தாபம் – 7

“ஏன் தென்றல், இவளை நம்பி காலேஜ் இன்டர்ன்சிப்-க்கு கூட அனுப்ப முடியாது போலையே, இந்த ராத்திரி-ல அவ ஏன் தனியா போனா?” என்று அகல்யா பேச்சை மாற்ற முயற்சித்தாள்.

“அ,..து” என்று தென்றல் ஏதோ சொல்ல வர, ஆனால் அதற்குள் “ஆமா உன் பிரண்ட் அப்படியே அடுத்தவுங்க பேச்சை கேட்டுருவா பாரு. அதுலையும் மேடமுக்கு, பகல்-ல சுத்துறதை விட, நைட் சுத்துறதுதான கை வந்த கலை” என்று அர்ஜூன் கோவமாக கூறினான்.

“அவளுக்கு பிடிச்சதை அவ பண்றா. அதுலாம் தனி டேலன்ட்-டா. உன்னாலையோ, இல்ல என்னாலையோ அது முடியுமா? ஏன் இப்ப கூட அம்மா- ல ஆரம்பிச்சு, பாட்டி, தாத்தா வரைக்கும் ஒவ்வொருத்தர் கிட்டையும் பர்மிஷன் வாங்கிட்டு தான நம்ம வந்தோம். இதுலையும் உனக்கு துணைக்கு, நானு, எனக்கு துணைக்கு நீ-யுன்னு சொல்லி அனுப்பி விட்டுருக்காங்க” என்று அகல்யா புலம்பினாள்.

“கொஞ்சம் கேப் கிடைச்சா போதுமே, உடனே உன் பிரண்ட்-க்கு ஒரு ட்ரைலர் ஓட்ட ஆரம்பிச்சிடுவியே” என்று சலிப்பாக கூறினான் அர்ஜூன்.

ஆனால் இவர்கள் இருவரின் பேச்சை சற்றும் காதில் வாங்காமல் தென்றல் ருத்ரா-விற்கு என்னவாயிற்றோ என்ற பதட்டத்தில் தான் இருந்தாள்.

அதைக் கவனித்த அர்ஜூனும், விளையாட்டு தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு வேகமாக காரை ஓட்டினான்.

அதே நேரம், ருத்ரா-வும், அபிமன்யூவும் எதிரெதிர் திசையில் நடந்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு நடுவில் வந்து நின்ற மனுவேந்தனின் கண்களில், அபிமன்யூ-வின் மீது கோவமும், ருத்ராவின் மீதான பலி தீர்க்கும் வேகமும் அப்பட்டமாக தெரிந்தது.

ருத்ரா அந்த கேமரா-வை கையில் எடுக்கப் போகும் சமயம், அவளுக்கு மேலே இருந்த தூண், அவள் மீது விழுவதற்கு வசதியாக, ஆடிக்கொண்டிருந்தது.

ஏதோ உள்ளுணர்வு உணர்த்த, சட்டென்று திரும்பி பார்த்த அபிமன்யூ-வின் கண்களில் விழுந்தது என்னவோ? இப்போதோ, அப்போதோ என்று கீழே விழ காத்துக் கொண்டிருந்த தூணும், அதற்கு கீழே தன் கேமராவை, தன் ஷாலால் துடைத்துக் கொண்டிருந்த ருத்ரா-வும் தான்.

அதைக்கண்ட மறு நொடி, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல், வேகமாக சென்று அவளை தன் பக்கம் இழுத்து அணைத்து மறுபக்கம் உருண்டான். சரியாக இவர்கள் நகர்வதற்கும், அந்த தூண், அந்த இடத்தில் விழுவதற்கும் சரியாக இருந்தது. அதில், அந்த தூணில் இருந்து சிதறிய துகள்கள், அபிமன்யூவின் தோள்களில் சில ரத்த கீறல்களை காட்டிவிட்டே சென்றது.

“ஸ்ப்பா” என்று அபிமன்யூ மூச்சு விட்டு முடிப்பதற்குள், அடுத்தடுத்த தூண்கள் அவர்களை நோக்கி விழ ஆரம்பிக்க, அபிமன்யூ சற்றும் யோசிக்காமல், அவளுடன் சேர்ந்து உருள ஆரம்பித்தான்..

ஆனால், அவன் கைக்குள் கோழிக்குஞ்சு போல் அடங்கியிருந்தவளின் உதடுகளோ? அவள் சற்று முன் தொட்டு பார்க்க ஆசைப்பட்ட அந்த ஆ,என்ற எழுத்தின் மீது முத்தமிட்டுக் கொண்டிருந்தது.

அதை அவளும் உணரவில்லை. ஆனாலும், அவன் தன்னை கைக்குள் வைத்திருக்கும் இந்த அழுத்தம், அவளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அவன் மனம், அவள் நாசியில் நிறைய, அவள் உடல் எல்லாம் ஏதோ சந்தன மழை அடித்தது போல் இருந்தது. அவளால், அவனை விட்டு விலக வேண்டும் என்று கூட நினைக்க முடியவில்லை. 

இதில் அவன் கரங்கள், இவளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்ற ரீதியில், ஏதோ மலைப்பாம்பு அவளை சுற்றி அணைத்திருப்பது போல், அவ்வளவு இறுக்கமாக அணைத்திருந்தது. அந்த ஆ, என்ற எழுத்தின் தொடர்ச்சியாய், ஏதோ ஒரு எழுத்து இருப்பது போல், அவளுக்கு தோன்றியது.

“இங்க என்ன நடந்துக்கிட்டு இருக்கு. நீ என்னடி யோசிச்சிட்டு இருக்க” என்று அவளின் மூளை எச்சரித்தது.

ஆனால் அதையெல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல் “அந்த எழுத்து என்னவா இருக்கும்?” என்று அதைப் பார்க்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.

அவள் கரங்கள், அவன் உடலுக்குள் சிறைப்பட்டிருக்க, அவளால் விரலைக் கூட அசைக்க முடியவில்லை. 

“இப்ப என்ன பண்றது?” என்று ருத்ராவின் மூளை யோசிக்க, அவள் மனமோ, மனசாட்சியே இல்லாமல் ஒரு வழியை சொல்ல அதைக்கேட்ட அவள் மூளையோ “அட ச்சி. இதெல்லாம் வழியா? அம்புட்டு அவசியமா நீ அந்த எழுத்தைப் பார்க்கனுமா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, உன்னை தொட்டதுக்கே, அவன் டெட்டால் ஊத்தி கையை கழுவுனான். இப்ப நீ யோசிச்சதை மட்டும் செஞ்ச, அவன் உன்னை கொண்ணே போட்டுருவான்” என்று எச்சரிக்கை செய்தது.

“ஓ. எனக்கேவா. ஓ. சாரு என்னை தொட்டா? அவரு கை கழுவுவாறா? இப்ப அவரை கிஸ் பண்றேன். இப்போ அவர் டெட்டால் சோப் போட்டு குளிக்கிறாரா? இல்ல டெட்டால் கம்பெனியேவே வாங்குறாரான்னு நான் பார்க்குறேன்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் ருத்ரா.

“ஏய் இதெல்லாம் வேணாம்டி” என்று அவள் மூளை அடித்து சொல்ல, அதற்கெல்லாம் அசருபவளா அவள் என்பது போல். சற்றும் யோசிக்காமல், அவள் இதழால், அவன் சட்டையை விலக்க முயற்சித்தாள்.

அதில், அவளின் ஒவ்வொரு முயற்சியின் முடிவிலும், அவள் உதடுகள், அவன் மார்போடு முட்டி மோதியது. அவள் உதடுகள் அவனை நெருங்கும் வேளையில் எல்லாம், அந்த மாளிகையும் மின்னி மின்னி மறைந்தது. அதையெல்லாம் கண்டுக்கொள்ளும் நிலையில் இருவரும் இல்லை.

ஆனால் கோட்டையின் வெளியில் காரை நிறுத்திய அர்ஜூன், அகல்யா மற்றும் தென்றல் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

ஒரு நொடி, அந்த மாளிகை, தங்க மாளிகை போல் மின்னுவதும், மறு நொடி இருள் சூழ்ந்த பாழடைந்த மண்டபம் போல் மாறுவதையும், புரியாமல் குழப்பமாக பார்த்தனர்.

“ஏய் தென்றல் என்னடி நடக்குது இங்க? இங்க எதுவும் பேய் படம் சூட்டிங் எடுக்கிறாங்களா?” என்று அகல்யா, ருத்ரா-விற்கும் தனக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை என்று நிரூபித்தாள்.

“ஆமா. அருந்ததி பார்ட் 2 எடுக்கிறாங்களாம். வாயேன் நம்ம போயி பார்த்திட்டு வருவோம்” என்று அர்ஜூன் கோவமாக கூறினான்.

“என்னது அருந்ததி பார்ட் 2 வா? உண்மையா-வா? எனக்கு அனுஷ்கா-வ ரொம்ப பிடிக்கும் தெரியுமா? இதை முன்னாடியே சொல்லிருந்தா, கொஞ்சம் மேக்கப் ஆச்சும் போட்டுட்டு வந்துருப்பேனே” என்று அகல்யா சொல்ல. அதைக்கேட்ட அர்ஜூனுக்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் என்று தான் இருந்தது.

“ஏய் உண்மையாவே நீயெல்லாம் என் தங்கச்சி தானா?” என்று கடுப்பாக கேட்டான் அர்ஜூன்.

“எனக்கும் அதே டவுட் தான். என் பிரண்ட்ஸ் கூட கேட்டாங்க. உனக்கு போயி இப்படி ஒரு அண்ணனா-ன்னு. அநேகமா, நான் பிறக்கிறதுக்கு முன்னாடி குழந்தை இல்லன்னு உன்னை தத்து எடுத்திட்டு வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்று அகல்யா சாதாரணமாக கூறினாள்.

“உன்னை...” என்று அர்ஜூன் அடிக்க கை ஓங்க, அதற்குள், தென்றல், அவன் கையைப் பிடித்து தடுத்து, “பிளீஸ் முதல்ல ருத்ரா-வ இங்க இருந்து கூப்டு போலாம். அப்புறமா உங்க சண்டைய வச்சிக்கோங்க” என்று மிக பணிவாக கூறினாள்.

தென்றல் அர்ஜூனின் கையைப் பிடித்த நொடி, அங்கிருந்த முல்லை கொடி, அவர்களின் மீது தன் பிஞ்சு மலர்களை பரிசாய் கொட்டியது. 

“இந்த ஜென்மத்திலாவது உம் காதலை நீர் வெல்வாயோ” என்று ஒரு அசரீரியின் குரல் இருவரின் காதிலும் தேனாய் வந்து விழுந்தது.

அதற்குள் “ஏய். என்ன ரெண்டு பேரும் கண்ணாலையே பேசிட்டு இருக்கீங்களா? சீக்கிரம் வாங்க ருத்ரா-வை கண்டுப்பிடிக்கிறோம். அப்படியே அனுஷ்கா மேடம்ம பார்த்து ஒரு போட்டோ எடுக்கிறோம்” என்று அகல்யா இருவரையும் தன்னிலைக்கு கொண்டு வந்தாள்.

அதில் தென்றல் மிக மெல்லியதாக சிரிக்க, அவள் சிரிப்போசை, அங்கிருந்த ஒருவரின் சமாதியில் சென்று முடிந்தது.

“இப்பிறவியிலாவது, உம் காதலை அடைய, எம் ஈசனிடம் முறையிடுவேன் தேவி. என் காதலை காக்க, உம் காதலை துறந்தவள் நீ. என்றும் எம் இதயத்தில், உமக்கான ஓர் இடம் உண்டு” என்ற ரகுவேந்தனின் குரலில் சற்று துக்கம் கலந்திருந்ததோ என்னவோ?

ஆனால் இதைப்பற்றி எதுவுமே தெரியாது அகல்யா, வேகமாக அந்த கோட்டைக்குள் நுழைந்தாள். 

செல்லும் அவளைப்பார்த்து, “இவளுக்கு கொஞ்சமாச்சும் சீரியஸ்னஸ் இருக்கா” என்று தென்றலும், அர்ஜூனும் தலையில் அடித்துக் கொண்டனர்.

அதே நேரம், அபிமன்யூ மற்றும் ருத்ரா, சட்டென்று, அந்த அறையினுள்ளே இருந்த சிறு வழி வழியே பாதாள அறைக்குள் விழுந்தனர். 

அப்போது கூட, ருத்ரா-வின் மீது சிறு காயம் கூட, விழாது பாதுகாத்ததன் விளைவு, அருகில் இருந்த கம்பியில், அவன் முதுகு சற்று பலியாகியிருந்தது.

ஆனால் அதையும் சற்றும் பொருட்படுத்தாமல். அவளை காப்பது மட்டுமே தன் நோக்கம் என்பது போல், அவளை இறுக்கமாக அணைத்திருந்தான்.

வேகமாக அவளை விட்டு எழுந்து, “ஆர் யூ மேட். ஸ்டுபிட். உனக்கென்ன பையத்தியமா? தூண் விழுறது கூட தெரியாம, அப்படி அங்க என்ன பண்ணிட்டு இருந்த?” என்று கோவமாக வந்து விழுந்தது அபிமன்யூ-வின் வார்த்தைகள்.

“இல்ல.. அது.. இந்த கேமரா” என்று ருத்ரா ஏதோ சொல்ல வரும் முன், அந்த கேமராவை தூக்கி கோவமாக எறிந்தான் அபிமன்யூ.

அதைப் பார்த்ததும், அவன் தான் தன்னை காப்பாற்றினான், என்பதையே மறந்து விட்டு கத்த ஆரம்பித்தாள்.

“யோவ்.. யோவ். உன்னை.. என்ன பண்ணிருக்க தெரியுமா? ஐயோ. இந்த கேமரா. இதுல எவ்வளவு வேல்யூவான போட்டோஸ் எல்லாம் இருக்கு தெரியுமா? ஐயோ நான் இன்னும் ஒரு காபி கூட எடுத்து வைக்கல. மனுசனா நீ.. மிருகம். பாவி. உனக்கு கோவம்-னா, என்னை கூட அடிச்சிருக்கலாம். ஆனா, நீ என் கேமராவை” என்று அவன் சட்டைக் காலரைப் பிடித்து கோவமாக கேட்டாள்.

அந்த நொடி, அவனையும் அறியாமல், அவள் மீது ஒரு ரசனைப் பார்வை பதிந்து மீண்டது. ஆனால் அதெல்லாம் வெறும் ஒரு நொடி தான். மறு நொடி-யே அவளை உதறி தள்ளிவிட்டு, “சீரியஸ்லி நீ பையத்தியம் தான்” என்று அபிமன்யூ கோவமாக கூறினான்.

“யாரு? நான் பையத்தியமா? ஆமா என் கேமராவ உடைச்ச உன்கிட்ட இவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்கேன்-ல, அதான்” என்று ருத்ரா கோவமாக சொல்லிவிட்டு அவன் தூக்கி போட்ட கேமராவை கையில் எடுத்தாள்.

“ஓ இதுக்கு பேர்தான் பொறுமையா? பாரேன். எனக்கு இது தெரியாம போச்சு” என்று கிண்டலாக கூறினான் அபிமன்யூ.

“போடா. உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்” என்று ருத்ரா கோவமாக கத்த, அதைப்பார்த்த அபிமன்யூ-விற்கு அவனை மீறி சிரிப்பே வந்துவிட்டது.

“இப்ப எதுக்கு நீ சிரிக்கிற?” என்று ருத்ரா அதே கோவத்துடன் கேட்க, “இல்ல நீயெல்லாம் ஒரு ஆளு. இதுல நீ என்னை மன்னிச்சா என்ன? மன்னிக்கலன்னா என்ன? ஆமா. முதல்ல நீ ஏன் மன்னிக்கனும். நியாயமா நீ எனக்கு தேங்க்ஸ் சொல்லிருக்கனும்” என்று அபிமன்யூ அவளுக்கு நினைவுப் படுத்தினான்.

அதே நேரம், வெளியில் தென்றல். அகல்யா மற்றும் அர்ஜூன் மூவரும் அந்த கோட்டைக்குள் நுழைந்தனர்.

உள்ளே நுழைந்த நொடி. அர்ஜூனுக்கு ஏதேதோ நினைவுகள் கண் முன் மங்கலாக ஓடியது. அகல்யா-விற்கோ அந்த அரண்மனை மிகவும் பிடித்திருந்தது. உள்ளே நுழைந்ததுமே, அவளுள் சொல்ல முடியாத ஒரு புத்துணர்வு அவளை ஆட்கொண்டது. 

“அண்ணா அரண்மனை சூப்பரா இருக்குல” என்று அகல்யா கேட்கும் போதே தன்னிலைப் பெற்றான் அர்ஜூன்.

“ஏய் உனக்கே இது அநியாயமா தெரியல. பகல்லையே பசுமாடு தெரியாது. இதுல ராத்திரில எருமை மாடு தெரியுமா?” என்று அர்ஜூன் கேட்க,

“என்னடா ஆச்சு உனக்கு? பாட்டி கூட சேராதன்னு சொன்னா கேட்கியா? நீயும் அவங்களை மாதிரி பழமொழி சொல்லிட்டு சுத்துற” என்று அகல்யா கேட்டாள்.

“ருத்ரா” என்று தென்றல் கத்திக் கொண்டே உள்ளே செல்லும் நேரம், அங்கு யார் மீதோ மோதினாள்.

அதில் திடுக்கிட்டு அவள் நிமிர்ந்துப் பார்க்க, அங்கே ஒரு ஜீவன் இவளைப் பார்த்து புன்னகைத்தது.

அதைப்பார்த்து பயந்து “ஆ…..” என்று தென்றல் கத்த, அவளின் சத்தத்தை கேட்டு அர்ஜூன் மற்றும் அகல்யா அங்கு வந்தனர்.

அர்ஜூனைப் பார்த்ததும், வேகமாக அவனுக்கு பின்னால் சென்று ஒளிந்துக் கொண்டாள் தென்றல். அதைப்பார்த்த அவனின் கண்களில் பொறாமை உணர்வு அப்பட்டமாக தெரிந்தது.

அர்ஜூனுக்கு காரணமே இல்லாமல், அங்கு நின்று கொண்டிருந்தவனின் மீது கோவம் வந்தது.

“யார் நீ?” என்று அர்ஜூன் அங்கு நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து கேட்க, அதற்கு அவனோ? உனக்கு சற்றும் குறைந்தவன் நான் இல்லை என்பது போல் “நீ யாரு-ன்னு முதல்ல சொல்லு” என்று கூறினான் அவன்.

“பாருடா? பேரை யாரு முதல்ல சொல்றது-ன்னு போட்டியா?” என்று அகல்யா சொல்லிவிட்டு “ஹாய். ஐயம் அகல்யா, ஹி இஸ் அர்ஜூன் மை புரோ. அன்ட் ஷி இஸ் தென்றல் மை பிரண்ட். இப்பயாச்சும் உங்க பேரை சொல்ல முடியுமா?” என்று கூலாக கேட்டாள்.

“இப்ப அவன் பேரு நமக்கெதுக்கு?” என்று அர்ஜூன் கோவமாக கேட்டான்.

“ஐயம் கவின், கவின் வெங்கட். அபி குரூப் ஆப் கம்பெனியோட, ஒன் ஆப் தி பார்ட்னர்” என்று கூறினான்.

“இப்ப இவனுக்கு என்ன பொண்ணா பார்க்கப் போறோம்? இவ்ளோ டீடய்ஸல்ஸ சொல்லிட்டு இருக்கான்” என்று அகல்யா யோசித்தாலும் வெளியில் சொல்லாமல் சிநேகமாக புன்னகைத்தாள்.

ஆனால் அவனின் பார்வை என்னவோ. அர்ஜூனின் பின்னால் பயந்து நின்றுக் கொண்டிருந்த தென்றல் மீது தான் இருந்தது. அதைப்பார்த்த அர்ஜூனுக்கு ஏனோ அவனை சுத்தமாக பிடிக்கவில்லை.

”ஒகே. இந்த டைம்-ல இப்படி பொண்ணுங்களை கூப்டு வந்திருக்கீங்களே? உங்களுக்கு பொறுப்பே இல்லையா?” என்று கவின் சற்று கடுப்போடு கேட்டான்.

“ஹலோ எங்க வீட்டு பொண்ணுங்களை பார்த்துக்கிறதுக்கு எங்களுக்கு தெரியும்” என்று அர்ஜூன் வேகமாக கூறினான்.

“ஆமா. அதான் பார்த்தாலே தெரியுதே” என்று கவின் நக்கலாக கூறினான்.

அதில் ஏகக்கடுப்பான அர்ஜூன் ஏதோ சொல்ல வரும் முன் “இல்ல கவின். நாங்க இங்க என்னோட பிரண்டை தேடி வந்தோம்” என்று அகல்யா கூறினாள்.

“இங்கையா?” என்று கவின் யோசிக்கும் நேரம், உள்ளிருந்து ஏதோ கூச்சல் கேட்டது. 

அதைக்கேட்டு நால்வரும் அதிர்ச்சியாகி, அந்த அரண்மனைப் பக்கம் திரும்பினர். 

(உள்ளே கேட்ட சத்தம் என்ன? இவர்களின் அதிர்ச்சிக்கு என்ன காரணம்? போன்ற கேள்விக்கான விடைய அடுத்த அத்தியாயத்தில் காண்போம். அதுக்கு முன்னாடி உங்களோட கருத்தை மறக்காம சொல்லிடுங்க)

சாபம் தீருமா?..

Author:    1 Sarmi SS
Comments   5

*** தாபம் – 7 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com