இருவரும் ஒரே நேரத்தில், “லெட் பி ப்ரண்ட்ஸ்” என்று கையை நீட்டினர். அதைப் பார்த்து மறுபடியும், கன்னக்குழி விழ அழகாய் சிரித்தான் முகிலன்.
அந்த சிரிப்பை அவனுக்கே தெரியாமல், அழகாய் ரசித்தாள், மித்ரா.
பின் சட்டென்று தன்னை தேற்றி, “ஆக்சுவலி. சாரி. நீங்கத்தான் அந்த லெட்டர எழுதுனீங்கன்னு நான் தப்பா நினைச்சிட்டேன்” என்றாள் மித்ரா.
“இப்பக்கூட நான் அதை எழுதலன்னு, நான் இன்னும் நிரூபிக்கலையே” என்று முகிலன் அவளைப் பார்த்தான்.
அதில் அவனை ஒரு நொடி பார்த்து, பின் “கோவப்படுறவுங்க பொய் சொல்லமாட்டாங்க” என்றாள்.
“ம். வக்கிலாச்சே நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்” என்று அவனும் சீண்டலாய் சொல்ல, அவளும் மெலிதாய் புன்னகைத்தாள்.
அதற்குள், “ஆனா இப்படி தப்பு தப்பா, உங்களுக்கு யாரு லெட்டர் எழுதுனது?” என்று அவன் கேட்கும் போதே அவன் கண்களில் அனல் பறந்தது.
“எனக்கு தெரிஞ்சிருந்தா, நான் அங்கப் போயி கேட்டுருப்பேனே. இப்படி உங்கள விட்டு திட்டிருக்க மாட்டேனே” என்று அதே புன்னகையுடன் கூறினாள்.
“பட். எப்படி நீங்க இந்த விசயத்த இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க?” என்றவனுக்கு ஏனோ, அதை அத்தனை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதெப்டி, அவளுக்கு அப்படி ஒருவன் லெட்டர் கொடுப்பான் என்ற கோவம் அவனுக்குள் எரிந்தது.
அதற்குள், “நான் உங்ககிட்ட சாதாரணமா கேட்ட மாதிரி எனக்கு நியாபகம் இல்லையே” என்று மித்ரா சிறு நக்கலுடன் கேட்டாள்
அவள் கேட்ட தோணியில் சிரித்தவன், “பட். இந்த லெட்டர் எழுதுனது, யாருன்னு மட்டும் கண்டுபிடிச்சா? அவன” என்று அவன் சொல்லும் போதே அவன் குரலில் அவ்வளவு கோவம் இருந்தது.
இருந்தும் அதை வெளிக்காட்டாமல், “அவனுக்கு கண்டிப்பா பெருசா ஏதாச்சும் பண்ணனும்” என்றான்.
“பராவாயில்ல. இந்த மாதிரி லெட்டர், நான் நிறையா பார்த்துட்டேன். பொதுவா, நான் இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்றது இல்ல. பட். நீங்க இப்படி எழுதுவீங்கன்னு நினைக்கல. அதான் அந்த கோவத்துல தான். வந்து எதையும் யோசிக்காம திட்டிட்டேன். சாரி” என்றாள் மித்ரா. அவள் குரலில் அப்பட்டமான வருத்தம் தெரிந்தது.
“வாட். நான் எழுதுனதுனாலயா, அப்போ உங்களுக்கு என்னைய முன்னாடியே தெரியுமா?” என்று முகிலன் சந்தேகமாய் கேட்க. அவளோ. அதிர்ச்சியாய் முகிலனை பார்த்தாள்.
என்ன சொல்வாள்? உண்மையைக்கூறி உறவை முறித்துக்கொள்வாளா? இல்லை! அதை மறைத்து உறவை வளர்க்க முயற்சிப்பாளா?
அவள் எதுவும் சொல்லாமல், அப்படியே நிற்கவும், “என்ன? அப்போ உண்மையாவே என்னை உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டான்.
“தெரியும்” என்று மித்ரா அசராமல் சொல்ல, “எப்படி தெரியும்?” என்று குழப்பமாய் கேட்டான்.
“உங்களுக்கு வேனும்னா, சாதாரண ஒரு அட்வகேட் பத்தி தெரிஞ்சி வச்சிக்க வேண்டிய அவசியம் இல்லாம இருக்கலாம். பட். தி கிரேட் பிஸ்னஸ் மேன், முகிலன பத்தி எனக்கு தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இருக்கே” என்று சிறு நக்கலோடு கூறினாள்.
அதில், சட்டென்று தன் நெற்றியை தேய்த்தவன், “பை தி வே. அன்னிக்கு நான் அப்படி பேசிருக்க கூடாது. நான் எப்படி, இந்த பிஸ்னஸ்-ல கிங்கோ, அதே மாதிரி நீங்களும் உங்க தொழில்ல கிங். இல்ல. குயின் தான்” என்றிருந்தான்.
இப்படி எல்லாம் அவனுக்கு பேச தெரியுமா என்ன? அவனுக்கே அவன் பேச்சில் அத்தனை சந்தேகம். அவனா இப்படி ஒரு பெண்ணை பாராட்டிக் கொண்டிருக்கிறான் என்று.
ஆனால் அதை எல்லாம் தாண்டி, அவனுக்குமே, அவள் கண்களில் தெரியும் ஆனந்தத்தை அவள் உதடுகளும் சொல்ல வேண்டும் என்று தோன்றியதோ என்னவோ!
அதனால் ஆர்வமாய், அவள் ஒற்றைப்புன்னகைக்காக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அவளோ, அதை கவனிக்காது, “ம். அது இருக்கட்டும். ஏன் திடீர்னு உங்கள தெரியுமான்னு கேட்டீங்க” என்று சற்று பதட்டத்தோடுதான் கேட்டாள்.
“அது. நம்ம ரெண்டு பேரும் மீட் பண்ண சந்திப்புகளோட எபெக்ட் அப்படி. ஏன்னா, எனக்கு தெரிஞ்சி நம்ம மீட் பண்ணத வச்சி. நீங்க என்னை ரொம்ப மோசமானவன்னு மட்டும் தான் யோசிச்சிருக்க முடியும். நல்லவனா, திங் பண்ண சான்சே இல்ல. அதான்” என்று அவன் சிரித்தப்படி கூறினான்.
“அப்படியெல்லாம் இல்ல. நீங்க நல்லவர்தான்” என்று சற்று அழுத்தம் கூட்டியே கூறினாள்.
“ஹா. ஹா. அதப்பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல. நான் இப்படித்தான். எனக்கு தோன்றத மட்டும் தான் செய்வேன். இப்பக்கூட எனக்கு தெரியல. நான் எப்படி, உங்ககிட்ட இவ்வளவு நல்லவிதமா பேசிக்கிட்டு இருக்கேன்னு. எனக்கு தெரிஞ்சி என் லைப்-ல நான் இப்படி பேசுனது என் பிரண்ட்கிட்ட மட்டும் தான். பட் இப்ப அந்த பிரண்ட்-ம் என்கூட இல்ல” என்று ஒரு நொடி அவனையும் மீறி கண்களில் வருத்தத்தை காட்டியிருந்தான்.
அதில் சட்டென்று “யார் சொன்னா, உங்க கூட இல்லன்னு?” என்று அவள் கேட்டிருக்க, முகிலனோ எதுவும் புரியாமல், அவளைப் பார்த்தான்.
“இல்ல நானும் உங்க ப்ரண்ட் தான. அப்படிப்பார்த்தா நான் உங்ககூடத்தான இருக்கேன். அதத்தான் சொல்ல வந்தேன்” என்றாள் மித்ரா.
அதில், அவனின் முகத்தில் மீண்டும் புன்னகை பூக்க, அதை புன்னகையோடே “ம். சரிதான்” என்றான்.
அப்படி அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, முகிலனின் மொபைலுக்கு அழைப்பு வந்தது.
ஆரம்பத்தில் அவன் அதை கண்டுக்கொள்ளாமல் இருக்க திரும்ப திரும்ப வரவும் அட்டண்ட் செய்து காதில் வைத்தான்.
அந்தப் பக்கம் சொல்லியதை கேட்டு, “வாட்! நோ. ஐயம் இன் இம்பார்டன்ட் மீட்டிங். சோ ஐ கான்ட்” என்றான். அதன் பின் அவர்கள் என்ன சொன்னார்களோ, சிறு எரிச்சலுடன், “யா.ஓகே. ஐ வில் பி தேர் இன் பிப்டீன் மினிட்ஸ். யூ கேன் அரேஞ் இட்” என்று கால்லை கட் செய்தான்.
பின் அவள் பக்கம் திரும்பி “சாரி. மித்ரா. இப்ப கொஞ்சம் அர்ஜன்ட் ஒர்க்” என்று அவன் சொல்லும் முன்னே “யா. நோ பிராபளம். கேரியான். எனக்கும் கொஞ்சம் கேஸ் டீடயல்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணனும்” என்றப்படி கிளம்ப முயன்றாள்..
அதற்குள், மறுபடியும் அவள் கையில் அந்த லெட்டரை கொடுத்து “இதப்பத்தி நீங்க யோசிச்சி சொல்லுங்க” என்றான்.
இப்படி எல்லாம் வேண்டாம் என்று சொல்பவர்களின் பின் செல்லும் ரகமே அவன் கிடையாது. ஆனாலும், மித்ராவிடம் ஏதோ ஒன்று இருப்பது போல் தான் தோன்றியது.
அதில் அந்த லெட்டரைப் பார்த்த மித்ராவோ, “ஐ திங். நாட் ஒகே ஒன்லி. பட். உங்களுக்காக உடனே நோ சொல்லல. அவ்வளவுத்தான்” என்று அவள் கிளம்ப திரும்பினாள்.
அதற்குள், “எதுல வந்தீங்க?” என்று அவன் கேட்க, “கார்ல தான்” என்றாள்.
அதில் அவனின் மனம் ஒரு நொடி கவலைப்பட்டதோ என்னவோ? அவளுடன் இன்னும் கூட சில நொடிகள் இருக்கவே மனம் ஆசைப்பட்டது. இது என்ன மாதிரியான உணர்வு என்று அவனுக்கே தெரியவில்லை.
அதனால் மேலும் சில நொடிகள் அவளைப் பார்த்தப்படியே நின்றவன், பின் “ஓ. ஒகே. பாய். மீட் யூ சூன். பட் நீங்க அந்த ஜாப் ஆபர் அக்சப்ட் பண்றதுக்காக வெயிட் பண்றேன்” என்றான்.
அதில் அவளோ, மீண்டும் அந்த லெட்டரைப் பார்த்து “எதுக்கும், வேற ஒரு லாயர் நேம் போட்டு லெட்டர் அடிச்சு வச்சுக்கோங்க” என்று சொல்லியப்படி அங்கிருந்து சென்றாள்.
ஆனால் கடைசி வரை அவன் எதிர்பார்த்த அந்த ஒற்றைப்புன்னகையை அவள், சிந்தவே இல்லை. அது அவனுக்குள் ஒரு குறையாய் இருந்ததோ என்னவோ.
அதே நேரம் அங்கே, அஷ்வந்த்-ம், தஷ்வந்த்-ம் துரத்தியதில் வேகமாய் ஓடி வந்த மதி, கால் இடறி கீழே விழப்போக. இரண்டு கரங்கள் அவளை தாங்கியது.
அதில் மதி நிமிர்ந்துப் பார்க்க, இடப்பக்கமாய், இஷாந்த்-ம். வலபக்கமாய் சிகப்பு சட்டையும் தாங்கியிருந்தார்கள்.
அங்கே அவளின் பின்னே ஓடி வந்தவர்களோ, “தஷ். ஒன் மினிட்” என்று அஷ் அழைத்ததில், தஷ்வந்த் என்னவென்று கேட்டான்.
உடனே அஷ்வந்த் மித்ராவிடம் இருந்து வந்த அழைப்பை காமிக்க எப்போதோ அவர்கள் நின்றிருந்தார்கள்.
அது தெரியாமல் ஓடிவந்து விழுந்த மதி இப்போது துரத்தி வந்தவர்களைப் பார்த்தாள். அவர்கள் தான் அங்கு இல்லையே. அதனால் இஷாந்தைப் பார்த்து முழித்தாள்.
அதில் கடுப்பான இஷாந்தோ, “ஏய் பாத்து வர மாட்ட. இத கோர்ட்னு நினச்சியா, இல்ல ப்ளேகிரவுண்ட்னு நினச்சியா?” என்று திட்ட ஆரம்பித்தான்.
அதில் மதியின் முகம் வாடிவிட, அதற்குள் “வாட்ஸ் யுவர் ப்ராபளம்? ஒய் யூவார் ஸ்கோல்டிங் திஸ் லிட்டில் கேர்ள். மிஷ்டேக்ஸ் வில் ஹேப்பன் இன் எவரி லைப் அன்ட் எவரி பிளேஸ். பட் தட்ஸ் நாட் தியர் பால்ட். ஒகே. சோ. இட்ஸ் பெட்டர்” என்று அந்த நெடியவன் இஷாந்தை திட்ட ஆரம்பித்திருந்தான்.
அப்போதுதான் மதிக்கு, அவனின் இன்னொரு கை வேறொருவனிடம் சிக்கியிருப்பதே புரிந்தது.
“என்ன, சிகப்பு சட்டை இங்கிலீஸ், இங்க வரைக்கும் கேட்குது” என்று அப்போதே வலப்புறமாய் திரும்பிப் பார்த்தான்.
அவனைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து இஷாந்த் பிடித்திருந்த கையை, வேகமாக விலக்கினாள்.
அதில் இஷாந்த் மதியைப் பார்க்க, அவளோ அந்த சிகப்பு சட்டை கையை பிடித்து இழுத்துக்கொண்டு வேகமாக ஒரு மரத்திற்கு பின்னால் சென்றாள்.
அவளின் செயலில், “ஹேய்! வாட்ஸ் டூயிங்” என்று அவன் குழப்பமாய் அவளைப் பார்த்தான்.
“ஐயோ கொஞ்ச நேரம் உன்னோட இங்கிலீஸ் சேனல ஆப் பண்றீயா?” என்று சலிப்பாக கூறினாள்.
அதில் அவனோ, “வாட் ஆர் யூ சேயிங்” என்று அவன் கேட்க, “ஏய் இப்ப எதுக்கு நீ இங்க வந்த” என்றாள் மதி.
“பாடர்ன்” என்று அவன் புரியாமல் பார்க்க “ஐயோ! இவனுக்கு வேற தமிழ் தெரியாதே” என்று தனக்குள் புலம்பியப்படி, “சரி. ஒய் ஆர் யூ கம்மிங்?” என்றாள்.
“ஐயம் கம்மிங் பார் டூ மீட் சம்” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே. “ஐயோ. நீ எதுக்கு வேனும்னாலும் வந்துட்டு போ. ஆனா எதுக்கு இங்க வந்த? ஏற்கனவே” என்று தமிழில் பேச சென்றவள், பின், “நோ. ஆல்ரெடி சம் ரவுடீஸ் அட்டாக் யூ இன் திஸ்ஸு சேம் கோர்ட். இப்ப. இல்ல நவ் அகைன் யூ கம்மிங் மீன்ஸ், வாட் மீனிங்?” என்று அவளின் டாப் டக்கர் ஆங்கில புலமையில் கேட்டாள்.
அவள் பேசிய ஆங்கிலத்தைப் பார்த்து அவன் விழுந்து விழுந்து சிரித்தான். அதில் இவளோ, “இப்போ இவன் எதுக்கு இப்படி சிரிக்கிறான்” என்று சுற்றி முற்றிப் பார்த்தாள்.
அதற்குள் அவனோ “சில்லி கேர்ள். ஆக்சுவலி, ஐயம் கம்மிங் டூ கிவ் திஸ் கிப்ட் டூ யூ” என்று ஒரு கிப்ட் பாக்ஸை அவளிடம் காட்டினான்.
அதைப் பார்த்த மதியோ, “வாட்? ச்சி. இவன் கூட சேர்ந்து நமக்கும், வாத்து கோழி-ன்னு வாயில வருது. என்ன, என்ன கிப்ட்? எதுக்கு?” என்று அடுத்தடுத்து கேள்வியாய் கேட்டாள் அவள்.
“ஹேய் சில். யூ லாஸ்ட் யுவர் இயரிங்க்ஸ் இன் தட் இன்சீடன்ட். பீகாஸ் ஆப் மீ ஒன்லி யூ ஹேவ் லாஸ்ட் இட். சோ. ஒன்லி ஐ வில் பை பார் திஸ் டூ யூ. சோ. யூ டோன்ட் சேய் நோ. பிளீஸ். அக்சப்ட் திஸ்” என்று அவளிடம் அதை நீட்டினான்.
அவன் சரளமாய் பேசிய ஆங்கில வார்த்தைகளில் எதுவும் புரியாமல் மதி அவனை பார்த்தாள்.
அவள் அமைதியை சம்மதம் என நினைத்தவன், “யா பைன். டேக் இட்” என்று அந்த கிப்ட் பாக்ஸை அவள் கையில் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.
சில நொடிகளுக்கு பின்னே அவன் செயலின் அர்த்தம் புரிந்து, “ஏய். சிகப்பு சட்டை” என்று கத்தி அழைத்தாள்.
அதில் ஒரு நொடி நின்று திரும்பி அவளைப்பார்த்து “பை தி வேய். ஐ பர்கட் ஒன் திங். தாங்கியூ பார் யுவர் லவ் அன்ட் கேரிங். பாய் லிட்டில் கேர்ள்” என்று சொல்லிவிட்டு அவன் காரில் ஏறி அங்கிருந்து சென்றிருந்தான்.
அவன் சொல்லியதில் பாதி புரியாது, “என்னது, லவ்வா? யோவ். என்னயா சொல்லிட்டு போற” என்று புரியாமல் மதி அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதன் பின்னே இஷாந்தின் நினைவு வர. “ஐய்யய்யோ!, சார வேற அப்படியே விட்டுட்டு வந்துட்டோமே” என்று வேகமாக இஷாந்தை பார்க்க சென்றாள்.
(முகிலனின் இளக்கம் காதலாய் மாறுமா? மித்ரா மறைக்க நினைக்கும் விஷயத்தை முகிலன் அறிவானா? என்பதை வரும் அத்தியாயங்களில் காண்போம். அப்புறம் அடுத்த எபிசோட்ல இருந்து, எபிசோட்ஸ் எல்லாம் லாக் ஆக ஆரம்பிச்சிடும். இண்டர்னேசனல் யூசர்ஸ். மோஸ்ட்லி debit/credit card use பண்ணி pay பண்ணுங்க. உங்களுக்கு pay பண்றதுலையோ, இல்ல சப்ஸ்கிரிப்சன் பண்றதுலையோ ப்ராபளம் இருந்தா lovebeatnovels@gmail.com க்கு மெயில் பண்ணுங்க. இல்லன்னா ஹெல்ப்லைன் வாட்சப் நம்பர் +916374401933 நம்பருக்கு வாட்சப் பண்ணுங்க. உடனே எங்க டீம் சரி பண்ணுவாங்க. அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தொடரும்…
Keerthi S
mathi🤣🤣🤣
Anitha Satheesh
super