தேன் – 42

“அது சுஜிக்கு சென்னையிலத்தான் காலேஜ் அட்மிஷன் கிடைச்சிருக்கு. அதான்” என்று விழி சொல்லி முடிக்கும் முன்னே, “காலேஜ்ல அட்மிஷன் கிடைச்சா, அங்க கூட்டிட்டு போக வேண்டியதுத்தான. இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த” என்று கடுப்பாய் கேட்டாள் கவி.

“அத சொல்றதுக்கு நீ யாரு? இது என் மாமா வீடு. நான் வந்து தங்குவேன்” என்று சுஜி கோவமாய் சொல்ல, “ச் விழி” என்று பல்லைக் கடித்தான் வேந்தன். அதிலேயே அண்ணனின் கோவத்தை உணர்ந்தவள், “ஹே. சுஜி. இது என் அண்ணா கவிக்காக வாங்குன வீடு. சோ இப்படி எல்லாம் கவிக்கிட்ட பேசாத” என்று திட்டினாள்.

“அப்படி பாத்தாலும் இது என் மாமா காசுல வாங்குன வீடுத்தான” என்று சுஜி சொல்ல, கவியோ விழியிடம், “இவ இங்க தங்க கூடாது” என்றாள். வேந்தனோ, இவர்கள் மூவரின் சண்டையை பார்க்க விருப்பமின்றி, அங்கிருந்து கிளம்பினான்.

“நான் ஏன் தங்க கூடாது. அத நீ இல்ல என் மாமா சொல்லனும்” என்ற சுஜியோ மீண்டும் வேந்தனின் கையை எக்கிப் பிடித்தாள். அதில் சட்டென்று வந்து அவள் கையை தட்டி விட்டவள், “அவர தொட்டு பேசுற வேல எல்லாம் வச்சிக்காத” என்றாள் கவி.

“ஏன் நான் ஏன் தொடக் கூடாது?” என்று சுஜி மூக்கு விடைக்க கேட்க, கவி வேந்தனைப் பார்த்த பார்வையில் அவனோ, “ச் பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கிறா இருந்தா இரு. இல்லையா, வந்த ட்ரெயின்லையே திருப்பி ஏத்தி விட்டுடுவேன்” என்றான்.

“ச் என்ன மாமா?” என்றவள் மீண்டும் வேந்தனிடம் செல்லம் கொஞ்ச, அதைப் பார்த்த கவிக்கோ காதில் இருந்து புகை வராத குறைத்தான்.

“இப்ப நீங்க கொண்டு போய் இவள விட்டுட்டு வரலன்னா, அதுக்கப்புறம் நான் என்னப் பண்ணுவேன்னே தெரியாது” என்று கிட்ட தட்ட மிரட்டினாள் கவி.

அதில் அவனோ, “ச் உன் பிரண்ட்  தான் கூட்டிட்டு வந்தா. அவகிட்ட எதுன்னாலும் பேசிக்கோ” என்று சொல்லிவிட்டு அவன் ஜீப்பில் ஏறப் போக, “அட என்ன மாமா? இவளுக்குலாம் எதுக்கு நீங்க பதில் சொல்லிட்டு இருக்கீங்க” என்றாள் சுஜி.

அதில் இப்போது விழியிடம் வந்த கவியோ, “இப்போ எதுக்கு நீ இவள இங்க கூட்டிட்டு வந்த?” என்று கோவமாய் கேட்க, “நீத்தான என் அண்னாக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும்னு சொன்ன. அதுக்குத்தான்” என்றாள் விழி.

அவளின் வார்த்தையில், “அதுக்கு உனக்கு இந்த லூசுத்தான் கிடைச்சாளா?” என்று கோவமாய் கேட்டாள்.

“ஆமா, நீத்தான சொன்ன, என் அண்ணாவ, அக்கறையா பாத்துக்கிடுற மாதிரி ஒரு பொண்ணு வேணும்னு. அதான்” என்று அசராது விழி சொல்ல, “யாரு, இவ உன் அண்ணாவ அக்கறையா பாத்துப்பாளா?” என்று கோவமாய் கேட்டாள்.

அதற்குள் சுஜியோ, “மாமா சாப்பிடாமலே எங்க கிளம்புறீங்க?” என்று அவள் வேந்தனின் கையை பிடித்து நிறுத்தி கேட்க, அதைக் கண் காட்டியவளோ, “பார்த்தீயா எவ்வளவு அக்கறையா இருக்கான்னு” என்றாள் விழி.

“மண்ணாங்கட்டி. வேலைக்கு போறவர பிடுச்சி நிறுத்தி தொல்லைப் பண்ணிட்டிருக்கா” என்று கவி சொல்ல, “ஹேய் என்ன நீ? இதெல்லாம் தான் அக்கற” என்று விழி சொல்ல, “ச் அவ கூட சேர்ந்து நீயும் லூசாகிட்டீயா?” என்று கேட்டாள் கவி.

“ஹேய் இப்போ எதுக்கு நீ இவ்வளவு டென்சன் ஆகுற? அதான் அண்ணாவே எதுவும் சொல்லலையே” என்றாள் விழி. “ம் எப்படி சொல்லுவாரு? நீத்தான கூட்டிட்டு வந்திருக்க” என்று முறைத்தாள்.

“ஹேய் காலேஜ் திறக்க இன்னும் ரெண்டு வாரம் இருக்கு. அதுக்கப்புறம் ஹாஸ்டல் போயிடுவா” என்று விழி சொல்ல, “அப்போ அவள ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டியதுத்தான?” என்றாள் கவி.

“உனக்கே தெரியும்த்தான சுஜி கிராமத்துல வளர்ந்தவ. அவளுக்கு, இந்த சென்னை லைப் ஸ்டைல் எதுவுமே தெரியாது. அதனாலத்தான், கொஞ்சம் முன்னாடியே அனுப்பி வச்சிருக்காங்க” என்றாள்.

“அதுக்கு எதுக்கு இங்க அனுப்புனாங்க?” என்று கவி அதிலேயே நிற்க, “ஹேய் ஒரு ரெண்டு வாரம் தான” என்றாள் விழி. “ரெண்டு நிமிஷம் கூட அவ இங்க இருக்க கூடாது” என்றாள் கவி.

“மாமா பேசாம, நான் இங்க இருந்தே காலேஜ் போகட்டா? தினமும் உங்க கூட ஜீப்புல போயிட்டு, ஜீப்புலையே வந்திடுவேன்” என்றாள்.

“ஆமா இவள கூட்டிட்டு போகத்தான, அவரு ஜீப்பு வச்சிருக்காரு” என்று கோவமாய் கவி திட்ட, வேந்தனோ, “ச் என்ன குட்டிமா இதெல்லாம்?” என்று சிறு சிடுசிடுப்புடன் கேட்டான்.

“அண்ணா அவள நான் பாத்துக்கிறேன்” என்று சொல்லியவள், “ஹேய் சுஜி. உன்ன உள்ள போக சொன்னேன்” என்றாள்.

“ச் அவள நான் வெளிய போக சொன்னேன்” என்று கவி சொல்ல, வேந்தனுக்கோ யாரின் பேச்சை கேட்க என்றே தெரியவில்லை.

கவிக்கும், சுஜிக்கும் சுத்தமாய் ஆகாது என்று தெரியும். நேற்றிரவு அத்தனைக்குப் பின், கவி அங்கு இருப்பதே பெரிய விஷயம். ஆனாலும் விழிக்காக, அங்கு தங்க சம்மதித்திருந்தாள்.

ஆம், தோட்டத்தில் படுத்துக் கிடந்த அண்ணனைப் பார்த்த விழிக்கு மனம் தாங்கவே இல்லை. அதனால் கவியிடம் வந்து நின்றவள், “சரி. நீ ஒன்னும் என் அண்ணியா இங்க இருக்க வேண்டாம். என் பிரண்டா நீ இருக்கலாம்த்தான. முன்னாடி இருந்த மாதிரி” என்றாள் விழி.

அதில் விழியைப் பார்த்தவளோ, அப்படியே நின்றிருக்க, “ஹேய் இப்ப உனக்கென்ன பிரச்சன? என் அண்ணா நல்லா இருக்கனும்னு நீ நினைக்கிறீயா? இல்லையா? என்று கோவமாய் கேட்டாள்.

“நான் தான் சொல்றேன் தான. அவரு நல்லா இருக்கனும்னுத்தான் நான் அவர விட்டு போறேன்னு சொல்றேன்” என்றாள் கவி.

“சரி அப்போ நீ சொல்றது உண்மைன்னா, நீ அண்ணாவுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் இங்கத்தான் இருக்கனும்” என்றாள் விழி.

“அது நான் இருந்தா எப்படி நடக்கும்?” என்று கவி கடுப்பாய் கேட்க, “அதெல்லாம் நடக்கும். நீ சொன்னதுக்காக, நான் அண்ணாக்கிட்ட நீ அவருக்கு வேண்டாம்னு சொன்னேன் தான? அப்போ நீயும் எனக்காக இத பண்ணித்தான் ஆகனும்” என்றாள் விழி.

ஏனெனில் அவள் வேந்தனிடம் அப்படி சொல்லும் போது, நிச்சயம் கவியின் மீதிருக்கும் காதலை சொல்வான் என்று நினைத்தாள். ஆனால் அவனோ, கவிக்கும் மேல் ஒரு படி போய், அவளுக்காகத்தான் திருமனம் செய்துக் கொண்டது போல் பேசியிருக்க, இதற்கு மேல் இவர்களை இவர்கள் வழியில் விட்டால் ஆகாது என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

அதனால் தான் அதிரடியாய் சுஜியை களத்தில் இறக்கியிருக்கிறாள். ஆனால் வேந்தனுக்கோ, கவி அங்கு இருக்க சம்மதித்ததே ஒரு வித நிம்மதியைக் கொடுத்தது.

இப்போது சுஜி வேறு, வந்து பிரச்சனை செய்துக் கொண்டிருப்பது அத்தனை எரிச்சலைக் கொடுத்தது. “குட்டிமா பேசாம அவள கொண்டு போய் நம்ம வீட்டுல விட்டுடுறேன்” என்றான் வேந்தன்.

“அங்க வேண்டவே வேண்டாம். நான் போ மாட்டேன். அங்கப் போனா அத்த வேலையா சொல்லும்” என்று சுஜி சொல்ல, “கேட்டீயா? இவள போய் உன் அண்ணாக்கு கட்டி வைக்கனும்னு நினைக்கிற” என்று திட்டினாள்.

“ஹேய் சின்ன பிள்ளத்தான” என்று விழி சொல்ல, “இப்போ நான் இங்க இருக்கனுமா? இல்ல அவ இங்க இருக்கனுமா?” என்று கடுப்பாய் கேட்டாள் கவி.

“ச் என்ன கவி? எனக்காக ஒரு ரெண்டு வாரம் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோயேன். ப்ளீஸ். இவளுக்காக வேண்டாம். இவ அம்மாக்காக யோசியேன். பாவம் அவங்களுக்கே உடம்புக்கு முடியல. இவள பத்தி யோசிச்சே பாதி டென்சன்” என்று கெஞ்சலாய் விழி சொல்ல, கவியோ எரிச்சலாய் வேந்தனைப் பார்த்தாள்.

“ப்ளீஸ் கவி” என்று அவள் கையைப் பிடிக்க, “இங்கப்பாரு, ரெண்டே வாரம் தான். அதுக்கு மேல ஒரு செகண்ட் கூட அவ இங்க இருக்க கூடாது” என்றாள் கவி.

“அதெல்லாம் மாட்டா” என்று விழி வேகமாய் சொல்ல, “அதுவரைக்கும் அவ உன் அண்ணா பக்கமே தல வச்சி படுக்க கூடாது” என்று கோவமாய் கூறினாள்.

“அது கொஞ்சம் கஷ்டம் தான்” என்று விழி சொல்ல, “என்ன?” என்று கோவமாய் கவி பார்க்க, “ஹேய் உனக்கே தெரியும்த்தான. அவளுக்கு சின்ன வயசுல இருந்தே என் அண்ணா மேல அப்படி ஒரு கிரஸ். அப்படி இருக்கிறப்ப, அதுக்கு என்னால கியாரண்டி கொடுக்க முடியாது” என்றாள் விழி.

“அப்போ அவ இங்க தங்க கூடாது” என்று கவி சொல்ல, “ஹேய் இப்போ அவ என் அண்ணாகிட்ட பேசுனா உனக்கென்ன?” என்றாள் விழி.

“என்னென்னன்னா?” என்றவள் ஏதோ சொல்ல வந்து பின் அதை சொல்லாது, “உன் அண்ணாக்கு அவள சுத்தமா பிடிக்காது” என்றாள்.

“அதான் அண்ணாவே ஒகே சொல்லிட்டாங்களே. பின்ன என்ன? அதுக்கு மேல அவ போய் பேசுனா, அண்ணாவே திட்டி அனுப்பி வச்சிடும். அதுவும் கூடாதுன்னா, நீயே அவள அவர் பக்கம் போக விடாம பாத்துக்கோ. நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்றாள் விழி.

“ச் இதுல்லாம் எனக்கு தேவையா?” என்று கோவமாய் கேட்க, “அப்போ ப்ரீயா விடு” என்றாள் விழி.

“அதெல்லாம் முடியாது” என்றவள், இன்னமும் வேந்தனின் கையை பிடித்தப்படி நின்றிருந்தவளைப் பார்க்க பார்க்க பற்றிக் கொண்டு வந்தது. அதில் வேந்தனின் அருகில் சென்றவள், அவள் கரத்தை விலக்கிவிட்டு, அவன் சட்டைப் பட்டனை சரி செய்தாள்.

அதில் வேந்தன் கவியைப் பார்க்க, அவளோ, “அவத்தான் கைய பிடிச்சான்னா, அதுக்குன்னு இப்படியே நின்னுட்டு இருப்பீங்களா? உங்களுக்கு வேல இல்லையா?” என்றாள்.

“ஹேய் என் மாமா கைய நான் பிடிப்பேன்” என்று சொல்ல, “அப்போ நான் உன் கன்னத்துலையே நாலு வைப்பேன்” என்றாள் கவி.

“மாமா” என்ற சுஜியோ வேந்தனிடம் உதவியைக் கேட்க, கவியோ, “ச் சும்மா சும்மா மாமான்னு சொல்லிட்டு இருந்தே கன்னம் சிவந்திடும்” என்றாள்.

“பாருங்க மாமா. உங்க முன்னாடியே அவ என்ன திட்டுறா” என்றாள் சுஜி. “அவர் முன்னாடி உன்ன திட்டுறது என்ன? தேவையில்லாம வேல பார்த்தேன்னா, அடிக்க கூட செய்வேன். அதெல்லாம் அவர் எதுவும் சொல்ல மாட்டாரு. அப்படித்தான சுடர்? என்னை எதுவும் கேட்பீங்களா?” என்று அவனை முறைத்துப் பார்த்துக் கேட்டாள்.

“ம்ஹூம் இல்ல” என்று அவனின் தலை தானாய் ஆட, சுஜியோ, “மாமா” என்றவள் மீண்டும் அவன் கையைப் பிடிக்கப் போக, “விழி” என்று கத்தினாள் கவி. அதுவரையிலும் சுவாரஸ்யமாய் தன் அண்ணனின் மீதான தன் தோழியின் உரிமை உணர்வை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் வேகமாய், “ஹேய் சுஜி. உள்ள வா” என்றழைத்தாள்.

அப்போதும் அவள் செல்ல மறுக்க, வேந்தனோ, “இப்போ நீ உள்ளப் போறீயா? இல்ல ஊருக்கு அனுப்பட்டுமா?” என்றான்.

அதில் வேகமாய் சுஜி விழியுடன் உள்ளே சென்றுவிட, இப்போது கவியும், வேந்தனும் மட்டும் தான் நின்றிருந்தனர். அவனோ அவளை நின்று ஒரு நொடி பார்த்தவன், அடுத்த நொடி ஜீப்பில் ஏற சென்றான்.

அதற்குள் அவன் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தியவள், “நானே நல்ல பொண்ணா பாக்குறேன். உங்க தங்கச்சி ஒன்னும் பாக்க வேண்டாம்” என்றாள். அதில் அவளை முறைத்தவனோ, “எனக்கு நீயும் பாக்க வேண்டாம். அவளும் பாக்க வேண்டாம். இனி நானே பாத்துக்கிறேன்” என்று எரிச்சலாய் சொல்லிவிட்டு நகர்ந்தான் வேந்தன்.

அதில் அவன் சட்டையை மீண்டும் இழுத்துப் பிடிக்க, “இன்னும் என்ன உன் பிரச்சன?” என்று கேட்க, அவளோ அவன் முகத்தையே அழுத்தமாய் பார்த்தாள்.

(ஸ்ப்பா வேந்தா. உன் நிலம கொஞ்சம் இல்ல ரொம்பவே மோசம். இவ உன்ன காலத்துக்கும் சிங்கிளாவே வச்சிருக்கனும்னு பிளான் போடுறா. கொஞ்சம் கவனமா இருந்துக்கோ. சரி அடுத்து என்ன நடக்கப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   0

*** தேன் – 42 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***