வரமாய் வந்த வழித்துணையே..

நான் எத்தனையோ தடவை எழுதுவம்னு வந்திட்டு வேணாம்னு போயிட்டன். ஏன்னா எனக்கு தோணுறத கொஞ்சம் கூட பிசகாம எழுதனும்னு யோசிச்சன். ஆனா உணர்வுகளை வார்த்தைகளாக மாற்றுறது கொஞ்சம் கஷ்டமாவே இருந்திச்சு.......

உணர்வுகளை வார்த்தைகளா அழகா அர்த்தம் மாறாமா உங்களை மாதிரி எனக்கு சொல்ல தெரியல ஆனா முயற்சிக்கிறன். உங்க கதையோட வார்த்தைகள் எனக்கு எவ்வளவு பெரிய ஆறுதல் கொடுத்ததுனு எனக்கு மட்டும்தான் தெரியும்.

நான் வரமாய் வந்த வழித்துணையே.. நாவல பற்றிதான் எழுத போறன்.

அந்த நாவலோட கதாபாத்திரங்கள் வடிவமைப்பு வசனங்கள் எல்லாமே ரொம்ப அழகா இருக்கும். அதுவும் அர்ஜுன், அவனுக்குள்ள சொல்ல முடியாத வலி அடுத்தவங்களை நம்புவதற்கான வாய்ப்பை அவனுக்கு அத்தனை வருஷமா யாருமே கொடுக்கல. அன்பை எதிர்பார்க்கிறதும் பெற்றுக்கொள்ளுறதும் அவனோட அகராதில தீண்டப்படாத செயலா மட்டுமே தான் இருந்தது. அப்படிப்பட்டவனோட வாழ்க்கையில பூஜா. அவ்வளவு சீக்கிரம் எதையும் விட்டுக்கொடுக்காத தைரியமான பொண்ணா அவளை உருவாக்கி வாசிக்கிறவங்களுக்குள்ள அவளை விம்பமாக்கிட்டீங்கனு தான் சொல்லனும்.

தனக்குள்ள இருக்கிற வலியை சொல்லவே யோசிக்கிற அர்ஜுன், நீ சொல்லலனா கூட பரவாயில்லை நான் தெரிஞ்சு உன் வலியில இருந்து உன்னை வெளியகொண்டு வருவேன்னு உறுதியாஇருக்கிற பூஜா. பல தடவை நான் ஜோசிச்சிருக்கன் நம்ம சொல்லமுதலே நம்மை புரிஞ்சு கொள்ளுறவங்க கூட இருந்தா எப்பிடி இருக்கும்னு. இந்த கதையை வாசிக்கும் போது பல தடவை நான் அதை உணர்ந்திருக்கன். எப்பவாவது நம்ம ஒட்டுமொத்த நம்பிக்கையும் உடைஞ்சு போறபோ ஏதோ ஒரு வார்த்தை உடைஞ்சு போன அத்தனையையும் சேர்த்து ரொம்ப பலமா மாற்றும். அதை தான் அர்ஜுனுக்காக பூஜாவோ இல்லை பூஜாவுக்காக அரஜுனோ செய்யுற ஒவ்வொரு விஷயமும் ஞாபகப்படுத்தும் சுத்தி எல்லாமே தப்பா நடந்தாலும் யாரும் புரிஞ்சுக்காம போனாலூம் கணடிப்பா ஒருநாள் எல்லாம் சரியாகிடும் என்ற பெரும் நம்பிக்கையை இந்த நாவல் எனக்கு குடுத்திச்சு.

நான் எப்பவுமே வேலைக்கு போகும் போது பஸ்ல தான் வாசிப்பன் கதையை. ரொம்ப தெளிவா சொல்ல போன என்னோட நாளே கதையோட தான் தொடங்கும். ஒரு மாதிரி இடைவேளையே இல்லாம ஓடிக்கொண்டிருக்கிறப்போ சில நேரங்கள்ல நம்மை ஆறுதல்படுத்தவும் சிரிக்கவைக்கவும் அத்தனை பிரச்சினைகள்ல இருந்தும் கொஞ்சம் காணாம போகவும் சில காரணங்கள் தேவைப்படும் எனக்கு அந்த மாயத்தை வார்த்தைகள் மட்டும் தான் செய்யும் அதுவும் உணர்வுகளை உணரவைக்கிற அளவுக்கு உங்க வார்த்தைகள் இருக்கும். நான் இது வரைக்கும் படிச்ச கதைகளையே பல தடவை திருப்பி திருப்பி வாசிச்சிருப்பன் ஆனா எப்பவுமே எனக்கு தெரிஞ்ச கதை தானே னு தட்டிவிட தோணிணதே இல்லை அது அந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறதில தான் இருக்கு.

ஒரு கதை கதையா மட்டுமில்லாம வாசிக்கிற ஒவ்வொருத்தரோட மனசிலயும் அது எங்கேயோ ஏதோ ஒரு இடத்தில இருக்கிற இரண்டு பேரோட வாழ்க்கைனு பதியுறது தான் கதையாசிரியருக்கு பெரும் பராட்டுனு நினைக்கிறனான் எப்பவும் அப்பிடி பார்த்தா நீங்க எப்பவோ ஜெயிச்சிட்டீங்க ஏன் னா என் மனசில அர்ஜுனோட ஊர், அவனோட வீடு பூஜா கூட்டிட்டு போன தோட்டத்தில இருந்து இப்ப பெங்களூர்ல தங்கியிருக்கிற வீடு வரைக்கும் வார்த்தைகளாள கற்பனை செய்ய வைச்சிருக்கீங்க.

இன்னமுமே முழுசா சொல்லிமுடிக்கப்படாத கதாபாத்திரமா பூஜாவ கொண்டுபோறது கொஞ்சம் கொஞ்சமா அவ யாருனு எங்களுக்கும் அர்ஜுனுக்கும் சொல்லுறது உண்மையிலயே சுவாரஸ்யத்தை கூட்டி கொண்டே போகுது. காதலை எப்பிடி வேணா சொல்லலாம் ஆனா ஒருத்தங்களை புரிஞ்சு கொள்ளுறது தான் காதல்னு இந்த நாவல் மூலமா சொல்லுறது ரொம்ப நல்லா இருக்கு. அர்ஜுன் பூஜா எதிர்முரணாண கதாபாத்திரங்களாவே இருந்தாலும் அர்ஜுனோ பூஜாவோ இன்னொருத்தங்களுக்காக அவங்களை மாத்திக்கவேயில்லை ஆனாலும் அவங்க நல்லாவே புரிஞ்சுக்கிட்டாங்க யார் எந்த சந்தர்ப்பத்தில எப்பிட யோசிப்பாங்க நடந்துப்பாங்க என்டு. என்னதான் பூஜா குழந்தைதனாமா நடந்துகிட்டாலும் ரொம்ப தெளிவான பொண்ணு அதே மாதிரி அர்ஜுன் என்ன தான் தன்னை ரொம்ப ஸ்ரோங்க காட்டிகிட்டாலும் அவன் சின்னப்பிள்ளைதான் அவனுக்குள்ள இன்னமுமே பாசத்துக்காக ஏங்கின பத்து வயசுப்பையன் இருக்கத்தான் செய்யிறான் என்டதை பூஜா அர்ஜுன் மேல காட்டுற அன்பை ரசிக்கிற அர்ஜுனுக்குள்ளாள சொல்லுறது ரொம்ப உணர்ச்சிபூர்வமா இருக்கும்.

அதே மாதிரி என்னை தான் எனக்கு உன்னை பிடிக்கலா என்னால உன்னை பாத்துக்க முடியாது என்டு ஆரம்பத்தில அர்ஜுன் சொன்னாலுமே பூஜாக்கு முடியாத போ அவன் அவளை சின்ன பிள்ளை மாதிரி பாத்துக்கிட்டது, அவளோட முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லைனு அவன் புரிஞ்சுகிட்டு அவ கூடவே இருந்து அவளுக்காக எல்லாம் செய்து குடுத்தது அர்ஜுனுக்கு வேணும்னா அது காதல் தான்னு புரியாம போயிருக்கலாம் ஆனா எங்களுக்கு அது ரொம்ப நல்லாவே புரிஞ்சது. அவன் நினைச்சிருந்த எனக்கு என்னனு இருந்திருக்கலாம் ஆனா அவன் அப்பிடி இருக்க மாட்டான் ஏன்னா அவன் தான் அர்ஜுன். அர்ஜுனுக்கு பூஜாவ பாத்துக்கிறதோ இல்லை அவளுக்கு பிடிச்சத செய்றதிலயோ எந்த தயக்கமும் இருந்ததே இல்லை ஏன்னா அவ கேட்ட ஒரே காரணத்துக்காக தான் அவன் போக கூடாதுனு நினைச்ச ஊருக்கே போனான், அவளுக்காக பார்த்து பார்த்து ரயில் புக் பண்ணுறதில இருந்து அவளுக்கு குளிர் பிரதேசம் போகனும்னு சொன்னத கேட்டு கூட்டிட்டு போறதில இருந்து அவளுக்கு பிடிச்ச சாப்பாடு வாங்கி கொடுக்கிற வரைக்கும் அத்தனையையும் அவன் பிடிச்சு தான் செய்தான். அவனோட பயம் எல்லாம் அவனுக்கு செய்யாத தப்புக்கு கொடுக்கப்பட்ட பெயர், அவனை சுத்தி இருந்தவங்க பார்த்த விதம், பெத்த தாயே புரிஞ்சு கொள்ளாத இதையெல்லாம் அவ புரிஞ்சுப்பாளா என்றது மட்டும் தான். அதை எல்லாம் தாண்டி அவன் அவளை காதலிச்சு கொண்டுதான் இருக்கிறான் எண்டத அவன் அவ கூட நடந்து கொள்ளுற விதமே சொல்லும் இல்லை சொல்லியிருக்கீங்க அவ்வளவு ஆணித்தரமா நீங்க உங்களோட வார்த்தைகள் மூலமாக.

என்ன தான் அர்ஜுனாடே மூளை வேணாம் வேணாம்னு சொன்னாலும் அவனோட மனசு அவளையே தேடிதேடி போறதும் கடைசி நிமிடம் வர்ற தயக்கத்தால நெருங்காம விலகியே நிற்க போரடுறதும், அவனுக்குள்ள இருக்கிற அத்தனை போரட்டத்தையும் புரிஞ்சு பூஜா நடந்திக்கிறதும் உண்மையிலயே ரொம்ப சூப்பரா இருக்கும் அதுவும் முதல் தடவை அர்ஜுன் பூஜாக்கு கன்னத்தில முத்தம் குடு்தப்போ அவனுக்குள்ள அவ்வளவு பதற்றம் ஏதோ பெரிய மன்னிக்க முடியாத குற்றம் செய்த போல அவன் அவன் மேலயே கோவப்பட நினைக்கும் போது அத்தனையையும் புரிஞ்சுகிட்டு பூஜா ஒரே ஒரு வசனம் தான் சொல்லுவா "என் அப்பா கூட இப்பிடி தான் எனக்கு முத்தம் கொடுப்பாரு அழகா" அவனோட ஒட்டுமொத்த குற்ற உணர்ச்சியும் பதற்றமும் நொடியில ஒன்னுமே இல்லாம தூள் தூளாகி அவன் முகத்தில புன்னகை இருக்கும். அர்ஜுனை பூஜாவால மட்டும் தான் அப்பிடி பார்த்துக்க முடியும்.

பூஜாக்கு அர்ஜுனோட கதை தெரிஞ்சப்போ அவள் அவனுக்காக வேதனைப்பட்டது, எந்த ஒரு சந்தர்ப்பத்திலயும் அவன் தன்னை தாழ்த்தியோ இல்லை தப்பானவனாவோ நினைச்சிடகூடாது என்டதில பூஜா ரொம்ப தெளிவா இருந்தது என்னதான் எல்லாமே அர்ஜுனோட விருப்பத்தை மீறி இருந்தாலும் அவனை நம்பி ஒரு பொண்ணு வந்த போ அவளை பாதுகாப்பா பார்த்துக்கனும் என்டு நினைச்சது எல்லாமே காதலை ரொம்ப அழகாக பிரதிபலிச்சது. சில நேரங்கள்ல அர்ஜுன் கோபப்பட்டாலும் கூட அந்த கோபத்துக்கு பின்னால இருக்கிற காரணத்தை புரிஞ்சுக்கிட்டு பூஜா போறது அர்ஜுனும் கொஞ்ச நேரத்திலயே தன் தப்பை புரிஞ்சுக்கிறதுனு அழகான புரிதலோடயே கதை இருக்கும் அதை வாசிக்கிறபோ நம்மல சுத்தி இருக்கிறவங்களும் ஏதாவது சொல்லும் போதோ இல்லை கோபப்படும் போதோ அதற்கு பின்னால ஏதோ காரணம் இருக்குமனு தான் நினைக்க தோணுது.....

அர்ஜுன் எப்பவாவது பூஜாவ பார்த்து அவ செய்ற சின்ன விசயத்துக்கே  உனக்கு ஏன் என்னை அவ்வளவு பிடிச்சிருக்குனு கேட்கும் போது அவனை சாதாரணமா கூட யாரும் நேசிக்கலயானு தோணுற அளவுக்கு உணர்வுபூர்வமா இருக்கும். அப்பிடி கேட்கும் போதுலாம் வார்த்தைகளை தாண்டி அவன் அழகாவும் அப்பாவித்தனமாகவும் இருப்பான்னு தோணும்.

பல நேரங்கள்ல எனக்குள்ள தொலைஞ்சுபோன என்னை திருப்பி கொடுக்கிறதுக்கு இந்த நாவல் எனக்கு உதவியிருக்கு.

இந்த வரமாய் வந்த வழித்துணையே நாவல் என்னோட வாழ்க்கையிலயும் வழித்துணையாவே இருக்கு..........

Author:    703 Rasi Kavi
Comments   3

*** வரமாய் வந்த வழித்துணையே.. - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com