வரம் – 32

“இப்போ எதுக்குடா என்ன திட்டுற?” என்று வெங்கட் பாவமாய் கேட்க, “ஏண்டா? உன்கிட்ட ஒரு விஷயத்த செய்ய சொல்லி எத்தன நாள் ஆச்சி. இன்னும் அத கூட பண்ணலன்னா என்ன அர்த்தம்?” என்றான் ஆதி.

“ஏண்டா? ஒரு பொண்ணு, எங்க தங்கியிருக்கான்னு கண்டுப்பிடிக்கிறது அவ்ளோ ஈஸியா போச்சாடா உனக்கு?” என்று வெங்கட் கேட்க, இப்போது ஆதியோ அவனை இன்னும் இன்னும் முறைத்தான்.

“அவ ஏதோ லேடீஸ் ஹாஸ்டல்ல ஸ்டே பண்ணிருக்கான்னுத்தான் சொன்னாங்க. ஆனா எந்த ஹாஸ்டல்ன்னு தெரியல. சென்னையில என்ன லேடீஸ் ஹாஸ்டலுக்கா பஞ்சம்?” என்றான் வெங்கட்.

“எனக்கு அதெல்லாம் தெரியாது. எனக்கு அவள பத்தி தெரிஞ்சே ஆகனும்” என்று ஆதி சொல்ல, “ஆதி நான் வேணும்னா ஒரு ஐடியா சொல்லட்டா?” என்று கேட்டான் வெங்கட்.

“என்ன?” என்று இவன் கேட்க, “இல்ல இப்படி கஷ்டப்பட்டு, அவ எங்க தங்கி இருக்கான்னு தேடி அலையிறதுக்கு பதிலா, அவகிட்டையே கேட்கலாமே” என்றான்.

அதில் இப்போது அவனை இன்னும் முறைத்தவனோ, “அவகிட்ட ஒரு பேர் கேட்டதுக்கே பதில் சொல்லாம போயிட்டா. இதுல நீ போயி அட்ரஸ கேட்டதும் அவ சொல்லிடுவாளா?” என்றான் ஆதி.

“ஐயோ! இல்லடா. அது நீ ஏன் அவகிட்ட பிரண்டாக கூடாது. ஈவன் நீ அப்படி பிரண்டாகிட்டா, அதுக்கப்புறம் அவ எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிடுவாத்தான” என்றான் வெங்கட்.

அதில் சில நொடி எதையோ யோசித்தவன், “இதுக்கப்புறம் உன்ன நம்பியும் பிராயஜனம் இல்ல. பேசாம, அவகிட்டையே பேசிடலாம்’ என்றப்படி கையில் இருந்த பேஸ்க்ட் பாலை, கூடையில் சரியாக போட்டான் ஆதி.

இங்கே பூஜாவோ, “ம்ஹூம் முடியவே முடியாது. இன்னும் எத்தன நாளைக்கு இதையே சொல்லிட்டிருக்க போறீங்க? நம்ம இங்க வந்து சேர்ந்து முழுசா ஆறு மாசம் ஆகப் போகுது. சோ இத நம்ம செலிபிரேட் பண்ணியே ஆகனும்” என்றாள்.

“ஹேய் இதுக்கெல்லாம் யாராச்சும் செலிபிரேட் பண்ணுவாங்களா?” என்று பிரியா கேட்க, “ஆக்சிவலி நம்ம மூணாவது நாள், மூணாவது வாரம், மூணாவது மாசம் இப்படின்னு அப்பவே பண்ணியிருக்கனும்” என்றாள் பூஜா.

“எதே?” என்று விஷ்வாவும், பூஜாவும் அவளைப் பார்க்க, அவளோ, “ஆமா நம்ம மூனு பேர் இல்லையா?” என்றாள்.

அதில் இருவரும் அவளை முறைக்க, “இங்கப்பாருங்க. நான் முடிவு பண்ணிட்டேன். இந்த வீக்கெண்ட் நம்ம எல்லாரும் சினிமாக்கு போறோம். அப்படியே சென்னைய சுத்துறோம்” என்று முடிவாய் அவள் சொல்ல, விஷ்வாவும், பிரியாவும் கூட வேறு வழியின்றி தலையை ஆட்டினர்.

அங்கே, அர்ஜூனோ, மாதவ்விடம், “என்ன விளையாடிட்டு இருக்கீயா? இன்னும் ஒரு மாசத்துல பிராக்டிகல்ஸ் எல்லாம் ஸ்டார்ட் பண்ணனும். அதுவும் போக, நடுவுல ஸ்போர்ட்ஸ் டே வேற இருக்கு. அப்படி இருக்கிறப்ப, இந்த கேனிவல் எல்லாம்  தேவையே கிடையாது” என்றான்.

“இல்ல அர்ஜூன். ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் ஆசைப்படுறாங்க” என்று மாதவ் சிறு தயக்கத்துடன் சொல்ல, “ஸ்டூடண்ட்ஸ்னா அப்படித்தான் இருப்பாங்க மாதவ். நம்மத்தான் அவங்களுக்கு எது சரி? எது தப்புன்னு புரிய வைக்கனும். ஏற்கனவே, வெல்கம் பார்டி அது, இதுன்னு இந்த மூனு மாசமா யாரும் ஒழுங்கா கிளாஸ்லையே இல்ல. செமஸ்டர்க்கு அவங்கள ரெடி பண்ற ஐடியா இருக்கா? இல்லையா?” என்று கோவமாய் கேட்டான்.

அதில் மாதவுமே, அமைதியாய் அவனுடைய திட்டுக்களை வாங்கிக் கொண்டு ஸ்டாப் ரூமை விட்டு வெளியில் வந்தான்.

“ஸ்ப்பா! டீச்சரா எனக்கே இவன்கிட்ட பேச வார்த்த வரல. இதுல ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் ரொம்ப பாவம் தான்” என்று நினைத்துக் கொண்டப்படி அவன் வகுப்பு எடுக்கும் கிளாஸுக்கு சென்றான்.

அர்ஜூனோ வீட்டில் இருப்பவர்களை நினைத்து இன்னும் எரிச்சலானான். ஏனெனில், அவர்களும் இப்படித்தான் இந்த வாரம் ஏதோ அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்கு செல்லலாம் என்று சொல்லியிருக்க, அவர்களிடமும் இப்படித்தான் கத்தி விட்டு வந்திருந்தான்.

பூஜாவுடைய அப்பாவும், தாத்தாவும் ஊருக்கு கிளம்பியிருக்க, இப்போது பூஜாவின் அம்மா ரோகினியும், தேவகியும் தான் வீட்டில் இருந்தனர்.

இவர்கள் இருவரில் ரோகினிக்கு தன் மகளை நினைத்து கவலை. தேவகிக்கு அர்ஜூனை நினைத்து கவலை.

“இப்படியே இவங்கள, இவங்க இஷ்டத்துக்கு விட்டா சரியா வராது. நம்மத்தான் ஏதாச்சும் பண்ணனும்” என்றார் தேவகி.

“நானும் அதான் யோசிக்கிறேன் சம்பந்தி” என்று ரோகினியும் சொல்ல, இருவரும் சேர்ந்து அவர்களை எப்படி சேர்த்து வைப்பது என்று புது திட்டத்தை போட ஆரம்பித்தனர். 

ஆளாளுக்கு ஒன்றை போட்டு வைத்திருக்க, இப்போது, பூஜாவோ, வழக்கம் போல் அவளுடைய வகுப்பு ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது கிளாஸை விட்டு வெளியில் வந்திருந்தாள்.

அதென்னவோ அவருக்கும் இவளைப் பிடிக்கவில்லை. இவளுக்கும் அவரைப் பிடிக்கவில்லை. அதனாலையே அவளுக்கு பதில் தெரிந்தாலும் கூட சொல்வதில்லை.

வழக்கம் போல் கேண்டீன் சொல்ல நினைத்தவள், பின் அதை செய்யாது, “சரி நம்ம வாத்தி என்னப் பண்றாருன்னு பாக்கலாம்” என்று யூ டர்ன் போட்டு கல்லூரியை சுற்றினாள். அப்போது, அவளின் பார்வையில், விழுந்தது என்னவோ ஒரு அழகான காதல் ஜோடித்தான்.

அவள் வழக்கமாய் அமரும் மரத்தடிக்கு அருகில் நின்றுத்தான் அவர்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். அத்தனை ஒன்றும் மோசமாக எல்லாம் இல்லை. அருகருகே அமர்ந்து, ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தப்படி அமர்ந்திருந்தனர். அவ்வளவுத்தான்.

“இன்னும் சிக்ஸ் மந்த் தான் இருக்குடா? இதுக்கு மேல வீட்டுல என்ன சொல்லன்னு தெரியல” என்று அந்தப் பெண் கவலையாய் சொல்ல, “என்ன என்னைத்தான் பண்ண சொல்ற? உனக்கு மேரேஜ் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்றாங்க. எனக்கு, இதுக்கப்புறம் தான் வேல தேடனும். தங்கச்சி வேற இருக்கா. அவ கல்யாணத்துக்கு முன்னாடி, என்னால எப்படி என் கல்யாணத்த பத்தி வீட்டுல பேச முடியும்?” என்றான்.

அதில் இவளோ, “அப்போ என்ன சொல்ல வர்ற? நம்ம பிரிஞ்சிடலாம்னு நினைக்கிறீயா?” என்றாள் அவள். அவளுக்கோ கோவம் ஏனெனில். அவள் பிஜி படிக்க வந்ததே, கல்யாணத்தை தள்ளிப் போடத்தான். இன்றுடன் படிப்பும் முடிகிறது. ஏற்கனவே வரன்களை எல்லாம் பார்க்க ஆரம்பித்திருந்தனர்.

படித்து முடித்ததும் இவளை நிச்சயம் திருமணம் செய்துக் கொடுக்கத்தான் நினைப்பார்கள். அபப்டி இருக்க, அவளுடைய நிலைமை மோசம்த்தானே.

அதை புரிந்துக் கொள்ளாது அவனைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க, இப்போது அந்தப் பெண்ணுக்கோ கோவம்.

“ஹேய் நா எப்போ அப்படி சொன்னேன். என்னோட சிட்சுவேசன்னத்தான் சொல்லிட்டு இருக்கேன்” என்று அவன் சொல்ல, “உனக்கு எப்பவுமே உன்னோட சிட்சுவேசன்தான் தெரியுது. ஏன் உனக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கா? எனக்கும் தான் இருக்கு” என்றாள் இவள்.

சொல்லும் போதே அவள் கண்ணெல்லாம் கலங்கி விட்டது. காதலுக்காக ஏனோ அவள் மட்டுமே போராடிக் கொண்டிருப்பது போல் தோன்ற, “ஹேய்! ஹேய்! இப்போ எதுக்கு நீ அழுகுற” என்றவனுக்குமே என்ன சொல்ல என்று தெரியவில்லை.

“ப்ளீஸ் அழாத. யாராச்சும் பார்க்கப் போறாங்க” என்று அவன் சொல்ல, “இப்பவும் நீ உன்ன பத்தித்தான யோசிக்கிற. என்னப் பத்தி உனக்கு கவலையே இல்ல அப்படித்தான. சரி அப்படியே இருந்துக்கோ” என்று கோவமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றாள் அந்தப் பெண்.

அதைப் பார்த்த பூஜா வேகமாய் அவர்கள் அருகில் செல்ல நினைக்க, அதற்குள்ளாக, அந்தப் பெண்ணின் முன்னே வந்து நின்றிருந்தான் ஆதித்யா.

அவனைப் பார்த்ததும், அந்தப் பெண் ஒரு அடி பின்னே செல்ல, இப்போது அந்தப் பெண்ணின் காதலனோ, “ஆதி. நாங்க சும்மாத்தான் பேசிட்டு” என்றவனுக்குத்தான் அவனைப் பற்றி தெரியுமே. தேவையில்லாமல் ஏதாவது பிரச்சனையை இழுத்து விட்டால் என்ன செய்வது என்ற பதட்டம் அவனுக்கு. அதிலும் ஆதிக்கெல்லாம் அவர்களை போல் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களை எல்லாம் சுத்தமாய் பிடிக்காது.

“நான் நீங்க பேசுனது எல்லாத்தையும் முத இருந்தே கேட்டேன். மனுஷனாடா நீ? அதான் தங்கச்சி அவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்குத்தான. அப்பவும் நீ உன்னப் பத்தி மட்டுமே யோசிச்சா என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.

“தங்கச்சியா?” என்று அந்தப் பெண்ணே ஆதியை சற்று விநோதமாய் தான் பார்த்தாள். ஏனெனில், அவனே பல முறை அவளிடம் வம்பு வளர்த்திருக்கிறான்.

இப்போது இவனோ, “இது எங்களோட பர்ஷனல்” என்று சொல்ல, “அட என்னடா நீ? நீயும் நானும் ஒரே கிளாஸ்ல படிக்கிறோம். அப்படி இருக்கிறப்ப, உனக்கு நான் ஹெல்ப் பண்ண மாட்டேன்னா? இப்போ நான் சொல்றத நீங்க ரெண்டு பேரும் கேளுங்க. இந்த வாரமே உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ்” என்றான்.

“என்னது?” என்று அவர்கள் இருவரும் அதிர்ச்சியாக, “ஹேய் பயப்படாதீங்க. ஜஸ்ட் ரிஜிஸ்டர் மேரேஜ் மட்டும் பண்ணிக்கோங்க. வீட்டுல பிரச்சன வந்தா, அப்போ சொல்லிக்கலாம்” என்றான் ஆதி.

“என்ன ஆதி விளையாடுறீயா? அதெப்டி முடியும்? அதுவும் போக” என்று அவன் தயங்க, அவளுக்கும் கூட அந்தளவுக்கு எல்லாம் தைரியம் கிடையாது.

“ஏன் முடியாது? இப்போ உனக்கென்ன பிரச்சன? உனக்கு ஒரு வேல கிடைக்கனும். உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக் கொடுக்கனும். அவ்வளவுத்தான? இப்பவே என் அப்பா கம்பெனியில உனக்கு வேல வாங்கிக் கொடுக்கிறேன். அப்படியே தங்கச்சிக்கும் கூட சேர்த்து ஒரு ஜாப் கொடுத்திடலாம். அதுக்கப்புறம் பொறுமையா நீங்க உங்க வீட்டாளுங்கள சமாளிச்சிக்கலாம்” என்று தானாக வந்து உதவிக்கரம் நீட்டினான் ஆதி.

அதில் அவர்கள் இருவருக்கும் சற்று அதிர்ச்சியாய் இருந்தாலும், அதற்குள்ளாக அங்கு வந்த பூஜாவோ, “அட என்ன ப்ரோ? இன்னும் எதுக்காக வெயிட் பண்றீங்க? அதான் உங்க பிரண்ட் சூப்பரான ஐடியா கொடுத்திருக்காரே. பாலோ பண்ண வேண்டியதுத்தான” என்றாள்.

அதில் ஆதியோ சற்று மறைந்து நின்றிருந்த வெங்கட்டைப் பார்க்க, அவனோ கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். ஏனெனில், இதெல்லாம் பூஜாவுடன் அவன் பழகுவதற்காக போட்ட நாடகம்த்தானே. அது சரியாகவும் வேலை செய்தது.

ஆனால் அவர்கள் இருவரோ, “நீ” என்று குழப்பமாய் பார்க்க, “அட நான் யாரா இருந்தா என்ன பாஸ்? உங்க சார்புல சாட்சி கையெழுத்து போடுறதுக்கு ஒரு ஆளுன்னு வச்சிக்கோங்க” என்று சிறு புன்னகையுடன் அவள் சொல்ல, இப்போது ஆதியோ, “பாருடா. உன் லவ்வ வெளிய இருந்து பார்க்கிற எங்களுக்கே காப்பாத்திக் கொடுக்கனும்னு தோணுது. உனக்கு இல்லையா? நீ உண்மையாத்தான லவ் பண்ற” என்று கேட்டு ஆதி வற்புறுத்த, இப்போது அவனோ, “ஆமா.. ஆமா” என்றான்.

“அப்புறம் என்ன நீ கவலைய விடு. எங்க சார்புல இந்த வாரம் உனக்கு கல்யாணம். எல்லா செலவும் என்னோடது” என்று பூஜாவையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.

அவளுமே, தலையை ஆட்ட, இப்போது இது மட்டும் அவளுடைய கணவனுக்கு தெரிந்தால் என்னாகும் என்று அவள் யோசிக்க தவறியிருந்தாள். 

(அட என்னமா பூஜா? இப்போ இந்த சோஷியல் சர்வீஸ் எல்லாம் நமக்கு தேவையா? சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அடுத்து. நேத்து எபிசோட் அப்டேட் பண்ண முடியாததுக்கு சாரி. கொஞ்சம் ஹெல்த் இஸ்யூ. ஐயம் ஆல்சோ ஹியூமன் தான். சில பேர், டெய்லியும் அப்டேட் பண்ண முடியலன்னா, எதுக்காக நீங்க ஸ்டோரி போடுறீங்கன்னு கேட்டிருந்தீங்க. ரீடரா உங்க இண்ட்ரஸ்ட் புரியுது. பட் ரைட்டரா, எனக்கும் பர்ஷனல் பிராபளம் எல்லாம் இருக்கும் இல்லையா? முடிஞ்ச அளவுக்கு நானும் போடத்தான் ட்ரைப் பண்ணுவேன். முடியாத பட்சத்துல என்ன செய்றது? வாட்டெவர். என்னோட இன்ஸ்டா பாலோ பண்ணிக்கோங்க. மேக்ஸிமம் ஸ்டோரி அப்டேட் பண்ணிட்டா அதுல இன்பார்ம் பண்ணுவேன். ஈவன் ஹெல்த் இஸ்யூன்னாலும் அதுல அப்டேட் பண்ணுவேன். சோ பார்த்துக்கோங்க. எனிவேய்ஸ் உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்தேன். ரிபிளைத்தான் பண்ண முடியல. அந்தளவுக்கு ஹெல்த் இஸ்யூஸ். சீக்கிரம் ரிபிளை பண்றேன். உங்க சப்போர்டுக்கு ரொம்ப தேங்க்ஸ். இன்னிக்கு எபிசோட் எப்படி இருந்திச்சுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தொடரும்…

Comments   9

*** வரம் – 32 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***