. அதுலையும், இந்த இடம் எனக்கு புதுசுன்னு தோணவே இல்ல. ஏற்கனவே நம்ம இங்க வந்திருக்கிற மாதிரி இருக்கு” என்றாள் ருத்ரா.

அதில் நடந்துக் கொண்டிருந்தவன் நின்றான். அதில் அவள் அவனைப் பார்க்க, “ஹேய் நீயும், நானும் ஒரு ரெண்டு தடவைத் தான் மீட் பண்ணிருப்போம். அப்படி இருக்கிறப்ப, எப்படி நீயும், நானும் இதுக்கு முன்னாடி இங்க வந்திருப்போம்? தண்ணியில விழுந்ததுல, உனக்கு மண்டையில அடிப்பட்டிருச்ச்சின்னு நினைக்கிறேன்” என்று கூறினான் அபி.

“அதெல்லாம் இல்ல. நம்ம இதுக்கு முன்னாடி இங்க வந்திருக்கோம்” என்றாள் ருத்ரா. அதில் அவளை முறைத்தவன், “அப்படியா? சரி.. அதான் நம்ம ஏற்கனவே இங்க வந்திருக்கோமே. சோ நீயே சரியான வழியை காமி பார்ப்போம்” என்று கூறினான் அபிமன்யு.

“நான் எப்படி?” என்று யோசித்தப்படி அவள் திரும்ப, அங்கே ஒரு மரத்தில், இதய வடிவில் எதுவோ பதிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ருத்ரா-வின் விழிகள் அவளையும் அறியாமல் தங்க நிறத்தில் மின்னியது. ஆனால் அபியும் அதை கவனிக்கவில்லை.

“வழிதானே. நானே உங்களை அழைத்துச் செல்கிறேன்” என்று சொல்லியப்படி அபி-க்கு முன் நடந்தாள் ருத்ரா. அதில், “என்னாச்சு இவளுக்கு சடனா? தூய தமிழ்-ல பேசிட்டு சுத்துறா” என்று யோசனையோடே அவள் பின்னால் சென்றான்.

இங்கே அகல்யா, தென்றல் மற்றும் அர்ஜூன், கவின் நால்வரும் இவர்கள் இருவரை தேடி கடலுக்குள் சென்றனர். தென்றல் ஒரு வித பயத்துடனே அமர்ந்திருந்தாள். ருத்ராவிற்கு ஏதோ பெரிய ஆபத்து ஏற்படப் போவது போல் அவள் மனதிற்கு தோன்றியது.

”ச். கவலைப்படாதீங்க. எப்படியும் கண்டுப்பிடிச்சிடலாம்” என்று கூறினான் கவின்.

”ஆமா, நீ பெரிய கடலரசன். கண்டுப்பிடிச்சிடுவ?” என்று அர்ஜூன் கோவமாக கூறினான்.

“அப்படியா? சரிப்பா, நான் தான் அரசன் இல்ல. நீங்க பேரசரர் தான? கண்டுப்பிடிங்க பார்ப்போம்” என்று நக்கலாக கூறினான்.

“ஐயோ! ரெண்டு பேரும் கொஞ்சம் உங்க சண்டைய நிறுத்துங்க? ஏன் இப்படி அடிச்சிக்கிறீங்க?” என்று கேட்டாள் அகல்யா.

அப்போதே இருவருக்கும், தாங்கள் ஏன் இப்படி முறைத்துக் கொண்டிருக்கிறோம்? என்றே தோன்றியது. அதில் இருவரும் அமைதியாகி விட, “இவ்ளோ பெரிய கடல்ல, அவங்க ரெண்டு பேரை எப்படி கண்டுப்பிடிக்கிறது?” என்று மலைத்துப் போய் அகல்யா அந்த கடற்கரையைப் பார்த்தாள்.

தென்றலுக்கும் அந்த எண்ணம் தோன்றாமல் இல்லை. கண்னுக்கெட்டிய தூரம் வரை, நீர் மட்டுமே சூழ்ந்திருக்க, இதில் அவர்கள் இருவரை கண்டுப்பிடிப்பது சாத்தியமா? என்று கூட தோன்றியது.

உடனே கவின், “இந்த கடல்ல நம்ம தேடுனா, நம்ம வாழ்க்கைப் புல்லா தேடிட்டு இருக்க வேண்டியது தான்” என்றான்.

அதில் அர்ஜூன் ஏதோ சொல்ல வர, தென்றல் அவன் கரத்தைப் பிடித்து தடுத்தாள்.

“பின்ன?” என்று அகல்யா கேட்க, “ம் கடல்ல நம்ம தேட முடியாது. இந்த கடல்ல சுத்தி குட்டி குட்டி தீவு நிறையா இருக்கு. அதுல எங்கையாச்சும் இருக்காங்களான்னு தான் நம்ம பார்க்கப் போறோம்” என்றான் கவின்.

”அதெப்டி? கடல்ல விழுந்தவங்க தீவுக்கு போயிருப்பாங்க?” என்று கேட்டாள் அகல்யா.

அதில் கவின் அகல்யா-வைப் பார்க்க, “கடல் எப்பவுமே அதுக்குள்ள விழுற பொருளை அது வச்சிக்காது. எப்படியாச்சும், எங்கையாச்சும் கரை சேர்த்திடும்” என்றாள் தென்றல்.

”ஓ.. ஹோ.. இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா?” என்று கேட்டாள் அகல்யா.

“செம்மங்க. யுவர் சச் ஏ பிரில்லியண்ட்” என்று கவின் சொல்ல, அர்ஜூனின் கோவம் எகிறியது. 

”அப்புறம் என்ன? எப்படியும் அவங்க ஏதாச்சும் ஒரு தீவு-ல ஜாலியா இருப்பாங்க. நம்மளும் அங்க போய் எஞ்சாய் பண்ணலாம்” என்று கூறினாள் அகல்யா.

அதில் கவினில் இருந்து அர்ஜூன் வரை தலையில் அடித்துக் கொண்டனர்.

“ஹே இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி எல்லாரும் தலையில அடிச்சிக்கிறீங்க?” என்று கேட்டாள் அகல்யா.

“ம் இப்போ உன்னை தூக்கி நான் கடல்ல போடுறேன். அப்படியே நீயும் ஏதாச்சும் ஒரு தீ-வை கண்டுப்பிடிச்சு வை. நாங்க உன்னைப் பாலோ பண்ணிட்டு வந்துடுறோம்” என்று கவின் கிண்டலாக கூறினான்.

“என் முன்னாடியே என் தங்கச்சியை கடல்ல தூக்கிப் போடுறேன்னு சொல்லுவீயா நீ?” என்று கோவமாக அர்ஜூன் கேட்க, “ஆமா இப்ப உன் முன்னாடித்தான சொன்னேன். உனக்கு கேட்கலையா?” என்று கிண்டலுடன் கேட்டான் கவின்.

“ஐயோ அண்ணா. உனக்கு என்னாச்சு? உனக்கு என் மேல இம்புட்டு பாசம் எல்லாம் கிடையாதே” என்று நக்கலாக அகல்யா கேட்க, “ச்.. அகல்” என்று பல்லைக் கடித்தான் அர்ஜூன்.

“சரி. சரி. என் அண்ணா மாதிரி இந்த உலகத்துல யாராச்சும் இருக்க முடியுமா?” என்று கூறினாள் அகல்யா.

அதில் தென்றலுக்கே சிரிப்பு வந்துவிட, கவினும், அகல்யா-வும் சத்தமாக சிரித்தனர். ”எக்கேடோ கெட்டுப் போ” என்று சொல்லிவிட்டு அர்ஜூன் அங்கிருந்து தள்ளி சென்றான்.

“ஐயோ என் செல்ல அண்னா. நான் சும்மா பண் பண்ணேண்டா” என்று சொல்லியப்படி அகல்யா அர்ஜூனின் பின்னால் சென்றாள்.

(இவர்கள் அவர்களை கண்டுப்பிடிப்பார்களா? இல்லை புதிதாய் ஏதும் சிக்கல்களில் மாற்றிக் கொள்ளப் போகிறார்களா? என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காணலாம். அப்புறம் அடுத்த எபிசோட்ல இருந்து, எபிசோட்ஸ் எல்லாம் லாக் ஆக ஆரம்பிச்சிடும். இண்டர்னேசனல் யூசர்ஸ். மோஸ்ட்லி debit/credit card use பண்ணி pay பண்ணுங்க. உங்களுக்கு pay பண்றதுலையோ, இல்ல சப்ஸ்கிரிப்சன் பண்றதுலையோ ப்ராபளம் இருந்தா lovebeatnovels@gmail.com க்கு மெயில் பண்ணுங்க. இல்லன்னா ஹெல்ப்லைன் வாட்சப் நம்பர் +916374401933 நம்பருக்கு வாட்சப் பண்ணுங்க. உடனே எங்க டீம் சரி பண்ணுவாங்க. அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

சாபம் தீருமா?...

Author:    1 Sarmi SS
Comments   2

*** தாபம் – 15 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com