ஹீரோ - தீரஜ் வர்மன்
ஹீரோயின் - ஜான்வி
“டேய் அந்த தியா பண்ணதுக்கு, இந்தப் பொண்ணு என்னடா பண்ணுவ?” என்று கோவமாய் ஜித்தேஷ் கேட்க, “இவள வச்சித்தான் நான் என்னோட கேம்மே ஸ்டார்ட் பண்ணப் போறேன்” என்று படு நக்கலாய் கூறினான் தீரஜ்.
“இல்லடா நீ பண்றது தப்பு” என்றவனுடைய பேச்சில், “இந்த தீரஜ் பண்ணா, அதுல எந்த தப்பும் கிடையாது. நீ நான் சொல்றத செய் அவ்வளவுத்தான்” என்று வெகு சாதாரணமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் அவன்.
(அவன் பெயர் தீரஜ் வர்மன். நாட்டின் வணிகத்தில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும், பிரபல வர்மன் க்ரூப் ஆப் கம்பெனியின் மூத்த வாரிசு. அவனின் குடும்பத்துக்கென்று பல தொழிகள் இருக்க, அவனோ, விளையாட்டை தன்னுடைய அடையாளமாய் ஆக்கிக் கொண்டவன். ஆம் பிரபல கிரிக்கெட் வீரன். ஆனால் திமிர் பிடித்தவன். விளையாட்டை கூட விளையாட்டாய் பார்க்காத வீம்புக்காரன். நினைத்ததை சாதித்துக் காட்டுபவனுக்கு, பிடித்தது கிடைக்காவிட்டால், அவனின் அசுர உருவத்தை அத்தனைப் பேரும் பார்த்தாக வேண்டும். அவனே இந்த கதையின் நாயகன்)
அதே நேரம், அங்கே, சிறிய பங்களா போன்ற வீட்டினுள் இருந்த பெண்மனியோ கிச்சனில் நின்று தன் மூத்த மகளை திட்டு திட்டு என்று திட்டிக் கொண்டிருந்தார்.
“படிச்சு முடிச்சதும், கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தா, இவ இப்போ இப்படி தினமும் ஒரு பிரச்சனைய இழுத்துட்டு வருவாளா? எல்லாம் அவர சொல்லனும், மூத்தப் பொண்ணு, மூத்தப் பொண்ணுன்னு செல்லம் கொடுத்து, அவ எது பண்ணாலும் சப்போர்ட் பண்ணி, இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்காரு” என்று அவர் கத்திய கத்தல். வெளியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவரின் காதிலும் விழுந்தது.
ஆனால் அதை சற்றும் கண்டுக் கொள்ளாது, தன்னுடைய கருப்பு கோர்டை கையில் எடுத்துக் கொண்டு, அன்றைய நாளுக்கான கேஸ் புத்தகத்தை புரட்டியப்படி வெளியில் வந்தாள் அவரின் மூத்த மகள்.
“ம்மா பிரேக்பாஸ்ட் ரெடியா?” என்றப்படி அவள் டைனிங் டேபிளில் சென்று அமர, அதில் அவருடைய கோவமோ, இன்னும் மேலே சென்றது.
“ஹே உன்னைத்தாண்டி திட்டிட்டு இருக்கேன்” என்று அவர் சொல்ல, “ஓ அப்படியா? சரி நான் அங்க கேண்டீன்ல சாப்பிட்டுக்கிறேன்” என்று சொல்லியப்படி அங்கிருந்து எழுந்தவள், தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
அவளின் செய்கையில், “ஐயோ இவள எந்த நேரத்துல பெத்தேன்னு தெரியலையே” என்று அவர் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, அவளின் கணவரோ, “என்னம்மா? இன்னிக்கு இட்லியா? பூரியா?” என்றப்படி வந்தமர்ந்தாள்.
இப்போது மகளின் மீது காட்ட முடியாத கோவம் மொத்தத்தையும் அவரின் மீது கொட்ட, அவரோ, “சரி நான் ஆபிஸ் போயி பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரும் அங்கிருந்து ஓடி விட்டார்.
இதில் அவரின் கடைசி மகன், அவினேஷும் கூட, அம்மாவின் கோவத்தில், பள்ளி பேக்கை எடுத்துக் கொண்டு நைஸாக நழுவி விட்டான்.
இப்படி ஒட்டு மொத்த குடும்பமும், அவருடைய கத்தலில் தலை தெறித்து ஓடியிருக்க, அவரின் இரண்டாவது மகள் ஜான்வியோ அமைதியாய் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
(அவ தான் நம்ம ஹீரோயின். இந்த உலகத்துல அவளுக்கு ரெண்டு விஷயம் ரொம்ப முக்கியம். அது ஒன்னு தூக்கம், இன்னொன்னு சாப்பாடு. இதத்தாண்டி அவளுக்கு ஒரு விஷயம் தெரியும் அப்படின்னா, அது அவ பாக்குற வேலை. ஒரு கார்பரேட் கம்பெனியில, கிராபிக் டிசைனரா ஒர்க் பண்ணிட்டு இருக்கா. இன்னும் இவள பத்தி சொல்லனும்னா? அவ யாருன்னு அவளுக்கே தெரியாது. ரொம்ப அராத்தும் கிடையாது. ரொம்ப அமைதியும் கிடையாது. இவ சேட்டைப் பண்ணுவாளா? அப்படின்னா அதுவும் கிடையாது. ஆனா பிரச்சன நடக்குற இடத்துல அவ இருப்பா. சில சமயம் மத்தவங்க பிரச்சனையில இவ மாட்டிப்பா. அதுக்காக அவ கவலைப்படவும் மாட்டா. அதே நேரம் அவளுக்கு அத சமாளிச்சு வெளிய வரவும் தெரியாது. சிம்பிளா சொல்லனும்னா, அவ ஒரு ரேர் பீஸ். இப்பக் கூட அவளோட அக்கா தியா, தீரஜ் கூட மோத போயி, அதுக்கு பலியா நம்ம ஹீரோயின் அவன்கிட்ட மாட்டிக்கப் போறா)
இந்த கதைய நீங்க தொடர்ந்து படிக்கனும் அப்படின்னா, கீழ இருக்கிற லிங்க கிளிக் பண்ணுங்க.
0 Comments
No comments yet.