அழகிய அசுரா

வணக்கம் 

          நான் புவி வேம்பு 

நான் படிக்கும் கதைகளுக்கு சிறு சிறு கருத்துக்கள் பதிவிடுவேன். முதல் முறையாக நிறைய எழுத முயற்சிக்கிறேன். முதலில் எனக்கு இந்தக் கருத்து பதிவிடுவது பற்றி எதுவும் தோன்றவில்லை. வழக்கம் போல் இந்த தளத்திற்கு வந்து புதிய அத்தியாயம் வந்திருக்கிறதா என்று பார்க்க வந்தேன் அப்பொழுது இந்த போட்டியைத் பற்றி பார்த்துவிட்டு கடந்துவிட்டேன். ஆனால் சிலர் அழகிய அசுரா கதையிற்கு கருத்து அளித்ததை படித்தேன். ஒவ்வொருவரும் இந்த கதையால் அவர்களுக்கு ஏற்பட்ட தாக்கம் என்க்குள்ளும் ஏற்பட்டிருக்கிறது. அதை உங்களுக்கு தெரிவிக்கலாம் என்று எழுதுகிறேன்.

முதலில் எனக்கு ஏற்பட்ட தாக்கம் அதிரூபன்- சாத்விகா இந்த பெயர்கள் தான். எனக்கு மிகவும் பிடித்த பெயர்கள் எனது அண்ணனுக்கு பையன் பிறந்தால் அதிரூபன் என்று பெயர் வைத்து எனக்கு பொன்னு பிறந்தால் சாத்விகா என்று வைக்கவேண்டும். இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ண வேண்டும் என்று கற்பனை பண்ணி பாத்திருக்கேன். சில சமயம் எனக்கே பைத்தியக்காரத்தனம் முத்திபோய்ட்டு அதான் இப்படி தோன்றுகிறது என்று நினைப்பேன். ஆனால் இந்த கற்பனை மிகவும் பிடித்திருக்கிறதே.😉

முதலில் எதார்த்தமாக ஆடியோ மூலமாக கதைகள் யூடிபில் கொரோனா காலத்தில் கல்லுரி தேர்வு வீட்டில் இருந்து எழுதும் போது கேட்டேன். அதிலிருந்து தான் கதைகள் படிக்க, கேட்க சில தளங்கள் இருக்கிறது என்று தெரிந்தது அப்படி தான் பாக்கெட் நாவல் என் கண்களுக்கு விழுந்தது. அதில் அழகிய அசுரா முகப்பு படம் என்னை கவர்ந்தது. படிக்க ஆரம்பித்தேன் முதல் அத்தியாயம் முதல் ஆர்வம் ஏற்பட்டது ஒவ்வொரு அத்தியாயமும் என்னை கவர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். விகாவின் கல்யாணம் அதை ஏ.கே தடுத்தது கேரளாவில் ஏ.கே வை ஒருத்தன் அவமானப்படுத்தும் போது விகாவின் கோவம் முக்கியமாக இந்த வசனம் " அவர் அமைதியா இருக்கார்னா இனி நீ வாழ்க்கை முழுதும் அமைதியா இருக்க போறேன்னு அர்த்தம் அதில் ஏ.கே விகாவை பார்ப்பது" நான் மொத்தமாக அழகிய அசுரா வில் விழுந்த தருணம்.

அடுத்து ஆஸ்திரேலியா வில் " ஏ.கே. விகாவிடம், பைனான்சியர் விகாவுக்கு எதாவது டிமான்ட் இருக்கா என்று கேட்கும் போது எனக்கு எந்த பொன்னும் இல்லையே பாஸ் என்று சொல்வது" 

விகாவை கடத்தி வைத்திருக்கும் போது ஏ.கே. வின் தாண்டவம் 

ஏ.கே. விகா கல்யாணம்,  கல்யாணம் நடந்த பிறகு மருத்துவமனையில் வைத்து விகா வை எல்லோரும் கேள்வி கேட்பது ,

எஸ்டேட்டில் வைத்து விகாவை காணாமல் தேடி பார்த்தப் பிறகு அணைப்பது,

விகாவை ஹோட்டல் ரூமில் வைத்து கொல்ல நினைத்து அதில் ஏ.கே விழாவை சமாதனப்படுத்துவது, 

ஏ.கே விற்காக சத்ரியனை விகா அடிப்பது அவர் மட்டும் தான் எனக்கு முக்கியம் என்று சொல்வது அதில் ஏ.கே வின் ரியாக்சன் , 

இருவரும் போட்டியில் கலந்து கொள்வது அதில் வரும் ஒவ்வொரு வரியையும் நான் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். 

இருவரும் தலதீபாவளி கொண்டாடுவது , அவர்களின் பிரிவு, காதல், ஏ.கேவின் அடமென்ட் விழாவின் சில சமயம் கியூட்டான கோவம் ஒவ்வொரு இடத்திலும் தான் மிகவும் ரசித்த கதை.முதல் 500 அத்தியாயமும் எனக்கு அத்துப்படி ஆனால் இப்பொழுது நான் போட்டி தேர்வுக்கு தயார் ஆகி கொண்டு இருப்பதால் என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் நாணயங்கள் விளம்பரங்கள் மூலம் பெற்று குறைந்தது ஒரு நாளில் 50 அத்தியாயம் திறந்து விடுவேன் மொத்தமாக வைத்து படிப்பேன் . இல்லையென்றால் முதலில் இருந்து படிப்பேன்😉.

இதேபோல் உங்களுடைய ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு லைனிலும்‌ நீங்கள் காட்டும் உணர்வுகள் வார்த்தைகள் மிகவும் அருமை. நீங்கள் செல்லும் ஒவ்வொரு தளத்திலும் வந்து கதைகள் படித்து விடுவேன். நீங்கள் பெரிய எழுத்தாளர் ஆக எனது வாழ்த்துக்கள் அக்கா ❤️

Author:    741 Bhuvi Vembu
Comments   0

*** அழகிய அசுரா - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com