தென்றல் – 4

காலையில் இருந்தே அந்த பெரிய வீடு நீண்ட நாட்களுக்கு பின், அத்தனைப் பரபரப்பாய் சுற்றிக் கொண்டிருந்தது. செல்விக்குமே நிக்க நேரமே இல்லை. அன்று தாமரை வந்து சண்டைப் போட்ட பின் நிலாவும் அங்கு வரவில்லை. அவளுக்கு பள்ளியில் அரையாண்டு தேர்வு நடந்துக் கொண்டிருப்பதால், விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தாள்.

“ஏத்தா, உன் தம்பி நேரா அங்க வந்துடுவான் தான?” என்று ஒரு வித தயக்கத்தோடே கேட்டார் சங்கரேயன்.

“உங்க மருமவென் மேல நம்பிக்கை இல்லையாப்பா?” என்றாள் செல்வி. “அட, நான் என்னத்த கேட்கறவ, நீ என்னத்த சொல்றவ, எம் மருமவென் மேல நம்பிக்கை இல்லாங்காட்டியும் தான், நான் எம் பொண்ண அவருக்கு கட்டிக் கொடுத்தேன்னா?” என்றார் சங்கரேயன்.

“புறவு என்னப்பா? அவர் கிட்ட நேத்திக்கே நான் விசயத்த சொல்லிட்டேன். அதெல்லாம் அவரு பார்த்துப்பாரு. நீங்க வெசனப்படாம வெரசா கிளம்புங்க. நல்ல நேரம் முடியிறதுக்குள்ள, பொண்ணு வூட்டுக்கு போகனும்" என்று சொல்லியப்படி செல்வி அங்கிருந்து சென்றார்.

அன்னேரம் பார்த்து ராணி, எதையோ தூக்கிக் கொண்டு வர, அதைப் பார்த்தவள், “இவ ஒருத்தி, நம்ம ஒன்னு சொன்னா, இவ ஒன்னா செஞ்சிட்டு திரிவா. இந்த குமாரு பையன் என்னங்காட்டி இவள சமாளிக்கிறானோ” என்று சொல்லியப்படியே, “அடியே இவளே, இப்ப என்னத்துக்குடி, அத நடு வீட்டுக்குள்ள தூக்கிட்டு வர்றவ?” என்று ராணியிடம் சென்றாள்.

அதற்குள் குமார், தாம்பலத்தட்டில் வைக்க வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு உள்ளே வந்தான்.

“ஏண்டா, உன்ன எப்போ வாங்கிட்டு வர சொன்னா, நீ எப்போ வாங்கிட்டு வர்ற?” என்று கேட்டார் செல்வி.

“அந்த கடைக்காரர் தான்மா, தாமதமாக்கிப்புட்டாரு" என்று தலையை சொறிந்தான் குமார்.

“என்னலே, நீ முழிக்கிற முழி ஒன்னும் சரியா படலையே, தம்பிக்கிட்ட எதங்காட்டியும் சொல்லிபுட்டீயா?” என்றார் செல்வி.

“இல்லம்மா, இதெல்லாம் வாங்கிட்டு வர்றப்ப, அண்ணே பார்துப்புட்டாரு" என்றான் குமார்.

“உடனேங்காட்டியும் நீ எல்லாத்தையும் உளறிட்டியாக்கும்?” என்று கோவமாய் கேட்டார் செல்வி.

“ஆ..ங் இல்லங்கம்மா, அது வூட்டுக்குன்னு சொன்னேன். ஒன்னும் கேட்கலம்மா” என்று குமார் சொல்ல, “உன் கிட்டையும், உன் பொஞ்சாதிக்கிட்டையும் ஒரு வேலை சொல்லி வாங்குறதுக்குள்ள, என் உசுரே போய் வருதுல்ல" என்றார் செல்வி.

“அது. வந்தும்மா” என்று குமார் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “அம்மா இந்த பெரிய பானைய எங்கன கவுக்க சொன்னீக?” என்றப்படி அங்கு வந்தாள் ராணி.

“ம் அத என் தலையில கவுத்து" என்று செல்வி சொல்லிக் கொண்டிருக்க, “அட கிறுக்கு பய மவளே, அத அந்த பின்னாடி இருக்குற அறையில போய் கவுத்துடி" என்றான் குமார்.

“போ மாமா. வர வர, நீ என்ன ரொம்பத்தேன் முறைச்சிக்கிற. நான் இன்னிக்கு எங்க அப்பாரு வூட்டுக்கு போறேன்" என்று சினுங்கியப்படி அங்கிருந்து சென்றாள் ராணி.

“அடியே” என்று குமார் பல்லைக் கடிக்க, “ஏண்டா கூறு கெட்டவனே, எதுக்குடா, எப்போங்காட்டியும் அவ கிட்ட ஏதாச்சும் உரண்ட இழுத்துட்டே கெடக்கிறவ. ரெண்டு நாள் ஈரத் துணிய கட்டிட்டு படுலே, அப்பத்தேன் உமக்கு புத்தி வரும். போல, போய் வண்டி எல்லாம் வந்திருச்சான்னு பாரு" என்று செல்வி குமாரை அனுப்பி விட்டு மீண்டும், நடு ஹாலுக்கு வந்தாள்.

சரியாக அன்னேரம் சங்கரேயன் கிளம்பி வர, நீண்ட நாட்களுக்கு பின் தன் தந்தையின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்தவளுக்கு மனம் நிறைந்தது.

“தாயே என் மீனாட்சி, நாங்க போற காரியம் நல்லப்படியா முடிய நீ தான் தாயீ அருள் புரியனும். எங்க குடும்பத்துல போன சந்தோஷம், இந்த வூட்டுக்கு வாழ வர்ற பொண்ணால திருப்பிக் கெடைக்கனும் தாயீ” என்று மனமார, தன் தாயையும், மதுரையே பாதுகாத்து வைத்திருக்கும் அன்னை மீனாட்சியையும் வேண்டிக் கொண்டார் செல்வி.

“அம்மா, வண்டி வந்துருச்சி" என்று குமார் சொல்ல, “அடியே, எடுத்த வர போதும்டி. அதெல்லாத்தையும் வண்டியில ஏத்த சொல்லு" என்று சொல்லி விட்டு தன் சேலையையும் சரி செய்தவர், தன் தந்தையுடன், அங்கிருந்து வெளியில் வந்தார்.

சரியாக காரில் ஏறும் நேரம், “ஐயா” என்று அங்கு மூச்சு வாங்க ஓடி வந்தான் முனியன்.

அதில், “என்னலே, புறப்படுற நேரத்துல, என்னடா?” என்றவருக்கு முகத்தில் சற்று எரிச்சல் அப்பட்டமாய் தெரிந்தது.

“இல்லங்கையா. பொண்ணு வூட்டுல இருந்து" என்ற முனியன் சொல்ல தயங்கியப்படி நின்றான்.

அதில், “அதெல்லாம் அவுக கிட்ட வர்றதா, நேத்தே சொல்லியாச்சுடா. இன்னும் வரலையேன்னு கேட்டு வர சொன்னாகளா. அங்கத்தேன் கெளம்பிட்டு இருக்கோம். இன்னும் செத்த நேரத்துல வந்துடுவோம்னு சொல்லு" என்றார் சங்கரேயன்.

“அது இல்லங்கையா” என்ற முனியன் மீண்டும் தயங்கி நிற்க, “என்னலே சொன்னாத்தான தெரியும்" என்றான் குமார்.

அதில் முனியன் குமாரை முறைத்தான். “ஏலே, நீ ஏன்லே அவென் பேச்சுக்கு ஊடால போற?” என்று செல்வி குமாரை அடக்கினான்.

“அதான் கேட்கிறான்ல சொல்லுல" என்று சங்கரேயனும் சற்று அழுத்திக் கேட்டார். “இல்லங்கையா, இன்னிக்கு நாள் நல்லா இல்லேன்னு, பொண்ணு பாக்க வர வேணாம்னு சொல்லிட்டாக" என்றான் முனியன்.

அதில் சங்கரேயன் வேகமாய், “என்னல சொல்ற? என்ன நாள் செரி இல்லையாம். அதெல்லாம் பேசி" என்று கோவமாய் பேச ஆரம்பித்தார்.

ஆனால் அதற்குள், முனியனின் தடுமாற்றத்தை கவனித்த செல்வி, “அப்பா, உள்ளார போயி பேசலாம்" என்று சூழ்நிலையை கையில் எடுத்துக் கூறினாள்.

அப்போதே அவருக்கும் வீட்டின் வெளியில் நிற்பது புரிய, தோளில் போட்டிருந்த துண்டை கையில் எடுத்தவர் விருட்டென்று உள்ளே நுழைந்தார். அவரைத் தொடர்ந்து செல்வியும் முனியனும் செல்ல, ராணியும், குமாரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

அதே நேரம் அங்கே ரைஸ்மில்லில் இருந்த கதிர், அங்கிருப்பவரிடம் “அந்தி சாயுறதுக்குள்ள, மூட்டை எல்லாம் வண்டியில ஏத்தியிருக்கனும்" என்று சொல்லிவிட்டு தன்னுடைய புல்லட்டில் ஏறி அமர்ந்தான்.

அப்போது அங்கு வந்த சிவா, “அண்ணே, இங்கத்தான் இருக்கீகளா? உங்கள எங்கெல்லாம் தேடுறது?” என்றப்படி வந்தான்.

“இங்கனத்தால, காலையில இருந்து இருக்கேன். ஒத்த போன்ன போட்டு கேக்க வேண்டியது தான?” என்றவன் ஸ்டார்ட் செய்த வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு அவனின் பக்கம் திரும்பினான்.

“மொபைல்ல சார்ஜ் இல்லன்னே. அதேன்" என்றான் சிவா. “செத்த நேரம் அதுக்கும் ரெஸ்டு கொடுக்கனும். எப்போ பார்த்தாலும் புது பொண்டாட்டிய தேக்கிறவன் கணக்கா, அத போட்டு தேய்ச்சா?” என்றான் கதிர்.

அதில் சிவா அசடு வழிய, “இவன் ஒருத்தன் ஆனா, ஊனான்னா, புது பொண்ணு மாதிர் வெக்கப்பட்டு நிப்பான். சரி வந்த சேதி என்னென்னு சொல்லு" என்றான் கதிர்.

அவன் அந்த ஊரில் சற்று இளகுவாய் பேசும் ஒருவன் என்றால் அது சிவா மட்டுமே. நண்பன் என்ற உரிமையும் அவனிடம் இருக்கும்.

“அதில்லண்ணே, இந்த பாண்டி பையத்தேன், பஞ்சாயத்திழுத்துவுட்ருக்கான். இவன் பேச்ச கேட்டு, தோட்டத்துல பிரச்சனையா கெடக்கு." என்றான் சிவா.

அதில் புருவத்தை நெளித்தவன், ஸ்டாண்டை எடுத்து விட்டு, “வண்டியில ஏறு” என்று சற்று அழுத்தமாய் கூறினான்.

“அண்ணே” என்று சிவா தயங்க, “ஏறுன்னு சொல்றேன் தான?” என்று அழுத்திக் கூறினான் கதிர். அதில் மறு பேச்சு பேசாமல் சிவா ஏறிக் கொள்ள, அவன் புல்லட்டின் வேகத்தை கூட்டினான்.

இங்கே ஹாலில் நின்றிருந்த செல்வியோ தரகரிடம், “பொண்ணு வூட்டுல என்ன சொன்னாக. மறைக்காம சொல்லுங்க” என்றார்.

“நம்ம தம்பிக்கு இத விட நல்ல இடமா பார்ப்போம்மா” என்றார் தரகர். “என் தம்பிக்கு நல்லப் பொண்ணா பாக்க எனக்கு தெரியும். அவுக என்ன சொன்னாகன்னு மட்டும் சொல்லுங்க" என்று சற்று கோவமாக கேட்டார் செல்வி.

“அதில்லம்மா, பொண்ணு கவர்மெண்டு உத்யோகத்துல இருக்கிற மாதிரி மாப்பிள்ள எதிர்பார்க்குதாம். அதேன்" என்ற தரகர் வார்த்தையை மென்று விழுங்கினார்.

“ஏன்  அது, அவள நான் கோவில்ல பாத்து பேசுறப்ப, இத்தன வாட்டி போன் போட்டு பேசுறப்பலாம் தெரியாதாக்கும். நீ இப்படி மறைச்சு மறைச்சு பேசிட்டிருந்தீக, எம்ம வீட்டுக்காரர் கிட்ட சொல்லி விசாரிக்க சொல்வேன்" என்றார் செல்வி.

அதில் சற்று அதிர்ந்தவர், “இல்லம்மா, உங்க அக்காத்தேன், அங்கப் போயி ஏதோ சொல்லிருப்பாகப் போல" என்று உண்மையைக்கூறினார்.

அதில் தன் அக்காவின் மீது அத்தனை கோவம் வந்தது. இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அவ சொன்னா, இவுகளுக்கு என்னவாம்? என் தம்பி மாதிரி ஒருத்தன, சுட்டு வட்டாரத்துல பார்க்க முடியுமா?” என்று கோவமாய் கேட்டார் செல்வி.

“இல்லங்கம்மா, பொண்ணு வூட்டுல உள்ளவங்களுக்கெல்லாம் சம்மதத்தேன். ஆனா, பொண்ணோட மாமா ஒருத்தர்தேன். ஜெயிலுக்கு போன பையனுக்கு" என்று சொல்ல முடியாமல் தடுமாறி அப்படியே நின்றார்.

அதற்கு மேல் சங்கரேயனால் கேட்க முடியவில்லை. “போதும். எல்லாரும் போங்க" என்று சொல்லிவிட்டு அவருடைய அறைக்கு சென்றார். அவருக்கு மனம் ஆறவே இல்லை. தன்னுடைய ஒரு பிள்ளையே, இன்னொரு பிள்ளையின் வாழ்க்கையை கெடுக்க குறியாய் நிற்பதைப் பார்த்து அவருக்கு மனம் விட்டுப் போனது.

“நான் கண்ண மூடுறதுக்குள்ள, என் ராசாக்கு ஒரு கன்னாலத்த முடிச்சு வைக்கனும்னு நினைக்கிறது நடக்கவே நடக்காதா. நானும் உன் கூடவே வந்துறட்டுமா தாயீ” என்று தன் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து கண் கலங்கினார்.

இங்கே செல்வியோ கட்டியிருந்த முந்தி சேலையை ஏத்தி சொருகிவிட்டு தன் அக்காவின் வீட்டை நோக்கி நடந்திருந்தார்.

இங்கே கதிர் தோட்டத்து பிரச்சனையை முடித்து விட்டு திரும்பி வரும் வழியில், நிலா பள்ளி பேக்குடன் நின்றுக் கொண்டிருந்தாள். ஆரம்பத்தில் எதுவும் பேசாமல் கடந்துவிடத்தான் நினைத்தான். ஆனாலும் இப்போது தான், தோட்டத்தில் கை களப்பாகியிருக்க, இவளை தனியே பார்க்கவும் மனம் கேட்கவில்லை. அதில் அவளின் முன் சென்று புல்லட்டை நிறுத்தினான் கதிர்.

சட்டென்று தன்னருகே சத்தம் கேட்கவும், அன்னிட்சையாய் பயந்து இரண்டடி பின் எட்டு வைத்தாள் நிலா. அவளுடைய பதட்டத்தைப் பார்த்தவன், “இங்கன என்னத்துக்கு நிக்கிறவ?” என்று சத்தமாய் கேட்டான் கதிர்.

அப்போதே அவனை நிமிர்ந்துப் பார்த்தவளுக்கு, இன்னும் பதட்டம் கூடியது. அதில் மேலும் நடுங்கி, பின்னே வரப்பில் அவள் விழப் போக, “ஹேய் புள்ள பாத்து" என்று அவள் கரத்தைப் பிடிக்க சென்றான்.

அதற்குள் அவளே சமாளித்து நின்றிருக்க, அவளுக்கு சிறிது நேரத்தில் வியர்க்க ஆரம்பித்தது.

பொதுவாகவே அவள் பயந்த சுபாவம் தான். அது அவனுக்குமே தெரியும். ஆனாலும் இப்போதும் இவள் இத்தனை பயப்படும் அளவுக்கு என்ன நடந்தது என்று அவனுக்குமே புரியவில்லை.

பள்ளி சீருடையில் தான் நின்றிருந்தாள். முகத்தில் அத்தனை படபடப்பு, கையில் வேறு எதையோ மறைத்து வைத்திருந்தாள்.

அவள் பதட்டத்தைப் பார்த்த கதிர், “கையில என்னத்த வச்சிருக்கவ?” என்றான். “அத் அது" என்றவள் மேலும் நடுங்க, சற்றும் யோசிக்காமல், அவள் பின்னே மறைத்த கரத்தைப் பிடித்துப் பார்த்தான்.

ஒரு ரோஜாவும், க்ரீட்டிங் கார்டும் இருந்தது. அதில் இங்கே இவனுடைய கண்கள் சிவந்தது.

(ஏன்ப்பா ராசா. கொஞ்சம் பொறுமை இரு. அந்தப் புள்ளைய பார்த்தா, அவ உனக்கு லவ்வ சொன்ன வந்த மாதிரியும் தெரியல. அந்தப் புள்ளைக்கிட்ட லவ்வ சொல்லவும் யாரும் இருந்த மாதிரி தெரியல. சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே உங்களுக்கு பிடிச்சிருந்தா, லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தென்றல் தீண்டுமா?

Author:    1 Sarmi SS
Comments   0

*** தென்றல் – 4 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com