கதாநாயகி – ஸ்ரீநிதி
நாயகன் –ஆதி, தீரன்
ஸ்ரீநிதி – “ஸ்ரீ் என்று அனைவராலும் செல்லமாய் அழைக்கப்படும்” என்ற வார்த்தைக்கே அகராதி-யில் இடமில்லை என்றுத்தான் சொல்ல வேண்டும்.. செல்லம் என்ற வார்த்தையின், அர்த்தம் கூட அறியாத பேதை அவள்... சுண்டி விட்டால் ரத்தம் வரும் நிறம் அல்ல அவள்... பாலில் கலந்த எழுமிச்சை நிறம்... கண்ணில்லாத கவிஞர் கூட, அவள் குரலிலேயே ஆயிரம் கவிதை வகுத்துவிட்டு தான் செல்வார்.. “அழகு” என்ற ஒற்றை வரியில் அவள் அழகை வர்ணிக்க முடியாது என்பதாலோ? என்னவோ? அவள் தன்னை அழகென்று நினைப்பது இல்லை... ஆனால் அவளை ரசிக்க-வே லட்சக்கணக்கான ரசிகர்கள் அவள் வீட்டு வாசலில் நாய்குட்டிப் போல சுற்றிக் கொண்டிருக்கின்றனர்... காரணம்... அவள் ஒரு பிரபல திரைப்பட நடிகை!
ஆதித்யவருண் – “ஆதித்யா என்று அனைவராலும் அறியப்படும் மிகப்பெரிய இயக்குநர்!!! ஆறடி உயரம்.. அளவான உடல் வாகு... ஸ்டைலாக அவன் கால் மேல் கால் போட்டு கையில் ஒரு மைக்கில் அவன் சொல்லும் ரெடி, ஸ்டார்ட், ஆக்சன்.. கட் என்ற சில வார்த்தையை கேட்பதற்காக-வே காத்திருக்கும் ஹீரோயின்கள் ஒரு பக்கம்! பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் அந்த படபிடிப்பு தளத்தில் எப்போதுமே அவன் உதட்டின் ஓரம் அழகாய் மின்னும் புன்னைகைக்காக-வே ஷூட்டிங் பார்க்க வரும், ரசிகைகள் கூட்டம் மறுபக்கமும் என, பெண்களுக்கு சட்டென்று பிடித்துப்போகும் ஒருவன்...
தீரேந்திரன் – “தீரா என்று அனைவராலும் கர்வமாய் அழைக்கப்படும் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர்!!! ஆறடிக்கும் அதிகமான உயரம்!!! கர்வத்தின் தலைவன்... தலைக்கனத்தின் குரு, பல ரசிகைகளின் கனவுக் கண்ணன் அவன்... ஜெல்லிட்டு வாரிடப்பட்ட தலை முடிகள்.. கர்ணனுக்கு கவசக்குண்டலம் போல் எப்போதுமே அவன் உடன் இருக்கும் கருப்புக் கண்ணாடி... அவன் விரல் நுனி தன்னைத் தீண்ட தவமிருக்கும், பல நாயகிகள்... எங்கு சென்றாலும் பெண்களின் கூட்டம் மட்டுமல்ல... பல போட்டியாளர்களின், ஏக கடுப்புகளும் அவன் பின்னே வந்துக்கொண்டே இருக்கும்...
ஹாய்.. பியூட்டிபுல்.. என்று ஜொல்லு வடித்துக்கொண்டு, தன்னை ரசித்து பார்த்து கொண்டிருக்கும், அந்த தயாரிப்பாளரின் மகனை! வெட்டவா? இல்லை குத்தவா? என்று முறைத்துக்கொண்டிருந்தாள்.. ஸ்ரீ்நிதி...
இங்கப்பாருங்க ஹீரோ!., நான் சொல்றப்ப.. ஹீரோயின் கையை பிடிச்சா போதும்... என்று சொல்லியதற்கு... ஹலோ டேரக்டர் சார்... கதைய மட்டும் நீங்க பாருங்க.. எனக்கு எப்படி நிக்கனும்-னு டீச் பண்ணாதீங்க என்று நக்கலாக சொன்ன ஹீரோ-வை, அடித்துவிடும் நோக்கில் பார்த்துக்கொண்டிருந்தான்.. ஆதித்யா...
ஹலோ ஹேன்ட்சம்.. என்று தன் மேல் உரசி நின்றுக்கொண்டிருந்த நாயகியை கை வளைவுக்குள் கொண்டு வந்தவன்... டூ யூ வான்ட் டூ.. டேட் வித் மீ? ஹாய் மேனஜர்... செக் மை செடியூல் அன்ட் பிக்ஸ் திஸ் கேர்ள் இன் நெக்ஸ்ட் வீக்... என்று அசால்டாக, கண்ணடித்து சொல்லிவிட்டு, ஸ்டைலாக கூலரை மாட்டிக்கொண்டிருந்தான்... தீரன்...
ஸ்ருஷ்டியை தாங்கும் அந்த ஆதி கடவுளாய் நிற்கும் அவனுக்கும், தீராத்தேடலில் தவிக்கும், அந்த ஆழ்கடலின் ஓசையாய் ஒலிக்கும் இவனுக்கும், நடுவில்! சக்தியாய் வந்து ஜொலிக்குமா அந்த புதையல்!!!
ஆதி, ஸ்ரீ், தீரன்... யார் இவர்கள்? இவர்கள் மூவருக்கும் நடுவில் இருப்பது என்ன? இல்லை இனி நடக்கப்போவது தான் என்ன? என்பதை கீழே உள்ளே லிங்கை கிளிக் செய்து படியுங்கள்
Ramya Iyer
ketka nallathan irukku waiting for the story always pudhu kalam design design ah prachanai emotions everything so excited to read new story💖