கவியின் கண்ணீரை பார்த்த வேந்தனுடைய கண்கள் இரத்தமாய் சிவந்தது. வெளியில் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் தங்கையின் மீது எத்தனைப் பாசத்தை வைத்திருக்கிறானோ, அதை விட ஒரு மடங்கு அதிகமாய் கவியின் மீது அவனுக்கு அக்கறை உண்டு. அக்கறை மட்டும் அல்ல, அன்பு, பாசம், பொறுப்பு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்போது அவளை அழ வைத்தவர்கள் யார் என்று தெரிந்து, உடனே அவர்களை மேலோகம் அனுப்பி வைக்கும் அளவுக்கு ஆத்திரம் பெருகியது. அதில் கோவமாய் அவன் விலகப் போக, அதற்குள் அவனை இழுத்துப் பிடித்து அவன் இதழில் அழுத்தமாய் தன் இதழைப் பதித்தாள்.
அதில் அவன் பனியை விழுங்கிய அனலாய் தனிய, அவளுக்கோ அவனின் கோவத்தை குறைத்தே ஆக வேண்டிய நிலை. மேலும் மேலும் அவள் ஒருவளுக்காக, அவன் தேவையில்லாத எந்த பிரச்சனையிலும் சிக்க வேண்டாம் என்று நினைத்தாள்.
வேந்தனுக்கு எத்தனை கவியைப் பிடிக்குமோ, அதை விட அதிகமாய் கவிக்கு வேந்தனைப் பிடிக்கும். ஆனால் அதற்கு காதல் என்ற பெயரை அவள் வைக்கவில்லை. அவளைப் பொறுத்த வரை அவளுடைய அம்மா, அப்பாவுக்கு அடுத்ததாக, அவளைப் பாதுகாக்கும் ஒரு ஜீவன் அவன் ஒருவனே. அவன் மீது எக்கசக்கமான நன்றியுணர்வு இருக்கிறது. அதனுள் அக்கறை, பாசம் இப்படி ஏராளமான உணர்வுகள் உள்ளது.
அவனுக்காக உயிரைக் கொடுக்க சொன்னால் கூட கண்ணை மூடிக் கொண்டு அதை செய்து விடுவாள். ஆனால் அவனுடன் அவளால் வாழ முடியாது. அதற்கு அவளிடம் பல காரணங்கள் இருந்தது. அது அவனுக்கு பெரிதாய் இல்லாமல் போகலாம். ஆனால் அவளுக்கு அதெல்லாம் மிகப்பெரிது.
அவள் கண்களில் கண்ணீர் உறைந்திருக்க, இருந்தும், அவள் கண்கள் அடுத்தடுத்து கண்ணீரை சிந்த, மெல்ல அவனிடம் இருந்து தன் இதழைப் பிரித்து, “என்னை விட்டு எங்கேயும் போகாதீங்க” என்று அவன் கண்ணைப் பார்த்துக் கூறினாள்.
ஏனோ அந்த ஒற்றை வார்த்தையில், அவளை மீண்டும் தனக்குள் இறுக்கமாய் அணைத்துக் கொண்டான். ஆனால் மனதினுள், இதற்கு காரணமானவர்களை வெட்டி வீசும் கோவம் இருந்தது.
“நான் எங்கேயும் போகல” என்றவன் அவளை அறைக்கு அழைத்துச் செல்லாது, அவளுக்கு மிகவும் பிடித்த தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான். ஏனோ, அங்கே வீசிய இதமான மாலை நேர தென்றல் காற்று மனதிற்குள் ஒரு வித ரம்மியத்தை பரப்பியது. அப்போதும் அவன் கைக்குள் தான் இருந்தாள். ஏனோ அவர்கள் பேசிய மற்ற விஷயங்கள் எல்லாம் மறந்துப் போயிருக்க, அவனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பது மட்டும் தான் அவளுக்கு பெரிய விஷயமாய் இருந்தது.
சட்டென்று என்ன நினைத்தாளோ, “சார். என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்களா?” என்று கெஞ்சலாய் கேட்டாள். அதில் கையில் கட்டியிருந்த மணியைப் பார்த்தான். மாலை ஐந்து என்று காட்ட, “சரி. போலாம்” என்றான்.
அதன் பின் அவளை அப்படியே அழைத்துச் செல்ல மனமின்றி, “ரிபிரஸ் ஆகிட்டு போலாம்” என்றான். “ம்” என்று தலையாட்டியவள், அவன் கரத்தை விடாது பிடிக்க, அதில் மெலிதாய் சிரித்தவன், “நான் யாரையும், எதுவும் பண்ணல போதும்மா” என்றான்.
“எனக்காக எப்பவும் எதுவும் பண்ணக் கூடாது” என்றாள். அதில் உள்ளே கோவம் எழுந்தாலும், அதை வழக்கம் போல் வெளிக்காட்டிக் கொள்ளாது, “சரி எதுவும் பண்ணல” என்றான்.
அதன் பின்னே அவள் முகத்தில் மெல்லிய நிம்மதி பரவியது. அவள் நிம்மதிக்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.
இருவருமாய் அறைக்கு வர, அவளோ அப்போதும் சற்றும் தெளியாதுத்தான் நின்றாள். மீண்டும், மீண்டும் அவர்கள் பேசியது மட்டுமே நினைவுக்கு வர, “இந்த புடவைய கட்டிக்கோ” என்று ஒரு புடவையை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.
மற்ற நேரமாக இருந்தால் மறுத்திருப்பாள். இப்போது ஏனோ மறுக்க தோன்றவில்லை. அதை வாங்கிக் கொள்ள, அவன், அறையை விட்டு வெளியில் வந்தான்.
வந்தவன் நேரே சென்று நின்றது தங்கையிடம் தான். “யாரையாச்சும் மீட் பண்ணீங்களா?” என்றான்.
“இல்லையேண்ணா. அப்படி யாரையும் பாக்கலையே” என்று சொல்ல, “விழி” என்று அழுத்தமாய் கேட்டான். அத்தனை எளிதில் தங்கையின் பெயர் சொல்லி அழைக்க மாட்டான். அதில் அண்ணனின் அழுத்தத்தை கவனித்தவள், மீண்டும் ஒரு முறை காலையில் இருந்து நடந்தவற்றை எல்லாம் யோசித்தாள்.
பின் நடந்தது அத்தனையும் ஒன்று விடாமல் கூறினாள். அதில் இருவருடன் சேர்ந்து படம் பார்த்தது வரை கூறினாள். அதைக் கேட்டு வேந்தன் முறைக்க, அவளோ, “இல்லண்ணா, கவித்தான் உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொன்னா, அதான் அவங்க கிட்ட டிக்கெட் வாங்குனோம்” என்றாள்.
“அவங்க உங்க கிட்ட எதுவும் வம்பு பண்ணாங்களா?” என்று அவன் கேட்க, “ஐயோ அதெல்லாம் இல்லன்னா, அவங்க நல்ல பசங்கத்தான். எங்க கிட்ட எந்த அட்வாண்டேஜூம் எடுத்துக்கல” என்றாள் விழி.
“வேற யாரும் கவிக்கிட்ட பேசுனாங்களா?” என்று வேந்தன் அழுத்திக் கேட்க, மீண்டும் எதையோ யோசித்தவள், “ஆ..ங் அது நான் பார்க்கிங்ல நிறுத்தியிருந்த வண்டிய எடுக்க போயிருந்தேன். சடனா திரும்பி பார்த்தா கவிய காணும். உடனே திரும்பி வந்தேன். அப்போ அவ பக்கத்துல யாரோ நின்னுட்டு இருந்தாங்க. ஆனா நான் கிட்டப் போறதுக்குள்ள போயிட்டாங்க. அப்போ இருந்தே அவ முகம் சரியில்ல. ஒரு மாதிரி கீழ விழ போனா. அதனால என்னாலையும் அது யாருன்னு பாக்க முடியல” என்றவள் நடந்ததை, பார்த்ததை ஒன்று விடாமல் கூறினாள்.
அதில் நெற்றியை நீவியவனோ, “அவள தனியா விடாதன்னு உன்கிட்ட நான் சொன்னேன் தான” என்று சிறு முறைப்புடன் கேட்டான். “இல்லண்ணா. என் கூடையேத்தான் வந்தா. பட் சடனா ஏன் நின்னா? யார் அவங்கன்னு எதுவும் தெரியல. என்னாச்சுன்னா? எதுவும் பிரச்சனையா? கவி ஒகேத்தான” என்று அத்தனைக் கவலையாய் கேட்டாள்.
தங்கையின் வருத்தத்தை கவனித்ததும், சட்டென்று கரைந்தவன், “அதெல்லாம் இல்லடா. இப்போ ஒகேத்தான். நீ வேணும்னா போயி பேசு.” என்றான்.
“ம்ண்ணா” என்றவள் கவியை பார்க்க செல்லப் போக, “குட்டிமா” என்று அழைத்தான் வேந்தன்.
“எண்ணன்னா?” என்று விழி நிமிர்ந்துப் பார்க்க, “அண்ணா உன்கிட்ட கோவமா பேசிட்டேன்னு எதுவும் வருத்தமா?” என்று கேட்டான்.
அதில் அழகாய் சிரித்தவளோ, “உங்களோட கோவத்துல நீங்க கவி மேல வச்சிருக்கிற பாசம்த்தான்னா தெரிஞ்சிது. எனக்கு என் கவி சந்தோஷமா இருக்கனும். அவ்வளவுத்தான்” என்றாள். அதில் தன் தங்கையின் தலையை மெல்ல கோதி விட்டவனோ, “அதெல்லாம் உன் பிரண்ட் சந்தோஷமா இருப்பா. நீயும் சந்தோஷமா இருக்கனும். அண்ணாக்கு எல்லாத்தையும் விட, உன்னோட விருப்பம், சந்தோஷம் முக்கியம்” என்றான்.
“இப்படி ஒரு அண்ணா இருக்கிறப்ப, எனக்கென்னன்னா கவல வரப் போகுது” என்றாள். அதில் சிரித்தவன், “சரி நீ போயி அவள பாரு. ஆனா எதுவும் கேட்டுக்காத” என்று சொல்ல, “ம்” என்று தலையாட்டிவிட்டு விழி கவியைப் பார்க்க சென்றாள்.
இங்கே வேந்தனோ புருவத்தை நீவினான். கவியை கஷ்டப்படுத்தத்தான் ஒரு கூட்டமே இருக்கிறதே. இப்போது அவள் யாரைப் பார்த்தாள்? என்பதுத்தான் கேள்வியாய் இருந்தது. உடனே அருளுக்கு கால் செய்தவன், ஏதோ செய்ய சொல்லி கால்லை கட் செய்தான்.
இங்கே கவியோ அப்போதுத்தான் புடவையை மாற்றி வெளியில் வர, “அதென்ன? அண்ணா வீட்டுல இருந்தா மட்டும் தான் மேடமுக்கு புடவை எல்லாம் கண்ணுக்கு தெரியுது” என்று சீண்டலாய் கேட்டாள் விழி.
“ஆ.ங் இல்ல கோவிலுக்கு” என்ற கவிக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. அப்போதே அவளிடம் அதை சொல்லவில்லை என்பது புரிய, “இல்ல கோவிலுக்கு போகலாம்னு யோசிச்சேன். அதான்” என்றாள்.
“கோவிலுக்கா? இப்படியேவா போற?” என்று விழி கேட்க, “ஏன்?” என்றவள் தன்னைப் பார்த்தாள். “என் கூட வா” என்றவள் அவளை இழுத்துக் கொண்டு தன்னுடைய அறைக்கு சென்றாள்.
“என்ன?” என்று கவி கேட்டுக் கொண்டிருக்க, அதற்குள் விழியுடைய நகை எல்லாம் எடுத்து அவளுக்கு போட்டு விட ஆரம்பித்தாள். அவளின் செயலில், “ஹேய் லூசா நீ. என்னப் பன்ற” என்றவள் அவள் அதை கழட்டி வைத்தாள்.
“ச் இப்போ எதுக்கு அதெல்லாம் கழட்டுற?” என்று விழி கோவமாய் கேட்க, “உன்னோடத எதுக்கு எனக்கு போட்டு விடுற. அதெல்லாம் வேண்டாம்” என்றாள்.
“இதெல்லாம் என்னோடதுன்னு யாரு சொன்னா? எல்லாமே என் அண்ணாவோடதுத்தான். சோ நீ தாராளமா போடலாம். இதெல்லாம் போட உனக்குத்தான் உரிமை இருக்கு” என்றாள் விழி.
“ப்ளீஸ் விழி. எனக்கு இதெல்லாம் வேண்டாம்” என்று அடம்பிடிக்க, “ம்ஹூம் இப்போ நீ இதெல்லாம் போட்டுத்தான் ஆகனும்” என்றாள் விழி.
“அப்போ நான் கோவிலுக்கே போகல” என்று கவி முகத்தை திருப்ப, விழியோ முறைத்தாள்.
அதற்குள் அங்கு வந்த வேந்தனோ, “ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சன?” என்று கேட்டான்.
“பாருங்கண்ணா. பர்ஸ்ட் டைம் ரெண்டு பேரும் கோவிலுக்கு போறீங்க. இப்படி நகை எல்லாம் போடாம போனா நல்லாவா இருக்கும்?” என்றாள் விழி.
“கோவிலுக்குத்தான போறோம். நகைக்கடை விளம்பரத்துக்கா நடிக்கப் போறேன்?” என்று கவியும் அசராது கேட்டாள்.
இப்போது வேந்தனோ இருவருக்கும் இடையில் பாவமாய் நிற்க, கவியோ “எனக்கு வேண்டாம்” என்றாள், “அண்ணா இத இவ போட்டுத்தான் ஆகனும்” என்றாள் விழி.
“இப்போ என்ன? உனக்கு நகை வேண்டாம். உனக்கு இவ நக போடனும் அதான” என்றான் வேந்தன்.
“ம்” என்று இருவரும் தலையாட்ட, இப்போது கவியின் அருகில் சென்றவனோ, அவளை மேலிருந்து கீழாக பார்த்தான். அவளுக்கு ஆபரணங்கள் தேவையே இல்லை. அந்த அளவான ஆபரணத்திலேயே அத்தனை அழகாய்த்தான் இருந்தாள். அதில் மனம் ஒரு நொடி அவளை ரசிக்க, அடுத்த நொடி, அங்கே இருந்த நகைகளை எல்லாம் பார்த்தான். அதில் இருந்த ஒரு டாலர் வைத்த செயினை எடுத்தவன், “குட்டிமா ஆசைக்காக, இத மட்டும் போட்டுக்கோ” என்று அவனே அவளுக்கு அதை போட்டு விட்டான்.
ஏனோ கையில் கொடுத்திருந்தால் மறுத்திருப்பாள். இப்போது அவனே போட்டு விடவும், அவளால் மறுக்க முடியவில்லை. கவி அமைதியாய் இருக்க, “என்ன குட்டிமா? இப்ப ஒகேவா?” என்றான்.
“ம்” என்று விழி சந்தோஷப்பட, கவியோ வேந்தனை முறைத்தாள். ஆனாலும், “சரி வா” என்று விழியையும் தங்களோடு அழைக்க, அவளோ, “ம்ஹூம் நீங்க மட்டும் போயிட்டு வாங்க” என்றாள் விழி.
உடனே வேந்தனைப் பார்த்த கவியோ, “அவளுக்காக என்னை செயின்ன போட்டுக்க சொன்னீங்கத்தான. இப்போ எனக்காக, அவள கூட்டிட்டு வாங்க” என்று உத்தரவாய் சொல்லிவிட்டு அவள் வெளியில் சென்றாள். அதில் வேந்தனோ இப்போது தங்கையைப் பார்த்தான்.
(ஆனாலும் வேந்தா உன்ன பார்த்தா எனக்கே கஷ்டமாத்தான் இருக்கு. இந்த ரெண்டு பேர்கிட்ட சிக்கி என்னாகப் போறீயோ? செரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
💕💕💞💞💕💕💕💕