சூடான பால் வேந்தனின் காயத்தில் பட்டு தெறிக்க, “அச்சோ என்னப் பண்றீங்க?” என்று அவன் கையைப் பிடிக்க சென்றாள். அதற்குள்ளாக தன் கரத்தை விலக்கிக் கொண்டவனோ, “சும்மா என் மேல அக்கற இருக்கிற மாதிரி நடிக்காத” என்றான்.
அவனின் வார்த்தையில், இப்போது கவிக்கு சுள்ளென்று கோவம் வர, “இப்போ யாரு நடிச்சாங்க?” என்றப்படி அவன் கையைப் பிடிக்க முயற்சித்தாள். அப்போதும் தன் கரத்தை உதறியவன், “நீத்தான். சும்மா என் தங்கச்சிக்காக என் முன்னாடி வந்து நிக்காத. வெளிய போ” என்று கத்தினான்.
அவன் கத்தலை எல்லாம் சற்றும் காதில் வாங்காது, அவன் கரத்தைப் பிடித்து தன் முந்தானையால், அந்த காயத்தில் ஒட்டியிருந்த பால்லை துடைத்தாள். அதில் “ச். நீ ஒன்னும் பண்ண வேண்டாம்” என்று பிடுங்க முயற்சிக்க, அவள் அதை கேட்டால் தானே.
அவன் பேச்சைக் கேட்காது, அவன் காயத்தை மெல்ல வருடினாள். அதில் அவனுக்கு மெலிதாய் வலி எடுக்க, “ஸ்” என்று முனங்கினான்.
அதில் அவளுக்கு வலிக்க, உதடு குவித்து காற்றை ஊதினாள். அது சற்று இதத்தைக் கொடுக்க, இருந்தும், அவன் முகம் வலியை மட்டுமே பிரதிபலிக்க, மெல்ல அவனின் உள்ளங்கை காயத்தில் முத்தமிட்டாள்.
அவனின் இறுக்கம் எல்லாம் அந்த நொடி முற்றும் முழுதாய் தகர்ந்திருக்க, இருந்தும் வெளியில் விறைப்பாக இருப்பது போலவே காட்டிக் கொண்டான். அவளோ தன் விரலால் அந்த காயத்தை வருடியப்படி, “இதுக்குத்தான், எங்கள மட்டும் அங்க இருந்து அனுப்பி வச்சீங்களா?” என்று கோவமாய் கேட்டாள்.
அவனோ பதில் சொல்லாது அமைதியாய் இருக்க, “ச் நீங்க பண்றதுக்குலாம் நான் தான் கோவப்படனும்” என்று முனுமுனுத்தாள்.
“உன்ன விட, நான் என்ன பெருசா பண்ணிட்டேன்” என்று வேந்தன் அவளிடம் சண்டைக்கு சென்றான். “இப்போ நான் என்ன பண்ணேன்?” என்று அவள் கடுப்பாய் கேட்க, “என் கைய கூட தொட மாட்டேன்னுத்தான, என் பக்கம் கூட நீ வரல. இப்போ மட்டும் எதுக்கு இப்படி வந்து பிடிச்சிட்டு இருக்க” என்றவன் தன் கரத்தை பிடுங்க முயற்சித்தான்.
உண்மையில் விலக்கி கொள்ள நினைத்தால் தானே, அவன் அதை செய்வான். பெயருக்கு உறுவ முயற்சிக்க, அவளோ இப்போது அவன் கையை விடுவித்தாள்.
அதில் இன்னும் எரிச்சலானவனோ, “அதான, உனக்கு, எனக்கு என்ன ஆனா என்ன? சீக்கிரமே எனக்கு ஏதாச்சும் ஆகிடுச்சின்னா, நீ நிம்மதியா இருப்ப” என்றான்.
அவளோ எதுவுமே சொல்லவில்லை. அமைதியாய் இருந்தாள். அது அவனுடைய சினத்தை கூட்டியது. “அப்போ அப்படித்தான் நீ ஆசைப்படுற. சரி கவலைப்படாத. அடுத்த தடவ எவனாச்சும் குத்த வந்தா, நானே அவனுக்கு முன்னாடி போயி தலைய கொடுத்துடுறேன். அவன் என்ன கொல்லட்டும்” என்றான் வேந்தன்.
வழக்கமாய் இவன் இப்படி பேசினால், அவள் அவனை மறுப்பாள். இல்லை என்றால் திட்டுவாள். ஆனால் இப்போது அமைதியாய் அவள் இருக்க, சற்று நிதானித்து அவளைப் பார்த்தான்.
அவளோ அந்த அறையை சுற்றி எதையோ தேடியப்படி பார்வையை சுழட்டினாள். “ச் உன்கிட்டத்தான பேசிட்டு இருக்கேன். அங்க என்னத்த தேடுற?” என்று கடுப்பாக கேட்டான். அதற்கும் அவள் பதில் சொல்லாது போக, “ச் உன்ட்டத்தான கேட்குறேன்” என்று அவள் கையைப் பிடித்தான். அதில் வேகமாய், அவன் கரத்தை தட்டி விட்டவள், அங்கிருந்து செல்லப் போக, இப்போது முன்பை விட அழுத்தம் கூட்டி பிடித்தான்.
அவனின் செயலில், “கைய விடுங்க சார்” என்றாள். “அப்போ உண்மையாவே நீ அப்படித்தான் நினைக்கிற. நான் செத்தா உனக்கு கவல இல்ல” என்று கோவமாய் கேட்டான்.
“நான் ஏன் சார் கவலப்படனும்?” என்று அவள் அசராது கேட்க, இங்கே இவனுடைய பிபி ஏகத்துக்கும் கூடியது.
“நீ ஒன்னும் எனக்காக கவலப்பட தேவையில்ல. நான் செத்ததுக்கப்புறம் உன் கழுத்துல நான் கட்டுனத கழட்டி வச்சிட்டு, உன் விருப்பபடி சந்தோஷமா இரு” என்றான்.
“இப்பவே கூட கழட்டி தரேன். நல்ல பொண்னு கழுத்துல கட்டிக்கோங்க. அவ உங்களுக்காக கண்டிப்பா கவலப்படுவா. உங்க மேல அக்கற படுவா” என்றாள்.
அதில் அவனின் பொறுமை எல்லாம் காற்றில் பறக்க, கோவமாய் அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்தான். அவள் அசரவே இல்லை.
ஒரு கட்டத்தில் பிடியை தளர்த்தி அவள் முகத்தைப் பார்க்காது முதுகு காட்டி நின்றவன், “எனக்காக யாரும் கவல பட தேவையில்ல” என்றான்.
அவளிடம் இருந்து சத்தம் வராமல் இருக்க, அவனுக்கோ முதுகுதண்டு சில்லிட்டது. கரத்தை இறுக்க மூடி தன் கோவத்தை குறைக்க முயற்சிக்க, அதுவோ கூடியதே தவிர கொஞ்சமும் குறையவில்லை. ஏற்கனவே வேலை விஷயத்தில் இருந்த அழுத்தம், காயத்தில் இருந்த வலி. சற்று ஆறுதலாய் பேசுவாள் என்று அவன் நினைத்திருக்க, அவளோ முற்றும் முழுதாய் விலகி செல்லப் பார்க்க, அத்தனை எரிச்சல்.
எத்தனை நேரம் அப்படியே நின்றிருப்பானோ, சட்டென்று ஏதோ தோன்ற, திரும்பி பார்த்தான். கவி அங்கு எங்கும் இல்லை. அதில் அவனோ வேகமாய் சுற்றிப் பார்க்க, அவள் எப்போதோ அங்கிருந்து சென்றிருந்தாள்.
அவளுடைய இந்த அலட்சியம், அவனுடைய பொறுமையை எல்லாம் தூக்கி சாப்பிட்டது. மனமோ, “இதெல்லாம் உனக்கு தேவைத்தானா? உன்ன பிடிக்காத ஒருத்திய, இன்னும் எத்தன நாளைக்கு பிடிச்சு வைக்க முடியும்னு நினைக்கிற? பேசாம அவள விட்டுடு. அவ விருப்பப்படி இருக்கட்டும்” என்று சொல்லியது.
ஏனோ அதை அவனால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை. அதே நேரம், சில நேரம் அவனை நெருங்கி வருபவள், பல நேரம் அவனை விட்டு வெகு தூரம் ஓடி விடுகிறாள். இவனும் முயன்று, முயன்று ஒரு கட்டத்தில், அவள் விஷயத்தில் தோல்வியை மட்டும் தான் தழுவுகிறான்.
அன்று திருமண மண்டபத்தில் அவனுடன் வர மறுத்தாள். அதன் பின்னான இரண்டு வருடங்கள், அவனும் பல வழியில், அவளை அந்த கயவர்களிடம் இருந்து மீட்க போராடினான். ஆனால் அதற்கு அவள் சம்மதிக்க வேண்டுமே. ஒவ்வொரு முறை அவள், அவர்கள் பக்கம் தான் நின்றாள்.
இப்போது அதை எல்லாம் யோசித்தப்படி அமர்ந்தவனுக்கு தலை எல்லாம் வலித்தது. “ஒரு வேள நான் தான் தப்பா நினைச்சிட்டு இருக்கேன்னா? உண்மையிலையே அவளுக்கு அவ பழைய வாழ்க்கத்தான் பிடிச்சிருந்திச்சா?” என்று தனக்குள்ளே கேட்டான்.
“பழைய வாழ்க்கைன்னு ஏன் யோசிக்கிற? ஒரு வேள அவளுக்கு அவனத்தான் பிடிச்சிருந்திச்சோ? என்னவோ? அவன் எப்படிப்பட்டவனா இருந்தா என்ன? அவத்தான் அப்பவே சொன்னாலே, அவன்த்தான் அவ புருஷன்னு. அப்படி இருக்கிறப்ப, உன் மேல அவளுக்கு எப்பவுமே விருப்பம் இருந்தது இல்ல. இப்படி நீ தாலி கட்டிட்டா மட்டும், உன் மேல அவளுக்கு விருப்பம் வந்துடனுமா? என்னிக்காச்சும் அவ உன்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிருக்காளா? ஏதோ சாப்பாடு போட்ட, படிக்க வச்சன்னா, உன்ன அவ ஏத்துக்கிடனும்னு ஏதாச்சும் சட்டம் இருக்கா?” என்று அவனின் மனம் எதிர் கேள்வி கேட்டது.
அதில் தலையைப் பிடித்தப்படி அமர்ந்து விட்டான். அதன் பின் கவி அவன் அறைக்கு வரவே இல்லை. விழித்தான் அவனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்தாள்.
தங்கையைப் பார்த்ததும், தன் குழப்பத்தையும், வலியையும் மறைத்து புன்னகைத்தான்.
“என்னடா? அண்ணாக்கு ஒன்னும் இல்ல” என்று சிரித்தப்படி அவன் சொல்ல, “அண்ணா” என்றவள் அவனின் அருகில் அமர்ந்து அவனைக் கட்டிக் கொண்டாள். அவள் கண்ணெல்லாம் கலங்கியது.
தங்கையின் கண்ணீரைப் பார்த்தவனுக்கு வலி எல்லாம் எங்கோ பறந்துத்தான் சென்றது.
“ச் குட்டிமா. எத்தன தடவ சொல்லியிருக்கேன். இப்படி எல்லாம் அழக் கூடாது” என்று வேகமாய் அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
அவன் கையைப் பற்றியவளோ, “ரொம்ப வலிக்கிதாண்ணா” என்று அவள் காயத்தை வருட, “ச் அதெல்லாம் ஒன்னும் இல்ல. இதெல்லாம் ஒரு காயம்மா?” என்றான்.
“கவனமா இருந்திருக்கலாம்த்தான” என்றவள், அவளுக்கு அவனே உணவை எடுத்து ஊட்ட வந்தாள்.
“ச் அண்ணா என்ன சின்ன குழந்தையா?” என்று அவன் சிரித்தப்படி கேட்டாலும், அவள் கொடுத்த உணவை வாங்கிக் கொண்டான். அதென்னவோ அவனுக்குள் எத்தனை வலி இருந்தாலும் அதை சிறிதாய் கூட தங்கையிடம் காட்டிக் கொள்ள மாட்டான். இப்போதும் அவனுக்குள் அத்தனை வலி. ஆனால் தங்கை முன் வெளிக்காட்ட முடியவில்லை.
அவனுக்கு ஒவ்வொரு வாயாய் ஊட்டி முடித்தவள், “என்ன மன்னிச்சிடுங்கண்ணா” என்றாள்.
அதில் அவனோ, “ச் இப்போ நீ என்னப் பண்ண?” என்று கேட்டான். “கவிய அடிச்சிட்டேன்” என்று அவள் சொல்ல, அதில் ஒரு நொடி உள்ளுக்குள் அதிர்ந்தாலும், அதை முகத்தில் காட்டாது, “அதுக்கு எதுக்கு என்கிட்ட சாரி சொல்ற?” என்றான்.
“உங்களுக்கு கோவம் வரலையாண்ணா?” என்று கேட்க, அதில் மெலிதாய் சிரித்தவன், “நான் ஏன் என் குட்டிமா மேல கோவப்படப் போறேன்? அதுவும் போக உங்க பிரண்ட்ஸ்க்கு நடுவுல ஆயிரம் இருக்கும். அதுல நான் என்ன சொல்றது?” என்று கேட்டான்.
அதில் தன் அண்ணனைப் பார்த்தவள், “உங்க வாழ்க்கைய நான் கெடுத்துட்டேன்லண்ணா” என்றாள். அதை சொல்லும் போதே அவள் கண்ணெல்லாம் கலங்கியது.
“ச் என்னப் பேசுற நீ?” என்று அவன் பதறிப் போய் அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
“கவிக்கு உங்கள பிடிக்கும்னு நினைச்சேண்ணா. அதனாலத்தான் நான் உங்க கிட்ட அவள கல்யாணம் பண்ணிக்க சொன்னேன். ஆனா! நான் உங்க மனச பத்தி யோசிக்கவே இல்ல” என்றாள்.
ஆனால் அவனின் சிந்தனை எல்லாம் அவள் கேட்ட முதல் கேள்வியிலேயே நின்றிருந்தது.
“என் மனசுல என்ன? என் மனசுல என் தங்கச்சித்தான் இருக்கா” என்றான்.
“கவியும் அதுக்குள்ளத்தானண்ணா இருக்கா” என்று விழி கேட்க, அவனுக்கோ விடை தெரியவில்லை. அதில் அவனோ, “உனக்கு பிடிச்ச பொண்னு, என் மனசுல இருப்பாத்தான குட்டிமா” என்றான்.
“அவ்வளவுத்தானா?” என்று விழி அண்ணனை புருவம் உயர்த்திப் பார்க்க, “ச் இப்போ என்னாச்சு?” என்றான்.
அதில் கண்ணீரைத் துடைத்தவளோ, “அவள நீங்களும், நானும் கொடும பண்றோம்னு சொல்றாண்ணா” என்றவளுக்கு கண்ணீர் மேலும் சிந்தியது.
ஏனோ தங்கையின் கண்ணீர் மட்டுமே அவனுக்கு இப்போது முக்கியமாய் தெரிய, கோவமாய், “இப்போ அவள நான் என்னப் பண்ணிட்டேண். என் மேல கோவம்னா என்கிட்ட காமிக்க வேண்டியதுத்தான. எதுக்கு என் குட்டிமாக்கிட்ட அவ காமிக்கிறா” என்றவன் வேகமாய் எழுந்தான்.
அதற்குள் அவன் கையைப் பிடித்து தடுத்த விழியோ, “அவ மேல தப்பு இல்லண்ணா. என் மேலத்தான் தப்பு. நானும் அவ மனசு தெரியாம இப்படி எல்லாம் பண்ணியிருக்க கூடாது. அவ உங்களுக்கு வேண்டாம்னா” என்றாள்.
தங்கையிடம் இருந்து அப்படி ஒரு வார்த்தை வரும் என்று அவன் நினைத்திருக்கவே இல்லை.
அதில் அவன் தங்கையைப் பார்த்தான். அவள் கண்கள் கலங்கியிருந்தது. “சரிடா. உனக்கு வேண்டாம்னா எனக்கும் வேண்டாம்” என்றான்.
“உண்மையாவே சாரிண்ணா” என்று மீண்டும் அவனை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் விழி. தங்கையின் கண்ணீருக்கு காரணமானவளை வெட்டி வீசும் அளவுக்கு கோவம் வந்தது. ஆனாலும் அதை செய்யாது கண்கள் சிவக்க, உயிர் வலிக்க வேறு ஒரு முடிவை எடுத்தான் வேந்தன்.
(கவியின் இந்த பிடிவாதத்துக்கு என்ன காரணம்? வேந்தன் அப்படி என்ன முடிவு எடுத்திருப்பான்? என்பதை அடுத்தடுத்த அத்தியாத்தில் காணலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் பத்தி உங்க கருத்த மறக்காம சொல்லலாம். அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
என்ன சகோ இப்படி சொல்றான்😱😱😱💞💞💞💞💞💞💞