முத்தமழை – 15

இரவில் வந்து கட்டிலில் படுத்தவள் தான், உடல் அசதியா? இல்லை மன அசதியா? என்று தெரியாத அளவுக்கு அப்படி ஒரு உறக்கத்தில் மூழ்கியிருந்தாள்.

அவளை அழைத்து தொல்லை செய்ய, அவளுடைய மொபைல் கூட உபயோகத்தில் இருந்திருக்கவில்லை. வழக்கம் போல் அத்தனையையும் மறந்து விட்டு, அவள் உறங்கியிருந்தாள்.

காலை கதிரவன் கூட, அவளை தொல்லை செய்யாத அளவுக்கு, அத்தனை திரைசீலைகளும் மூடப்பட்டிருந்தது. அதனால் அவளுக்கு விடிந்த உணர்வு சுத்தமாய் வந்திருக்கவில்லை.

பற்றாக்குறைக்கு, ஏசியின் உதவியால், அந்த அறையின் குளுமை கூட குறையாமல் இருந்திருக்க, பெட்சீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு, உறங்க வசதியாகிப் போயிருந்தது.

அங்கே ராகவ் எல்லாம், இவளுக்கு கால் செய்து பார்த்து, பார்த்து கடுப்பாகி அவனுடைய பாஸுடன், உடனே இங்கு வர கிளம்பியிருந்தான்.

இங்கே அதிகாலை வரை உறக்கம் வராத தீரஜோ, “நோ வே. இந்த தீரஜ யாரும், எப்பவும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க” என்று அழுத்தி சொல்லிக் கொண்டான். அதன் பின்னே உறங்கியிருந்தான்.

ஆனாலும் அவன் கூட, வழக்கமாய் எழும் ஐந்து மணிக்கு பதில், ஆறு மணிக்கு எழுந்து ரெடியாகி அவன் வேலையைப் பார்க்க சென்றிருந்தான். அந்த ஒரு மணி நேர தாமதத்துக்கே, ஜித்தேஷ் அவனிடம் சிக்கி காயப்பட்டுக் கொண்டிருந்தான். 

இப்படி இருவர், அவளால், உறக்கத்தை தொலைத்திருக்க, இவள் மட்டும் உறக்கத்தை விட்டிருக்கவில்லை. கிட்டதட்ட காலை பத்து மணி போல், அவளுடைய அறைக் கதவு தட்டப்பட, அப்போதுத்தான், சற்று துயில் கலைந்தாள்.

அவளின் தூக்கம் தடைப்பட்டவுடன், ஏதோ பூவுக்குள் ஒழிந்திருந்த வண்டைப் போல், மெல்ல பெட்சீட்டை விலக்கி, முகத்தை தலையனையில் புதைத்தாள். பின், மெல்ல கையை நீட்டி, அலுப்பு முறித்தவளின் செவியில், இப்போது அறைக் கதவு தட்டப்படும் சத்தம் தெளிவாய் கேட்க, “ச்” என்று சின்ன சினுங்கலோடு, கண்ணைக் கசக்கினாள்.

“ஜான்வி” என்று இப்போது ஷைனியுடைய குரல் கேட்க, அப்போதே அவளுக்கு இருக்கும் இடம் நினைவுக்கு வர பட்டென்று கண்ணைத் திறந்தாள்.

ஒரு நொடி இருக்கும் அறையை சுற்றிப் பார்த்தவளுக்கு, நேற்றிரவு நடந்த விஷயங்கள் எல்லாம் நினைவுக்கு வர, “ஐய்யய்யோ” என்று பதறியடித்து எழுந்தாள்.

“இன்னொரு தடவ என் கண்ணுல பட்டேன்னா” என்று தீரஜ் மிரட்டிய வார்த்தை நினைவுக்கு வர, “அட என்ன ஜான்வி? இப்படியா தூங்குவ” என்று அவசரமாய் மணியைப் பார்த்தாள்.

அதற்குள், “ஜான்வி” என்று ஷைனி விடாமல் கதவைத் தட்ட, அவசரமாய் முகத்தை கழுவியவள், வேகமாய் வந்து கதவைத் திறந்தாள்.

அவளைப் பார்த்த ஷைனியோ, “ஆர் யூ ஒகே? உனக்கு எதுவும் பிரச்சன இல்லையே” என்று சிறு அக்கறையுடன் கேட்டாள்.

அதில் அவளோ, “இல்ல அது நான்” என்றவளுக்கு, மீண்டும் தீரஜ் அவளை வலுக்கட்டாயமாய் தூக்கி சென்றது. அவன் அவளிடம் நடந்துக் கொண்டது எல்லாம் கண் முன் வந்து நிற்க, அவள் முகம் பதட்டத்தை அப்பட்டமாய் காட்டியது.

“ஜான்வி. உன்கிட்டதான கேக்குறேன். என்னாச்சு? உடம்புக்கு எதுவும் சரியில்லையா?” என்று அவள் தோளைத் தொட்டு உழுப்பினாள்.

அப்போதே இயல்புக்கு வந்தவள், “ஆங்... இல்ல இல்ல அது வந்து..” என்று சொல்ல, “நேத்து பார்டிலையும் உன்ன பாக்க முடியல. சீக்கிரம் வந்துட்டீயா?” என்றாள்.

“ஆமா. அது கொஞ்சம் ஹெட் ஏக்கா இருந்திச்சா? அதான் வந்துட்டேன்” என்று ஜான்வி பதட்டத்துடன் சொல்ல, “ஓ. ஒகே ஓகே. டாக்டர வேணா வர சொல்லட்டுமா?” என்று கேட்டாள்.

“அச்சோ அந்தளவுக்குலாம் ஒன்னும் இல்ல. ஆமா நீங்க காலையிலையே வந்திருக்கீங்க” என்று இவள் தட்டு தடுமாறி சொல்ல, அதில் ஷைனியோ, “உன்னோட மொபைல் சரி பண்ணிட்டாங்க. அத கொடுக்கலாம்னுதான் வந்தேன்” என்று நீட்டினாள்.

அப்போதே அவள் அவளிடம் கொடுத்த மொபைலை உடைத்திருக்க, “ஐயோ ரொம்ப சாரிங்க” என்றாள்.

“தேங்க்ஸ் சொன்னா பரவாயில்ல. எதுக்கு சாரி சொல்றீங்க?” என்று ஷைனி கேட்க, “ஐயோ இல்லைங்க. அது வந்து” என்றவளின் மனமோ, “இதெல்லாம் உனக்கு தேவையா? உனக்குத்தான் ஒரு பொருளையும் ஒழுங்கா வெச்சிக்க தெரியாதே. அப்படி இருக்கிறப்ப, எதுக்கு அவங்க மொபைல்ல வாங்குன” என்றது.

“ஹலோ என்னாச்சு? என்னென்னு சொன்னாத்தான தெரியும்” என்று அவள் கேட்க, “அது வந்து” என்றவள் அதன் பின்னே அந்த உடைந்த மொபைலை எடுத்து வந்து காட்டினாள்.

அதில் ஷைனியோ, புருவத்தை உயர்த்தி, “தூக்கத்துல நடக்கிற வியாதி இருக்கிற மாதிரி, உங்களுக்கு எதுவும் தூக்கத்துல மொபைல்ல உடைக்கிற வியாதி இருக்கா என்ன?” என்று கிண்டலாய் கேட்டாள்.

“ஐயோ அப்படில்லாம் இல்லைங்க. அது தெரியாம. நான் இந்த மொபைலுக்கு எவ்வளவு செலவாகுதோ, அத கொடுத்துடுறேன்” என்று பதட்டமாய் கூறினாள்.

அதில் சிரித்த ஷைனியோ, “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. நான் சும்மாதான் கிண்டல் பண்ணேன். அதுல இருக்கிற சிம்ம, இதுல எடுத்து போட்டுக்கோங்க. எப்படியும் இன்னிக்கு உங்களுக்கு வொர்க் அதிகமா இருக்கும். சோ நம்ம ஈவ்னிங் பாக்கலாம். அப்புறம் சாப்பாடு கொண்டு வர சொல்லிருக்கேன். மறக்காம சாப்டுருங்க” என்று சொல்லிவிட்டே ஷைனி சென்றாள்.

சாப்பாடு என்று சொல்லியதும், அவளுக்கும் பசிப்பது போல் தோன்ற, “பேசாம சாப்டு கெளம்பிடலாம்” என்று சொல்ல, “நீ எல்லாம் திருந்தவே மாட்டள்ல” என்று மனம் திட்டியது.

அவள் என்ன செய்வாள்? என்ன நடந்தாலும், தூங்கியோ? இல்லை சாப்பிட்டோ பழகிவிட்டாள்.

இப்போதும் அதையே அவள் செய்ய நினைக்க, “நேத்து நடந்தத எல்லாம் மறந்துட்டீயா நீ” என்று மனசாட்சி கேள்வி கேட்டது.

அதில் அவளுமே, “ஆமா ஆமா. மொதல்ல ராகவ்கிட்ட சொல்லிட்டு கெளம்பிடனும்” என்று வேகமாய் அந்த உடைந்த மொபைலில் இருந்த சிம்மை எடுத்து அவளுடைய மொபைலில் திணித்தாள்.

மொபைலை ஆன் செய்த உடனே, ராகவிடம் இருந்து பல அழைப்புகள் வந்திருப்பதை குறுஞ்செய்தி தெரிவிக்க, பற்றாக்குறைக்கு அவள் அம்மாவிடம் இருந்தும் அழைப்பு வந்திருந்தது.

“ஐயோ, ராகவ் என்ன, இத்தன தடவ கால் பண்ணியிருக்கான்?” என்று சிறு பதட்டத்துடன் தான் அவனுக்கு கால் செய்தாள். ஆனால் அவனுடைய மொபைல் சுவிட்ச் ஆப் என்று வந்திருக்க, “என்ன சுவிட்ச் ஆப்னு வருது” என்று யோசித்தவள் அதன் பின் வீட்டுக்கு கால் செய்தாள்.

அதன் பின் குளித்து முடித்து, வேறு ஒரு உடைக்கு மாறியவள், அங்கிருக்கும் யாரிடமாவது சொல்லிவிட்டு கெளம்பலாம்” என்று வெளியில் வந்தாள்.

சரியாக அன்னேரம் அங்கு வந்த கேசவோ, “நல்ல வேள நீங்க கெளம்பிட்டீங்க. கிளைண்ட் சைட்ட பாக்கனும்னு சொல்றாங்க. வாங்க போலாம்” என்றான்.

“என்ன?” என்றவளுக்கோ மறுத்துத்தான் பழக்கம் கிடையாதே. அதில் அவளோ அமைதியாய் இருக்க, “என்னாச்சு? நீங்க ரெடியா இருக்கீங்கதான?” என்ரு கேட்டான்.

“ஆங். போலாம்” என்று அவள் வழக்கம் போல் தலையாட்டிவிட, அவளின் மனமோ அவளை காரி துப்பியது.

வெளியில் வரும் போதே, தீரஜ் எங்கும் கண்ணில் படுகிறானா? என்று பயந்து பயந்துதான், ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்தாள்.

அவளைப் பார்த்ததும், நரேந்திரரோ, “வாம்மா. நைட் நல்லா தூங்குனீயா?” என்று கேட்டார்.

“அந்த ஒரு வேலைய மட்டும் தான் அவ பாத்தா” என்று அவளின் மனம் வாரியது.

“ம் சார்” என்று அவள் தலையாட்ட, “இங்க பாரும்மா. நான் வேல விஷயத்துல ரொம்ப பர்பக்சன் எதிர்பார்ப்பேன். சோ சின்னதா கூட எந்த தப்பும் நடந்துடக் கூடாது” என்றார்.

“அதெல்லாம் ஆகாது சார்” என்று இவளும் வேகமாய் சொல்ல, “தட்ஸ் குட்” என்றவர், கேசவ்விடம் கண் காட்டிவிட்டு அவருடைய காருக்கு சென்றார்.

அவர் சென்றதும், இப்போது ஜான்வியோ, “ஜஸ்ட் அவங்களுக்கு ட்ரான்ஸ்லேட் பண்ணா போதும்தான?” என்று சிறு தயக்கத்துடன் கேட்டாள்.

“ஆமா ஜான்வி. ரிலாக்ஸா இருங்க. அங்க இனியன் சாரும் இருப்பாரு. சோ, நம்ம ரொம்ப டென்சன் ஆக வேண்டாம். அவர் மோஸ்ட்லி அவங்கள மேனேஜ் பண்ணிப்பாரு” என்றான்.

அதில் இப்போது நேற்று அவனை அவள் ரசித்துப் பார்த்த கணங்களை நினைத்துப் பார்த்தாள். ஆனால் அதற்குள், அத்தனை கோவமாய் அவளை முறைத்துப் பார்த்தப்படி நின்றிருந்த தீரஜ் தெரிந்தான்.

அவ்வளவுத்தான், அதில் தலையை குலுக்கி கொண்டவள், “ஐயோ கடவுளே, எப்படியாச்சும், இந்த வேலைய முடிச்சிட்டு, நான் அவர் கண்ணுல படாம எப்படியாச்சும் கெளம்பிடனும்” என்று தனக்குள்ளே வேண்டிக் கொண்டாள்.

அதற்குள்ளாக, “ஜான்வி நம்மளோட கார் வந்திருச்சி” என்று கேசவ் சொல்ல, அவளும் அந்த காரின் பின் பக்கம் ஏறி அமர, கேசவோ ட்ரைவர் சீட்டில் அருகில் அமர்ந்தான்.

உள்ளே இருந்தவன், “ஆமா ஜான்வி நேத்தே நான் கேக்கனும்னு நினைச்சேன். உங்களுக்கு ஜித்தேஷ தெரியுமா?” என்று கேட்டான்.

“ஜித்தேஷா?” என்றவளுக்குத்தான் அவன் பெயர் கூட தெரியாதே. அதனால் முழித்தாள்.

“என்ன? நேத்து பார்டீல அவர் கூடத்தான பேசிட்டு இருந்தீங்க” என்று குழப்பமாய் கேட்டான் கேசவ்.

ஏனோ சட்டென்று அவளுக்கு தீரஜ் என்ற ஒருவன் மட்டுமே நினைவுக்கு வந்தான். “என்ன? இல்ல. அவர எனக்கு தெரியாது” என்று சிறு பதட்டத்துடன் கூறினாள்.

அவளின் பதட்டத்தில், இப்போது கேசவோ, “ஒகேங்க. நான் சும்மா கேசுவலாதான் கேட்டேன்” என்றவனுக்கோ அத்தனைக் குழப்பம். ஏனெனில், நேற்று ஜித்தேஷ் தான் அவளை தனக்கு தெரியும் என்று சொல்லியிருந்தான். இப்போது இவளிடம் கேட்டால் தெரியவே தெரியாது என்கிறாள்.

இருந்தும் அதை எல்லாம் ஒதுக்கிவிட்டு, தன் வேலையில் கவனத்தை செலுத்தினான் கேசவ்.

அதே நேரம் அங்கே ஜித்தேஷோ, தீரஜிடம் சாரமாரியாய் திட்டு வாங்கிக் கொண்டிருந்தான். அவன் காதில் இருந்து இரத்தம் வராத குறைதான்.

“ஐயோ கடவுளே எல்லாம் காது நல்லா கேட்கனும்னு வேண்டுவாங்க. ஆனா உனக்கு சக்தின்னு ஒன்னு இருந்தா, என் காத மொத்தமா கேக்காமலே பண்ணிடு. என்னால இந்த குடும்பத்துல இருக்கிறவங்ககிட்ட திட்டு வாங்கி முடியல” என்று தனக்குள்ளே புலம்பினான்.

அதற்குள் அவனின் மீது கையில் இருந்த பைலை தூக்கி எறிந்த தீரஜோ, “உன்கிட்டதான பேசிட்டு இருக்கேன்” என்றான்.

“இல்ல தீரஜ். அது பார்டீல கொஞ்சம்” என்று ஜித்தேஷ் ஏதோ சொல்லப் போக, “இங்க நான் உன்ன கூட்டிட்டு வந்தது. பார்டீய எஞ்சாய் பண்றதுக்கு கிடையாது” என்று கடித்து துப்பினான்.

“ச் எல்லாம் என் அப்பாவ சொல்லனும். அவரு வாங்குன கடனுக்கு, என்னை இவன்கிட்ட வித்துட்டு போயிட்டாரு. இப்போ மொத்த குடும்பத்துக்கும் என்ன நேந்துவிட்டது மாதிரி, என்னை ஆட்டி வெச்சிட்டு இருக்காங்க” என்று தனக்குள் புலம்பினான்.

“இந்த ஒரு போட்டோ ஷூட்ட மட்டும் முடிச்சுக் கொடுத்துட்டா போதும் தீரஜ்” என்று அவன் கெஞ்சலாய் சொல்ல, “என்னால முடியவே முடியாது” என்று அவன் மீதே கையில் இருந்த லெக் பேடை தூக்கி எறிந்தவன் அங்கிருந்து வெளியில் வந்தான்.

சரியாக அன்னேரம் தான். ஜான்வியும், அங்கு வந்து சேர்ந்தாள். கிட்ட தட்ட பல ஏக்கரில் அந்த ஸ்போர்ட்ஸ் கிளப் அமைக்கப்பட்டிருந்தது. பார்க்கவே அத்தனை பிரமாண்டமாய் இருந்தது.

“ஒகே ஜான்வி, நீங்க இடத்த பாருங்க. நான் அவங்க வந்ததும் கூட்டிட்டு வரேன்” என்று கேசவ் சொல்ல, அவளும் தலையாட்டியப்படி அந்த பெரிய மைதானத்தை நோக்கி நடந்தாள்.

சரியாக இங்கே தீரஜுமே, ஒரு வித எரிச்சலுடன், கையில் இருந்த கூலரை அணிந்தப்படி, அந்த மைதானத்துக்கு வந்தான்.

இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்திருக்கவில்லை. இம்முறை இருவரின் மீதுமே தவறு இல்லை. ஆனால், ஜான்வி, அந்த புல் தரையில், தீரஜின் மார்பின் மீது சென்று விழுந்தாள்.

(அப்படி இப்போ என்ன நடந்திருக்கும்? பெருசா என்ன நடந்திருக்கும்? ஜான்விக்கு வழக்கம் போல கட்டம் சரியில்லாம போயிருக்கும். சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அப்புறம் அடுத்த எபிசோட்ல இருந்து, எபிசோட்ஸ் எல்லாம் லாக் ஆக ஆரம்பிச்சிடும். இண்டர்னேசனல் யூசர்ஸ். மோஸ்ட்லி debit/credit card use பண்ணி pay பண்ணுங்க. உங்களுக்கு pay பண்றதுலையோ, இல்ல சப்ஸ்கிரிப்சன் பண்றதுலையோ ப்ராபளம் இருந்தா lovebeatnovels@gmail.com க்கு மெயில் பண்ணுங்க. இல்லன்னா ஹெல்ப்லைன் வாட்சப் நம்பர் +916374401933 நம்பருக்கு வாட்சப் பண்ணுங்க. டனே எங்க டீம் சரி பண்ணுவாங்க. அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தீருமா?..

Author:    1 Sarmi SS
Comments   5

*** முத்தமழை – 15 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com