அசுரன் – 7

“என்ன விக்னேஷ் சொல்ற?” என்று அந்த பாட்டியின் மகள் அதிர்ச்சியாய் கேட்டாள்.

“ஆமா சித்தி. நான்தா அவ புருஷன்” என்று சொல்ல, பாட்டியோ அஞ்சலியைத்தான் பார்த்தார்.

அவருக்குத்தான் தெரியுமே. நிச்சயம் அந்த தாலியை விக்னேஷ் கட்டவில்லை என்று.

“இல்ல” என்று கூட அஞ்சலியால் சொல்ல முடியவில்லை. இல்லை என்று சொன்னால், அடுத்து, மீண்டும் அது யார் என்று சொல்லியாக வேண்டுமே.

“என்னமா அஞ்சலி? இங்க என்னதான் நடக்குது!” என்று அவர் கோவமாய் கேட்க, “இல்லம்மா. இது” என்ற அஞ்சலிக்கோ, பதட்டத்தில் மயக்கம் வருவது போல் இருந்தது.

“ஏன் சித்தி? எனக்கு அஞ்சலிய பிடிச்சிருந்திச்சு. அதான் கல்யாணம் பண்னிக்கிட்டேன்” என்று சொல்லிய விக்னேஷோ, அவளின் அருகில் வந்து, அவள் தோள் மேல் கையைப் போட்டான்.

அதில் அவளோ, அறுவறுப்பாய், அவனிடம் இருந்து விலக முயற்சிக்க, “என்னடி? எவென்னோ உன்ன ஏமாத்திட்டு போயிட்டான். இப்போ உனக்கு நான் வாழ்க்க கொடுக்கிறேன்னு சொல்றேன். இதுக்கே நீ என் கால்ல விழுந்து கெடக்கனும். என்னமோ கொஞ்சம் அழகா இருக்கீயேன்னு, தொட்டா, ரொம்பத்தான் குதிக்கிற. ஏதாச்சும் பேசுன, அடுத்து உனக்கும், சித்தப்பாக்கும் நடுவுல இருக்கிற எல்லாத்தையும், சித்திட்ட சொல்லிடுவேன்” என்று மிரட்டினான்.

அவனின் வார்த்தையில், அஞ்சலிக்கோ அத்தனை அதிர்ச்சி. அதில், அவளால், அதை மறுக்க கூட முடியவில்லை.

மீண்டும் மீண்டும், தன் இயலாமையை நினைத்து அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

இப்படியெல்லாம் அவமானப்படுவதற்கு, அப்படியே செத்துப் போகலாம் என்று தோன்றியது.

அதற்குள், அந்த பாட்டியின் மகள் வேறு, “ஊம மாதிரி இருக்குற பொண்ணுங்கள, நம்ப கூடாதுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க” என்றார்.

“இல்லம்மா” என்ற அஞ்சலிக்கோ, அத்தனை அசிங்கமாய் இருந்தது. எவனோ ஒருவன் அவள் கழுத்தில் தாலி கட்டினான். இன்று எவனோ ஒருவன் வந்து, அந்த தாலிக்கு அவன் தான் சொந்தக்காரன் என்று சொல்கிறான். இவளுக்கோ, எதையும் தடுக்க முடியவில்லை.

அதிலும், அவனின் கைக்குள் இருப்பது, அத்தனை அறுவறுப்பை கொடுத்தது. அனலில் இட்ட புழுவாய் துடித்தாள் அஞ்சலி.

அதற்குள் அந்த பாட்டியோ, “இவள்ள, இப்பவே கூட்டிட்டு போ” என்று சொல்ல, “இல்ல, நான் போ மாட்டேன்” என்று அவளின் உள் மனம் பதறி துடித்தது.

“நானே அவள்ள கூட்டிட்டு போகத்தான் வந்தேன்” என்று சொல்லிய விக்னேஷோ, அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

“என்னை விடு” என்று அஞ்சலி கையை உதற, “வாடீ. இன்னிக்கு. உன்னை என்கிட்ட இருந்து எவன் காப்பாத்துறான்னு பாக்குறேன்” என்று அவளை இழுத்துக் கொண்டு லிப்டின் பக்கம் சென்றான்.

சரியாக, அந்த லிப்டிற்குள் இருந்து வெளியில் வந்தான் அத்விக் அதிரூபன். 

அஞ்சலியும் அவனைப் பார்க்கவில்லை. 

அத்விக்கும் அவளைப் பார்க்கவில்லை. 

பார்த்திருந்தாலும், அவனுக்கு அவளை அடையாளம் தெரிய வாய்ப்பே இல்லை.

தெரிந்தாலும், அவன் அவளை காப்பாற்றப் போவதில்லை.

அத்விக்கின் பின்னே வந்த நேசமணி, அஞ்சலியைப் பார்த்துவிட்டான். “இதுதான அந்தப் பொண்ணு” என்று தனக்குள் யோசித்தவன், இப்போது முன்னே செல்லும் அத்விக்கைப் பார்த்தான்.

விக்னேஷோ, அஞ்சலியை வலுக்கட்டாயமாய், லிப்டிற்குள் தள்ள முயற்சித்தான்.

சட்டென்று, என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்த நேசமணியோ, “சார். இவன் தான் சார். அந்த சைட் incharge” என்று விக்னேஷை கை காட்டினான் அத்விக்.

அதில் அத்விக் திரும்பி பார்க்க, அதற்குள், அஞ்சலியும், விக்னேஷும் லிப்டிற்குள் நுழைந்திருந்தனர்.

இப்போது, சற்றும் யோசிக்காது, படி வழியே கீழே இறங்க ஆரம்பித்தான் அத்விக் அதிரூபன்.

அங்கே லிப்டிற்குள் நுழைந்த விக்னேஷோ, அவளை மேலிருந்து கீழாய் பார்த்தான்.

“சும்மா சொல்லக் கூடாதுடி. இந்த வயசுலையே செம்மையா இருக்க. உன்ன” என்றவன் கண்டமேனிக்கு எதை எதையோ பேச, இவள் காதை இறுக்க மூடிக் கொண்டாள்.

பத்தொன்பது வயதுபெண், கேட்கும் வார்த்தைகளா இதெல்லாம்? உடல் கூசியது. அழுகை முட்டியது.

விக்னேஷோ, அவளை நெருங்கி, அவளை முத்தமிடப் போக, அவளோ, பயத்தில் அவனை பிடித்து தள்ளினாள்.

அதில் சீண்டப்பட்டவனோ, “என்னையவே தள்ளிவிடுறீயா?” என்று கேட்டப்படி, அவள் முடியை கொத்தாய் பிடித்தான்.

அதற்குள்ளாக, லிப்ட் கதவு திறந்திருக்க, “வாடி. இன்னிக்கு உனக்கு வலின்னா என்னென்னு காமிக்கிறேன்” என்றப்படி, அவளை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தான் விக்னேஷ்.

ஆனால், அடுத்த நொடி அத்விக் அவன் முன் நின்றிருக்க, “யோவ், தள்ளுயா” என்றப்படி விக்னேஷ், முன்னேற முயன்றான்.

ஆனால் அதற்குள், அவன் கழுத்தைப் பிடித்து, அப்படியே தூக்கியவன், “மணி” என்று அழுத்தி கூப்பிட்டான்.

இங்கே, விக்னேஷ், அஞ்சலியை விட்டிருக்க, அவள் அதிர்ந்து ஓரமாய் போய் நின்றாள்.

அத்விக்கோ, அஞ்சலியின் பக்கம் கூட திரும்பவில்லை. அவனின் பார்வை மொத்தமும், விக்னேஷின் மீதுதான் இருந்தது.

“இவனால நமக்கு மொத்தம் எவ்ளோ நஷ்டம்” என்று அத்விக் அழுத்திக் கேட்க, “ரெண்டு கோடி சார்” என்றான் நேசமணி.

“இவன் உடம்புல இருக்குற. parts எல்லாம் வித்தா, நம்ம நஷ்டத்துக்கு சரியா வருமா?” என்று கேட்டான்.

அத்விக்கின் குரலில் தான், அஞ்சலியும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். முழுதாய் ஒரு மாதம் கழித்து இன்றுதான், அத்விக்கைப் பார்க்கிறாள்.

பார்த்தவளுக்கு, இன்னும் பயம் தான் அதிகரித்தது. விக்னேஷ் மோசமானவன் தான். ஆனால் அதை விட, அவனுக்கு எதிரில் இருப்பவனும் சாதாரணமானவன் கிடையாதே.

அவளுக்கோ, பயத்தில், மூளை வேலை செய்யவில்லை. அப்படியே நின்றாள்.

இதற்கு மேல், அவளுக்கென்று இருந்த வேலையும் இல்லை. இனி இங்கேயும் அவளால் இருக்க முடியாது. இவன் கண்ணில் பட்டுவிட்டால், அடுத்து இன்னும் பெரிய சிக்கலில் மாட்ட வேண்டும்.

இதை எல்லாம் அவள் உணர, அடுத்த நொடி, அங்கிருந்து ஓடி விட்டாள். அதை கவனித்த நேசமணியோ, “ஐயோ. இப்போ என்னப் பண்றது” என்று புரியாமல் நின்றான்.

“மணி” என்று கோவமாய் அத்விக் கத்த, “எஸ் சார். எல்லாம் பேலன்ஸ் ஆகிடும் சார்” என்றான்.

அதற்குள் விக்னேஷோ, “சார், யார் நீங்க. என்ன எதுக்கு சார்” என்று பேச முயல, அதற்குள் அவன் வாயிலேயே குத்தினான்.

அதில் அவன் வாயில் இருந்து ரத்தம் கொட்ட, “ஏன்னு தெரியல. இவென்ன பாத்தாலே, எனக்கு பிடிக்கல. அதனால” என்று சொல்லிய அத்விக்கோ, இப்போது மீண்டும் அவன் முகத்தில் குத்தினான்.

வாங்கிய அடியில், அவன் தரையில் விழ, இப்போது அத்விக்கோ, அவன் சட்டைக்காலரை கொத்தாய் பிடித்து, அவனை அங்கிருந்து தரதரவென்று இழுத்து சென்றான்.

சுற்றி அத்தனை பேர் இருந்தாலும், யாரும், எதுவும், என்ன ஏது என்று கூட கேட்கவில்லை.

ஏனெனில், அத்விக்குடைய ஆட்கள் கையில், துப்பாக்கியல்லவா வைத்திருந்தார்கள்.

வெளியில் வந்ததும், அத்விக் அவனை, அவனுடைய ஆட்களிடம் தூக்கி வீசியவன், “இவனால ஆன நஷ்டத்த சரி பண்ற வரைக்கும், இவென்ன நம்ம இடத்துல வெச்சி, ஸ்பெஷலா கவனிங்க” என்றப்படி தன் காரில் ஏறி அமர்ந்தான்.

கையில் இருந்த அந்த விக்னேஷின், ரத்த துளியை கர்ஷீப்பால் துடைக்க, மின்னலென, விக்னேஷின் அருகில் நின்றிருந்த, பெண்ணின் தெளிவில்லாத முகம் நினைவுக்கு வந்தது.

அதில், நெற்றியை நீவியப்படி, அத்விக் மீண்டும் நடந்த விஷயங்களை எல்லாம் ஓட்டிப் பார்த்தான்.

விக்னேஷின் அருகில் ஒரு பெண் நின்றிருந்தது தெரிந்ததே தவிர, அவள் முகம் நினைவில் வரவில்லை.

ஆனால் அவளுடைய குரல், மட்டும் யாரையோ நினைவுப்படுத்தியது. 

ஏனெனில் அஞ்சலியின் முகம் மட்டும் தான் அவனின் நினைவில் இல்லை. ஆனால் அவளின் குரலும், அவள் பேசிய வார்த்தையும் அவன் மனதில் ஆழமாய் பதிந்திருந்தது.

இங்கே நேசமணியோ, மீண்டும் தன்னுடைய ஆட்களுக்கு கால் செய்து அஞ்சலியைப் பற்றிய விவரத்தை சொல்லி, கண்டுப்பிடிக்க கூறினான்.

அதற்குள், “நேசமணி” என்று சத்தமாய் அத்விக் அழைத்தான். அதில் அரக்கப்பறக்க, ஓடி வந்து அவனின் முன்னே நின்றான் நேசமணி.

“இப்போ அவன் கூட இருந்த பொண்ணு யாருன்னு பாத்தீயா?” என்று கேட்டான்.

“எந்தப் பொண்னு சார்” என்று நேசமணி எச்சிலை விழுங்கியப்படி கேட்க, அத்விக்கோ முறைத்தான்.

“அந்த பொண்ணு யாரு? இப்போ எங்க இருக்கான்னு விசாரி. அவெள்ளோட குரல்” என்றவனின் புருவம் இடுங்கியது.

“ஒகே சார். சொல்றேன் சார்” என்று மணி சொல்ல, அத்விக் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

இப்போது அஞ்சலியோ மீண்டும் நடு ரோட்டில், அநாதையாய் நின்றாள்.

கையில் ஒரு ரூபாய் கூட இல்லை. அவளுடைய உடமைகள் எல்லாம் அந்த பாட்டி வீட்டில் தான் இருந்தது.

இப்போது எங்கு செல்ல என்று கூட தெரியவில்லை. அப்படியே அந்த ரோட்டோரத்தில் காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

அழுதாள். அழுதுக்கொண்டே இருந்தாள். எத்தனை நேரம் அப்படியே அழுதிருப்பாளோ, அவளின் முன்னே வாட்டர் பாட்டில் நீட்டப்பட்டது.

அதில் அஞ்சலி நிமிர்ந்துப் பார்த்தாள். அதே நிரூ தான் நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததுமே, அஞ்சலிக்கு புரிந்தது.

அதில், இன்னும் தன் நிலமையை நினைத்து அழுகை வந்தது. 

“பிச்சக்காரின்னு நெனச்சிலாம், தண்ணீ கொடுக்கல” என்று சொல்லியப்படி, அவளின் அருகிலேயே வந்தமர்ந்தாள்.

அத்தனைப் பெரிய பணக்கார வீட்டுப்பெண், ஆனால் சிறு உறுத்தல் கூட இல்லாமல், அந்த ரோட்டோரத்தில், அவளின் அருகில் அமர்ந்திருந்தாள்.

அதில், இன்னும் கலங்கி அழுதாள் அஞ்சலி. 

“உனக்கு என்ன ப்ரச்சனன்னு எனக்கு தெரியல. ஆனா, நானும் இப்படி ஒரு ரோட்டுல, யாருமே இல்லாம தனியா உக்கார்ந்து அழுதிருக்கேன்” என்றாள் நிரூ.

அதில், நிரூவினை கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள் அஞ்சலி. நிரூவும் தடுக்கவெல்லாம் இல்லை. அவள் அழட்டும் என்று விட்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில், அழுது முடித்த அஞ்சலியோ, நிரூவிடம் “என்ன ஏதாச்சும் ஒரு ஆசிரமத்துல சேத்து விட முடியுமா?” என்று கேட்டாள்.

பதினெட்டு வயது நிரம்பிய பெண். ஆனால், நிரூவுக்கோ, அந்த நொடி, ஏதோ பத்து வயது சிறுபெண் போல்தான், அஞ்சலியைப் பார்க்க தோன்றியது.

அஞ்சலி, தன்னை மீறி கேட்டுவிட, அதன் பின்னே என்ன கேட்டோம்? என்பதையே யோசித்தாள்.

“சாரி. நான் ஏதோ தெரியாம” என்று சொல்லியப்படி, அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றாள் அஞ்சலி.

அதற்குள் அவள் கையைப் பிடித்து நிறுத்திய நிரூவோ, “உனக்கு ஒகேன்னா, நா உன்ன என் வீட்டுக்கு கூட கூட்டிட்டு போறேன்” என்றாள்.

“இல்ல இல்ல. அதெல்லாம் வேண்டாம்” என்று வேகமாய் மறுத்தாள். அதற்கு முதல் முக்கிய காரணம். அவள் பணக்கார வீட்டுப்பெண்.

இதற்கு முன் அவள் வேலைப் பார்த்த இடத்தில் உள்ளவர்களெல்லாம், அத்தனைப் பெரிய பணக்காரர்களெல்லாம் இல்லை. ஆனால் அங்கேயே, அவளுக்கு அத்தனைப் பிரச்சனை. அப்படி இருக்க, இப்போது நிரூவின் வீட்டில் வேலை பார்க்க கூட அவள் நினைக்கவில்லை.

அதில் நிரூவுக்கு, அவள் மனநிலை ஓரளவுக்கு புரிய, “சரி. முதல்ல தண்ணிய குடி. இங்க எனக்கு தெரிஞ்ச ஆசிரமத்துல நான் பேசுறேன்” என்றப்படி மொபைலை எடுத்துக் கொண்டு, தள்ளி சென்றாள்.

இப்போதைக்கு அஞ்சலிக்கு, தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும். அது மட்டும் இருந்தால், அதன் பின், அவள் அடுத்து என்ன செய்ய, என்று யோசிக்கவாவது செய்வாள்.

அதனால் தான் வேலை வேண்டும் என்று கேட்காமல், இப்படி கேட்டிருந்தாள்.

(நிரூவால் அஞ்சலிக்கு உதவி செய்ய முடியுமா என்ன? அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தேவதை வருவாள்…

Author:    1 Sarmi SS
Comments   2

*** அசுரன் – 7 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com