முத்தமழை💋 – 11

அவனின் முகத்தில். அவள் சேலை முந்தானை பரவியிருக்க, அதில் இருந்த வந்த பெண்ணவளின் வாசனை அவனை என்னமோ செய்தது. அது அவனுடைய எரிச்சலைக் கூட்ட, இப்போது மீண்டும் அவள் இடையைப் பற்றி நீச்சல் குள திண்டில் அமர வைத்தவன், அதை விலக்க முயற்சித்தான்.

ஆனால் அதற்கு அவள் அனுமதிக்க வேண்டுமே, அவள் அவன் கரத்தைப் பிடித்து தடுக்க, “ஹே” என்றவன் சட்டென்று அவள் கரத்தை விலக்கியதில், அவள் கரத்தில் அணிந்திருந்த வளையல், அவள் கண்னுக்கு கீழே உரசியது.

அதில் அவன் தன் கரத்தால், முகத்தை மூட, “ஐயோ சாரி” என்று பதறியப்படி, அவனைத் தொடப் போக, அதற்குள்ளாக, ஜித்தேஷ் அவளை இழுத்துக் கொண்டு தள்ளி வந்திருந்தான்.

அப்போதே அவனைப் பார்த்தவள், “நீங்க இங்க” என்று கேட்கும் முன்னே, “அவன் மேல வர்றதுக்குள்ள, இங்க இருந்து ஓடியே போயிடு” என்று அவன் சொல்ல, இவளோ, “இல்ல என்னாலத்தான். அவரும். அது தெரியாமத்தான்” என்றவளுக்கு, அவனுக்கு என்ன ஆனதோ என்ற கவலை.

“அதெல்லாம் அவெனுக்கு ஒன்னும் ஆகல. நீ போ” என்றவன், கையில் இருந்த தீரஜுடைய கோட்டை எடுத்து அவளிடம் கொடுத்து, “இத போட்டுட்டு கெளம்பு” என்றிருந்தான்.

அவன் குரலில் தெரிந்த தீவிரத்தில், அவளும் அங்கிருந்து சென்றிருக்க, இப்போது இங்கே ஒரு நொடி, தண்ணீருக்குள் மூழ்கி, முகத்தை அழுந்த துடைத்தப்படி நீருக்குள் வெளியில் வந்தான் தீரஜ்.

அவன் கண்கள் கோவத்தில் சிவந்திருந்தது. வேகமாய் அவன் சுற்றி முற்றிப் பார்க்க, வெடுக்கென்று நீச்சல்குளத்துக்கு வெளியில் வந்தான்.

“இந்தா தீரஜ். மொத துவட்டிக்கோ” என்று துண்டை எடுத்து வந்து ஜித்தேஷ் நீட்ட, அதை கோவமாய் பிடுங்கி தூர வீசியவன், “அவெள்ள எங்க?” என்று கத்தினான்.

“எவெள்ள?” என்று அவன் அப்பாவியாய் கேட்க, “நடிக்காத. என் மேல வந்து விழுந்தவள எங்க?” என்று கோவமாய் கத்தினான்.

“என்ன சொல்ற தீரஜ். உன் மேல ஒரு பொண்ணு வந்து விழுந்தாளா?” என்ரு எதுவுமே தெரியாதது போல் கேட்க, இப்போது அவன் சட்டையை கொத்தாய் பிடித்தவன், “உன்னோட இந்த கேவலமான நடிப்ப நான் நம்பிடுவேன்னு நினைக்கிறீயா? இப்போ அவ இங்க வந்தாகனும்” என்று அத்தனை எரிச்சலாய் கத்தினான்.

“சத்தியமா நீ என்ன சொல்றேன்னே எனக்கு தெரியல தீரஜ். நான் நீ சொன்ன டீடெய்ல்ஸ தான் பாத்துட்டு இருந்தேன். உன்ன கானும்னு திரும்புறப்ப, நீ ஸ்விம்மிங் பூல்க்குள்ள இருந்த. அதான் துண்ட எடுத்துட்டு வந்தேன்” என்றான்.

அதில் இப்போது தீரஜோ, தன் மேல் ஒட்டியிருந்த நீரை உதறித் தள்ளியவன், மீண்டும் ஒரு முறை சுற்றிப் பார்த்தான். “ஐயோ கடவுளே, அந்த பொண்ணு இங்க என்னப் பண்ணிட்டிருக்கான்னு தெரியலையே. இன்னொரு தடவ அவ மட்டும் இவன் கண்ணுல பட்டா, அவ்வளவுத்தான்” என்று தனக்குள்ளே புலம்பினான் ஜித்தேஷ்.

இங்கே வேகமாய் தன்னுடைய அறைக்கு வந்தவள், எதிரில் வந்த ஒருவளின் மீது மோதிவிட, “ஐயோ சாரிங்க” என்றப்படி நிமிர்ந்தாள்.

அதற்குள் அவள் கோவமாய், “ஹேய்” என்று அடிக்க கை ஓங்க, அப்போது அவனின் கரத்தை வந்து தடுத்துப் பிடித்தான் இன்னொருவன்.

“ச் என் கைய விடு. இவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் மேல வந்து மோதியிருப்பா? இந்த சேரியோட வேல்யூ தெரியுமா இவளுக்கு” என்று எரிந்து விழுந்தாள் அவள்.

அவள் வேறு யாரும் இல்லை. தீரஜுடைய முதல் தங்கை நீலவேணி வர்மன்.

“ஹேய் யாராச்சும் வேணும்னு பண்ணுவாங்களா? தெரியாம வந்திருப்பாங்க. விடேன்” என்று சொல்லியவன் தீரஜுடைய தம்பி இனிய வர்மன்.

அந்த வீட்டில் தீரஜுக்கு அப்படியே நேரெதிர். பெயரைப் போலவே அவனின் குணமும். கடிந்து யாரையும் ஒரு சொல் பேசிட மாட்டான். அதே போல், அதீத புத்திசாலி. இப்போதைக்கு, அவர்கள் குடும்பத்தின் அத்தனை கம்பெனியையும் முன்னிருந்து பொறுப்பாய் நடத்திக் கொண்டிருப்பவன் அவன் தான்.

“அதெப்டி விட முடியும்” என்று அவள் அப்போதும் அண்ணனின் கரத்தை தாண்டி குதித்தாள்.

“நீலா” என்று அவன் அதட்டவும், அவளோ இப்போது கோவமாய், “என்னைய யாரோ ஒரு பொண்னு முன்னாடி திட்டிட்டத்தான. பாத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அதைப் பார்த்த ஜான்விக்கோ, “ஐயோ, நான் ஏன் இப்படி இருக்கேன். என்னால ஏன் எல்லா பக்கமும் பிரச்சனையாவே இருக்கு” என்று தனக்குள்ளே கேட்டாள்.

அதற்குள், அவனோ, “வெளிய மழ பெய்யுதா என்ன? ஏன் இப்படி நனைஞ்சி வந்திருக்கீங்க?” என்று கேட்டான்.

“இல்ல அது” என்று அவள் தடுமாற, அவள் குளிரில் நடுங்குவதைப் பார்த்து, “மொதல்ல போயி ட்ரஸ மாத்துங்க” என்றான்.

“தேங்க்ஸ்ங்க” என்று சொல்லியவள், அங்கிருந்து சென்று விட, இப்போது இனிய வர்மனோ யோசனையாய் அவள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன ப்ரோ? ஹீரோயிசம்லாம் முடிஞ்சிதா” என்று அவன் தோளில் கரத்தைப் பதித்தப்படி வந்து நின்றாள் ஷைனிகா.

அதில் சட்டென்று பார்வையை திருப்பி செல்ல தங்கையைப் பார்த்தவன், “அடி வாங்கப் போற. ஆமா யாரு அந்த பொண்ணு” என்று கேட்டான்.

“பாருடா. அப்போ என் அண்ணாக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்கு போலையே” என்று விடாமல் அவள் சீண்ட, “ஷைனி” என்று அதட்டினான்.

“எல் ஆர் கம்பெனியில இருந்து வந்திருக்காங்க. பேரு ஜான்வி. அவங்களும் உன்னை மாதிரியேத்தான். ரொம்ப ஸ்வீட்” என்றாள்.

அதில், அவனோ, “ஜான்வி” என்று தனக்குள் சொல்லிக் கொள்ள, அதற்குள் அவளுடைய மொபைல் அடித்தது.

உடனே அவனும், “சரி” என்று சொல்லிவிட்டு நகர்ந்தவன், பின் என்ன நினைத்தானோ, “தீரஜூம் வந்திருக்கான். சோ, அந்த பொண்ணுக்கு ஹெஸ்டவுஸ்ல ரூம் அரேஞ் பண்ணிக் கொடு” என்றான்.

“அவன பாத்து நீங்க வேணும்னா பயப்படுங்க. நான்லாம் மாட்டேன். என்னோட ப்ரண்ட்க்கு, என் ரூம் பக்கத்துல ஒரு ரூம் கொடுத்திருக்கேன். அவன் ரூம்ம ஒன்னும் கொடுக்கலத்தான” என்றாள்.

“ம் உன்கிட்ட பேசி ஒன்னும் ஆகுறது இல்ல. பட் அவன் கோவத்த பத்தி தெரியும்த்தான?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அந்த வீட்டில் தீரஜ் யாருடனுமே நெருங்கி பழக மாட்டான். ஆனால் அத்தனை பேருக்கும் அவன் பெயரை சொன்னாலே பயம் இருக்கும். அவனுக்கு பயப்படாத ஒரே ஜீவன் ஷைனிகாதான். அதற்கு முக்கிய காரணம், அவளுக்கு அவனை சுத்தமாக பிடிக்காது.

இப்போது இனியன் அப்படி சொல்லிவிட்டு செல்லவும், “அவனுக்கு பிடிக்காதுன்னா, அப்போ அதத்தான் செய்வேன்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

இங்கே அறைக்கு வந்த ஜான்விக்கோ, நடந்த விஷயத்தை எல்லாம் யோசித்துப் பார்க்கவே தலை சுற்றியது. இதில் பற்றாக்குறைக்கு ராகவிடம் இருந்து வேறு விடாமல் அழைப்பு வந்தது.

ஆனால் பாவம் அவள் மொபைல் தான், அவள் கீழே விழும் போதே தரையில் விழுந்திருந்ததே.

இவள் எடுக்கவில்லை என்றதும், அங்கே ராகவுடைய கோவம் கடகடவென்று கூடியது.

“இடியட். இவள பத்தி தெரிஞ்சுதான், அவள அனுப்ப வேண்டாம்னு சொன்னேன். ஆனா, இந்த எம்டி தான். அவள அனுப்பியாகனும்னு அடம்பிடிச்சாரு. இப்போ, இவளால, எனக்குத்தான் டென்சன். சிட்” என்று தனக்குள்ளே கத்தினான்.

இங்கே வேறு ஒரு சேலையை கட்ட நினைத்தவள், பின் அதை விடுத்து, வழக்கம் போல் லெக்கின் டாப்பை அணிந்துக் கொண்டாள்.

ஏனெனில், அந்த சேலையால் பட்டப்பாடே போதும் என்ற என்ணம் அவளுக்கு. அதே நேரம் இங்கே அவனுடைய அறைக்குள் நுழைந்தவனுக்கோ அத்தனை எரிச்சல். வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண்ணை அவனை இத்தனை நெருங்கியிருக்கிறாள்.

அவள் மீதான வாசனை மொத்தமும் இவனிடமே தங்கிக்கொண்டது போல், அவனுக்கு அது அத்தனை எரிச்சலைக் கொடுத்தது.

கோவமாய் சவருக்குள் நுழைந்தவன், “சிட். அவ யாருன்னு கண்டுப்பிடிச்சு அவளுக்கு, இந்த தீரஜ் யாருன்னு காமிக்கிறேன்” என்று தனக்குள்ளே கருவிக் கொண்டான்.

(ரைட்டு. இதுக்கு மேல வேற தனியா தெரியனுமா? என்னமோ போ. உன் குடும்பத்துக்கிட்ட அவ இன்னும் என்ன பாடு படப் போறாளோ? சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தீருமா?..

Author:    1 Sarmi SS
Comments   1

*** முத்தமழை💋 – 11 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com