தீண்டாதே என் தென்றலே – டீஸர்

“ஏ புள்ள இப்ப என்னத்த சொல்லிப்புட்டேன்னு, இப்படி கண்ணக் கசக்கிட்டு நிக்கிறவ?” என்று சற்று எரிச்சலாய் கேட்டான் கதிர்.

“செம்பருத்தி பூவு" என்று சொல்லிய நிலாவுக்கு, சிறிது நேரத்தில் கண்ணெல்லாம் கலங்கி முகமெல்லாம் சிவக்க ஆரம்பித்திருந்தது.

“இன்னிக்கி என் பொழப்பு நடந்த மாதிரித்தேன்” என்று தனக்குள்ளே முணங்கியவன், கலங்கியவளை மேலும் கலவரப்படுத்தாமல், “நேரா வூட்டுக்கு போ, உனக்கு வேண்டிங்கிறத, கொடுத்தனுப்றேன்" என்று சற்று குரலைத் தாழ்த்திக் கூறினான் கதிர்.

“ம்" என்று தலையசைத்தவள், கையில் இருந்த பள்ளி பேக்கையும், பயத்தில் அங்கேயே போட்டு விட்டு ஓடியிருந்தாள்.

ஓடுபவளை ஒரு ஏக்கப் பெருமூச்சோடு பார்த்தவன், கீழே அவள் விட்டு சென்ற பேக்கையும், அவள் போட்டு விட்டு சென்றிருந்த, பூக்களையும் குனிந்து எடுத்தான்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய கூட்டாளி ஒருவன், “என்னலே அலப்பற எல்லாம் ஜாஸ்தியா கிடக்கு?” என்று கேலி பேசினான்.

“ஆயிரம் சொன்னாலும் பொஞ்சாதியாகப் போற புள்ள இல்லையா, அதான் மருமவேன், இத்தன பதவீசா நிக்குறாப்புள" என்று சுற்றி இருந்த பெரியவரும் அவர் பங்குக்கு கேலி பேசினர்.

அவனுக்கோ, அவர்களுடைய கேலி பேச்சு எதுவும் மூளையில் பதியவே இல்லை. அவனின் எண்ணம் எல்லாம், தன்னைப் பார்த்து அஞ்சி பயந்து ஓடும், அந்த பெண்ணவளின் மீது தான் இருந்தது. கையில் இருந்த பள்ளி புத்தகம், அவளை இன்னும் சிறுமியாய் தான் பார்க்க சொல்லியது. இன்னும் ஒரு மாதத்தில், அவளுக்கும், அவனுக்கும் திருமணம். இதெல்லாம் சரிபட்டு வருமா? என்று மீண்டும் ஒரு முறை அவனுக்குள்ளே யோசித்தான். யோசிக்கும் நிலை எல்லாம் தாண்டியாயிற்று. இத்திருமணத்தை நிறுத்த முடியும் என்ற பேச்சுக்கே இடம் இல்லைத்தான். ஆனாலும் இதற்கு முன் எப்படியோ? இப்போது அவள் தன் மனைவியாகப் போகிறாள். அப்படி இருக்க அவளின் முகவாட்டம் அவனை என்னமோ செய்தது. பொறுமை என்பதே இல்லாதவன், இப்போது அவள் சிதறிவிட்டு சென்றிருந்த பூவை ஒவ்வொன்றாய் எடுத்தான்.

இந்த கதிரும், நிலாவும், உங்கள் மனதை கொள்ளைக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். வயல், தோட்டம், ரைஸ்மில், பள்ளிக்கூடம், என்று நாமும் அவர்களோடு சேர்ந்து கிராமத்து வாசனையை சற்று சுவாசிக்கலாம். அப்படியே, இந்த எதிர் எதிர் துருவங்களின், மோதலும், அதனால் உருவாகும் ஊடலும், அதை வைத்தே முளைக்கும் காதலும் அதனுடான கூடலும், என அத்தனையையும் கொஞ்சம் பருகிப் பார்ப்போம். 

முழுக் கதையைப் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://lovebeatnovels.com/my-creation-blog/theendathe-en-thendrale/

(இது என்னுடைய முதல் கிராமத்துக் கதை. நீண்ட நாட்களாக, மதுரை வட்டார மொழியில் ஒரு கதை எழுத வேண்டும் என்ற என் ஆசையை, இக்கதையின் மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சித்துள்ளேன். பிழை இருந்தால் சுட்டிக் காட்டவும். திருத்திக் கொள்கிறேன். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.)

Author:    1 Sarmi SS
Comments   0

*** தீண்டாதே என் தென்றலே – டீஸர் - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com