தேன் – 27

ஏதோ ஒரு வேகத்தில் கவி, வேந்தனின் சட்டையைப் பிடித்து பேசியிருக்க, அவனோ அதை சாதகமாய் பிடித்துக் கொண்டு, அவள் இதழோடு இதழ் தொடும் தூரம் நெருங்கி, “மிச்சத்த இப்பவே கூட கொடுக்கலாம். ஐயம் ரெடி” என்றான்.

அவனின் பேச்சில்த்தான், இத்தனை நேரம் என்னப் பேசிக் கொண்டிருந்தோம்? என்பதே மண்டையில் உரைக்க, சட்டென்று அவன் சட்டையை விட்டு விட்டு, பின்னே செல்ல முயன்றாள். ஆனால் அதற்குள்ளாக, அவள் இடையோரம் கைக் கொடுத்து இழுத்துப் பிடித்து, “கொடுக்கிறேன்னு சொல்லிட்டு, விலகுனா என்ன அர்த்தம்?” என்றான்.

“என்ன..ப் ப..ண்றீ..ங்க. உங்..க தங்.க..ச்சி இங்க.த்..தான் இரு..க்கா” என்று திக்கி திணறி அவள் சொல்லி முடிக்க, அவளை இன்னுமே இறுக்கிப் பிடித்தான்.

“சார்” என்றவள் தன் பலம் கொண்டு அவனை விலக்க முயற்சிக்க, அவனோ, “நீத்தான சொன்ன. அப்போ கொடு” என்று வம்படியாக கூறினான்.

“ச் சார்” என்றவள் உதவிக்கு விழியை அழைக்க நினைக்க, அங்கே அவள் இல்லை. “இவ எங்கப் போனா?” என்று சுற்றி முற்றி கவித் தேட, “என் தங்கச்சிக்கு, உன்னை விட விவரம் ஜாஸ்தி” என்று சீண்டலாய் சொல்லி சிரித்தான் வேந்தன்.

“துரோகி” என்று தன் தோழியை மனதினுள் திட்டியவள், இப்போது, “ச் என்னை விடுங்க” என்று கோவமாய் அவன் நெஞ்சில் கை வைத்து விலக்கி தள்ளினாள்.

அதில் மெல்ல அவள் இடையை விடுவித்து அவள் கரத்தைப் பிடித்திழுத்து, “விட முடியாது” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான்.

அவன் குரலை விட, அவன் கண்ணில் தெரிந்த அந்த அழுத்தத்தில், அவள் இமைக்க மறந்து அவனைப் பார்த்தாள்.

சில நொடிகளில், மீண்டும் அவள் அவனிடம் இருந்து திமிற, அவள் கரத்தை விடுவித்தவன், “என் குட்டிமா ஆசைய என்னிக்குமே, என்னால மறுக்க முடியாது. சோ” என்றப்படி அவளைப் பார்த்தான்.

அதில் இவளோ சிறு கடுப்புடன், “உங்க தங்கச்சி, உங்க தலையில மட்டும் இல்ல, அவ தலையிலையும் சேர்த்து மண்ணள்ளி கொட்டிட்டு இருக்கா. கண்டிக்க வேண்டிய நீங்களே, இப்படி இருக்கிறப்ப, எனக்கென்ன வந்திச்சு? என்னமோ பண்ணிட்டு போங்க. ஆனா என்னால எல்லாம் உங்க ஆபிஸ் வந்து வேலைப் பார்க்க முடியாது” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

“என் மேல சத்தியம் பண்ணியிருக்க” என்று நக்கலாய் வேந்தன் சொல்ல, அப்போதே, ஏதோ ஒரு வேகத்தில் அவள் செய்த விஷயமே நினைவுக்கு வந்தது. அதில் ஒரு வித இயலாமையுடன், “ப்ளீஸ் சார். அவ தான் புரிஞ்சிக்காம நடந்துக்கிடுறான்னா, நீங்களும் ஏன் இப்படி பண்றீங்க? என்னால எப்படி உங்க ஆபிஸுக்கு வந்து வேலைப் பார்க்க முடியும்?” என்று கெஞ்சலாய் கேட்டாள்.

அவள் கெஞ்சல் பார்வை அவனின் மனதை கரைக்க முயன்றாலும், அதை இழுத்துப் பிடித்து, “சரி அப்போ எனக்கு கொடுக்கிறதா சொன்னத கொடு. நான் வேணும்னா, உனக்காக, என் குட்டிமாக்கிட்ட பேசிப் பார்க்குறேன்” என்று சீண்டலாய் கூறினான்.

அவனின் சீண்டலில், இன்னும் எரிச்சலானவளோ, “உங்களுக்குலாம் புரியவே புரியாதா? எனக்கு உங்கள பிடிக்கல. என்னை விட்டு போங்களேன்” என்று கடுப்பாய் கூறினாள்.

அவனோ, “எனக்கும் தான் உன்னைப் பிடிக்கல. ஆனாலும் என்னால விட முடியாது” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான்.

அவனின் பேச்சில் இன்னும் இன்னும் அவனை முறைத்தவள், “உங்களுக்கும், உங்க தங்கச்சிக்கும் பட்டாத்தான் புத்தி வரும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

“நீத்தான் நிறையா பட்டிருக்கீயே. அப்பக் கூட உனக்கு புத்தி வந்த மாதிரி தெரியல” என்று சிறு அழுத்தம் கூட்டி அவன் சொல்ல, அதில் அவனை திரும்பிப் பார்த்தவளோ, “அது என் தலையெழுத்து. காலம் புல்லா, கஷ்டப்படனும்ன்ற வரத்த வாங்கிட்டு வந்திருக்கேன். ஆனா உங்க ரெண்டு பேருக்கு என்ன வந்திச்சு? உங்களுக்கு கிடைச்ச அழகான வாழ்க்கைய ஏன் எனக்காக கெடுத்துக்கிடுறீங்க?” என்று கோவமாய் ஆரம்பித்து கவலையாய் கேட்டாள்.

“உனக்கு கூட அழகான வாழ்க்கை இருக்கு. அத நீ புரிஞ்சிக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறப்ப, எங்க வாழ்க்கைய பத்தி மட்டும் நாங்க ஏன் கவலைப் படனும்?” என்று விடாது கேட்டான் வேந்தன்.

அதில் சென்ற வேகத்தில் மீண்டும் திரும்பி வந்தவளோ, “இப்போ என்னய்யா உன் பிரச்சன? முத்தத்த கொடுத்தா, என்னை மொத்தமா விட்டுடுவீயா?” என்று எரிச்சலாய் கேட்டாள்.

“ம் அத நீ முதல்ல கொடு. விடுறதா? இல்ல விட்டு பிடிக்கிறதான்னு பாக்குறேன்” என்று அசராது அவன் சொல்ல, அவன் நெஞ்சிலேயே கடுப்பாய் அடித்தாள் அவள்.

அவள் அடித்த அடியை வழக்கம் போல் சிறு சிரிப்புடன் நின்று வாங்கிக் கொண்டவன், சட்டென்று அவளை தன்னோடு இறுக்கி, “அடிக்கிறப்பையே விட மாட்டேன். அப்படி இருக்கிறப்ப, கிஸ் கொடுக்கிறப்ப எப்படி விடுவேன்” என்று கிசுகிசுப்பாய் அவளிடம் ரகசியம் உரைத்தான்.

அவனின் பேச்சில், “ச் என்னை விடுங்க. உங்களுக்கும், உங்க தங்கச்சிக்கும் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு” என்று அவனை விட்டு விலகி நின்றாள்.

“நீ ரொம்ப தெளிவாத்தான இருக்க? அப்போ நீயே எங்கள பாத்துக்கோ” என்று அசராது கூறினான்.

“ஐயோ கடவுளே” என்று அவள் காதை இறுக்கி மூடிக் கொள்ள, “அந்த கடவுள் இல்ல, எவன் வந்தாலும், இந்த வேந்தன் எடுத்த முடிவ மாத்த முடியாது” என்றான்.

அதில் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டவள், “சரி நான் உங்க ஆபிஸுக்கு வரேன். ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன்” என்றாள்.

“இந்த வேந்தனுக்கே கண்டிஷன்னா? சரி சொல்லு கேட்போம்” என்று நக்கலாய் அவன் சொல்ல, அதில் அவனை முறைத்தவளோ, “நீங்களோ, உங்க தங்கச்சியோ, என்னை உங்க ஒயிப்ன்னு, அங்க யார்ட்டையும் சொல்லக் கூடாது” என்றாள்.

“ஏனாம்?” என்று அவன் படு நக்கலாய் கேட்க, “என்னிக்குமே, என்னால உங்க ஒயிப்பா நினைக்கவும் முடியாது. நடந்துக்கவும் முடியாது. சீக்கிரமே, நான் உங்கள விட்டு போயிடுவேன்” என்று கூறினாள்.

அதில் அவளை ஒரு நொடி அழுத்தமாய் பார்த்தவன், “நானும் உன்னை ஒன்னும் என் ஒயிப்பா நினைக்கவே இல்லையே. இதெல்லாம் என் தங்கச்சிக்காக மட்டும் தான்” என்று வேண்டுமென்றே கூறினான்.

அதில் அவளுக்கோ இன்னும் எரிச்சல் தான் கூடியது. அதோடு சேர்த்து மெல்லிய வருத்தமும் இளையாடியது. இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது, “ரொம்ப சந்தோஷம்” என்றாள்.

“எனக்கும் தான். இனிமே இருபத்தி நாலு மணி நேரமும் என் கூடவேத்தான இருக்கப் போற. சோ உன்னோட சந்தோஷத்துக்கு நான் கியாரண்டி” என்று படு நக்கலாய் கூறினான் வேந்தன்.

அதில் இவளோ, “ச்சே. உங்க கிட்டலாம் பேசவே முடியாது” என்று தலையில் அடித்துக் கொண்டு அவள் படியேற, “ஹேய்” என்றான் வேந்தன்.

“ச் எனக்கென்ன பேரே இல்லையா? எப்போ பார்த்தாலும் ஹேய் ஹேய்ன்னுட்டு” என்று மனதிற்குள் புலம்பியவள், அவனை நிமிர்ந்துப் பார்த்து, “இன்னும் என்ன?” என்றாள்.

“நீ கொடுக்கிறதா சொன்ன விஷயத்த இன்னும் நீ கொடுக்கவே இல்லையே. எப்போ கொடுப்ப?” என்றான்.

அதில் இவளுக்கோ இன்னும் கோவம் கூட, அவனை அடிக்க ஏதாவது கையில் கிடைக்கிறதா, என்று சுற்றி தேடினாள். அதைக் கவனித்தவனோ, “என்ன? யாராச்சும் இருக்காங்களான்னு பார்க்குறீயா? அதெல்லாம் நான் இங்க இருக்கிற வரைக்கும் யாரும் வர மாட்டாங்க. தாராளமா நீ கொடுக்கனும்னு நினைக்கிறத கொடுக்கலாம்” என்று அசராது கூறினான்.

அதில் கைக்கு கிடைத்த பிளவர் வாட்ஸை தூக்கி அவள் எறிய, வேந்தன் லாவகமாய் விலகிக் கொள்ள, அது சரியாக அப்போது உள்ளே வந்த அருளின் தலையிலேயே பட்டது.

“ஐயோ கொலை கொலை” என்று அருள் தலையைப் பிடித்துக் கொண்டு கத்த, “ஐய்யய்யோ” என்ற கவி வேகமாய் மாடி ஏறி ஓடியிருக்க, வேந்தனோ வாய் விட்டு சிரித்தான்.

அவன் சிரிப்பதை உலகத்தின் ஏழாவது அதிசயமாய் வேடிக்கை பார்த்த அருளுக்கு, வலி கூட மறந்துத்தான் போனது.

“நம்ம சாருக்கு இப்படி சிரிக்கலாம் தெரியுமா?” என்று மனதிற்குள் அவன் கேட்க, “என் பர்மிஷன் இல்லாம இப்படி வீட்டுக்குள்ள யாரும் வரக் கூடாதுன்னு உனக்கு தெரியுமா? தெரியாதா?” என்று கடுப்பாய் கேட்டான் வேந்தன்.

நொடியில் அவன் தன்னை மீட்டு இறுக்கமாகியிருக்க, அருளுக்கோ, ஒரு நொடி அவன் சிரித்தது தன் கற்பனையோ என்றுத்தான் தோன்றியது.

“தலையில அடிப்பட்டதுல நடக்காத விஷயம் எல்லாம் நடந்த மாதிரி தெரிஞ்சிருக்குமோ?” என்று தனக்குள்ளே கேட்டவன், வேந்தனையே பார்த்தான்.

“ச் உன்கிட்டத்தான கேட்குறேன்” என்று வேந்தன் குரலை உயர்த்திக் கேட்க, “ஆ.ங் சார். இல்ல. அது” என்று அவன் தடுமாற, “ச் என்ன விஷயம்” என்றான்.

“அது வந்து சார்” என்ற அருளோ, தான் வந்த நோக்கத்தை சொல்ல, அதைக் கேட்ட வேந்தனுடைய புருவங்கள் முடிச்சிட்டது. அதில் ஒரு நொடி அவன் நிமிர்ந்து மேலே பார்த்தான். கவியோ அவனைத் தான் பார்த்திருந்தாள்.

அதில், அருளிடம் கோவமாய் ஏதோ பேச நினைத்தவன், அதை செய்யாது, அவளைப் பார்த்து கண்ணடித்து விட்டு, அவனுடன் வெளியில் சென்றான்.

அவனின் செயலில், இவளின் இதயமோ ஒரு நொடி தடுமாறி அடுத்த நொடி, “ச் பக்கத்துல ஆள் இருக்குன்ற பயம் கூட இல்ல” என்று வாய்விட்டே திட்டினாள்.

“கவலைப்படாத டார்லிங். நான்லாம் எதையுமே பாக்கல” என்று அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கூறினாள் விழி.

அவளை எதிர்பார்க்காதவளோ, ஒரு நொடி பதறி, அடுத்த நொடி, “ஆ.ங் இல்ல” என்றவள் வெகுவாய் தடுமாறினாள். அவள் தடுமாற்றத்தைப் பார்த்து சிரித்தவளோ, “ஆனாலும் கவி. எனக்கு உன் மேல கோவம் தான்” என்றாள்.

“என்ன? நான் என்னப் பண்ணேன்?” என்ற கவி சற்று தடுமாற, “ஆமா! கடைசி வர அந்த கிஸ் சீன்ன என்னைப் பாக்க விடலையே நீ” என்று நக்கலாய் சொல்ல, கவியோ விழியை முறைத்தாள்.

அவள் முறைப்பதைப் பார்த்து இன்னும் சிரித்த விழியோ, “சரி, எப்படியும் நம்ம ஆபிஸுக்கு ஒன்னாத்தான போகப் போறோம். அங்க நடக்கப் போற லவ் சீன்ஸ் எல்லாத்தையும் பாத்துக்கிடுறேன்” என்று நக்கலாய் கூறினாள்.

அதில் கவியோ, “ச் நான் சொல்றத நீயாச்சும் கேளு விழி” என்று அவள் சொல்ல முயற்சிக்க, அவளை பேச விடாது, அவளை இழுத்துக் கொண்டு, அறைக்கு சென்றிருந்தாள்.

அதன் பின் தாமதமாய் வந்த வேந்தனோ, என்னத்தான் கவியிடம் விளையாடினாலும், அவனுக்குமே அவனுடைய தங்கச்சியின் எதிர்காலம் முக்கியமாயிற்றே. அதனால் தங்கையை அழைத்து தனியே பேசினான்.

“இங்கப்பாரு குட்டிமா. அண்ணன் எப்பவுமே, உன் ஆசைக்கு குறுக்க நிக்க மாட்டேன்னு உனக்கே தெரியும். பட், அண்ணன் ஆபிஸுக்கு வரனும்னு நீ நினைக்கிறது” என்ற வேந்தன் சற்று தடுமாறி தங்கையைப் பார்த்தான்.

“எனக்கு முன்னாடி பாலிடிக்ஸ் எல்லாம் பிடிக்காதுத்தான்னா. ஆனா இப்போ அப்படி இல்ல. எனக்குமே அதுலத்தான் இண்ட்ரஸ்ட். அதான் நீங்க எங்க கூடத்தான இருக்கப் போறீங்க. அப்புறம் என்ன பயம்?” என்று தெளிவாய் அவள் மேலும் சில விஷயத்தை சொல்ல, அவனும், “சரிடா. அப்போ அதுக்கான வேலைய அண்ணன் பாக்குறேன்” என்று சொல்லிவிட்டு அவனுடைய அறைக்கு சென்றான் வேந்தன். அங்கே கவியோ அவனை முறைத்தப்படி நின்றிருந்தாள்.

(இப்போ நீ ஏன்மா முறைக்கிற? சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 27 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***