அறைக்கு வந்த கவியோ, வந்த வேகத்தில் பெட் சீட் ஒன்றை எடுத்துக் கொண்டு சோபாவில் படுத்து விட்டாள். சில நிமிடங்களுக்குப் பின் வந்தவனோ, அப்படி ஒருவள் அறைக்குள் இருக்கிறாள், என்ற நினைவே இல்லாது, அணிந்திருந்த உடையை கழட்டினான். இங்கே அவன் உள்ளே நுழையும் சத்தம் கேட்டு, அவள் எழுந்தமர, அவனின் சட்டையில்லாத தேகத்தைப் பார்த்து “ஐயோ” என்று சட்டென்று கத்தி கண்ணை மூடினாள்.
அவள் கத்தவும், ஒரு வித பதட்டத்தோடு, கையில் எடுத்த சட்டையைக் கூட மாற்றாது, “என்னாச்சு?” என்றப்படி அவளின் அருகில் வந்தான்.
அவனுக்கே உண்டான வாசம், அவள் நாசியை நிறைக்க, இன்னுமே அவள் தேகம் தொட்டு விடும் தூரத்தில், அவன் அப்படி நின்றிருக்க, இவளோ ஒரு வித சங்கடத்தில் பெட்சீட்டை இழுத்துப் போர்த்தினாள்.
அவனோ, “என்னாச்சு? ஏன் கத்துன?” என்றவன் அவள் தாடையைப் பற்றி நிமிர்த்த, அவளுக்கோ அவனை எதிர்கொள்ள முடியவில்லை. அவன் திரண்ட புஜங்கள் ரெண்டும், அவள் மதியை மயக்க, அதிலும், அவன் திண்ணிய மார்பை முற்றும் முழுதாய் பார்க்க இயலாது, அவனுடைய மார்பு முடிகள் மெலிதாய் அதை மறைத்திருக்க, ஏனோ அதனை தொட்டு தழுவி, அதனுடன் சரிக்கு சமமாய், சண்டையிட மனம் இம்சித்தது.
அழகன் தான். ஒரு பெண்ணை மயக்கும் அத்தனை ஆண்மையும் அவனிடம் இருக்க, இங்கே இவளுக்கோ, தன் மனதில் தோன்றுவதை சகஜமாய் ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை. அதென்னவோ அவளுக்கு, தவறாய்த்தான் தோன்றியது. அதையும் தாண்டி, இவன் இப்படி வழுக்கட்டாயமாய் அவளைப் பார்க்க வைத்திருப்பது கோவத்தையும் கொடுத்தது.
அதில் அவளோ, “ச் இங்க என்ன பாடி பில்டர்க்கா ஆள் எடுக்கிறாங்க. எதுக்கு இப்படி நிக்குறீங்க” என்றப்படி அவன் கையை விலக்கி, முகத்தை திருப்பினாள்.
அதன் பின்னே அவன் சட்டையில்லாமல் இருப்பதே அவன் மூளைக்கு புரிந்தது. உடனே சட்டையை எடுக்க சென்றவன், பின் என்ன நினைத்தானோ, அதை செய்யாது, “என் விருப்பம். நான் எப்படி வேணும்னாலும் இருப்பேன். அதுனால உனக்கென்ன?” என்று வேண்டுமென்றே சீண்டினான்.
“எனக்கென்னவா? இங்க நானும் இருக்கேன்” என்று அவள் எரிச்சலாய் சொல்ல, “வேணும்னா, நீயும் என்னை மாதிரி இருந்துக்கோ. நான்லாம் எதுவும் சொல்ல மாட்டேன்” என்றான் அவன்.
அவனின் வார்த்தையில், “என்ன நானா?” என்றவளுக்கு ஒரு நொடி அந்த காட்சி கண் முன்னே வந்து ஒரு வித பதட்டத்தையும், அதிர்ச்சியையும் சேர்த்துக் கொடுக்க, அதில் அவனோ, “என்ன? நான்லாம் உன்ன மாதிரி தொட்டதுக்கெல்லாம் ரூல்ஸ் போட மாட்டேன்” என்று சீண்டலாய் கூறினான்.
“ச் உங்க கிட்ட போய் பேசுனேன் பாருங்க என்ன சொல்லனும்” என்றவள் அவன் முகத்தைப் பார்க்காது சோபாவில் திரும்பி படுத்துக் கொள்ள, அவனோ இப்போது வேண்டுமென்றே, “சேலையில இருந்தா கஷ்டமாத்தான இருக்கும்” என்றான்.
அவனின் வார்த்தையில் பெட்சீட்டை இழுத்து மூடிக் கொண்டவள், “உங்க தங்கச்சி பக்கத்து ரூம்லத்தான் இருக்கா. அத மனசுல வச்சுக்கோங்க” என்று மிரட்டலாய் சொல்ல, “அவள பொறுத்த வரைக்கும், நீ இப்போ என் ஒயிப். அவளுக்கு நீ அண்ணின்றத நீயும் மறந்துடாத” என்று சீண்டலாய் கூறினான்.
“அதென்ன அவள பொறுத்த வரைக்கும்? அப்போ” என்று ஏதோ ஒரு வேகத்தில் அவள் எழுந்து கேட்க, வந்து பின் அப்படியே அதை பாதியில் நிறுத்தி, அமைதியானாள்.
“ஏன் உன்ன பொறுத்த வரைக்கும் அப்படி இல்லத்தான?” என்று அவன் அடுத்த கேள்வியைக் கேட்டான். “ஆமா இல்லத்தான். அதத்தான் நானும் சொல்றேன். நீங்கத்தான் அத கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம தேவையில்லாத வேலை எல்லாம் பாக்குறீங்க” என்றாள்.
“இப்போ என்ன நான் பண்ணிட்டேன்? நீ என் ஒயிப் அப்படின்றதுக்காக, இப்படி உன் மடியில வந்து படுத்தேன்னா? இல்ல உன் வயித்துலத்தான் இப்படி முகத்த தேய்ச்சி, உன் இடுப்ப கடிச்சு தின்னேன்னா? இல்ல உன் சேலையத்தான் விலக்கிட்டு, இப்படி” என்றவன் சொல்லியதை எல்லாம் அப்படியே செய்திருக்க, இங்கே இவளுக்குத்தான் உயர் மின் அழுத்தம் பாய்ந்த அதிர்ச்சி.
செய்தேன்னா? செய்தேன்னா? என்று கேட்டு கேட்டு அவன் அத்தனையும் செய்திருக்க, இப்போது அவளின் உடலோ அதிர்ந்தது. அதிலும் அவள் இடையில் இன்னுமே அவனின் எச்சில் மிச்சமிருக்க, அவனின் மூச்சுக்காற்றோ, அவள் தேகத்தை சூடாக்கியது. ஒரு வேகத்தில் அவள் சேலை மாராப்பை அவன் விலக்கியிருக்க, அதிலும் மிக மெலிதாய் அவனின் விரல் வேறு, படாத இடம் பட்டிருக்க, இங்கே காளியாய் மாறியிருந்தாள் தேன் கவி.
அப்போதே அவனுக்கும் செய்த விஷயம் புரிய, அவள் அவனை தள்ளி விடும் முன்னே, சட்டென்று அவள் மடியில் இருந்து எழுந்து, “பட் இப்படி எல்லாம் இந்த வேந்தன், எப்பவுமே உன்கிட்ட நடந்துக்க மாட்டான். ஏன்னா, அன்னிக்கு சொன்னதுத்தான். நமக்குள்ள எதுவுமே கிடையாது. தேவையில்லாம எதையாச்சும் யோசிச்சு, வீணா என்னை டென்சன் பண்ணாத. எனக்கு காலையில வேலை இருக்கு. உன்கிட்டலாம் பேசிட்டு இருக்க முடியாது” என்றவன், அமைதியாய் அங்கிருந்த கட்டிலில் சென்று, அவளுக்கு முதுகு காட்டி படுத்து விட்டான்.
இப்போது அவளுக்கோ அவனை திட்டக் கூட முடியாத நிலை. அங்கே கண் மூடி படுத்திருந்தவனோ, “டேய், கிரேட் எஸ்கேப்டா. ஒரு செகண்ட் நீ லேட் பண்ணியிருந்தாலும், அவ உன்னை வச்சி செஞ்சிருப்பா. என்ன நடந்தாலும் கண்ணைத் திறந்துடாத. அப்படியே படுத்துடு” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
இங்கே இவளுக்குத்தான், அவன் மீசை முடி பதிந்த அவளுடைய ஆழிலை வயிறும், எச்சில் பட்டிருந்த அவள் இடையும், பட்டும் படாமல், மெலிதாய் அவன் விரல் தீண்டிய இடமும், ஒரு வித உணர்ச்சிப் பிடியில் சிக்க வைத்தது.
தீண்டல், சீண்டல் எல்லாம் அவளுக்கு புதிதா? என்று கேட்டால் விடையில்லை. ஆனால் இந்த உணர்வுகள். அவன் தொட்டதும் சிலிர்க்கும் இந்த உடல் அவளுக்கே புதிது. எப்போதிருந்து? அவனுடைய தொடுகைக்கு உடன்பட ஆரம்பித்தாள்?
எத்தனை உரிமையாய் அவன் அத்தனையும் செய்திருக்க, இவளுக்குத்தான் உடலெல்லாம் ஒரு வித பரவசம் பரவியது. அதே நேரம் அவளின் கடந்த காலம், அவள் வேறொருவருடன் வாழ்ந்த நினைவு அத்தனையும் வந்து இப்போது ஒரு வித வலியைக் கொடுத்தது. அதில் அவளோ, கோவமாய் தன் கையில் இருந்த தலையனையை எடுத்து அவன் மீது வீசினாள்.
அழகாய் சமாளித்து விட்டு சென்றான் தான். ஆனால். அவள் அறிவாள். அவன் அத்தனையையும் வேண்டும் என்றுத்தான் செய்தான் என்று.
“இன்னொரு தடவ, இப்படி ஏதாச்சும் பண்ணிப் பாருங்க. அதுத்தான், நான் உங்க முன்னாடி இருக்கிற கடைசி நாளா இருக்கும்” என்று சிறு கோவமும் கண்ணீருமாய் கூறினாள். அவளின் வார்த்தைக்கு பதில் கொடுக்க அவனுடைய ஒவ்வொரு நரம்பும் துடித்தது. ஆனால் ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவளை மேலும் பேசி வருத்தப்பட வைக்க மனம் வரவில்லை. அதனால் தூங்கியது போலவே படுத்திருந்தான்.
“நீங்க தூங்கலன்னு எனக்கும் தெரியும். பட் நீங்க பண்றது கண்டிப்பா சரி கிடையாது. நான் ஒன்னும், உங்க தங்கச்சி ஆசைப்படுற பொருள் கிடையாது. என்னை உங்க இஷ்டத்துக்கு இப்படி பண்றதுக்கு” என்று புலம்பியவள், அவனுக்கு முதுகுக் காட்டி திரும்பி சோபாவில் படுத்துக் கொண்டாள்.
அதன் பின்னே அவன் மெதுவாய் அவள் பக்கம் திரும்ப, அவள் அழுவது, அவள் முதுகு குலுங்குவதிலேயே தெரிந்தது. அதைப் பார்த்த வேந்தனுக்கோ மனம் அத்தனை கஷ்டமானது.
“ச் என்னடா வேந்தா? அவளுக்கான டைம்ம கூட கொடுக்காம நீ இப்படி நடந்துக்கிடுறது கொஞ்சமும் சரி கிடையாது” என்று அவன் மனசாட்சி அவளுக்காய் பேசியது.
“அவளுக்கு டைம் கொடுத்தா, ஆயுசுக்கும் என் பக்கத்துல வரவே மாட்டா. அவள பத்தி உனக்கு தெரியாது. அவ எல்லாம் இந்த ஜென்மத்துல என்னை கிட்ட விட மாட்டா” என்று பட்டென்று இவனும் பதில் கொடுத்தான்.
ஏனெனில் அவளுடைய பிடிவாதத்தை ஏற்கனவே ஒரு முறை அவன் பார்த்து விட்டானே. இப்போதும் கூட அவள் கழுத்தில் தாலி கட்டியது, அவளுடன் சேர்ந்து வாழ எல்லாம் சத்தியமாய் கிடையாது. அவள் இதற்கு மேல், அவர்களை விட்டு செல்லக் கூடாது என்பதற்காகத்தான்.
“அப்போ நீயும், மத்தவங்க செஞ்சதத்தான் அவளுக்கு பண்ணப் போறீயா?” என்று மனசாட்சி விடாது சொல்ல, அதில் ஒரு நொடி அமைதியானவன், பின், “ச் இவ ஏன் இவ்ளோ அழகா இருந்து தொலையுறா. கிட்ட வந்தாலே மனசு அலைப்பாயுது. அதுலையும் அவளோட வாசனை. அவளோட அந்த பரிஷம்” என்றவனுக்கு மீண்டுமே அவள் தேகத்தை அளந்துப் பார்க்கும் ஆசையே வந்தது.
“இதெல்லாம் தப்பு வேந்தா. அவ மனசையும் கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரைப் பண்ணு. உன் கூட இருக்கவே அவ இன்னும் சம்மதிக்கல. அப்படி இருக்கிறப்ப, அவ கூட நீ வாழ ஆசைப்படுறது கண்டிப்பா சரியா வராது. அதுலையும், நீ இப்படி அவ கிட்ட எல்லை மீறிட்டே இருந்தா, அவ எதையெல்லாம் மறக்கனும்னு, உன்கூட வச்சிருக்கீயோ? அதை எல்லாம் அவளுக்கு நீயே ஞாபகப்படுத்துற மாதிரி இருக்கும்” என்று அவனுடைய மனசாட்சி பொறுமையாய் எடுத்து சொல்லியது.
அதில் அவனுக்குமே தான் செய்த காரியம் சற்று எல்லை மீறியதாய் தோன்ற, ஆனாலும் கூட, ஏனோ, அவள் அவனுக்கு சொந்தமானவள் என்ற எண்ணம் மட்டுமே அவனிடம். அதனால், பெரிதாய் தவறு செய்த எண்ணம் எல்லாம் இல்லை. இனி சற்று அளவுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டான்.
மீண்டும் அவளைப் பார்த்தான். இப்போது அவளிடம் அசைவில்லை. அதுவே அவள் உறங்கி விட்டாள் என்பதை சொல்ல, “ச் அழுதுட்டே தூங்காதன்னா கேட்கவும் மாட்டா” என்றவன் அங்கிருந்த பிளாஸ்கில் இருந்த சுடு தண்ணீரை எடுத்துக் கொண்டு, அவளிடம் சென்றான்.
சோபா தலையனையில் இருந்த ஈரமே, அவள் எத்தனை தவித்துள்ளாள் என்பதை சொல்ல, இப்போது தொட்டு எழுப்பாது, “ஹேய்” என்றான்.
அவனின் குரல் அவள் செவியை தொட்டாலும் கூட, உறக்கத்தில் இருந்தவளுக்கு விழிப்பு தட்டவில்லை.
“ஐயோ இப்போ தொட்டாலும் பதறுவா” என்று ஒரு நொடி யோசித்தவன், அடுத்த நொடி, “தேனு” என்று மெதுவாய் அழைத்தான். அந்த குரலில், அவள் பட்டென்று கண்ணைத் திறந்து எழுந்தமர, அவனோ, இப்போது விறைப்பாய், “இந்த சுடு தண்ணிய குடிச்சிட்டு படு” என்று நீட்டினான்.
அவனின் செயலில், அவனின் மீது கோவம் கொப்பளிக்க, அவள் பார்வையில் அப்படி ஒரு அனல். அதை அறிந்தவனோ, அங்கிருந்த ஒரு பிரம்பை எடுத்து வந்து அவளிடம் நீட்டி, “உனக்கு கோவம் என் மேலத்தான. இதால ரெண்டு அடி வேணும்னா அடிச்சிக்கோ. ஆனா இந்த தண்ணிய குடி. இல்லன்னா, காலையிலையே தொண்டை கட்டிக்கும்” என்றான்.
அவன் வார்த்தையில் அத்தனை அக்கறை. அப்படியே அவள் அம்மா சொல்லும் வார்த்தை. ஏனோ இப்போது மீண்டும், சிறுமியாய் அன்னையின் மடியை அவள் தேடி அவனைப் பார்த்தாள்.
அது அவனுக்கும் புரிய, அவளின் அருகில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு அமர்ந்து, “குடி தேனு. நான் தான் சொல்றேன் தான” என்றான்.
இப்போது அதை வாங்கிக் குடித்தவள், அடுத்த நொடி அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள். அவன் செய்தால் அது பாவ செயல். இவள் செய்தால் மட்டும் அது அறியா செயல்.
மெல்ல அவள் தலையை அவன் கோதிக் கொடுக்க, இப்போது அவன் பக்கம் திரும்பி படுத்து அவன் வயிற்றில் முகத்தைப் பதித்து அவனை கட்டிக் கொண்டாள். அவளின் செயலில், அவனின் உடல் கொதிக்க, அவளோ “நான் உங்களுக்கு வேண்டாம் சுடர். ப்ளீஸ்” என்று அதையே சொல்ல, “சரிடி நீ வேண்டாம். இப்போ தூங்கு” என்றான்.
அதில் அவன் கையைப் பிடித்தவளோ, “ப்ளீஸ் என்னை விட்டுடுங்க” என்றாள். “சரி விட்டுடுறேன்” என்றவனின் கரம் அவள் கரத்தை அழுத்திப் பிடிக்க, அவளும் அவன் கரத்தை மேலும் அழுத்தம் கொடுத்து பிடித்தாள். பின் அந்த கரத்தில் அழுத்தி முத்தமிட்டு “நான் போறேன்” என்று பிடித்த கரத்தை, தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு, உறங்கியும் போனாள்.
(என்னமா உன் லாஜிக்கு? அவன் பண்ணா அழுகுற. நீயும் அதையேத்தான் பண்ற. ஆனா கேட்டா என்னையும் சேர்த்து அடிப்ப. என்னமோ பண்ணு. இந்த சுடர் பையன பாக்கத்தான் பாவமா இருக்கு. அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
என்னம்மா நினைச்சா வேந்தனா நீ சரி சொன்ன சரின்னு, தவறு சொன்ன தவறு மாதிரி சொல்றா😡💕💝💝💝💝💕💝💋💝💕