காதல் – 14

முகிலன் பேசிய பேச்சில், சட்டென்று அவன் முன் வந்து அவனின் சட்டைக் காலரை கொத்தாய் பிடித்தாள் மித்ரா. 

அதில் அவன் அவளை பார்க்க, அவளோ “நீ இப்ப பேசுன வார்த்தைக்கு உன்ன பலாருன்னு நாலு அடி அடிச்சாக்கூட தப்பு கிடையாது. ஆனா. இது உன் ஆபிஸ். நான் அடிக்கிறத! உன் ஸ்டாப்ஸ் வந்து பார்த்தா, உன் மானம் போயிடும். அந்த ஒரே ஒரு காரணத்துக்காக மட்டும் தான் நான் அமைதியா நின்னு பேசிட்டு இருக்கேன். என்ன சொன்ன? நான் உன்ன மயக்குறேனா? தி கிரேட் பிஸ்னஸ் மேன் இளமுகிலன, ஒருத்தர் அவ்ளோ ஈசியா மயக்கிட முடியுமா என்ன? அப்போ அவ்ளோ வீக்கா நீங்க?” என்று நக்கலாய் கேட்டாள்.

அதற்கு அவன் ஏதோ சொல்லும் முன்னே, “அதுவும் போக, உங்கள மயக்க நான் ஒன்னும் உங்களுக்கு இந்த மாதிரி லெட்டர் எழுதல” என்று அந்த லெட்டரை எடுத்து அவன் முகத்தில் எறிந்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றாள். 

அப்போதே தன்னிலை பெற்றவன், அவளை  விலக விடாமல் பிடித்து இழுக்க, அவன் மார்பிலேயே வந்து விழுந்தாள் மித்ரா. 

அடுத்த நொடி அவனை விட்டு விலகி “இப்ப உங்களுக்கு என்னதான் பிரச்சன?” என்று மித்ரா பொறுமையிழந்து அவனைப் பார்த்து கேட்டாள்.

“அதே தான் நானும் கேட்கிறேன். அந்த லெட்டர்ல உனக்கு என்ன பிரச்சனை?” என்று முகிலனும் விடாமல் கேட்டான்.

“ஏன் எழுதுன உங்களுக்கு தெரியாதா, அத என் வாயால வேற சொல்லனுமா?” என்று மித்ரா கொஞ்சம் குரலை உயர்த்தினாள்.

“ஆமா. அப்படித்தான்னு வச்சிக்கோ. சொல்லிட்டு நீ இந்த இடத்த விட்டு போகலாம். இல்லன்னா, என்கிட்ட நீ பேசுனதுக்கு சாரி கேட்டுட்டு போகலாம்” என்று முகிலன், அந்த மேஜையில் சாய்ந்து நின்றான்.

“ஓ. நீங்க தப்பு பண்ணிட்டு, அதுக்கு நான் வேற சாரி கேட்கனுமா?” என்று மித்ரா முறைத்தாள். அவள் முறைக்கவும், இப்போது அவனுக்கோ குழப்பம்.

அதனால் வேகமாக அந்த லெட்டரை எடுத்து படித்தவன், அப்படியே அதை சுக்கு நூறாக கிழித்து எறிந்தான். 

அவனின் செயலில் புரியாமல், மித்ரா அவனைப் பார்க்க, அதற்குள் “வாட் ஏ புல்சிட். வேந்தன்” என்று கத்தியிருந்தான்.

அவனின் சத்தத்தில், அறக்கப் பறக்க உள்ளே ஓடி வந்தான் வேந்தன். 

வேகமாக உள்ளே நுழைந்த வேந்தனின் சட்டையை பிடித்து, “நான் என்ன லெட்டர், டைப் பண்ண சொன்னேன்? நீங்க என்ன டைப் பண்ணிருக்கீங்க?” என்று கோவமாய் கேட்டான்.

அவனின் கோவத்திற்கு காரணம் புரியாமல், “பாஸ்” என்று அவன் பயந்து நடுங்க, “சொல்லுங்க மிஸ்டர் வேந்தன்” என்று அவன் உச்சகட்ட கோவத்தில் கத்தினான்.

“இல்ல பாஸ். ஏன் பாஸ். நீங்க ரெடி பண்ண சொன்னததான் பாஸ் ரெடி பண்ணேன்?” என்று பட படவென்று கூறினான்.

“எது? இத நான் ரெடி பண்ண சொன்னேன்னா? நான் மித்ராக்கு லீகல் அட்வைஸர் போஸ்டிங்க்கான, அப்பாயின்மென்ட் லெட்டர் தான ரெடி பண்ண சொன்னேன்” என்று கேட்டான் முகிலன்.

“எஸ் பாஸ். நானும் அதான் ரெடி பண்ணிக் கொடுத்தேன். உங்க டேபிள்ல கூட ஒரு காப்பி வச்சிருக்கேன் பாஸ்” என்று தட்டு தடுமாறி அவன் கூறினான். 

அதன் பின்னே அவன் சட்டையை விட்டவன், பார்வையால் வெளிய போக சொல்ல. வேந்தனும் விட்டால் போதும் என்று வெளியே சென்றான்.

அவன் சென்றதும், இப்போது அந்த மேஜையில் இருந்த லெட்டரை எடுத்து மித்ராவிடம் நீட்டியவன், “இது. இததான். நான் உனக்கு கொடுத்தேன். அத இல்ல. ஓ மை காட். எப்படி. உன்னால என்ன இவ்ளோ சீப்பா யோசிக்க முடிஞ்சிது? நான் போயி அந்த லெட்டர எழுதுவேனா? நோ” என்று அவன் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி எறிய ஆரம்பித்தான். 

அவனிடம் அப்படி ஒரு கோவத்தை மித்ராவே எதிர்பார்த்திருக்க மாட்டாளோ என்னவோ? ஆனால் அவனே பல வருடங்களுக்கு பிறகு, இன்று தான் சிறு நிம்மதியை உணர்ந்திருந்தான்.

ஆனால், அதையும் இந்த லெட்டர் கெடுத்திருக்க, அவனால், அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

“நான் எப்படி பண்ணியிருப்பேன்னு யோசிச்ச? என்னப் பாத்தா அவ்ளோ கேவலமானவன் மாதிரியா இருக்கு” என்று இன்னும் இன்னும், தன்னை தானே அவன் காயப்படுத்திக் கொள்ளப் போக, வேகமாக ஓடிச்சென்று அவனை அணைத்திருந்தாள் மித்ரா. 

அதே நேரம் அங்கே, “என்ன மதி மேடம். நீங்க மட்டும் இருக்கீங்க. எங்க உங்களோட இஷாந்த் சாரு?” என்று நக்கலாக கேட்டுக் கொண்டே, அங்கு வந்தான் இன்ஸ்பெக்டர் அஷ்வந்த்.

அதற்குள், “என்ன மிஸ் மதியரசி. எங்க, உங்களோட மித்ரா மேடம்-ம கானும்” என்று அவள் பின்னிருந்து வந்தான் இன்ஸ்பெக்டர் தஷ்வந்த். 

அவர்களைப் பார்த்ததும், “ஹலோ, இப்ப உங்க ரெண்டு பேருக்கும், என் சாரும், மேடமும் வேனுமா, இல்ல ஓசியில டீ வேணுமா?” என்று மதி நக்கலாக கேட்க. இருவரும் முறைத்தனர்.

அவர்கள் முறைக்கவும், “அப்புறம் என்ன டபுள்ஸ், இஷாந்த் சார பார்க்கனும்னா, அவர் கேபின்-க்கு போங்க. மித்ரா மேடம பார்க்கனும்னா அவங்க கேபினுக்கு போங்க. அதவிட்டுட்டு சம்பந்தமே இல்லாம, டீக்கடையில் டீ குடிச்சிக்கிட்டு இருக்கிற என்கிட்ட வந்து கேட்டீங்கன்னா, என்ன அர்த்தம்” என்று டீயை குடித்துக்கொண்டே கேட்டாள் மதி.

“ம். நீ இந்த கோர்டோட ஆல் இந்தியா ரேடியோ-ன்னு அர்த்தம்” என்று அஷ்வந்த் சொல்லவும், தஷ்வந்த அதுக்கு ஆமா சாமி போட்டான். 

“ஹலோ. ஆல் இந்தியா ரேடியோன்னா, உங்களுக்கு அவ்வளவு கிண்டலா போச்சா. பெஸ்ட் பிரண்ட், எங்க இருக்காங்கன்னு தெரியாத உங்களுக்கெல்லாம், இங்க இருக்கிற அத்தன பேர் டீடயல்ஸையும், மெமரில ஸ்டோர் பண்ணி வச்சியிருக்க என்னை பார்த்தா, கிண்டலாதான் தெரியும். ஆனா அதெல்லாம் எவ்வளவு பெரிய டேலண்ட் தெரியுமா” என்று மதி வழக்கம் போல் அவளின் பிரச்சாரத்தை ஆரம்பித்தாள்.

அதற்குள், “அம்மா. தாயே. தெரியாம சொல்லிட்டேன். இப்ப தயவு செஞ்சி, மித்ரா எங்க இருக்கான்னு சொல்லுறீயா?” என்று அஷ்வந்த-ம், தஷ்வந்த்-ம் கேட்க. 

“ம். சொல்றேன். அப்போ. இந்த டீ காச நீங்க கொடுத்துறீங்களா?” என்று மதி வேகமாய் கேட்டாள்.

“ம். எல்லாம் நேரம். சரி சொல்லு” என்று தஷ்வந்த் கேட்க. அஷ்வந்த் பில் கட்டினான்.

“லாஸ்டா. நான் மித்ரா மேடம்-ம! ஒரு அர மணி நேரம் முன்னாடி பார்த்தேன். ஆனா யார் மேலையோ, செம்ம காண்ட்-ல இருந்தாங்க. ஐ திங். என் ஏழாம் அறிவ வச்சிப்பார்த்தா, அவங்க கையில கண்டிப்பா மொபைல் இருக்கும். சோ நீங்களே கால் பண்ணி தெரிஞ்சிக்கோங்கா. பாய்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சிட்டாய் பறந்து விட்டாள்.

அவளின் சேட்டையில், “உன்ன” என்று அஷ்வந்த் அவளை துரத்தப்போக. “ஏய். கரெக்ட்தான. உனக்கும் எனக்கும் தோனிச்சா, சரி விடு. எங்க போயிட போறா?” என்று தஷ்வந்த் சொல்ல. அடுத்த நொடி அஷ்வந்த் மித்ராவிற்கு கால் செய்தான்.  

திரும்ப, திரும்ப முயற்சித்தும் மித்ரா எடுக்காமல் போக, இஷாந்தும், தஷ்வந்தும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

அதற்குள் தூரத்தில் நின்று கொண்டிருந்த மதி, “ஏய் டபுள்ஸ். அப்புறம் சொல்ல மறந்துட்டேன். மேடம் கேஸ்ல வாதாடுறப்ப. மொபைல் சைலன்ட்-ல போட்டுருப்பாங்க. சோ. எனக்கு தெரிஞ்சி, அவங்க இன்னும் அத எடுத்து விட்டுருக்க மாட்டாங்க” என்றாள்.

அதில் கடுப்பான அஷ்வந்த்-ம், தஷ்வந்த்-ம் அவளை முறைக்க, “க்கும் இது கூட தெரியாம, நீங்களாம் என்னதான் போலீஸோ” என்று அவர்களை வாரினாள்.

“உன்ன” என்றப்படி இப்போது இருவரும் அவளை பிடிக்க வர,  “ஐயோ ஐயம் எஸ்கேப்” என்று அவள் ஓடினாள்.

அவர்களும் வேகமாய் வர, அதில் சற்று பதறி, இவள் கீழே விழப்போக, சரியாக அன்னேரம் இரு வலிய கரங்கள் அவளைத் தாங்கியது. 

இங்கே அலுவலகத்தில் முகிலனை அணைத்து, “ரிலாக்ஸ் இளா” என்றாள் மித்ரா.

அந்த அணைப்பை அவன் மட்டும் அல்ல, மித்ராவும் கூட எதிர்பார்த்திருக்கமாட்டாளோ என்னவோ, அவனின் கோவத்தைப் பார்த்ததும், அவளுக்கு நிச்சயமாய் வேறு வழி தெரிந்திருக்கவில்லை.

இங்கே அவள் அணைக்கவும், அவன் கோவமெல்லாம், வந்த வழியில் சென்றிருந்தது. 

அவனுக்கும் அப்போது அந்த ஆறுதல் தேவைப்பட, அவனும் சற்றும் யோசிக்காமல் அவளை திருப்பி அணைத்துக்கொண்டான். 

அதுவரை கூட, மித்ரா தன் கட்டுப்பாட்டில் இருந்திருப்பாளோ, என்னவோ, அவன் அணைக்கவும் மொத்தமாய் தன்னை மறந்து விழி மூடினாள்.

அங்கே அவனும் கூட கண்ணை மூடியிருக்க, நிச்சயம் அந்த அணைப்பு முகிலனை அத்தனை அமைதிப் படுத்தியது.

அப்போது அவனையும் மீறி, “யாழி” என்று அவன் உதடுகள் மெல்ல முனுங்கியது. ஆனால் அதை உணரும் நிலையில் நிச்சயம் மித்ரா இல்லை. இருவரும் வேறு உலகில் பயணித்துக் கொண்டிருந்தனர். 

சில பல நொடிகள் அப்படியே கடக்க, “மித்ரா என்ன பண்ணிக்கிட்டு இருக்கன்னு. உனக்கு தெரியுதா?” என்று அவள் உள்மனம், நறுக்கென்று கேட்டது. 

அப்போதே இவ்வுலகம் வந்த மித்ரா சட்டென்று அவனை விட்டு விலகி நின்றாள். அவள் விலகலில் தன்னிலை பெற்றவனும், கூட சட்ட்டென்று மேலும் ஒரு அடி தள்ளி நின்றான்.

இருவருக்குமே அடுத்து என்ன சொல்வது, என்று புரியாமல், ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க முடியாமல் தயங்கி நின்றனர். 

உண்மையில், அந்த நெருக்கம் இருவருக்குமே பிடித்திருந்தது என்பது வேறு கதை. ஆனாலும் கூட, நடந்ததை எப்படி நியாயப்படுத்த என்று தெரியவில்லை.

சில நொடிகள் கடந்து இருவரும் ஒரே நேரத்தில் “சாரி” என்று சொல்ல, சட்டென்று ஒருவர் முகத்தை மற்றொருவர் நிமிர்ந்து பார்த்தனர்.

அதில் இருவரின் விழிகளும், சில கணங்கள், ஒன்றுடன் ஒன்று கலக்க, மித்ராதான் முதலில் தெளிந்தாள். 

“இல்ல. நீங்க கோவத்துல என்ன பண்றீங்கன்னு தெரியாம, எல்லாத்தையும் உடச்சிக்கிட்டு இருந்தீங்களா, அதான் அப்படி. எங்கம்மா எப்பவுமே நான் கோவமா இருந்தா, இப்படித்தான் பண்ணுவாங்க. அதான் ஏதோ ஒரு பதட்டத்துல உ.ங்கள அது” என்று மித்ரா தயங்கியப்படி அவனைப் பார்த்தாள்.

“இல்ல. பரவாயில்ல. நானுமே என்னோட பிரண்ட் நியாபகத்துல தான் அப்படி. அது சாரி” என்று முகிலனும் தன்னுடைய செயலுக்கு விளக்கத்தை கொடுத்தான். 

அதன் பின் இருவரும் எதுவும் பேசவில்லை. மித்ரா விரல்களை இறுக்க மூடி, மூச்சை இழுத்து விட்டாள்.

அங்கே முகிலனுமே, அடுத்து எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று புரியாது கையை மூடி திறந்தான்.

அதன் பின் சில பல நொடிகள் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்தப்படி இருக்க, சட்டென்று ஒரே நேரத்தில். “ஓகே பி ப்ரண்ட்ஸ்” என்று இருவரும் கையை நீட்டினர். 

(இவர்களின் இந்த நட்பு தொடருமா? இல்லை மீண்டும் இருவரும் முட்டிக்கொள்வார்களா? அந்த லெட்டரை யார் எழுதியிருப்பார்? அதில் என்ன இருந்திருக்கும்? என்பதை வரும் அத்தியாயங்களில் காண்போம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தொடரும்…

Author:    1 Sarmi SS
Comments   3

*** காதல் – 14 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com