ஷைனிகா, டெல்லியில் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் மட்டும் தான் அந்த குடும்பத்தில், மற்றவர்களோடு ஒட்டிப் பழகும் ரகம். அவளுக்கு எப்போதுமே தன்னுடைய வசதியை யாருக்கும் காட்டவும் பிடிக்காது. அவளை சுற்றி எப்போதும், ஒரு கூட்டத்தை விரும்புவாள். இப்போது கூட, அந்த பங்சனுக்கு வரவெல்லாம் அவளுக்கு பெரிதாய் விருப்பம் இல்லை. அவளுக்கு கம்பெனிக்காவது யாராவது இருக்க வேண்டும்.
அப்படி விசாரிக்கும் போதுதான் ஜான்வி சென்னையில் இருந்து வருவதாக சொல்ல, ஏனோ, அவள் பெயரைக் கேட்டவுடன் அவளுக்கு பிடித்துவிட்டது. அவளுடன் வந்துவிடுவதாக சொல்லிவிட்டாள்.
தந்தையிடம் பேசிய ஷைனிகா, “ஆன் தி வேய்லையே இவ்ளோ அட்வைஸ் கொடுக்கனுமா? போதும் டேட். மீ பாவம்” என்று சொல்லிவிட்டு அழைப்பை கட் செய்தாள்.
பின் ஜான்வியின் பக்கம் திரும்பி, “உங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிடுறீங்களா?” என்று தன்னுடைய மொபைலைக் கொடுத்தாள்.
“ரொம்ப தேங்க்ஸ்ங்க” என்று அவளும் வேகமாய் வாங்கி தன் வீட்டுக்கு டயல் செய்தாள்.
“ம் பரவாயில்ல. நம்பர் எல்லாம் மெமரில வெச்சிருக்கீங்க” என்று ஷைனிகா சொல்ல, அவளோ அழகாய் புன்னகைத்தாள்.
“எது சொன்னாலும், கியூட்டா சிரிக்கிறீங்க. ஐ லைக் இட்” என்று ஷைனி சொல்ல, அதற்குள், அழைப்பை அட்டண்ட் செய்த சாரதா, “ஹலோ” என்றிருக்க, “அம்மா. நான் ஜான்வி பேசுறேன்” என்றாள்.
“உனக்கு எத்தன தடவ கால் பண்ணேன் தெரியுமா? உன் மொபைலுக்கு என்னாச்சு? இது யார் நம்பர்?” என்று அடுத்தடுத்து கேள்வியாய் கேட்டார்.
“அதுவந்தும்மா” என்று இவள் சொல்லும் முன்னே, “வெளியூருக்கு போற, போற இடத்துல கவனமா இருக்கனும்னு சொன்னேன்னா இல்லையா? இதுக்குத்தான் உன்ன எங்கையும் நான் அனுப்புறது இல்ல. ஏர்போட்டுக்காச்சும் கூட போயிட்டு வாங்கன்னு, இந்த மனுஷன்கிட்ட சொன்னேன் கேக்குறாரா?” என்று கணவரையும் சேர்த்து திட்டினார்.
“ம்மா அவர ஏம்மா திட்டுற. அவருக்கு வேல இருந்திச்சுதான. இங்க ஒரு பிரச்சனையும் இல்லம்மா. மொபைல் கொஞ்சம் ப்ராபளமா இருக்கு. சரி பண்ணிட்டு அதுல இருந்து கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பை கட் செய்தாள்.
இங்கே, ஷைனிகாவோ, “எல்லா பேரண்ட்ஸ்ம், இப்படித்தான் போல” என்று சிரித்துக் கொண்டே சொல்ல, ஜான்வியும் “ம்” என்று தலையாட்டினாள்.
அதன் பின் அவர்கள் வர வேண்டிய அந்த இடம் வந்திருக்க, ஜான்வியும், ஷைனிகாவும் காரில் இருந்து இறங்கினர்.
ஜான்விக்கோ, இப்போது யாரை சென்று பார்க்க வேண்டும் என்பது புரியாது அங்கேயே நிற்க, அதற்குள் அங்கு வந்த ஒருவனிடம், “இவங்கதான், ஜே எல் க்ரூப்ல இருந்து வந்திருக்க ஜான்வி” என்றாள் ஷைனிகா.
“ஒகே மேடம். நான் அவங்களுக்கு ரூம் ரெடி பண்ணிக் கொடுக்கிறேன்” என்று அவன் சொல்லவும், “சரி பாத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு ஷைனி, ஜான்வியைப் பார்த்தாள்.
அவள் கண்ணில் சிறு மிரட்சி தெரிய, என்ன நினைத்தாளோ, “ரூம் இதுவரைக்கும் அரேஞ் பண்ணலத்தான?” என்று கேட்டாள்.
“இல்ல மேடம். சார் ரூம்ம அரேஞ் பண்றதுல எல்லாரும் பிஸியா இருக்காங்க” என்று அவன் சற்று தயங்கி சொல்ல, “ஒகே. அப்போ ஜான்வி என் கூடவே தங்கிக்கட்டும்” என்றாள்.
“ஆனா மேடம்” என்று அவன் அப்போதும் தயங்க, “நான் பேசிக்கிறேன்” என்று அழுத்தி சொல்ல, அவனும் தலையாட்டிவிட்டு, இவர்களுடைய உடைமைகளை எடுத்து சென்றான்.
இப்போது ஜான்வியோ சுற்றிப் பார்த்தாள். கடல் போல் வீடு என்பதற்கு அடையாளமாய், அவ்வளவு பெரிய வீடு இருந்தது. ஒரு ஊரையே உள்ளடக்கியிருந்தனர்.
சுற்றிலும் தோட்டம். வேலைப் பார்ப்பவர்கள் அத்தனைப் பேர் தங்குவதற்கும், வீடு. பள்ளிக்கூடம், கல்லூரி என்று மொத்தமும் அங்கு இருந்தது.
அதை எல்லாம் சிறு மிரட்சியுடன் ஜான்வி பார்த்திருக்க, “உள்ள போலாம்” என்று ஷைனி அழைக்கவும், அவள் உள்ளே சென்றாள்.
ஷைனியைப் பார்த்ததும், வீட்டில் வேலை பார்ப்பவர் ஒடி வந்து, “நல்லாருக்கீங்களா பாப்பா? ரொம்ப இளச்சீட்டீங்க” என்றார்.
அவளும், “அதான் இங்க வந்துட்டேன்ல. இனிமே உங்க சாப்பாட சாப்டு வெயிட் போட்டுடலாம்” என்று சகஜமாய் பேசியவள், அங்கிருந்த இன்னொரு பெண்ணை அழைத்து, ஜான்விக்கு, ஷைனிகாவின் அறை பக்கத்திலேயே ஒரு அறையை ஏற்பாடு செய்ய சொல்லி கூறினாள்.
“ஏற்கனவே அந்த ரூம் ரெடியாத்தான் மேடம் இருக்கு” என்று சொல்லவும், ஷைனியே ஜான்வியிடம், ஒரு கார்டை கொடுத்து, “உங்களுக்கு ஏதாச்சும் தேவைன்னா, இந்த நம்பருக்கு கால் பண்ணி கேளுங்க. ரூமுக்கே கொண்டு வந்து கொடுத்திடுவாங்க. வேற ஏதாவதுன்னா, என்ன நீங்க எப்போ வேனும்னாலும் கூப்டலாம்” என்று சொல்லிவிட்டு அவளுடைய அறைக்கு சென்றாள்.
அறை என்று சொன்னதும், ஏதோ இரண்டு பேர் தங்குவது போல் இருக்கும் என்று பார்த்தால், அதுவே அத்தனைப் பெரியதாய் தான் இருந்தது.
அவளின் வீடே நல்ல பெரிய வீடுதான். ஆனால் தேவைக்கென்றுதான் அத்தனையும் இருக்கும்.
ஆனால் அங்கே அத்தனை பொருட்களிலும் ஆடம்பரம் கூடியது.
கையில் இருந்த கார்டைப் பார்த்தவளுக்கு, அப்போதுதான், “ஐயோ மொபைல் வேற உடைஞ்சிருச்சே” என்றாள்.
அதற்குள் அங்கு வந்த வேலையாள் ஒருவன், அவளிடம் ஒரு மொபைலைக் கொடுத்து, “உங்க மொபைல் ரெடியாகுற வரைக்கும், இத யூஸ் பண்ண சொல்லி ஷைனிகா மேடம் கொடுத்தாங்க” என்றான்.
ஏனோ அவள் கேட்காமலே அவளுக்கு தேவையானதை செய்யும் ஷைனிகாவை பிடித்திருந்தது. அதில் சிறு புன்னகையுடன் வாங்கிக் கொண்டவள், “அடுத்த தடவ பாக்குறப்ப, தேங்க்ஸ் சொல்லனும்” என்று குறித்துக் கொண்டாள்.
அதே நேரம், அங்கே மின்னலென அந்த வீட்டிற்குள் நுழைந்தவனை வரவேற்க, அத்தனைப் பேர் வர, அவனோ அதை எல்லாம் பொருட்டாய் கூட மதிக்காது, நேரே ஜான்வி தங்கியிருந்த அறைக்கு நேரெதிரே இருந்த அவனுடைய பிரமாண்டமான அறைக்கு சென்றிருந்தான்.
கூட வந்த ஜித்தேஷிடம், “நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குத்தான” என்று கேட்டான்.
“பட் தீரஜ். எதுக்கும்” என்று ஜித்தேஷ் ஏதோ சொல்லப் போக, “ஓபனிங் ஜெரிமனி நான் அட்டண்ட் பண்ணனும்னா, நீ இத பண்ணித்தான் ஆகனும்” என்று சொல்லியப்படி கதவை அடித்து சாத்தினான்.
“கடவுளே, இந்த ஒரு வாரம் மட்டும் இவன்கிட்ட இருந்து என்னை காப்பாத்திடுப்பா” என்று கடவுளை வேண்டியவன், அடுத்ததாக, அங்கே அந்த அறைக்கு மேலே இருந்த தளத்துக்கு வந்தான்.
அங்கிருப்பவர்கள் அத்தனைப் பேருக்கும் தனி தனி தளம் தான். தீரஜ் யாரிடமும் ஒட்ட மாட்டான். அவனுடைய தளத்தில், ஷைனிகாவின் அறை உள்ளது என்று தெரியும். ஆனால் அவள் பெரும்பாலும் இங்கு வர மாட்டாள். என்பதால் அவன் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை.
ஷைனிகாவுக்கோ தனியாய் இருப்பது எல்லாம் ஆகவே ஆகாது. அதனால் தான் தீரஜின் தளத்திலேயே தனக்கு அறை வேண்டும் என்று இருந்திருந்தாள்.
இங்கே நரேந்திரரோ, “என்ன பாக்க கூட அவன் வரமாட்டானா?” என்று சிறு கோவத்துடன் கேட்க, “அட என்ன சார்? அவனெல்லாம், இங்க கூட்டிட்டு வந்ததே எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா?” என்று கேட்டான் ஜித்தேஷ்.
“இங்கப்பாரு. வரப்போறவங்க, நம்ம கூட முப்பது வருஷமா டை-அப் வெச்சிருக்காங்க. சோ இவனோ, இந்த வெட்டி ஈகோவ எல்லாம் அவங்க முன்னாடி காட்ட வேண்டாம்னு சொல்லிடு. ஆமா, அவங்களுக்கு எல்லாத்தையும் ப்ராபரா எக்ஸ்பிளைன் பண்றதுக்கு அஸிஸ்டெண்ட் கேட்டிருந்தேன்னே, என்னாச்சு?” என்று கேட்டார்.
அதில் இப்போது அவனோ, “அங்கிள். தீரஜோ சமாளிக்கிறதுக்கே எனக்கு நேரம் போதும் போதும்னு இருக்கு. இதுல இத பத்தில்லாம் என்கிட்ட கேட்டீங்கன்னா நான் என்னப் பண்றது?” என்று சிறு கோவத்துடன் கூறினான்.
“சரி விடு. அத நான் கேசவ்கிட்ட கேட்டுக்கிறேன்” என்று சொல்ல, “அவன் இங்கேயே இருப்பானான்னு தெரியல. பட் எப்படியாச்சும், ஈவண்ட் டைம்க்கு கண்டிப்பா கூட்டிட்டு வந்துடுறேன்” என்றான்.
அதில் கடுப்பானாலும், சரி” என்று சொல்லிவிட, இங்கே தீரஜோ நீண்ட நாட்களுக்கு பின் அங்கு வந்திருக்கிறான்.
அவனின் சிறு வயதில், அவனுடைய முழு நேரமும் இங்குதான். அதன் பின் அவன் வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்கள். அதிலும் குறிப்பாய், அவர்கள் குடும்ப பெயரை உபயோகித்து, தான் எதையுமே அடைந்து விடக் கூடாது என்ற எண்னம்.
தந்தையிடம் நடந்த வாக்குவாதத்தால் அவன் அப்படி மாறினானா? இல்லை அவன் அப்படி மாறியதால் தான் அவர் அப்படி பேசினாரா? அது அவர்களுக்குத்தான் தெரியும்.
எது எப்படியோ, அவனின் வாழ்க்கையில் அத்தனையும் மாறிப் போயிருந்தது. ஆனால் அந்த அறை மட்டும் அப்படியே இருந்தது.
சில நொடிகள் அமைதியாய் அங்கிருந்த பால்கனியில் நின்று வெளியே பார்த்தான். உடைந்து போன மொபைலை, எடுத்து சிறு கெஞ்சலோடு நின்றிருந்த பாவையின் முகம் தெரிந்தது.
அது அவனுடைய எரிச்சலை கூட்டியது. “சிட் அவள நான் அப்படியே விட்டிருக்க கூடாது. அதான் திரும்ப திரும்ப அவ என் ஞாபகத்துல வர்றா” என்று கோவமாய் கூறினான்.
அதே நேரம் இங்கே, ஜான்வியோ, அவள் அறை பால்கனியில் நின்று ராகவ்க்கு கால் செய்து பேசினாள். ஆனால் அவன் சொல்லியதை எல்லாம் கேட்டவளுக்கு தலை சுற்றியது.
“என்னால எப்படி பண்ண முடியும்?” என்று அவள் கேட்க, “அதெல்லாம் உன்னால முடியும். எப்படியும் நான் நாளைக்கு வந்துடுவேன். இன்னிக்கு பார்டிய மட்டும் நீ சமாளிச்சிக்கோ. அப்புறம் முன்னாடியே சொன்னதுதான். அவங்க எல்லாம் ரொம்ப பெரிய ஆளுங்க. அவங்க கோவப்படுற மாதிரி எதுவும் பண்ணிடாத” என்றான்.
அவன் சொல்லியதை கேட்டவளுக்கோ மயக்கம் வராத குறைதான். இருந்தும் தலையாட்டிவைத்தாள்.
அதற்குள், ஜெபாவிடம் இருந்தும் அழைப்பு வந்தது. கான்பிரன்ஸில் கைலாஸும் இருந்தான்.
அவர்களோ, “தனியா போ மாட்டேன்னு நீ சொல்ல வேண்டியதுதான” என்று கூறினான் கைலாஷ்.
“ஆமா. இவென்னையும் கூட்டிட்டு போயிருந்தேன்னா, இன்னும் பிரம்மாதமா இருந்திருக்கும். பார்டியில குடிச்சு, ஏதாச்சு ஏழறைய இழுத்து விட்டிருப்பான்” என்றாள் ஜெபா.
அதில் இப்போது ஜான்வி மெல்ல இதழ் பிரித்து சிரிக்க, ஏனோ அந்த அறையை ஒட்டியிருந்த அவனுடைய பால்கனியில் நின்றிருந்தவனுக்கோ கோவத்தில் முகம் சிவந்தது.
அவனும் யாரிடமோ மொபைலில் தான் பேசிக் கொண்டிருப்பான் போலும். அந்தப் பக்கம் அவர்கள் என்ன சொன்னார்களோ, இவன் கடு கடுவென்று பேசிக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில், “நானே அங்க வந்து பேசிக்கிறேன்” என்று சொல்லியப்படி அழைப்பை துண்டித்தவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
இங்கே ஜான்வியுமே, அவள் செய்ய வேண்டிய வேலையைப் பற்றி கேட்டுவிட்டு, பின் கேசவுடன் இப்போது நரேந்திர வர்மனின் முன்னே சென்றாள்.
அவளுக்கோ பயம் தான். அவளைப் பார்த்ததும் அவருக்கோ சட்டென்று மகாலட்சுமியை கண் முன்னே பார்தத்து போல் தான் தோன்றியது.
அதே நேரம் இவள் எப்படி அந்த வேலைக்கு சரிபட்டு வருவாள்? என்றும் அவளுக்கு தோன்றியது. ஆனால் அதெல்லாம் அவளிடம் பேச ஆரம்பித்த அந்த சில நிமிடங்களில் அந்த தயக்கம் சென்றிருந்தது.
“ஒகே ஜான்வி. ஐயம் இம்ப்ரஸிவ். பட் இருந்தாலும், கேசவ்கிட்ட, இதோட டீடெய்ல்ஸ் எல்லாம் இருக்கு. ஒன்ஸ் நீயும் பாத்துக்கோ. நம்ம நைட் பார்டில பாக்கலாம். அதுவரைக்கும் ரெஸ்ட் எடு” என்று சொல்லிவிட்டு சென்றார்.
அவளுக்குமே ஆரம்பத்தில் பார்த்தவுடன் இருந்த பயம், அவர் சற்று கனிவாய் பேசவும், அவளை விட்டு விலகியிருந்தது. அதன் பின் கேசவிடம் இருந்து பைலை எல்லாம் வாங்கிக் கொண்டவள், ராகவ்க்கு கால் செய்தாள்.
அவனோ வழக்கம் போல் எடுக்கவில்லை. சாப்பாடு அறைக்கே வந்திருக்க, சாப்பிட்டு விட்டு, உறங்கிவிட்டாள். அவளுக்கு பிடித்தமான உறக்கம் தழுவிக்கொள்ள, இருக்கும் இடத்தை மறந்து முற்றும் முழுதாய் அவளின் துயில் உலகத்துக்கு சென்றிருந்தாள் ஜான்வி.
அவளின் அந்த நிம்மதியான உறக்கம் எல்லாம் அன்றுடன் முடியப் போவதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
அதன் ஆரம்ப புள்ளியாய், தீரஜீன் இறுகிய அணைப்புடன், அங்கிருந்த பிரமாண்ட நீச்சல்குளத்தில் விழுந்தாள் ஜான்வி.
(என்னது? இவ எப்படி அவன் கூட ஸ்விம்மிங் பூல் போனா? சரி அப்படி என்ன நடந்திருக்கும்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தீருமா…
Keerthi S
jaanu ippadi iruntha ellarum unnoda thalai la milakaai arichitu poiduvanga
Ammu Gnanarajan
aana janvi elathukum epdi ye thalai ya atikitu irukatha
Ramya Iyer
jaanvi vaa ma oru kai paathudalam
Nityaa Devi
super super sis 😍
Kirupa Devi
super and interesting sis
Ayesha Shahul
super interesting
🤍🤍🤍
Deepa K
interesting