முத்தமழை – 12

வேறு உடையை ஜான்வி மாற்றிக் கொண்டிருக்க, இங்கே ஜித்தேஷோ, ஜான்வியை தேடி சுற்றிக் கொண்டிருந்தான். “ஐயோ இந்த பொண்ணு எப்படி இங்க வந்தா? அவ இங்க என்னப் பண்ணிட்டிருக்கா? மொதல்ல அவள கண்டுப்பிடிச்சு, இங்க இருந்து அனுப்பி வைக்கனும். இல்லன்னா, இவன் என்னையும் சேர்த்து மேலோகம் அனுப்பிடுவான்” என்று புலம்பியப்படியே சுற்றிக் கொண்டிருந்தான்.

அப்போது, அவனின் சட்டைக் காலரைப் பிடித்து யாரோ இழுக்க, இவனோ திடுக்கிட்டு, திரும்பினான். அங்கே, “என்ன மாம்ஸ்? என்ன தேடித்தான் சுத்திட்டு இருக்க போல” என்று கேலியாய் கேட்டப்படி, புருவத்தை உயர்த்தினாள் ஷைனிகா.

அவளைப் பார்த்ததும், இன்னும் கடுப்பானவன், “ச் என்னை மாம்ஸ்னு கூப்டாதான்னு உனக்கு எத்தன தடவ சொல்லிருக்கேன்” என்று கோவமாய் கூறினான்.

“இதென்னடா? மாமா பையன்ன, மாம்ஸ்னு கூப்பிடுறதுல என்ன தப்பு இருக்கு?” என்று அசராது கேட்டாள் ஷைனி.

“இங்கப்பாரு” என்றவன் சொல்லும் முன்னே, “சரி விடுங்க. என் அக்காவதான கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒத்தக்கால்ல நிக்குறீங்க. என்னை லவ் பண்றேன்னு ஒத்துக்கோ. நானே உனக்கும் அவளுக்கும், மேரேஜ் பண்ணி வைக்கிறேன்” என்று புதுவிதமான டீலிங் பேசினாள்.

அவளின் வார்த்தையில், “ச் என்ன பேசிட்டு இருக்க நீ? யாராச்சும் கேட்டா என்ன நினப்பாங்க?” என்று சுற்றி முற்றிப் பார்த்தான்.

“ம் என்ன நெனப்பாங்க? நம்ம ரெண்டு பேரும் டாம் அண்ட் ஜெர்ரி கப்பிள்னு நினப்பாங்க” என்று அவன் தோள் மீது கையைப் போட்டாள்.

அவளின் செயலில், வேகமாய் அவள் கரத்தை தட்டி விட்டவன், “இங்கப்பாரு. உன்னோட இந்த விளையாட்ட எல்லாம் உன் குடும்பத்துல இருக்கிறவங்களோட நிறுத்திக்கோ. தேவயில்லாம, என்கிட்ட வெச்சிக்காத” என்றான்.

‘ஸப்பா. இதுக்குத்தான், அந்த டீமன் கூட சேர்ந்து சுத்தாதன்னு சொன்னேன். இப்போ பாரு. நீயும் இப்படி சிடுசிடுன்னு சுத்திட்டு இருக்க” என்றாள்.

அவனோ அவளிடம் பேசுவது வீண் என்பது புரிந்து அங்கிருந்து செல்லப் போக, “இப்பவும் சொல்றேன் மாம்ஸ். உனக்கு என் சிஸ்டர் எல்லாம் செட்டாக மாட்டா. இட்ஸ் பெட்டர் நீ என்னையே சூஸ் பண்ணலாம். எனக்குலாம் ஒரே ஒரு கண்டிஷன் தான். அந்த டீமன் கூட மட்டும் நீ சேர்ந்து சுத்தக் கூடாது” என்றாள்.

அவளின் வார்த்தை காதில் விழுந்தாலும், அதை உதறித்தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றான் ஜித்தேஷ்.

இப்போது ஷைனிகாவோ, “என்னடா இது? ஒரு நல்ல பையனுக்கு, நல்ல பொண்ணு அமைய கூடாதுன்றதுதான் விதியோ?” என்று கிண்டலாய் கேட்டவள், அங்கிருந்து சென்றாள்.

உடை மாற்றியவளுக்கு, ஏனோ அந்த அறையை விட்டு வெளியில் வரவே அத்தனை பயமாய் இருந்தது.

“பேசாம இங்கேயே இருந்துடுவோமா?” என்று மனம் யோசிக்க, “இது என்ன உன் மாமா வீடா? இல்ல மச்சான் வீடா? நீ வந்ததே வேல பாக்கத்தான. அப்போ அந்த வேலைய பாக்காம, இங்க இருந்து என்னப் பண்ணுவ? அப்புறம் ராகவ் அப்போ திட்டுனத மறந்துட்டீயா? பார்டீக்கு நம்ம சைட் இன்வெஸ்டர்ஸும் வருவாங்க. அவங்கள எல்லாம் கம்பெனி சார்புல நீதான் வெல்கம் பண்ணணும்” என்று மனம் எடுத்துரைத்தது.

அது அவளுக்குமே புரிய, இப்போதுதான் அவள் மொபைலை தேடினாள். ஏனெனில் ராகவ் அவளுக்கு இன்வெஸ்டர்ஸ் பற்றிய தகவலை அனுப்புகிறேன் என்று கூறியிருந்தான்.

ஆனால் எங்கே? “ஐய்யய்யோ! மொபைல்ல எங்க போட்டேன்” என்று யோசித்தவளுக்கு சட்டென்று நினைவும் வரவில்லை.

இப்போது அங்கே சென்று தேடவும், அத்தனை பயமாக இருந்தது. “ஒரு வேள அவரு அங்க இருந்தா என்னப் பண்றது?” என்று தனக்குள்ளே கேட்டாள்.

“இல்ல இல்ல வேண்டாம்” என்றவள், அந்தப் பக்கம் செல்லாமல் மெதுவாய் வெளியில் எட்டிப் பார்த்தாள். யார் இருக்கும் சத்தமும் கேட்கவில்லை.

மணியைப் பார்க்க, கிட்ட தட்ட ஆறு மணியை தொட்டிருந்தது. “இன்னேரம் பார்டி ஆரம்பிச்சிருக்கும்” என்று சொல்லியவள், அங்கிருந்து வெளியில் வந்தாள்.

நல்ல வேளையாய், அவள் அங்கிருந்து செல்லும் வரை தீரஜ் வெளியில் வந்திருக்கவில்லை. ஜித்தேஷுமே, அந்த தளத்தை விட்டு விட்டு, வேறு எல்லா இடத்திலும் அவளைத் தேடியிருந்தான்.

“ஒரு வேள அந்தப் பொண்ணு, இவென்ன பாத்ததும் பயந்து போயிட்டாளோ?” என்று யோசித்தவனுக்கு, நரேந்தரரிடம் இருந்து அழைப்பு வந்திருக்க, “ஐயோ பார்டிக்கு வேற லேட்டாயிருச்சி. இவென்ன வேற கூட்டிட்டு போகனும்” என்று தனக்குள்ளே யோசித்தான்.

அங்கே தீரஜோ, அவனுக்காக கொண்டு வரப்பட்டிருந்த, உடையை கூட மாற்றாது, அங்கிருந்த பஞ்சிங் பேக்கில் ஓங்கி குத்திக் கொண்டிருந்தான்.

குளித்து முடித்து வந்திருந்தவன், இப்போது மீண்டும் வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தான். யார் மீது இத்தனை கோவம் என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் கோவமாய் வந்தது.

அவன் அங்கே பஞ்சிங் பேக்கை பஞ்ச் செய்வது, இங்கே வாசலில் நின்றிருந்த ஜித்தேஷுக்கு கேட்டது.

“ஐயோ இப்போ போயி, இவென்ன அங்க கூப்டா, பஞ்சிங் பேக்குக்கு பதிலா, நம்மள யூஸ் பண்ணுவான்னே” என்று தனக்குள் புலம்பினான்.

அன்னேரன் நரேந்தர் மீண்டும் அவனுக்கு கால் செய்ய, “ஐயோ இவரு ஒருத்தரு. ச்சே, எப்படித்தான் இவர என் அத்தைக்கு பிடிச்சு கல்யாணம் பண்ணாங்களோ? சரியான இம்சை. இவர் தான் இம்சன்னு பாத்தா, இதுக பெத்து வெச்சிருக்கிறது எல்லாமே பெரும் இம்ச” என்று வாய் விட்டே சொல்லியிருந்தான்.

அதில், இப்போது அவன் தலையிலேயே ஒரு கனமான பந்து வந்து விழ, “ஐய்யய்யோ, சத்தமா பேசிட்டேன் போலையே” என்று அவசரமாய், தீரஜைப் பார்க்க உள்ளே சென்றான்.

இங்கே நரேந்திரரோ, “சிட், நம்ம வீட்டு ஈவண்ட்க்கு கூட, இவன் கடைசியாத்தான் வருவான்” என்று தனக்குள் சொல்லியவரிடம், இப்போது ஜான்வி வந்து நின்றாள்.

அவளைப் பார்த்தவரோ, “இன்னிக்கு தீம் என்னென்னு, ஜான்விக்கு இன்பார்ம் பண்ணலியா கேசவ்” என்று கோவமாய் கேட்டார்.

“இல்ல சார்” என்றவர் சொல்லி முடிக்கும் முன்னே, “ஐயோ இல்ல சார். அவர் இன்பார்ம் தான் பண்ணாரு. பட் நான் தான், ட்ரெடிசனலா எதுவும் கொண்டு வரல. அதான்” என்றாள்.

அதில் அவருக்கோ இருக்கும் கடுப்பில் இன்னும் எரிச்சல் தான் கூடியது. “வாட் இஸ் திஸ் கேசவ்?” என்றவருக்கு, ஒரு பெண்ணிடம் தன் கோவத்தை காட்ட முடியவில்லை.

அதற்குள் அங்கு வந்த ஷைனிகாவோ, “வாவ், யு லுக் சோ ஸ்டன்னிங் ஜான்வி. பைனலி. நீயாச்சும் எனக்கு கம்பெனி கொடுத்திருக்க?” என்றாள்.

அதில் அவர் இப்போது தன் செல்ல மகளை அவர் முறைக்க, அவளோ, கேசவ்விடம், “வரப் போறவங்களுக்கு, என்ன ட்ரெடிசன் தெரிய போகுது. அதுவும் போக, ஜான்வி இங்க ரிபிரசண்ட் தான பண்ணப் போறா. சோ அவங்க ஸ்டைல்ல இருந்தாத்தான், அவங்களுக்கும் கம்பர்டபிளா இருக்கும்” என்றாள்.

“என்னமோ பண்ணுங்க” என்று சொல்லியவர் நகர, இப்போது ஜான்வியோ, “அவர் கோவிச்சிக்கிட்டாரு போல. நான் வேணும்னா போயி சேரி மாத்திட்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. அவர யாராச்சும் கூப்டிருப்பாங்க. உனக்கு இந்த காஸ்டியூம் செம்ம கியூட்டா இருக்கு” என்றாள் ஷைனிகா.

அப்படி அவள் சொல்லும் போதே, அவளை அங்கிருப்பவர்கள் யாரோ அழைக்க அவள் அங்கிருந்து சென்றாள்.

அதென்னவோ அவளுக்கு பிரச்சனை என்று வரும் போது யாரோ ஒருவர் அவளைக் காப்பாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் அது எல்லாம் தான் அவளுக்கு மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கப் போகிறது என்று அவள் அப்போது நினைத்திருக்கவில்லை.

ஒரு வழியாய் பார்டி ஆரம்பிக்க, அப்போதுத்தான் இனிய வர்மன் அந்த பார்டி ஹாலுக்குள் நுழைந்தான்.

அவனைப் பார்த்தவுடனே அங்கிருந்த அத்தனைப் பெண்களின் பார்வையும் அன்னிட்சையாய் அவனைத்தான் பார்த்தது. அதில் ஜான்வியுமே இப்போது அவனைப் பார்த்தாள்.

சிரித்த முகமாய் வந்தவனைப் பார்த்தவளின் மனதில் கூட, மெல்லிய சாரல் அடித்ததோ என்னவோ? நொடிக்கும் குறைவாய் அவனைப் பார்த்தாள்.

அதற்கு முக்கிய காரணம் அவனின் அந்த புன்னகைத்தான். சற்று முன் அவளுக்காக, அவன் பேசும் போது கூட, அவனை அவள் சரியாக கவனிக்கவில்லைப் போலும்.

இப்போது அந்த கோர்ட் சூட்டில், அத்தனை வசீகரனாய் இருந்தான். அதற்குள் சட்டென்று தன் தலையை குலுக்கியவள், “ஹேய் என்னப் பண்ணிட்டிருக்க நீ? வந்த வேலைய பாரு” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

அதற்குள், வர வேண்டிய முக்கிய கெஸ்ட்-ம் வரப் போவதாக சொல்லியிருக்க, கேசவ், ஜான்வியிடம், “எல்லாம் ஒகேத்தான. நான் கொடுத்தத எல்லாம் ரிவைஸ் பண்ணிட்டீங்கத்தான” என்று கேட்டான்.

“ம்” என்று அவள்  தலையாட்ட, இப்போது அவளையும் அழைத்துக் கொண்டு அந்த வெளிநாட்டு கெஸ்டை, வரவேற்க வேகமாய் வெளியில் சென்றனர்,

இனியனுமே, மரியாதை நிமிர்த்தமாய் தன்னுடைய அப்பாவுடன் வந்திருக்க, இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்ணும் வந்திருந்தனர்.

ஆடவர்கள் இருவருக்கும், நரேந்தரும், இனியனும் பூங்கொத்தை கொடுத்திருக்க, அந்தப் பென்ணிற்கு கொடுப்பதற்காக, தன் மகள் நீலாவை தேடினார்கள்.

ஆனால் அவளின் மகளோ, அங்கே வேறொரு பிரச்சனையில் சிக்கியிருக்க, தன் இளைய மகள் ஷைனியை தேடினார்.

அவளும் கண்ணில் படாமல் போக, நரேந்தருக்கோ அத்தனை எரிச்சல். “இவங்ககிட்ட சொன்னா எதையுமே கேக்கிறது இல்ல” என்று தனக்குள் முனுமுனுத்தவர், அருகில் நின்றிருந்த ஜான்வியைப் பார்த்தார்.

உடனே கேசவ்விடம், “அந்த பொண்ன கொடுக்க சொல்லு” என்று சொல்லவும், உடனே ஜான்வியிடம் கொடுத்து வெல்கம் செய்யக் கூறினார்.

உடனே ஜான்வியுமே சிரித்த முகமாய் அவர்களிடம் பொக்கேவை நீட்ட, அவர்களும் சிரித்தப்படி உள்ளே வந்தனர்.

இப்போது தெரியாமல் ஜான்வி, இனியனை இடித்து விட, “ஐயோ சாரிங்க” என்று பதறியடித்து கூறினாள். ஏனெனில் அவளின் முன் அனுபவம் அப்படி ஆயிற்றே.

ஆனால் அவனோ, வெகு இயல்பாய், “இட்ஸ் ஒகே. ரிலாக்ஸ்” என்று சிறு புன்னகையுடன் சொல்லிவிட்டு சென்றான்.

அதில் அவளின் மனமோ ஒரு நொடி, ஏர்போர்டில் தீரஜ் செய்த விஷயத்தை நினைத்துப் பார்த்தது. “ஐயோ கடவுளே. அவ்ளோ கோவக்காரர நான் என் லைப்லையே பாத்தது இல்ல” என்று வாய்விட்டே புலம்பினாள்.

அதற்குள் கேசவ், அவளை அழைக்க, இவளும் வேகமாய் செல்லப் போக, இப்போது இவளை இடித்து தள்ளிவிட்டு, அத்தனை பெண்களும் வாசலுக்கு ஓடினர். 

அவளோ மீண்டும் தடுமாறி, அருகில் நின்றிருந்த நீலவேணியின் மீதே சென்று விழ, இப்போது அவள் கையில் இருந்த ஜூஸ் அவள் சேலையில் கொட்டியிருந்தது.

அதில் ஜான்வி அதிர்ந்து விழிக்க, அதற்குள் அடுத்த அதிர்ச்சியாய், தீரஜ், அந்த பார்டி ஹாலுக்குள் நுழைந்தான். அவளின் இரு விழிகளில், ஒரு விழியில், நீலாவும், மறு விழியில் தீரஜும் தெரிய, அந்த நொடி, அவளின் இதயம் அப்படியே துடிப்பை நிறுத்தியிருந்தது.

(ஒருத்தனுக்கு பிரச்சன வரலாம். ஆனா, இப்படி பிரச்சன மட்டுமே வரக் கூடாது. ஆனாலும் ஜான்வி, எனக்கே உன்னைப் பாத்தா பாவமாத்தான் இருக்கு. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தீருமா?...

Author:    1 Sarmi SS
Comments   6

*** முத்தமழை – 12 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com