வணக்கம் என்னுடைய பெயர் காயத்ரி. இதற்கு முன் இப்படி எல்லாம் நான் ரிவீயூ எழுதியது இல்லை. நான் நிறைய படித்திருக்கிறேன். படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பிட்டு எந்த எழுத்தாளருக்கும் ரசிகை என்றெல்லாம் சொல்லியது கிடையாது. பார்க்கும் நாவல்களில், முதல் இரண்டு அத்தியாயங்கள் பிடித்தால், தொடர்ந்து அந்த நாவலைப் படிப்பேன்.
அப்படி என்னுடைய தோழி மூலம் எனக்கு அறிமுகமானது தான் உங்களுடைய அழகிய அசுரா நாவல். ஆனால் இப்போது, அந்த நாவலைப் பற்றி இதில் குறிப்பிடப் போவதில்லை. ஏனென்றால், அந்த நாவல் என்னுடைய விருப்பத்துக்கு இல்லை. ஏனென்றால். நான் எப்போதுமே கொஞ்சம் Soft நாவல்களைத் தான் தேர்ந்தெடுப்பேன்.
அப்படி எதார்த்தமாய் உங்களுடைய நேத்ராவின் மித்ரன் நாவலைப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் மித்ரனுடைய கதாப்பாத்திரத்தைப் படிக்கும் போதெல்லாம், மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு வந்து செல்லும். அவன் ஒன்றும் ஒரே நேரத்தில் பத்து பேரை அடிக்கும் மாஸ் ஹீரோ எல்லாம் கிடையாது.
ஆனால், அவன் தோழிக்கு, அவன் கொடுக்கும் முக்கியத்துவம் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாகவே, எல்லா நாவல்களிலும் ஹீரோதான் கெத்தாக இருப்பான். ஆனால், நேத்ராவின் மித்ரன் நாவலைப் பொறுத்தவரை, நேத்ராவுடைய கதாப்பாத்திரம் தான் கெத்தாக இருக்கும். அவளுடைய ஆளுமைக்கு, அடங்கிப் போகும் அவனின் அன்பு அத்தனை அழகு.
கவிதையாக எல்லாம் எனக்கு சொல்ல தெரியாது. ஆனால் அவர்கள் இருவருடைய காதல் அத்தனை அழகு. அதென்னவோ, அவர்கள் இருவரும் இந்த உலகத்தில் எங்கோ வாழ்ந்துக் கொண்டிருப்பது போல் ஒரு எண்ணம். அதிலும் மித்ரன், தோழிக்காக, அவள் கழுத்தில் தாலி கட்டியதாக இருக்கட்டும். அதன் பின் நேத்ரா, மித்ரனை திட்டுவதாக இருக்கட்டும். இது அனைத்திலும் ஒரு தூய்மையான நட்பு இருக்கும்.
காதல் மட்டுமே எல்லாவற்றுக்கும் அடித்தளம் என்றில்லாது இந்த நாவலில் நீங்கள், நட்பை உயர்த்திக் காட்டியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நேத்ரன் மித்ரன் மட்டும் அல்ல, அந்தக் கதையில் வந்த சுபி துருவனுடைய ஜோடியும் மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்களின் சண்டைக் காட்சிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கொஞ்சம் அவர்கள் காதல் காட்சிக்கும் கொடுத்திருக்கலாம்.
காதல் காட்சிகள் என்று சொல்லும் போதுத்தான் எனக்கு இன்னும் ஒன்றும் நினைவுக்கு வந்தது. நேத்ராவுடைய கடந்த காலத்தால், தனக்கு உணர்வுகளே இல்லை என்று அவள் நம்பிக்கொண்டிருக்கும் போது, அவளுடைய உணர்வுகளை மீட்டு, அவளை ஒரு இடத்தில் கூட விட்டுக் கொடுக்காது, அவளைத் தாங்கிய மித்ரனின் நேஷம் தனித்தான்.
ரோஜா கூட்டம் படத்தில் அந்த ஹீரோயின் சொல்வது போல், காதலியிடம் இருந்து காதலைக் கூட எதிர்பார்க்காமல் காதலிக்கும் அவனுக்கு, அவனைக் காதலிப்பதை தவிர, வேறு எதை கொடுத்து சரி செய்திட முடியும்? மித்ரனைப் போல் ஒருவன் கணவனாக கிடைத்தால், நிச்சயம் அந்தப் பெண் அதிர்ஷ்டசாலித்தான்.
அதற்காக நேத்ராவுடைய காதல், குறைவு என்று சொல்லிவிடவே முடியாது. ஏனெனில் முதல் பாதியில் மித்ரனின் காதல் மிரட்டியது என்றால். அடுத்த பாதியில் நேத்ராவுடைய பிடிவாதமான காதல் மெர்சலாக்கியது என்றே சொல்லலாம். அவன் ஒவ்வொரு முறையும் சொதப்பும் போதெல்லாம். அவனை பார்வையாலையே மிரட்டி சரி செய்யும் போது அந்த நேத்ரா பேரழகு.
அவன் தவறே செய்தாலும், அவனை அவள் ஒரு இடத்தில் கூட விட்டுக் கொடுத்திருக்க மாட்டாள். அவன் அவள் கழுத்தில் தாலி கட்டியது அதிர்ச்சி என்றால். அதை எல்லாவற்றையும் தாண்டி, அவனுடைய வாழ்க்கையை மட்டுமே அந்த நொடி அவள் யோசித்திருப்பாள். அவனை அடித்தது கூட, அவனுக்காகத்தானே தவிர, ஒரு நொடி கூட, அவனை தவறாய் நினைத்திருக்க மாட்டாள்.
அவனின் மீது அத்தனைக் கோவம் இருக்கும். ஆனால் ஒரு இடத்தில் கூட அவனை மற்றவர் முன் விட்டுக் கொடுத்திருக்க மாட்டாள். அதன் பின் அவன் அவளை விட்டு செல்லும் போது கூட, அவனை துரத்தி சென்று அவள் காதலை காட்டும் தருணங்கள் எல்லாம் எனக்கு அவ்வள்வு பிடிக்கும். அந்த எபிசோட் எல்லாம் நான் எத்தனை முறை படித்திருப்பேன் என்றே தெரியவில்லை.
உங்கள் கதைகளில் சிலவற்றை நான் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னை மிகவும் பாதித்தது இந்த நாவல் தான். இந்த போட்டிக்காக எல்லாம் எழுதவில்லை. உண்மையில், அந்த நாவலை படித்து முடித்து விட்டு, என் நண்பர்கள் பலரிடம் அது பற்றி சொல்லியிருப்பேன். அதைப் போல் தான் இங்கேயும் என் மனதில் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள நினைத்தேன்.
இன்னும் அந்த கதையுடைய இரண்டாம் பாகத்தை படிக்கவில்லை. இப்போதுத்தான் அதை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். விரைவில் அந்த கதைக்கான என்னுடைய கருத்தையும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்வேன். தொடர்ந்து இதைப் போல் பல கதைகளை எழுத வாழ்த்துகிறேன்.
0 Comments
No comments yet.