அனளில் விழுந்த பனித்துளி

Hi எல்லாருக்கும். நான் சம்ரின். Sarmi sis நான் இந்த ரிவ்யூவ ரொம்ப நாளா எழுதணும்னு நினைச்சிட்டு இருந்தேன் ஆனால் contest முடிஞ்சதால இது எழுதலாமா வேண்டாமா என்கிற ஒரு யோசனை பட் still இந்த ரிவ்யூவ நீங்க கணக்குல எடுத்துப்பீங்களானு தெரியல இருந்தாலும் இந்த கதைக்கு நான் கண்டிப்பா ரிவ்யூ கொடுத்தே தீருவேன். அனலில் விழுந்த பனித்துளி..❤️🔥 முதல்ல இந்த கதை எப்படி எனக்கு எமோஷனலா பீல் பண்ண வச்சது என்பது நான் சொல்லணும்னு நினைக்கிறேன். கண்டிப்பா உங்களுடைய கதை வசனத்திலேயே சந்தோஷம் துக்கம் சிரிப்பு அப்படின்னு எல்லாத்தையும் உணர முடியும் பட் இருந்தாலும் என்னோட மனச தொட்டு பாதிச்ச விஷயம் அப்படின்னா உங்களோட instagram பக்கத்துல அனலில் விழுந்த பனித்துளி completed னுசொல்லிட்டு ஒரு போஸ்ட் போட்டு அதுக்கு அந்த background மியூசிக் போட்டிங்களோ சத்தியமா சொல்றேன் அதை பார்த்து அழுதுட்டேன். எனக்குத் தெரிந்து நீங்கள் எழுதிய நாவலிலேயே feel good நாவல் என்றால் அனளில் விழுந்த பனித்துளியை தான் நான் சொல்வேன் ஏனென்றால் இது படிக்கும் போது மனதில் எந்த ஒரு பாரமோ கண்டிப்பா இருக்காது. ஏனெனில் அதில் உள்ள உரையாடல்கள் அனைத்தும் நண்பர்களிடம் ஜாலியாக , கலாய்த்து, சண்டையிட்டு, கெஞ்சி கொஞ்சி, பேசுவது போல் தான் இருக்கும். விஷுவின் பிடிவாதம், அபூவின் சேட்டை, காஷ்மியின் குறும்பு, பைரவின் பொறுமை இவையெல்லாம் தான் இந்த நாவலை படிக்க தூண்டியது. இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்த ஜோடி கண்டிப்பாக விஷீ அபூ ஜோடி தான். ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷு அபூ வை டார்ச்சர் செய்வதும் பிறகு வீட்டில் அபு விஷுவை வறுத்து எடுப்பதும் படிப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதுவும் விஷீவின் எல்லை இல்லா பிடிவாதத்தை தேற்ற வழி இன்றி அபூ படும் பாடு அப்பப்பா....சில எபிசோடுகளில் வழக்கம் போல் விஷுவும் அபூவும் சண்டை இட்டுக் கொள்வார்கள் பிறகு நம் அபூர்வா தான் எப்படியேனும் சமாதானம்  படுத்தி விடுவாள். அவர்களுடைய ஊடலில் எனக்கு மிகவும் பிடித்த தருணம் விஷு அபுவை கட்டியணைத்துக் கொண்டு அபூவிடம் "என்னை விட்டு போனு சொல்றேன்ல " என்று கூறுவான் "அதற்கு அபூவோ சரி போறேன் என்று கூறி இன்னும் இறுக்கமாக விஷீவை அனைத்துக் கொள்வாள்". இதை எல்லாம் படிக்கும் போது மனதிற்குள்ளேயே அபூ விஷுவின் செயல்கள் கண்முன் வந்து நிற்கும். ஆரம்ப எபிசோடுகளில் விஷு அபூவை அவனுடைய வீட்டிற்கு வர அனுமதிக்க மாட்டான் அப்போது அவள் சுவர் எகிரி குதித்து உள்ளே வந்து விடுவாள் அப்போது விஷு வாட்ச்மேனிடம் " இவள அந்த   குடோவுன்ல கட்டி போடுங்க"  என்ன கூறிவிடுவான். அதற்கு மனதிற்குள்ளே மட்டுமில்லாமல் வாய் வழியாக அவளை வறுத்து எடுத்து விடுவாள். Sarmi sis நீங்கள் எத்தனை கதை வசனங்களையும் எழுதினாலும் சரி அணலில் விழுந்த பனித்துளியில் அபூ மற்றும் விஷீ உரையாடலுக்கு நிகராக எதுவும் வராது. அவர்களுடைய உரையாடல்களை படிக்கும் போது அவ்வளவு நிம்மதியாக, comedy ஆக , சிறுபிள்ளைத்தனம் போல இருக்கும் இதற்கு மேல் எனக்கு எப்படி எக்ஸ்பிரஸ் செய்வது என்று எனக்கு தெரியாது ஆனால் ரீடஸ்க்கு படித்தால் அவர்களுக்கே புரியும். பிறகு எனக்கு மிகவும் பிடித்த பகுதி எதுவென்றால் விஷுவுக்கும் அபூவுக்கும் திருமணம் ஆன பிறகு அவர்கள் ஹனிமூன் சொல்வார்கள் அப்பொழுது விஷு அபூவிடம் நம் குழந்தை உன் வயிற்றில் வளர்கிறது ஒரு பிட்டை போட்டு விடுவான். "ஏய் இந்த மாதிரி நேரத்துல இப்படி ஷாக் ஆக கூடாது" என்ற விஷு கூற அப்போ அபூ அதை உண்மை என்று நம்பி அவளிடம் வாதிடுவாள். பிறகு விஷு அக்குழந்தையிடம் உன் அம்மா பேச்சை கேட்காதே என்றும், அபூ என் குழந்தை நான் வளர்த்துக் கொள்வேன் என்று வயிற்றில் கருவுற்றே ஆகாத குழந்தையை பற்றி பேசிக்கொள்வார்கள். இதைப் படிக்க படிக்க நான் செம்மையாக சிரித்து விட்டேன். And காஷ்வி செம்ம அடாவடியான குறும்பு பெண். காஷ்வி பைரவிடம் எனக்கு முத்தம் வேண்டும் என்று கேட்பாள் அதற்கு பைரவ் ஒப்புக்கொள்ள மாட்டான் ஏனெனில் நேத்ராவும் மித்திரனும் அவனின் மீது நம்பிக்கை வைத்து காஷ்வியை தனியாக அனுப்பி வைத்தனர். நம் பைரவோ பொறுப்பான பையன் அல்லவா அதனால் நம் தலைவி காஷவிக்கு ஒத்துழைக்க மாட்டான். வீட்டிற்கு வந்தவுடன் தன் செல்ல அப்பா மித்ரனிடம் காஷ் வி பைரவ் எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தரவில்லை என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தாள். நம் மித்ரன் குழந்தைத்தனமாக பைரவிதம் ஏன் ஐஸ்கிரீம் வாங்கி தரவில்லை என்று கேள்வி கேட்பான். ஆனால் பைரவுக்கு தான் காஷ்ம வி எதை ஐஸ்கிரீம் என்று கூறுகிறாய் என்று சங்கடமாக உணர்ந்தான். இப்படி அவர்களுடைய சிறுசிறு காதல் காட்சிகளும் அழகா இருக்கும். இப்படி படித்து எபிசோடுகளையே திரும்பி திரும்பி படித்து என் மனதில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்திருக்கிறேன். இந்த அழகான ஜோடிகளின் அடுத்த தலைமுறையை ரகசிய சிநேகிதனே நாவலில் நீங்கள் மீண்டும் கொண்டு வந்துள்ளீர்கள். இதற்கு ஏகப்பட்ட எக்ஸ்பெக்டேஷன் வைத்துள்ளோம் கண்டிப்பாக அவர்களுடைய கதையையும் சுவாரசியமாக இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது. Lots of love to you sarmi sis and your novels❤️

Author:    401 Sam Novel reader
Comments   0

*** அனளில் விழுந்த பனித்துளி - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com