💋முத்தமழை💋 – 6

சட்டென்று அவன் அடிப்பான் என்று, நிச்சயம் அடி வாங்கியவன் மட்டும் அல்ல, சற்று தள்ளி நின்றிருந்த, ஜித்தேஷும் நினைத்திருக்கவில்லை.

“டேய் தீரஜ்” என்று வேகமாய் ஓடி வந்து, அவன் கையில் இருந்த பேட்டை பிடுங்க முயற்சித்தான். அதில், சட்டென்று திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவன், “இன்னொரு டைம், இவன் என் முன்னாடி வந்து நின்னான்னா, அதுதான் அவனுக்கு கடைசி நாளா இருக்கும்” என்று அந்த இடமே அதிரும் அளவுக்கு கத்தினான்.

அதில் இப்போது தலையில் இரத்தம் சொட்ட சொட்ட நின்றுக் கொண்டிருந்தவன், பயந்த் நடுங்க, அவனோ ஒரு வித எரிச்சலுடன், அங்கிருந்து அவனுடைய தனிப்பட்ட அறைக்கு சென்றிருந்தான்.

இங்கே ஜித்தேஷோ, வேகமாய் அடிப்பட்டவனின் அருகில் வந்து, “நான் தான் உங்க கம்பெனியில இருந்து யாரும் இங்க வர வேண்டாம்னு சொன்னேன் தான. அப்புறம் எதுக்கு வந்தீங்க?” என்று அயர்வாய் கேட்டான்.

“சார். அது வந்து” என்று சொல்லக் கூட முடியாத அளவுக்கு, அவனுக்கு கண்கள் சொருகி கொண்டு வர, “முதல்ல ஹாஸ்பிடல் போங்க” என்று சொல்லியவன், உடனே வெளியில் இருந்த ஆட்களை அழைத்து, அவனை மருத்துவமனையில் சேர்க்க கூறினான்.

பின் மீண்டும் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு கால் செய்து, கோவமாய், “தீரஜ்னா என்ன? நீங்க உருட்டி விளையாடுற பொம்மன்னு நெனச்சீங்களா? அவென்ன மிரட்டி பாக்குறதுக்கு. உங்க எம்பிளாயி இப்போ ஐ சி யூ வார்ட்ல இருக்கான். போங்க. போயி பொக்கே கொடுத்துட்டு வாங்க” என்று எரிச்சலாய் கூறினான்.

அதைக் கேட்டு அந்தப் பக்கம் இருந்தவனுக்குமே அத்தனைப் பதட்டம். “ப்ளீஸ் ஜித்தேஷ்” என்று அவர் ஏதோ சொல்லப் போக, “நான் சொல்ற வரைக்கும், யாரும், டீல் அது இதுன்னு வராதீங்க. அவனுக்குத்தான் அவன் முன்னாடி ரூல்ஸ் பேசுனா பிடிக்காதுன்னு தெரியும்த்தான. தெரிஞ்சும் ஏன் தான் இப்படி பண்றீங்களோ?” என்று எரிச்சலாய் சொல்லியவன், உடனே மருத்துவமனைக்கு கால் செய்து விவரத்தை கூறினான்.

அதே நேரம் இங்கே அவனுடைய அறைக்கு வந்தவனோ, கரத்தில் தெளித்த இரத்தத்தை கூட துடைக்காது, நெற்றியை நீவினான்.

“அந்த பொண்ண பத்தி நான் எதுக்கு யோசிக்கிறேன்? அவ எதுக்கு என்னோட மெமரில இருக்கா” என்று தன்னைத் தானே கோவமாய் கேட்டான்.

உண்மையில் அவனுக்கு, அவனை தொந்தரவு செய்யும் எதுவுமே பிடிக்காது. எதிரில் நின்று பேசிக் கொண்டிருந்தவன், அவனுடைய கோவத்தை கூட்டத்தான் செய்தான்.

ஆனால் சட்டென்று இவளின் பிம்பம் காரணமே இல்லாமல், அவனுக்கு வர, ஏனோ அந்த மொத்த ஆத்திரத்தையும், எதிரில் நின்றிருந்தவனின் மீது காட்டியிருந்தான்.

அதெல்லாம் சில நொடிகள் தான். சட்டென்று அங்கிருந்து எழுந்தவன், “நெவர். இந்த தீரஜ்ஜ, எந்த விஷயமுமே டிஸ்டர்ப் பண்ணாது. அப்படி டிஸ்டர்ப் பண்ணா, அது கண்டிப்பா, இந்த உலகத்துல இருக்காது” என்று சொல்லியப்படி வாஷ்ரூமிற்குள் சென்றான்.

அவ்வளவுத்தான். ஒரு விஷயம் முடிந்துவிட்டால் முடிந்தது தான். அதைப் பற்றி அடுத்து அவனை சிந்திக்க வைப்பதெல்லாம் நடக்காத காரியம் தான்.

ஆனால் அவனையே ஒருவள், அவளைப் பற்றி மட்டுமே சிந்திக்க வைக்கப் போவதை அவன் அறிவானோ?

“நீங்க சொன்ன மாதிரி, அந்த கம்பெனிக்கிட்ட டிசைன்ஸ் பைனல் பண்ணியாச்சு சார். அவங்களும் ஒகே சொல்லிட்டாங்க. சோ இதுக்கப்புறம் நம்ம சைட்ல இருந்து சின்னதா கூட எந்த மிஸ்டேக்-ம் வராதுன்னு சொல்லிட்டேன் ராகவ். இதுக்கு மேலையும், எனக்கு பனிஷ்மெண்ட் கொடுக்கனும்னா, கொடுங்க. ஐ வில் அக்சப்ட்” என்றாள்.

அதில் இப்போது அவனோ, “ஐ நோ டியூட். நீ கண்டிப்பா எல்லாத்தையும் சரியா பண்ணுவேன்னு தெரியும். காலையில கொஞ்சம் அப்சட்டா இருந்தேன்னா. அதான் அப்படி பேசிட்டேன். நீ எதையும் பெருசா எடுத்துக்காத” என்று தேன் சொட்ட சொட்ட பேசினான் ராகவ்.

அதுவும் அவளுக்கு பழகியதுதான். அதனால் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாது, “ஒகே சார். நான் வரேன்” என்று சொல்லியவள் அந்த பைலை வைத்து விட்டு செல்ல முயன்றாள்.

“ஹே ஒன் செகண்ட் ஜான்வி” என்று அவன் அழைக்க, அவளோ அவனை கேள்வியாய் பார்த்தாள்.

“அதுக்குள்ள எதுக்கு கெளம்புற?” என்று அவன் கேட்க, “என்னோட வொர்க் முடிஞ்சிருச்சி சார்” என்று கூறினாள்.

“ஹேய் அதான் வொர்க் டைம் முடிஞ்சிருச்சிதான? அப்புறமும் எதுக்கு சார் சார்னு சொல்லிட்டு இருக்க. கால் மீ ராகவ் டார்லிங்” என்றான்.

அதில் இப்போது அவளோ, அமைதியாய் இருக்க, “ஹே, இதுக்கு முன்னாடி நான் உன்ன திட்டுனது இல்லையா என்ன? உனக்கே தெரியும்தான? அந்த ப்ராஜக்ட் எனக்கு எவ்வளவு முக்கியம்னு. அதுல அப்படி ஆனதாலத்தான், அப்படி பேசுனேன். ஈவன், கம்பெனிய பொறுத்த வரைக்கும், நம்ம டேட் பண்றது யாருக்கும் தெரியக் கூடாதுன்னு முன்னாடியே பேசுனதுதான” என்றான் ராகவ்.

அதில் இப்போது அவனைப் பார்த்தவளோ, “நீ திட்டுனது எனக்கு பிரச்சன இல்ல ராகவ். ஆனா என்னோட கேரக்டர தப்பா பேசிட்டதான” என்று சிறு வருத்தத்துடன் கூறினாள்.

ஏனோ அதை சொல்லும் போதே அவளுடைய கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.

அதில் இவனோ, “ஹே கோவத்துல சொல்றதுக்குலாம், நீ அப்படியே மீன்  பன்ணிக்காத” என்று சொல்ல, “கோவத்துல சொன்னாலும், நீ சொன்னது எனக்கு எவ்வளவு ஹார்டிங்கா இருந்திச்சு தெரியுமா? ப்ளீஸ் இனிமே இப்படி பேசாத. என் வேலைய வெச்சி கூட திட்டு. பட் என் கேரக்டர மட்டும் அப்படி பேசாத” என்று தன் கோவத்தை கூட, அவனிடம் சிறு கெஞ்சலுடன் தான் கூறினாள்.

“சரி சரி ஒகே. விடு. இன்னிக்கு நைட் டின்னருக்கு வெளிய போவோம்மா? உனக்கு பிடிச்ச ரெஸ்டாரண்ட் போலாம்” என்றான்.

“இல்ல அம்மா எனக்காக” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே, “ஆண்டிக்கு நான் கால் பண்ணி சொல்லிக்கிறேன். உன்னை கரெக்ட் டைம் வீட்டுல  ட்ராப் பண்ணிடுறேன் ஒகேவா?” என்று கேட்டான்.

“ம் சரி” என்று அவள் சொல்ல, “தட்ஸ் மை பேபி. ஒகே, ஷார்பா பை ஓ கிளாக் பாக்கலாம்” என்று அவன் சிரிப்புடன் சொல்ல, இவளும் தலையை ஆட்டிவிட்டு வந்திருந்தாள்.

வெளியில் வந்த ஜான்வியிடம், கைலாஷ் வந்து, “ஹே, அவென் மறுபடியும் ரொம்ப ஓவரா பேசிட்டான்னா?” என்று வருத்தத்துடன் கேட்டான்.

“ச் அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ இதுக்கப்புறம் இப்படி கேர்லெஸா இருக்காத. அப்புறம் உன் வேலதான் போகும்” என்று அவனிடம் சொல்லிவிட்டு அவளுடைய இருக்கைக்கு வந்தாள்.

அதில், இப்போது அவளின் பக்கமாய் சாய்ந்த ஜெபாவோ, “நீ மட்டும் ஏண்டி இப்படி இருக்க?” என்று கேட்டாள். அதில் சிஸ்டமில், அன்றைய நாளுக்கான, பதிவை எல்லாம் அப்டேட் செய்துக் கொண்டிருந்தவள், “நான் எப்படி இருக்கேன்?” என்று கேட்டாள்.

“ம் சரியான லூசா இருக்க. அந்த ராகவ் உண்மையாவே உன்ன லவ் பண்றானா? உனக்கு அப்படி தோணுதா?” என்று சிறு எரிச்சலுடன் கேட்டாள் ஜெபா.

“ச் இப்போ எதுக்கு அவென்ன இழுக்குற? அவன் இங்க எனக்கு ஹெட். அப்போ அவன் அப்படித்தான நடந்துக்கனும்” என்றாள்.

“போடி.. ஏதாச்சும் சொல்லிட போறேன். அங்க அவ அவ, பாஸையே கரெக்ட் பண்ணி, மொத்த ஆபிஸையும் ரூல் பண்ணிட்டு இருக்கா. நீ என்னென்னா, இவென்கிட்ட இப்படி திட்டு வாங்கிட்டு இருக்க” என்றாள் ஜெபா.

“எனக்கு யாரையும் ரூல் பண்ண வேண்டாம். எதுவும் பண்ண வேண்டாம். ஆள விடு” என்று ஜான்வி சொல்ல, “நீ இப்படி இருக்கிறதாலத்தான், அத்தன பேரும் உன்ன வெச்சி விளையாடிட்டு இருக்காங்க. பட் மறுபடியும் சொல்றேன். கோவப்பட்டு பழகு. இப்படி கோவமே படாம, அன்னை தெரசாவுக்கு அடுத்து போயி ஜாயின் பண்னிடலாம்னு நினைக்காத” என்றாள்.

அவளும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறாள். ஆனால் அதை இவள் கேட்க வேண்டுமே.

இவளின் இடத்தில் வேறொருவளாக, இருந்தால், நிச்சயம் ராகவிடம் பெரிய சண்டையே போட்டிருப்பாள். ஆனால் இவளோ, அவனுடன் அமர்ந்து டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“என்ன புட் எல்லாம் பிடிச்சிருக்கா?” என்று அவன் கேட்க, “ம் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. ஆமா, நீ ஏன் இன்னும் சாப்பிடாம இருக்க. சாப்டு” என்றாள்.

“எங்க சாப்ட? எனக்கு சாப்டவே பிடிக்கல” என்று அவன் சொல்ல, இவளோ, “என்னாச்சு ராகவ்? உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று அக்கறையாய் கேட்டாள்.

“ம் அதெல்லாம் ஒன்னும் இல்ல. பாஸ் இருக்காருல. அவர் தான் எனக்கு ரொம்ப பெரிய டார்கட் ஒன்ன கொடுத்திருக்காரு. ஆனா அத எப்படி செய்யப் போறேன்னுதான் தெரியல” என்றான்.

“அதெல்லாம் உன்னால முடியும் ராகவ்” என்று இவள் சொல்ல, “அப்படியா சொல்ற? ஆனா எனக்கு, இதுல உன்னோட உதவியும் வேணும். எனக்காக நீ செய்வதான?” என்று கேட்டான்.

“அதான! அவனுக்கு ஏதாச்சும் ஆகனும்னுனாதான, உன்கிட்ட வந்து நிப்பான்” என்று அவளின் மனம் கூட அவளைக் கழுவி ஊத்தியது.

ஆனாலும் அதை ஒதுக்கிவிட்டு, “என்ன நீ இப்படி கேக்குற. கண்டிப்பா செய்வேன். நான் என்ன செய்யனும்?” என்று கேட்டாள்.

“ம் சொல்றேன் அதுக்கு முன்னாடி இத சாப்டு பாரு. நல்லா டேஸ்டியா இருக்கும்” என்று ஸ்பூனால் ஒரு வாய் அவளுக்கு ஊட்டினான்.

அதன் சுவை அவளுக்கு பிடிக்கவில்லைத்தான். ஆனாலும் அவன் ஊட்டவும் அமைதியாய் வாங்கிக் கொண்டாள்.

இப்போது அவனோ வேகமாய் சாப்பிட்டு முடிக்க, முடித்தவுடன் வெகு சாதாரணமாய், அவளின் தலையில் இடியை இறுக்கியிருந்தான்.

அவன் சொல்லியதைக் கேட்டவளோ, “என்ன சொல்ற ராகவ்? என்னால இத எப்படி பண்ண முடியும்? அதுவும் போக” என்றவள் வெகுவாய் தயங்கினாள்.

“ஹே நம்ம டீம்லையே, உன்னால மட்டும்தான், ப்ளோவா ப்ரஞ் பேச முடியும். அதுவும் போக, அதுல ஒன் ஆப் தி பவுண்டர் கேரளா. சோ மலையாளமும் உனக்கு தெரியும்தான. அதான் உன்ன செலக்ட் பண்ணேன்” என்றான்.

“இல்ல ராகவ். நான் எப்படி யாருன்னு தெரியாதவர் கூட” என்றவளுக்கு அதை எப்படி சொல்ல என்று தெரியவில்லை.

சட்டென்று அவளுக்கு ஜெபா சொல்லியது போல், அவன் தன்னை உண்மையிலேயே காதலிக்கிறானா? என்ற கேள்வி கூட வந்தது.

ஆனால் அதை எல்லாம் கேட்டுவிட்டால், அது ஜான்வி இல்லையே. “ஹே, உனக்கு என் மேல நம்பிக்க இல்லையா? அதெல்லாம் நான் விசாரிக்காம உன்ன அனுப்புவேன்னா? அவருக்கு உன் ஏஜ்ல பொண்ணு இருக்கு. அவர் ரொம்ப நல்ல டைப். நீ ஜஸ்ட் ஒரு கைடா மட்டும் அவங்க கூட போனா போதும்” என்றான்.

அவன் என்னவோ சாதாரணமாய் சொல்லிவிட்டான். ஆனால் இவளுக்குத்தான், அத்தனைப் பதட்டம். ஆனால் ஒரு விஷயத்தை முடியாது என்று சொல்லும் பழக்கமும் அவளுக்கு கிடையாது.

அதனால் தானே, இவன் காதல் என்று வந்து சொன்னவுடன், அதை மறுக்க கூட செய்யாது தலையாட்டி வைத்தாள்.

இப்போதும் அவள் வேறு வழியின்றி தலையாட்டி வைக்க, அங்கே தீரஜோ, “அவங்க வந்தா? நான் எதுக்கு போகனும்? அதெல்லாம் முடியாது” என்று அசராது கூறினான்.

அதைக் கேட்ட ஜித்தேஷோ, “ஐயோ கடவுளே, அப்பாக்கும், பையனுக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே” என்று வாய் விட்டே புலம்பினான்.

(உன்ன யார் காப்பாத்த போறாங்கன்னு தெரியல. அங்க போனா, இந்த ஜான்விய தீரஜ்கிட்ட இருந்து யார் காப்பாத்த போறாங்கன்னும் தெரியல. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க. அப்புறம் எனக்காக சப்ஸ்கிரைப் பண்ண எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். உங்க சப்போர்ட் எப்பவுமே எனக்கு இருக்கும்னு நான் நம்புறேன்.)

தொடரும்…

Author:    1 Sarmi SS
Comments   4

*** 💋முத்தமழை💋 – 6 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com