தீண்டதே என் தென்றலே நாவல்

வணக்கம் ஷர்மி சகோதரி....உங்கள் நாவலில் எனக்கு மிகவும் பிடித்தது தீண்டதே என் தென்றலே நாவல்...நான் என் கருத்தை சொல்வதற்கு முன் ஷர்மி சகோதரி முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

நான் படித்த மற்றும் கேட்ட நாவல்களில் இந்த நாவலில் ஒரு தனித்துவம் என்றால் அனைத்து கதாபாத்திரங்களிலும் தூய தமிழ் பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளது தான்...மற்றும் மதுரை கிராமம் மன்மணம் வீசவைக்கும் மதுரை பாஷை, கதையில் இருக்கும் சம்பாஷனைகள். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நீங்கள் கொடுத்த முக்கியத்துவம் நின்று பேசும் உங்கள் நாவலில்....., அதுவும் நல்லகுணம் தீயகுணம் சேர்த்துதான் ஒரு மனிதன் இயல்பு அந்த எதார்த்தம் இந்த நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெளிப்படுவது பாராட்டிற்குரியது உதாரணத்திற்கு தாமரை என்னதான் பாசக்காரியாக இருந்தாலும் உண்மை தெரியாமல் தன் தம்பியை கஷ்டப்படுத்தினாலும் உண்மை அறிந்தவுடன் அவரிடம் உள்ள குணமாறுதலாக இருக்கட்டும், தான் ஆசைப்பட்ட மச்சான் கிடைக்காத கோபத்தில் மலர் நிலா மீது கொண்ட மூர்க்கம் பிறகு கதிர் தான் அவளின் நல்ல வாழ்க்கை அமைய காரணம் என்று தெரிந்து நிலாவிடம் கதிருக்காக அவர்களுக்கு குழந்தை வரவேண்டும் என்று வாழ்த்தி பேசும் கதைகளமாக இருக்கட்டும், நிலா அப்பா தான் செய்த தவறை புரிந்துகொள்வதாக இருக்கட்டும் என்று சொல்லி கொண்டே போகலாம்... இதில் எனக்கு பிடித்த காம்போ (combo) கதிர் முருகேசன் காம்போ தான் மாமா மச்சான் சேர்ந்த கதைக்களம் வந்தாலே அவளோ விறுவிறுப்பாக இருக்கும் அது பாசமா இருந்தாலும் சரி சண்டையா இருந்தாலும் சரி பங்காளி ஒரண்டையா இருந்தாலும் சரி...இவங்க சேர்ந்து மாதவங்க கிட்ட ஒரண்ட இழக்கிறது ஒரு அழகுனா இவங்களுக்குள்ளேயே மாதி மாதி ஒரண்ட இழக்கிறது வேற மாறி இருக்கும்...இந்த காலத்தில் உறவுகளை தவறான கண்ணோடத்தில் பார்க்கும் நபர்களுக்கு உறவுகளிலும் தூய்மையான பாச நெசத்தை காண முடியும் என்ற எண்ணம் கொடுக்கிறது......அதே போல் வில்லன் என்றால் ஆண்கள் தான் என்று இல்லாமல் அதற்கு சரிசமமான பெண் கதாபாத்திரங்கள் (பிரியா, சைலஜா) மிரளவைக்கிறது...கடைசியாக கதையின் நாயகன் கதிர் முகிலன் நாயகி நிலா தென்றல், முதலில் உங்கள் கதாபாத்திர பெயர் தேர்வுக்கு நான் வியக்கிறேன்.... முகிலன் (மேகம்) நிலா எப்படி வானில் ஒன்றாக இருக்கிறதோ அதேபோல் இவர்களின் உறவு என்பது பெயரிலேயே கொடுத்தது சிறப்பு என்றால் அதை நிலா கதிருக்கு கை கடிகாரம் கொடுக்கும் வன்னம் கதையின் போக்கில் கூறியது வியப்புக்குரியது....இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துகொள்ளாத பிடித்தம், ஒருவர் மேல் ஒருவர் வைத்த கண்மூடித்தனமான நம்பிக்கை, கதிரிடம் மட்டும் வெளிவரும் நிலவின் குழந்தைத்தனம், நிலாவிடம் மட்டும் அடங்கி போகும் கதிர், அவனுக்காக இவளும் இவளுக்காக அவனும் என்று போட்டிபோட்டு கொண்டு காடும் அலாதியான காதல், சிறு சிறு ஊடல்கள், ஊடலால் உண்டாகும் கூடல்கள்.......! 

நிலாவிடம் எனக்கு பிடித்த ஒன்று அமைதி அதில் இருக்கும் அழுத்தமான நேர்மை முக்கியமாக அலட்டிக்கொள்ளாத திமிரு ரொம்பவே பிடிக்கும்; இந்த குணம் தன் கணவனிடம் இருந்து வந்ததுதானே...! அதே போல் கதிர் என்ற கதாபாத்திரமே பிடித்த ஒன்று தான் பிரித்து சொல்ல ஒன்றும் இல்ல... நிலாவுக்கு கணவனாக, காதலனாக, காவலனாக, தாய்மாமனாக,  தோழனாக, ஆசானாக, தந்தையாக, தாயாக, சில சமயம் சேயாக மாறும் கதிர் கதாபாத்திரம் நான் கண்ட கதாநாயக கதாபாத்திரங்களில் என் மனதில் முதல் இடம் பிடித்தது. மொத்ததில் ஒரு வெள்ளித்திரைக்கு பொருத்தமான கதை. இது கற்பனையில் இருந்து கண் முன் திரையில் உருவமாக பார்க்க பெரும் ஆவல் இருக்கின்ற அளவுக்கு அருமையான நாவல். இன்னும் சொல்லி கொண்டே போவேன் ஆனால் அது ஒரு புத்தகம் படிப்பதற்கு சமம் ஆகிவிடும் என்பதால் வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து கொண்டு மீண்டும் வாய்ப்பு கிட்டினால் பேசுவோம்.

                                            இப்படிக்கு,

               உங்கள் நலன் மற்றும் நாவல் விரும்பி.......!

Author:    607 Suspense Soul
Comments   0

*** தீண்டதே என் தென்றலே நாவல் - படைப்பை ரேட் செய்யுங்கள் ***

★ ★ ★ ★ ★

  contact@lovebeatnovels.com