தங்கையிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்ட வேந்தன், அதன் பின் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்தப்படி, தன் அறைக்குள் நுழைந்தான். அங்கே கவியோ அவனை முறைத்தப்படி நின்றிருந்தாள். அவனோ அப்படி ஒருவள் நிற்பதை கூட கண்டுக் கொள்ளாமல், இரவு உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் செல்ல முயன்றான்.
“ச் இங்க ஒருத்தி நிக்கிறேன்னே, அது கண்ணுக்கு தெரியுதா? இல்லையா? அவர் பாட்டுக்கு போறாரு” என்று இவள் முனுமுனுக்க, “கண்னுக்கு தெரிஞ்சதாலத்தான், பாத்ரூமுக்குள்ள போயி ட்ரஸ் மாத்த நினைச்சேன். பட் நீ ரொம்ப வருத்தப்படுறீயே. சரி இங்கேயே வச்சி மாத்திக்கிறேன்” என்று சீண்டலாய் சொல்லியப்படி சட்டையை கழட்டினான்.
அவனின் செயலில், அவளோ, “ஐயோ கடவுளே. தயவு செஞ்சு பாத்ரூமுக்குள்ள போங்க” என்று அவனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றாள். அவளைப் பார்த்து சிரித்தவனோ, “என்னடா இது? அதத்தான முன்னாடியே பண்ணப் போனேன். நீத்தான், வருத்தப்பட்ட” என்றான்.
“ஆமா, நான் தான். நான் தான் எல்லாத்துக்கும் காரணம். போதும்மா? தயவு செஞ்சு போங்க” என்று கடுப்பாய் அவள் சொல்ல, “என்னமோ உன் இஷ்டத்துக்கே என்னை ஆட்டி வைக்கிற. பரவாயில்ல” என்று கிண்டலாய் சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் சென்றான்.
கதவு சாத்தப்படும் ஓசை கேட்டப் பின்னே திரும்பியவள், “ஐயோ இவர்கிட்ட ஏதாச்சும் ஒன்ன பேச முடியுதா?” என்று தனக்குள்ளே புலம்பினாள்.
“அவர் பேசுனத ஆரம்பத்துலையே நீ கேட்டிருந்தா, உனக்கு இப்படி நின்னு புலம்ப வேண்டிய அவசியம் வந்திருக்குமா?” என்று அவளின் மனம் நக்கலாய் கேட்டது.
“ச் இது வேற. இருக்கிற பிரச்சனையில, நீயும் அவருக்கு சாதகமாவே பேசுன, அவ்வளவுத்தான். நீ என்னோட மனசா? இல்ல அவரோட மனசா?” என்று அதையும் திட்டி அடக்கினாள்.
அதன் பின், சற்று அமைதியாய் அமர்ந்திருக்க, அவனோ உடை மாற்றி வெளியில் வந்தான். வந்தவனின் பார்வை அவளின் மீது விழ, “இப்போ எதுக்கு இவ இப்படி உட்கார்ந்திருக்கா? ஏண்டா வேந்தா. கெட் ரெடி பார் தி ஆவெஞ்சர் மூட். எப்படியும் ஏதாச்சும் ஏழரையாத்தான் யோசிச்சு வச்சிருப்பா. சோ டென்சன் ஆகாம கூலா ஹேண்டில் பண்ணு” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், அமைதியாய் படுக்க சென்றான்.
அதில் அவளின் பொறுமை காற்றில் பறக்க, “உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க?” என்று கோவமாய் கேட்டாள்.
“நைட் நேரத்துல புதுசா கல்யாணம் பண்ண பொண்டாட்டி பக்கத்துல இருக்கிறப்ப ஒருத்தன் என்ன நினைச்சிட்டு இருப்பானோ? அதத்தான் நினைச்சேன்” என்று அசராது சொல்லியவனின் பார்வை நொடி நேரத்தில் அவள் உடலை சிலிர்க்க வைத்து வியர்க்க வைத்தது.
அவன் பேச்சில் உடல் கூச, முகமோ சிவக்க, கண்களோ கோவத்தை காட்ட, மூச்சுக்காற்றோ அனலை கக்கியது.
அவளுடைய அத்தனை உணர்வுகளையும் தனக்குள் அடக்கி, “அது என்னென்னு நான் வேணும்னா செஞ்சி காமிக்கட்டுமா?” என்று கேட்டு கண்ணடித்தான்.
அதில் சட்டென்று இவ்வுலகம் வந்து, “உங்கள கொல்லப் போறேன்” என்று கோவமாய் கூறினாள்.
“ஏற்கனவே உன் அழகால என்னை கொன்னுத்தான வச்சிருக்க. இன்னும் வேற தனியா கொல்லனுமா?” என்று படு நக்கலாய் கேட்டான்.
“இப்படி பைத்தியம் மாதிரி பேசிட்டு திரியாம நான் சொல்றத கொஞ்சம் கேட்டு தொலைங்களேன்” என்று கோவத்தை உள்ளடக்கி அவள் கேட்க, அவனோ, “சரி நீயாச்சும் தெளிவா ஏதாச்சும் சொல்லு. நான் கேட்டுக்கிறேன்” என்று அசராது கூறினான்.
“இங்கப்பாருங்க வேண்டாம்” என்றவள் பொறுமையை இழுத்துப் பிடிக்க முயற்சிக்க, “இப்போ நான் என்னத்த கொடுத்தேன்னு வேண்டாம்னு சொல்ற? ஒரு வேள இனி கொடுக்கப் போறத சொல்றீயா? இல்ல இதுக்கு முன்னாடி கொடுத்தத சொல்றீயா?” என்றவனின் பார்வை இப்போது அவள் இதழை தொட்டு மீண்டது.
அதில் மீண்டும் அவள் உடல் அதிர, அதில் அவனை முறைத்து, “இந்த பேச்செல்லாம், கட்சி மீட்டிங்கோட நிறுத்திக்கோங்க. என்கிட்ட வேண்டாம்” என்றாள்.
“சரி இனி எதுவுமே பேசல. செயல்ல காமிக்கட்டுமா?” என்று கேட்டப்படி அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான் சுடர் வேந்தன்.
“ஐயோ சுடர். ப்ளீஸ். என்னை கொஞ்சம் பேச விடுங்க. நான் உங்க கிட்ட பேசனும்” என்று அழாத குறையாய் கெஞ்சினாள்.
அதன் பின்னே சற்று சாதாரணமானவன், “அப்படி வாடி என் செல்லக்குட்டி. இதுக்கப்புறம் எப்படி நீ என்கிட்ட கண்டிஷன் போடுறேன்னு நான் பாக்குறேன்” என்று தனக்குள்ளே சொல்லியப்படி, “சரி சொல்லு. என்ன பேசனும்?” என்றப்படி அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தான்.
அதில் அவளோ ஒரு நொடி தயங்கி பின், “சார். என்னை ஏதாச்சும் ஒரு ஆசிரமத்துல சேர்த்து விடுறீங்களா?” என்றாள்.
அவள் வார்த்தையில் கோவம் கனன்றாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாது, “நான் ஏன் உனக்காக அத செய்யனும்? உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?” என்று அசராது கேட்டான்.
அவனின் வார்த்தையில் ஒரு வித கோவமும், வருத்தமும் எழுந்தாலும், அதை சொல்லாது “அதேத்தான் நானும் சொல்றேன். எந்த சம்பந்தமும் இல்லாத ஒருத்திய எதுக்கு உங்க வீட்டுல வச்சிட்டு இருக்கீங்க?” என்றாள் அவள்.
“என் தங்கச்சி ஆசைக்காக, நான் என்ன வேனும்னாலும் பண்ணுவேன்” என்றான். “அப்போ இந்த உலகத்துல உங்க தங்கச்சிக்கு மட்டும் தான் ஆசை இருக்குமா? ஏன் எங்களுக்கெல்லாம் இருக்காதா?” என்றாள்.
“ம் இருக்கலாமே. ஆனா, அத பத்துன கவல எனக்கு கிடையாது. ஈவன் அத நான் ஏன் நிறைவேத்திக் கொடுக்கனும்?” என்று அசராது கேட்டான்.
“சரி நீங்க நிறைவேத்தலாம் வேண்டாம். அட்லீஸ்ட், என்னை இங்க இருந்து அனுப்பவாச்சும் செய்யலாமே. எனக்கு இங்க இருக்க சுத்தமா பிடிக்கல” என்றாள்.
“அதப் பத்தி எனக்கு கவலை கிடையாது” என்று அவன் சொல்ல, “ப்ளீஸ் சார். என் மனசையும் கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரைப் பண்ணுங்க” என்றாள்.
அதில் கோவத்தை இழுத்துப் பிடித்து, “ஏதோ ஒரு ஆசிரமத்துல இருக்கிறதுக்கு, என் தங்கச்சி ஆசைக்காக இங்க இருந்துட்டு போ” என்றான்.
“நான் நிம்மதியா மூச்சு கூட விட கூடாதுன்னு நீங்க நினைக்கிறீங்களா?” என்று கலங்கிய கண்களை இழுத்துப் பிடித்துக் கேட்டாள். அவள் கண்ணீர் இவனின் உயிரை இறுக்கிப் பிடிக்க, இருந்துமே, அசராது, “என் மூச்சு நின்னுட்டா, நீ நிம்மதியா மூச்சு விடலாம்.” என்று நிறுத்தினான்.
அவனின் வார்த்தையில் அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ அத்தனை இறுக்கமாய் நின்றிருந்தான். அவன் முகமே பாறையை விழுங்கியது போல் இருக்க, இங்கே இவளும் கோவத்துடன் அவனைப் பார்த்தாள்.
“சோ இங்க இருக்கிற வரைக்கும், நான் சீக்கிரமா செத்துப் போகனும்னு, உன் கடவுள் கிட்ட வேண்டிக்கோ” என்று சொல்லி முடிக்கும் முன்னே, அவன் கன்னத்தில் அடித்திருந்தாள். அவள் அடிக்கவும், இவனோ கோவமாய், “என்ன? நீ நினைக்கிறதத்தான நான் சொல்லிட்டு இருக்கேன். எங்க உன் மனசாட்சிய தொட்டு சொல்லு. நான் உயிரோட இருக்கனும்னு நீ ஆசைப்படுறீயா? இல்லத்தான” என்றான் அவன்.
“என்னப் பேசுறீங்க நீங்க?” என்று இவள் கோவமாய் கேட்க, “என்ன? இல்லன்னு சொல்லப் போறீயா?” என்று நக்கலாய் கேட்டவன், அவள் கழுத்தில் கிடந்த தாலியை எடுத்து வெளியில் போட்டவன், “இது என்னென்னு என்னை விட உனக்கு நல்லா தெரியும்த்தான? இத ஒருத்தன், ஒருத்தி கழுத்துல கட்டுனா, அதுக்கு என்ன மதிப்புன்னும் தெரியும்ல? அப்படி தெரிஞ்சிருந்தும். இதுவரைக்கும் இந்த தாலிக்கு நீ என்ன மரியாதை கொடுத்திருக்க? உனக்கு பிடிக்குது? பிடிக்கல. ஆனா உன் கண்ணு முன்னாடி நான் இன்னும் உயிரோடத்தான நின்னுட்டு இருக்கேன். ஆனா என்னிக்காச்சும், அதுக்காகவாச்சும், குங்குமத்தையோ, இல்ல பூவையோ வச்சிருக்கீயா நீ? ஏன்னா, உன்னைப் பொறுத்த வரைக்கும் உன் புருஷன் செத்துட்டான். அதனால அத நீ தொட மாட்ட. அப்போ, அதுக்கான அர்த்தம் என்ன? நான் உயிரோட இருந்தாலும், இல்லன்னாலும், உனக்கு எந்த கவலையும் கிடையாது. அவ்வளவுத்தான நீ கவலையே படாத. எனக்கு இருக்கிற அரசியல் எதிரிங்களுக்கு, ஒரு நாள் நான் பலியாகத்தான் போறேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ. அதுக்கப்புறம் சந்தோஷமா நீ நினைச்ச மாதிரி எங்க வேனும்னாலும் போகலாம். பட் அப்பவும் நீதான் என் தங்கச்சிய பாத்துக்கனும். ஏன்னா, என்னால இந்த உலகத்துல உன்னை தவிர வேற யார்கிட்டையும் என் தங்கச்சிய ஒப்படைச்சிட்டு போக முடியாது. அவள உனக்கு பிடிக்கும். ஆனா என் தங்கச்சியா உனக்கு வேண்டாம் அப்படித்தான? சரி சீக்கிரமே நான் போயிடுறேன். அதுக்கப்புறமாச்சும், நீ நிம்மதியா இரு” என்று ஒவ்வொரு வார்த்தையிலும் அவளை சவுக்கால் அடித்து விட்டு அமைதியாய் சென்று கட்டிலில் படுத்தான் வேந்தன்.
இங்கே இவளோ அவனின் வார்த்தையில், அப்படியே சிலையாய் நின்றிருக்க, எதிரே இருந்த கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தாள்.
அவன் சொல்லியது போல், அவள் சுமங்கலி என்பதற்கான எந்த அடையாளமும் அவளிடம் இல்லை. ஆனால், அவள் எப்போதுமே அப்போது இருந்துத்தானே பழக்கம். அவளுடைய முந்தைய வாழ்க்கையில் அவளுக்கு முகம் கழுவ கூட நேரம் இருக்காது. அதை மீறி என்றாவது கோவிலுக்கு செல்ல என்று ஒரு நல்ல சேலையை கட்டினால் கூட, அந்த ஒருவனுக்கு அது பிடிக்காது. அவனுக்கு மட்டும் அல்ல, அவன் குடும்பத்துக்கே பிடிக்காது. வார்த்தையால் அவளை சாட்டுவார்கள். அதனாலையே எப்போதும் அழுக்கு உடையிலேயே இருந்து பழகிவிட்டாள். ஆனால், அதிலுமே அழகாய் இருப்பவளின் அந்த அழகே, அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பற்றிக் கொண்டுத்தான் வரும்.
அதிலும் புருஷனாய் இருந்தவனுக்கு, அந்த அழகு கூட போதையில் மட்டுமே கண்ணுக்கு தெரியும். அதனாலையே அவள் அவளை அலங்கரித்துக் கொண்டது இல்லை. கல்லூரி படிக்கும் வரையில் விழியின் கட்டாயத்தால், வேந்தன் கொடுக்கும் உடைகளை எல்லாம் அணிந்துக் கொள்வாள். அவள் அநாதைப் பெண் என்று, அவளே சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். அதற்கு முழு காரணம். வேந்தனும், விழியும். தங்கைக்கு என்ன வாங்குகிறானோ, அது கவிக்கும் வாங்கி விடுவான். விழி எப்படியும் அதை கவியிடம் கொடுத்து விடுவாள். விழியிடம் இருக்கும் பொருட்களை விட கவியிடம் நிறைய பொருட்கள் இருக்கும். ஏனெனில் விழியே முக்காவாசியை அவளிடம் சேர்த்து கொடுத்து விடுவாள். அவள் கல்லூரி படிக்கும் வரையிலும் அலங்காரத்துக்கு பெரிதாய் மெனக்கெட மாட்டாள். நெற்றியில் வைக்கும் கருப்பு பொட்டு ஒன்றே அவள் பால் நிற தேகத்துக்கும், வட்ட நிலவென இருக்கும் முகத்துக்கும் போதுமானதாய் இருக்கும். அதற்கே அவள் அழகில் மயங்கியவர்கள் கொள்ளைப் பேர்.
இப்போது தன்னை மீண்டும் அந்த கண்ணாடியில் பார்த்தாள். பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும், அவள் ஏற்றுக் கொண்டாளோ? இல்லையோ, அவள் தற்போது கட்டியிருக்கும் சேலையின் மதிப்பு குறைந்தது ஐயாயிரம் ரூபாயாவது இருக்கும். அவன் அவளுக்காய் வாங்கி அடுக்கியிருக்கும் சேலையில் குறைந்த மதிப்பே அதுத்தான். அப்படி இருக்க அதைத் தான் கட்டியிருக்கிறாள். கழுத்தில் பதினொரு பவுன் தங்க தாலி பிடித்தோ, பிடிக்காமலோ தொங்கிக் கொண்டிருக்கிறது.
வெறும் கையுடன் சுற்றியவளை விழிப் பிடித்து இரண்டு தங்க வலையல்களை போட்டு விட்டுள்ளாள். ஏற்கனவே அவள் காதில், அவளுக்கு பிடித்தமான இதய வடிவிலான தங்கத் தோடு, தொங்கிக் கொண்டுத்தான் இருந்தது.
சட்டென்று யார் பார்த்தாலும், கழுத்தில் கிடக்கும் தாலியை ஒதுக்கிவிட்டு, சொன்னால், கல்லூரி மாணவி போல், விழியின் தங்கை என்று சொன்னால் கூட பொருந்திப் போகும். ஆனால் பூவோ? பொட்டோ எப்போதுமே வைத்ததில்லை. அதனால் அவள் வைக்கவில்லை. ஆனால் இப்போது இவன் இப்படி சொல்லவும், அவளுக்கு எதுவுமே புரியவில்லை.
சில நொடி அப்படியே நின்றவள், அடுத்த நொடி உறங்கிக் கொண்டிருந்தவனை வேகமாய் சென்று உழுப்பினாள்.
(ஏன்மா, பொறும பொறும. ஐயோ பாவம் சுடரு. இதுக்கு என்னாகப் போறான்னோ? அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
nice 🙂🙂🙂🙂🙂👍