அந்த பெரிய பங்களாவில், அன்றிரவுக்கான பார்டி ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால் அதைப் பற்றிய சின்ன கவலைக் கூட இல்லாது, பஞ்சு மெத்தையில் சுருண்டு படுத்திருந்தாள் ஜான்வி,
அவள் வந்த வேலை என்ன? இருக்கும் இடம் யாருடையது? இப்படி எந்த விஷயமும், அவள் உறக்கத்தை தடை செய்திருக்கவில்லை. கிட்ட தட்ட மாலை வேளை போல் தான், ராகவிடம் இருந்து அழைப்பு வந்தது.
அப்போதே துயில் கலைந்தவள், கண்ணைக் கசக்கியப்படி, “மாம் ஒரு காப்பி” என்று கரத்தை நீட்டினாள். அவள் நீட்டில் அரை நிமிடம் ஆகியும், அவள் அம்மாவின் குரல் கேக்காமல் போக, “ம்மா” என்றப்படி திரும்பினாள்.
அங்கே யாரும் இல்லை. அதில் அவள் சுற்றி முற்றி பார்க்க, அப்போதுதான் அது அவளுடைய வீடும் இல்லை. அவள் படுத்துறங்கிக் கொண்டிருப்பது அவள் அறையும் இல்லை என்ற விஷயமே நினைவுக்கு வந்தது.
அதில் அரக்கபறக்க எழுந்தவள், அடித்துக் கொண்டிருந்த மொபைலை கரத்தில் எடுத்தாள்.
ராகவ் என்று வரவும், வேகமாய் அட்டண்ட் செய்து, “சொல்லு ராகவ்” என்றாள்.
அந்தப் பக்கம் அவனோ, “உன்கிட்ட நான் என்ன சொன்னேன்? நீ என்ன பன்ணிட்டு இருக்க? எனக்கு கால் பண்ணி, நம்ம கம்பெனியில இருந்து யாருமே ரிசீவ் பண்ண வரலன்னு சொல்றாங்க” என்று கத்தினான்.
அவன் கத்தலில், இப்போது இவளுக்கோ எதுவுமே புரியவில்லை. ஏனெனில், அவன் அவளிடம் வேலை குறித்து எதுவுமே சொல்லியிருக்கவில்லை.
திடீரென்று அவன் கால் செய்து கத்தவும், “இல்ல ராகவ்” என்று சொல்லப் போக, “சாருன்னு கூப்டுன்னு உனக்கு எத்தன தடவ சொல்லிருக்கேன்” என்று உறுமினான்.
அதில் இவளோ, “சார். இப்போ நான் என்னப் பன்ணனும்?” என்று தன்மையாகத்தான் கேட்டாள். “எல்லாத்தையும் என்கிட்ட கேட்டுத்தான் செய்வீயா? அங்கையும் சாப்டு தூங்கத்தான் உன்ன அனுப்பி வெச்சேன்னா? அங்க என்ன தேவன்னு கேட்டு பண்ணனும்னு கூட உனக்கு தெரியாதா?” என்று கத்தினான்.
அப்போதும் கூட அவள் என்ன வேலை பார்க்க வேண்டும் என்று அவன் சொல்லியிருக்கவில்லை. இருந்தும் இவள், “சாரி சார். நான் உடனே பாக்குறேன்” என்றாள்.
அந்தப் பக்கம் அவனோ, “இங்கப்பாரு. இதுதான் உனக்கு பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட். நாளைக்கு நான் வர்ற வரைக்கும், அங்க சின்னதா எந்த தப்பும் நடந்திடக் கூடாது” என்று கோவமாய் கூறினான்.
“ம்” என்று அவள் தலையாட்ட, “அங்க புல்லா ஹை கிளாஸ் பீப்பிள்ஸ் தான் இருப்பாங்க. சோ, அவங்களுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ. ஏதோ வில்லேஜ்ல இருந்து வந்த மாதிரி, பிகேவ் பன்ணி கம்பெனி மானத்த கெடுத்துடாத” என்றான்.
அவனின் வார்த்தைகள், நிச்சயம் அவளைக் காயப்படுத்தியது. ஆனாலும், “இல்ல மாட்டேன்” என்று சொல்ல, “பாத்துக்கோ” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
இப்போது இவளின் அறிவோ, “லூசா நீ? அப்படி உன் மேல நம்பிக்க இல்லன்னா, எதுக்கு உன்ன இங்க அனுப்பி வைக்கனும்” என்று கேட்டது.
“இல்ல. அது” என்றவளுக்குமே என்ன சொல்ல என்று தெரியவில்லை. அதனால் அமைதியாய் உடையை எடுத்துக் கொண்டு, குளிக்க சென்றாள். குளித்து முடித்து, ஒரு ஜீனையும், டாப்பையும் அணிந்து கொண்டு அவள் வெளியில் வர, அங்கே வந்த கேசவோ, “குட் ஈவ்னிங் மேடம்” என்றான்.
“குட் ஈவ்னிங் கேசவ்” என்றவள், அந்த ஏற்பாட்டை எல்லாம் பார்க்க, அத்தனையும் ட்ரெடிசனல் மெதட்டில் இருந்தது.
“பார்டிக்கு இன்னும் ப்ரீபராகலையா மேடம்” என்று கேசவ் கேட்க, “இல்ல நான் ரெடிதான். என்ன வொர்க்ன்னு சொன்னீங்கன்னா” என்று இவள் கேட்க சென்றாள்.
“வாட்? இன்னிக்கு பார்டியோட தீம்மே ட்ரெடிசனல் தான் மேடம்” என்றவன் அவளை மேலிருந்து கீழாய் பார்த்தான்.
அதில் இப்போது அவளின் மனமோ, “இந்த ராகவ் சொன்னா, மண்டைய மண்டைய ஆட்டிட்டு வந்திடுவீயா?” என்று கேட்டது.
“ஒகே. நான் ரெடியாகிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து மீண்டும் அறைக்குள் சென்றாள்.
பேக்கில் இருந்த ஒரு சேலையை கையில் எடுத்தவள், அதை எடுத்து கட்ட ஆரம்பித்தாள். அதற்கு தகுந்தாற்போல், மற்றதையும் மாற்றியவள், கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.
அழகாக இருந்தாள். ஆனால் அவளுக்குத்தான் அது தெரியவில்லை போலும், அவள் முகத்தில் மெல்லிய பதட்டம் தெரிந்தது.
அதை எல்லாம் மீறி அவள் வெளியில் வரும் போது, ஷைனிகாவோ, மாடர்ன் உடையில் வந்தாள்.
“வாவ். யு லுக் சோ ப்ரிட்டி” என்று ஷைனிகா, ஜான்வியைப் பார்த்து சொல்ல, அவளோ, “நீங்க சேரி கட்டலையா?” என்று கேட்டாள்.
“ஐயோ சேரியா? அதெல்லாம் எனக்கு கட்ட வராது” என்று அவள் சொல்ல, “நான் வேனும்னா ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று கேட்டாள்.
அதில் இப்போது ஜான்வியைப் பார்த்த ஷைனியோ, “கட்டிவிட்டாலும், என்னால அத பாத்துட்டே சுத்த முடியாது. அதனால, எனக்கு இதுதான் கம்பர்டபிள்” என்றாள்.
“ஆனா இன்னிக்கு பார்டியோட தீம்” என்று இவள் ஏதோ சொல்லப் போக, “அதுக்காக எல்லாம், நம்ம டேஸ்ட மாத்திக்கனும்னு அவசியம் இல்ல” என்று தோளைக் குலுக்கினாள்.
அதற்குள் அவளுடைய அக்காவிடம் இருந்து அழைப்பு வந்தது. அதில், “ஒகே ஜான்வி பார்டில மீட் பன்ணலாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
இப்போது அங்கேயே, அவள் அங்கும் இங்கும் என்று சுற்றிக் கொண்டிருக்க, அன்னேரம் அலங்காரம் செய்துக் கொண்டிருந்தவர், தெரியாமல் மாலையை விடப் போக, “அச்சோ பாத்து” என்று அவருக்கு உதவி செய்ய சென்றாள்.
அப்போது அங்கே வந்த மேனஜரோ, “ஆமா நீங்கத்தான், எல் ஆர் கம்பெனியில இருந்து வந்திருக்க டிசைனரா?” என்று கேட்டார்.
“ஆமா” என்று இவள் தலையாட்ட, “என் கூட வாங்க” என்று கூட்டி சென்றவர், அங்கிருந்த அலங்காரத்தை எல்லாம் காட்டி, “இது எல்லாத்தையும், கொஞ்சம் பர்பக்டா பாத்துக்கோங்க. உங்களுக்கு ஏற்கனவே தீம் அண்ட் டீடெய்ல்ஸ் பத்தி தெரியும் இல்லையா?” என்று கேட்டார்.
“ம்” என்றவள் எல்லா பக்கமும் தலையாட்ட, “ஒகே புரோசீட் பன்ணுங்க” என்று சொல்லிவிட்டு சென்றிருந்தார்.
அதில் அங்கிருந்த மலர்களையும், ஸ்டேஜ் டெகரேசன் பொருட்களையும் பார்த்தவளோ, “கிராபிக் டிசைர்கிட்ட போயி ஆர்ட் டிசைனிங் வொர்க்க கொடுத்துட்டு போயிருக்காங்க” என்று குழம்பியவள், அங்கேயே நின்றாள்.
உடனே ராகவ்க்கு கால் செய்ய, அவனோ எடுக்கவில்லை. இப்போது அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் அவளே ஸ்டேஜ் டெகரேசனை செய்ய ஆரம்பித்தாள்.
அப்போதுத்தான், வெளியில் சென்ற தீரஜ் உள்ளே நுழைந்திருக்க, அவனின் பார்வையில், அவளுடைய வெற்றிடை மட்டுமே தெரிந்தது.
அவள் எக்கி, பூக்களை எல்லாம் சரி செய்துக் கொண்டிருக்க, காற்றில் அவள் சேலை கொஞ்சமாய் விலகியிருக்க, அவள் இடுப்பில் இருந்த அந்த மச்சம், அவனை ஒரு நொடி தடுமாற வைத்தது.
அதில் சட்டென்று தலையை திருப்பி, எரிச்சலாய் ஜித்தேஷிடம், “எல்லாரும் என்னப் பண்ணிட்டு இருக்காங்க?” என்று எரிந்து விழுந்தான்.
அதில் ஜித்தேஷோ, தலையும் புரியாது, வாலும் புரியாது, “என்ன?” என்று குழம்பியப்படி, சுற்றி முற்றிப் பார்த்தான். அங்கே கிட்ட தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இதில் அவன் யாரை, எதை பற்றி கேட்கிறான் என்பது புரியாது முழிக்க, “சிட் இதுக்குதான் இந்த மாதிரி பார்டீஸ் எல்லாம் நான் அட்டண்ட் பண்றதே இல்ல” என்று எரிச்சலாய் சொல்லிவிட்டு வீட்டுக்கு விறுவிறுவென்று நடந்தான்.
ஆனாலும் ஏனோ, என்னவோ தோன்ற மீண்டும் திரும்பி பார்த்தான். இப்போதும் அவள் பின் பக்கம் மட்டும் தான் தெரிந்தது. அவள் ஏதோ உயரத்தில், நின்று பூவை சொருகி வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு நேரெதிரே இருந்த சிலர் வேறு அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, ஏனோ இவனுக்கு அது ஒரு வித எரிச்சலைக் கொடுத்தது.
அதில் விறுவிறுவென்று, அவளை நோக்கி அவன் நடக்க, இப்போது ஜித்தேஷோ, “இவன் எங்க அங்க போறான்” என்று புரியாமல் பார்த்தான்.
நேரே சென்றவன், இப்போது அவளுக்கு எதிரே நின்றிருந்தவர்களின் மேலே கட்டியிருந்த தோரணத்தை சற்றும் யோசிக்காமல் தட்டி விட்டிருந்தான்.
அதில் சரசரவென கட்டைகள் எல்லாம் அங்கே நின்றிருந்த மூவரின் மீதும் விழுந்திருக்க, இவனோ, “வேல எதுவோ அத மட்டும் பாக்கனும். அத விட்டுட்டு கண்டத பாத்தா. இப்படித்தான்” என்றான்.
அந்த கட்டைகள் சரிந்த சத்தத்தில் கூட தெளிவாய் இருந்தவள், அவனின் குரலில் திடுக்கிட்டு திரும்ப, இப்போது அவள் நின்றிருந்த ஸ்டூல் தடுமாறியது.
“ஆ” என்று கத்தியப்படி அவள் விழப் போக, அவனோ அப்போதே மேலே நிமிர்ந்துப் பார்த்தான்.
அவன் அவளைப் பார்க்கும் முன்னே, அவன் தோளில் வந்து அவள் விழுந்திருக்க, அன்னிட்சையாய் அவளை பிடித்திருந்தான். இப்போது அவள் கையில் இருந்த பூக்கள் எல்லாம் அவர்கள் இருவர் மீதும் கொட்ட, இங்கே, அவளை தாங்கிப் பிடித்தவன், எரிச்சலாய் விலகப் போக, அருகில் கிடந்த அலங்கார துணி, அவன் காலை சுற்றியிருந்தது.
அதில், அவன் தடுமாற, இப்போது இவளோ அவனைப் பிடித்த அதிர்ச்சியில் கரத்தை விலக்கியிருக்க, இப்போது, அவனைத் தரையில் தள்ளி, அவனின் மீதே இவளும் வந்து விழுந்தாள்.
அவள் விழுந்த வேகத்தில், இவன் உருள, இப்போது அவனையும் அறியாமல், அவளை அத்தனை இறுக்கமாய் அணைத்திருந்தான். இருவரும் என்ன என்று யூகிக்கும் முன்னே, இருவருமாய், அருகில் இருந்த நீச்சல்குளத்தில் உருண்டு விழுந்திருந்தனர்.
இதை எல்லாம் சற்று தள்ளி நின்று பார்த்த ஜித்தேஷுக்கோ சில நொடிகள் எதுவுமே புரியவில்லை.
ஏனெனில், தீரஜ் எல்லாம் ஒரு பெண்ணிற்காக பேசி அவன் பார்த்ததே கிடையாது. அதிலும் இப்போது அந்த பெண்ணை அவன் விழாமல் தாங்கியதைப் பார்த்தவனுக்கு அத்தனை அதிர்ச்சிதான்.
ஆனால் அவன் அறிந்திருக்கவில்லை. அது எதுவுமே அவனுக்கு தெரிந்து அவன் செய்திருக்கவில்லை என்று.
இங்கே தண்ணீருக்குள் விழுந்தவளின் சேலை முந்தானை அவன் முகத்தை மறைக்க, அவளோ நீருக்குள்ளையே மூச்சு விட முயற்சித்தாள்.
இங்கே அவனின் முகத்தை மறைத்த சேலையை அவன் எரிச்சலாய் விலக்க முயற்சிக்க, இவள் இடையில் சொருகியிருந்த சேலை முகப்பு மொத்தமாய் விலக முயன்றது.
அதில் அன்னிட்சையாய் அவள் அவன் கரத்தை பிடித்திருக்க, இப்போது அவனையும் நீந்தவிடாமல், இவளும் வெளியே வராமல், அவனின் அணைப்புக்குள் சிக்கியிருந்தாள் ஜான்வி.
அங்கே அவனின் கரம், சற்று முன் பார்த்திருந்த அவள் வெற்றிடையில் பதிந்திருக்க, அவனுக்கோ தீ சுட்ட உணர்வு. வெடுக்கென்று கரத்தை விலக்க நினைக்க, அதற்குள் இங்கே ஜான்வியோ, தன் புடவையை அவன் கரத்தில் இருந்து உறுவ முயற்சித்தாள்.
(ரைட்டு. வெளிய வந்த வுடனே, ஜான்விக்கு ஜலசமாதிதான் போல. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க ப்ரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தீருமா?..
Gowri Babu
🔥🔥🔥🔥🔥 நீ காலி. அவன் மண்டை சூடு ஆக போகுது கதம் கதம்தான் போ
Deepa K
interesting
Ammu Gnanarajan
janvi ne enimey nimathi ya thongna mari tha