வரம் – 9

“என்னடா ஆதி? அங்க என்ன பார்த்துட்டு இருக்க?” என்று அவனின் தோழன் வெங்கட் கேட்டான். 

“யாரு மச்சான் அந்தப் பொண்ணு. பர்ஸ்ட் இயரா?” என்று பூஜாவை கைக் காட்டி இவன் கேட்கவும், “இங்க இருக்கிற எல்லாரும்மே பர்ஸ்ட் இயர் தானடா? நீ யாரைக் கேட்கிற" என்று சுற்றிப் பார்த்தான்.

“ச் அதாண்டா அந்த ரெட் கலர் சுடி" என்று ஆதித்யா அவளைக் கை காட்ட, உடனே வெங்கட் அந்தப் பக்கம் பார்க்க, அவனின் பார்வைக்குள் பிரியா தான் விழுந்தாள்.

“யாரு அந்த கொலு பொம்மையா?” என்று கிண்டலாக கேட்டான் வெங்கட். “ச் அவ உனக்கு கொலு பொம்மையா?” என்று கோவப்பட்டான்.

“ஏண்டா புசு புசுன்னு அமுல் பேபி மாதிரி இருக்காளேன்னு சொன்னேன். இது ஒரு தப்பா?” என்று அப்பாவியாய் வெங்கட் கேட்க, “புசு புசுன்னா?” என்று ஆதித்யா எட்டிப் பார்க்க, இப்போது தான் பிரியாயைப் பார்த்தான்.

அதில், இவனோ “அந்த பூசனியத்தான் சொன்னீயா நீ?” என்று ஆதித்யா சலித்துக் கொள்ள, “ச் இங்கப்பாரு. உனக்கு பார்க்கப் பிடிக்கலன்னா விடு. அதுக்காக, பூசணி அது இதுன்னு சொன்னா அவ்வளவுத்தான்” என்றான் இவன்.

“எதே? என்னடா வந்ததும், ஓவரா சப்போர்ட் பண்றீயே என்ன விஷயம்?” என்று ஆதி கேட்க, “ம் நானும் எத்தனை நாளுக்குத்தாண்டா சிங்கிளாவே சுத்துறது? இப்படி நம்மளும் சைட்டடிக்க ஆரம்பிச்சாத்தான, காலா காலத்துல எனக்கொரு நல்லது நடக்கும்” என்றான்.

“க்கும். என்னமோ பண்ணு. பட் எனக்கு, அந்த ரெட் சுடி பத்துன புல் டீடெய்ல் வேணும்" என்று மீண்டும் பூஜாவை கை காட்டினான் ஆதித்யா.

அப்போதே பூஜாவைப் பார்த்தான் வெங்கட். “வாவ். உன் கண்ணுல மட்டும் எப்படிடா, இவ்ளோ அழகான பொண்ணுங்களா மாட்டுது?” என்று கேட்டான் வெங்கட்.

“டேய். சி இஸ் மைன்" என்று கோவமாய் இவன் சொல்ல, அவனின் கோவத்தில், “ஜில் மேன். இப்போ என்ன? சிஸ்டரா கன்வர்ட் பண்ணிக்கிறேன் போதுமா. எனக்கு என் பூந்தியே போதும்" என்றான் வெங்கட்.

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அங்கே அப்பாவியாய் அந்த ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தான் விஷ்வா. சீனியரிடம் சிக்கி சின்னாப்பின்னமாகியிருக்கிறான் என்பது அவன் மூஞ்சிலேயே தெரிந்தது.

அவன் பூஜாவைக் கடந்து பின் பக்கம் செல்லப் போக, “மச்சி" என்று சத்தமாக அழைத்தாள் பூஜா. அதில் விஷ்வா வேகமாக பின்னே திரும்ப, “மச்சி உன்னைத்தான்" என்று கை காட்டினாள் பூஜா.

“யாரு பூஜா? உன்னோட பிரண்டா?” என்று கேட்டாள் பிரியா. “இல்ல நம்மளோட பிரண்ட்" என்று திருத்தினாள் பூஜா. “எதே? நம்ம பிரண்டா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் அண்ணன்னு சொன்ன. இப்போ என்னென்னா, யாருன்னே தெரியாத ஒருத்தன என் பிரண்ட்னு சொல்ர. இன்னிக்குத்தான நம்ம மீட் பன்ணோம்? இல்ல எனக்கு பழசு எதுவும் மறந்துடுச்சா?” என்று குழப்பமாய் அவள் கேட்க, “நானா?” என்று கேட்டான் விஷ்வா.

“ச் நீத்தாண்டா வா. சீட் இங்க இருக்கு" என்று தன்னருகில் இருந்த சீட்டை சுட்டிக் காட்டினாள் பூஜா.

அவனுமே குழப்பத்துடன், “ஐ திங் நீங்க வேற யாரோன்னு நினைச்சி" என்று சொல்ல வந்தான் விஷ்வா.

அதற்குள், “நான் பூஜா. இவ பிரியா. இனிமேல் நம்ம மூனு பேரும் பிரண்ட்ஸ். பை தி வே. உங்க பேரு?” என்று அவனை பேச விடாமல் பூஜாயே கேட்டாள்.

அவளின் பேச்சில், பிரியாவும், விஷ்வாவும் திரு திருவென்று விழிக்க, “இன்னும் உன் பேர் சொல்லவே இல்லையே?” என்று கேட்டாள் பூஜா.

“விஷ்வா…" என்றான் விஷ்வா. “விஷ்வா. இட்ஸ் நைஸ் நேம்" என்ற பூஜா அவனை தன்னருகே அமர சொன்னாள்.

அவனும், “நீங்க சீனியரா? என்னை ராக் பண்றீங்களா?” என்று குழப்பமாய் கேட்க, அதில் தாராளமாய் புன்னகைத்தவள், “இங்க வந்ததுல இருந்து என்னை சீனியரான்னு கேட்ட ஒரே ஜீவன் நீ தான் டா. அதனாலையே, உன்னை என்னோட பெஸ்ட் பிரண்டா ப்ரோமோட் பண்றேன். பை தி வே, நாங்களும் உன்னை மாதிரியே எம்.எஸ்.சி மைக்ரோபயலாஜி பர்ஸ்ட் இயர் தான்" என்று கிண்டலாய் கூறினாள் பூஜா.

அதில் வேகமாய் பிரியா, “அப்போ நானு?” என்று கேட்டாள். “நீயும் என்னோட பெஸ்ட் பிரண்ட் தான்" என்றாள் பூஜா. அவர்களை குழப்பமாய் பார்த்த விஷ்வா, “நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல் பிரண்ட்ஸா?” என்று கேட்டான்.

“இல்லையே காலேஜ் பிரண்ட்ஸ்” என்றாள் பூஜா. “அப்போ நீங்க ரெண்டு பேரும் இங்கத்தான் யுஜி படிச்சீங்களா?” என்று கேட்டான் விஷ்வா.

“இல்லையே” என்றாள் பூஜா. “அப்போ யுஜி பிரண்ட்ஸா?” என்றான் விஷ்வா. “ம் இல்லையே” என்றாள் பூஜா.

“அப்புறம் எப்படி?” என்று பாவமாய் கேட்டான் விஷ்வா. “ம் நீயும் நாங்களும், எப்படி பிரண்ட் ஆனோம்மோ? அப்படித்தான்" என்றாள் பூஜா. அவளுடைய இந்த பேச்சு, அவர்கள் இருவரையும் கவர்ந்தது.

“இன்னும் அப்போ இந்த கேங்ல எத்தனைப் பேரை சேர்க்கலாம்னு இருக்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டாள் பிரியா.

“ஆக்சிவலா, ஸ்கூல் படிக்கிறப்ப, எனக்கு நிறையா பிரண்ட்ஸ். ஆனாலும் மூனு பேரா சுத்துற கேங்க பார்க்கிறப்ப செம்ம மாஸா இருக்கும். அதனாலையே, யுஜி படிக்கிறப்ப, மூனு பேர் தான் கேங்ல இருக்கனும்னு ரூல் எல்லாம் போட்டேன். பட் அங்கையும் எங்க கேங்க்ல ஏழு பேர். இப்போ பிஜில சுயரா மூனு பேர் தான்னு முடிவு பண்ணிட்டேன். சோ இனிமேல் நம்மத்தான் அந்த முப்படை தளபதிகள்" என்று இருவரின் தோளிலும் கைப் போட்டு கூறினாள் பூஜா.

அதில் பிரியா புன்னகைக்க, “என்னை எப்படி செலக்ட் பண்ணீங்க?” என்று கேட்டான் விஷ்வா.

“ம் மூஞ்சுல ஒரு ஒன்றரை டன் சோகம் வழியுதே அதை வச்சாத்தான் இருக்கும்" என்றாள் பிரியா.

அதில் பூஜா புன்னகைக்க, “அட போங்கங்க. சீனியர் வச்சு செஞ்சுட்டாங்க" என்று கூறினான் விஷ்வா.

“நீ சும்மாவா விட்ட?” என்று கேட்டாள் பூஜா. “அப்புறம் சீனியர பகைச்சிக்க முடியாது இல்லையா?” என்று கேட்டான் விஷ்வா. “பகைச்சிக்க வேண்டாம். ஆனா அதுக்காக பணிஞ்சிட்டே இருக்க முடியாது இல்லையா?” என்று கேட்டாள் பூஜா.

“ஆமா விஷ்வா நீ கவலைப்படாத. பூஜாவோட அண்ணா, இங்கத்தான் புரோபசரா இருக்காங்க. அதனால அவர் கிட்ட சொல்லி, நம்ம அவங்களை பழி வாங்கிடலாம்" என்றாள் பிரியா.

“ஸ்டூடண்ட் பிரச்சனைய, எதுக்கு புரோபசர் கிட்ட கொண்டு போகனும். இன்னிக்கு ஒரு நாள் ராக்கிங் எல்லாம் ஒகே. ஆனா அதுவே கண்டினீயூ ஆச்சின்னா, கண்டிப்பா, அதுக்கு நம்ம பதில் சொல்லியே ஆகனும்" என்றாள் பூஜா.

“நீங்க ரொம்ப தைரியமா பேசுறீங்க" என்றான் விஷ்வா. “இனிமேல் நம்ம பிரண்ட்ஸ் விஷ்வா. சோ நீ வான்னே கூப்பிடு" என்றாள் பூஜா.

“ஒகே பூஜா" என்றான் விஷ்வா. “ஹலோ நாங்களும் இருக்கோம்" என்றாள் பிரியா. அதில் மெலிதாய் சிரித்தவன், “ஒகே ரியா” என்றான்.

“ரியாவா? இதுவரைக்கும் என்ன அப்படி யாருமே கூப்டது இல்லையே” என்றாள். “இதுவரைக்கும் இல்லன்னா என்ன? இனிமே கூப்டு பழகிட்டா போச்சு” என்று கிண்டலாய் கூறினாள் பூஜா. அதில் மூவரும் சிரிக்க, அங்கே அழகாய் ஒரு நண்பர்கள் அணி உருவாகியிருந்தது. 

என்னத்தான் மேடையின் கீழ் நின்றிருந்தாலும், அங்கே அர்ஜூனுமே பூஜா எங்காவது தெரிகிறாளா? என்றுத் தான் தேடினான்.

அப்போது அங்கு வந்த மாதவன், “என்ன சார்? யாரை தேடுறீங்க?” என்று கேட்டான்.

“உனக்கு வாங்குன அடி பத்தலையா?” என்று கடுப்பாக இவன் கேட்க, “இது என்னடா எனக்கு வந்த சோதனை?” என்று புலம்பியப்படி அங்கிருந்த சேரில் சென்றமர்ந்தான்.

அர்ஜூனும், பூஜா எங்காவது தெரிகிறாளா? என்று பார்த்தான். ஆனால் எங்கே அவள் தான் அவன் திரும்பும் போதெல்லாம் பிரியாவின் பக்கம் சென்று மறைந்திருந்தாளே.

“நம்மளைத் தான் தேடுறாரா? இல்ல எதார்த்தமா திரும்பிருப்பாரா? எதுக்கும் பங்சன் முடிஞ்சதும், அவர்கிட்ட போய் பேசனும்" என்று தனக்குள் நினைத்துக் கொண்டு, விஷ்வா, பிரியாயுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

பங்சன் முடிந்ததும், அனைவரும், அவரவர் கிளாஸை தேடி சென்றனர். பூஜா விஷ்வாவிடம், “ஒரு நிமிஷம் இங்க வெயிட் பண்ணுங்க. நான் வந்துடுறேன்" என்று தன்னுடைய பேக்கை கொடுத்தாள்.

“நான் வரவா பூஜா?” என்று கேட்டாள் பிரியா. “இல்ல. இல்ல வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டு ஸ்டாப் ரூம் எங்கே என்று விசாரித்து அர்ஜூனை தேடி சென்றாள்.

“எங்க போறா?” என்று கேட்டான் விஷ்வா. “அவங்க அண்ணா, இங்கத்தான் வேலை பார்க்கிறாங்கன்னு சொன்னா, ஒரு வேளை அவரைப் பார்க்க போவாளா இருக்கும்” என்றாள் பிரியா.

“பூஜா செம்ம ஜாலியா பேசுறாள்ல?” என்று கேட்டான் விஷ்வா. “அப்போ நாங்களாம் கடியா பேசுறோமா?” என்று வேகமாக கேட்டாள் பிரியா.

“ஐயோ நான் எப்போ அப்படி சொன்னேன்?” என்றான் விஷ்வா. “இப்போ சொன்னீயே” என்றாள் பிரியா. “நான் அப்படி சொல்ல வரல" என்று பதட்டமானான் விஷ்வா.

அதில் நன்றாக சிரித்தவள், “நானே ஒரு பயந்தாக் கோளி. ஆனா என்னைப் பார்த்தும் பயப்பட ஒரு ஜீவன் கிடைச்சிருச்சு" என்று கிண்டலாக கூறினாள் பிரியா.

அப்போதே நிம்மதியானவன், “ஓ விளையாட்டா? ஒரு செகன்ட் உண்மையாவே கோவிச்சிட்டீங்களோன்னு பயந்துட்டேன்" என்றான் விஷ்வா.

“ஐயோ உடனே இந்த மரியாதை எல்லாம் வேண்டாம். நம்ம இனிமேல் பிரண்ட்ஸ் தான? நீயும் என்னை கலாய்க்கலாம்" என்றாள் பிரியா.

“அதெல்லாம் சொல்ல வேண்டாம். ப்ளோல தானா வந்துடும்” என்று அவனும் சொல்ல, அவள் சிரித்தாள்.

இங்கே, இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அங்கே பூஜா, அர்ஜூனை தேடி ஸ்டாப் ரூம் செல்ல முயன்றாள். ஆனால் செல்லும் போதுத்தான் அவளுக்கு ஒன்று தெரிந்தது. அவளுக்கு ஸ்டாப் ரூம் எந்த பக்கம் உள்ளது என்றே தெரியவில்லை என்று.

“ஏதோ தெரிஞ்ச மாதிரி வந்த” என்று மனம் கேள்வி கேட்க, “பொதுவா இந்தப் பக்கம் தான இருக்கும்னு வந்துட்டேன்” என்றவள் இப்போது யாராவது வருகிறார்களா? என்றுப் பார்த்தாள்.

அவளின் நேரத்துக்கு மாதவன் தான் வந்தான். அவனைப் பார்த்ததும், “அண்ணா” என்று சத்தமாய் அழைக்க, “என்னடா இது? காலையில கேட்ட அதே குரல்” என்று சுற்றி முற்றிப் பார்த்தான்.

“அண்ணா. இங்க இருக்கேன்” என்று அவள் சத்தம் கொடுக்க, அதன் பின்னே திரும்பிப் பார்த்தான். 

“ஹேய், என்ன நீ இன்னும் கிரவுண்ட்லத்தான் சுத்திட்டு இருக்கீயா?” என்று கேட்டான். “நீங்களும் அதே கிரவுண்ட்லத்தான சுத்திட்டு இருக்கீங்க” என்றாள் பூஜா.

“ம் எனக்கு தேவைத்தான். சரி சொல்லு என்னாச்சு? ஏன் கிளாஸுக்கு போகாம இங்க சுத்திட்டு இருக்க?” என்று அவன் கேட்கவும், “இங்க ஸ்டாப் ரூம் எல்லாம் எங்க இருக்குண்ணா?” என்றாள்.

“கிளாஸ் ரூம் எங்க இருக்குன்னு கேட்டா, ஒரு நியாயம் இருக்கு. நீ என்னென்னா, வந்ததும் வராததுமா ஸ்டாப் ரூம் பத்தி கேட்கிற?” என்று கிண்டலாய் கேட்டான்.

“நீங்கத்தான சொன்னீங்க. ஏதாச்சும் பிரச்சனைன்னா, உங்க கிட்ட வந்து சொல்லலாம்னு. அதான். நீங்க எப்படியும் அங்கத்தான இருப்பீங்க” என்றாள்.

“ம் விவரம் தான். ஆனாலும் இப்போ நான் உன் முன்னாடித்தான இருக்கேன். நீ என்கிட்ட நேரடியாவே சொல்லலாம். சொல்லு. யாரும் உன்கிட்ட வம்பு பண்ணாங்களா?” என்று கேட்டான்.

“ஐயோ அதெல்லாம் இல்லண்ணா. ஸ்டாப் ரூம் தெரியனும்” என்று அவள் அதிலேயே நிற்க, “அந்தப் பக்கம் போனன்னா, ஒரு ஸ்டெப் வரும். அதுல மேல போனன்னா, தேர்ட் ப்ளோர். அதுல கடைசியாத்தான் இருக்கு. மேக்ஸிமம் ஸ்டூடண்ட் அந்தப் பக்கம் எட்டியே பார்க்க மாட்டாங்க. நீத்தான் வந்த முத நாளே அங்க போகனும்னு சொல்ற. சரி பார்த்து போயிட்டு வா. அங்க எங்க டிபார்ட்மெண்ட் ஹெச் ஓ டி இருப்பாரு. அவர்கிட்ட மட்டும் சிக்கிடாத” என்று சொல்லிவிட்டே அங்கிருந்து சென்றான் மாதவன்.

இவளோ, அவன் சொல்லியிருக்க வேகமாய் துள்ளிக்குதித்து ஸ்டாப் ரூம் நோக்கி ஓடினாள். அங்கே மாதவ் சொல்லியது போல், ஸ்டூடண்ட் தலைகள் எதுவுமே இல்லை. அதை எல்லாம் தாண்டி அவள் உள்ளே எட்டிப் பார்த்தாள்.

ஆனால் அங்கே அவள் தேடி வந்த அந்த ஜீவன் இருந்திருக்கவில்லை. அதில் அவளோ மேலே எழுதப்பட்டிருந்த போர்டைப் பார்த்தாள். “இந்த டிபார்ட்மெண்ட்னு தான அண்ணா சொன்னாரு. ஆனா இங்க அவரு இல்லையே. ஒரு வேள கிளாஸுக்கு போயிருப்பாரோ?" என்று தனக்குள் யோசித்தப்படி திரும்ப, அங்கே அர்ஜூனின் மீதே மோதினாள் பூஜா.

(ரைட்டு, நல்ல மோதல் தான். இந்த மோதல் காதல்ல முடியுமா? இல்ல கஷ்டத்துல முடியுமான்னு பாக்கலாம். ஆனாலும் பூஜா நீ ரொம்ப ஸ்பீடாத்தான்மா போற. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. பெஸ்ட் கமெண்ட்ஸ பேனர்ல போஸ்ட் பண்ணிருக்கேன். சோ உங்க கமெண்ட்ஸும் அதுல வரலாம். சோ அத செக் பண்ணிக்கோங்க.  அப்புறம் மறக்காம ரேட்டிங் கொடுத்திடுங்க)

தொடரும்…

Comments   12

*** வரம் – 9 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***