விழியின் சத்தம் கேட்டு, கவி வேகமாய் சுடரை விட்டு விலகப் பார்க்க, அதற்கு அனுமதி கொடுக்காதவன், “நான் கொடுத்தேன் தான. நீயும் திருப்பிக் கொடு” என்று அடம்பிடித்தான்.
அவனின் பேச்சில், “என்ன பேசிட்டு இருக்கீங்க? உங்க தங்கச்சி இங்கத்தான் வந்துட்டு இருக்கா? அவ முன்னாடி நம்ம இப்படி?” என்று பேசியவளின் செவ்விதழை, மீண்டும் தன் இதழ் கொண்டு மூடியவன், அப்படியே அங்கிருந்த தூணுக்கு பின் அவளுடன் சேர்ந்து மறைந்தான்.
வெளியில் வந்த விழியோ, “என்ன? இவ வெளியத்தான வந்தா? போன் பேசிட்டே எங்கப் போனா?” என்று யோசித்தப்படி தன் மொபைலை எடுக்க உள்ளே சென்றாள்.
இங்கே, கவியை மூச்சு கூட விட முடியாத அளவுக்கு, முத்தத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தவனை, தன் பலம் மொத்தமும் திரட்டி, தள்ளி விட்டாள் தேன் கவி.
அப்போதும் தன் முத்தத்தை முழுதாய் முடித்து விட்டே, விலகியவன், “ஐ லவ் யூ மை பொண்டாட்டி” என்று ஒரு விரலால் தன் உதட்டை துடைத்து, அவள் பக்கம் நீட்டி கூறினான் சுடர் வேந்தன்.
அவனுடைய இந்த செயலில், கோவம் கொண்டவள், “எனக்கு உங்கள பிடிக்கவே இல்ல” என்று கத்தினாள்.
“பரவாயில்ல. சீக்கிரமே உனக்கும் என்ன பிடிக்கும். ஒரு வேள பிடிக்கவே பிடிக்கலன்னாலும் பரவாயில்ல. நீ என் கூட வாழ்ந்துத்தான் ஆகனும்” என்று அசராது கூறினான் வேந்தன்.
அவனின் வார்த்தையில் அவள் அதிர்ந்து நிற்க, அவளை வேண்டுமென்றே சில நிமிடம் அதிர்ச்சியில் உறைய வைத்தவன், பின் மெதுவாய், “கவலைப்படாத. இன்னிக்கு எனக்கு செம்ம டயர்ட். சோ இந்த முத்தம் மட்டும் போதும். நாளையில இருந்து நம்ம மெதுவா வாழ ஆரம்பிக்கலாம்” என்று படு நக்கலாய் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் சுடர் வேந்தன்.
இங்கே கவியோ, அப்படியே அங்கேயே, அந்த தூணிலியே சாய்ந்து நின்று விட்டாள். என்ன நடந்தது? என்று யோசிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்திருக்க, வேந்தனைப் பார்த்த விழி, “அண்ணா. வந்துட்டீங்களா? ஆனா உங்க கூடத்தான கவி போன்ல பேசிட்டு இருந்தா?” என்று கேட்டாள்.
அதில் தங்கையின் காதோரம் குனிந்தவன், “உன் அண்ணிக்கு சின்னதா ஒரு கரண்ட் ஷாக் கொடுத்திருக்கேன். அதனால, தூணோட தூண்ணா நின்னு காத்து வாங்கிட்டு இருக்கா” என்று சத்தமாய் கூறினான்.
அதில் விழியோ, தன் அண்ணனை சந்தேகமாய் பார்க்க, “குட்டிமாக்கிட்ட போயி நான் பொய் சொல்லுவேன்னா?” என்று புருவம் உயர்த்திக் கேட்க, அதற்குள் இவன் பேசியதைக் கேட்டு அங்கு வந்த கவியோ, “பொய் மட்டும் தான் உன் அண்ணா பேசிட்டு இருக்காரு” என்றாள்.
“அப்படியா? என் அண்ணா என்ன பொய் சொன்னாரு?” என்று விழி கேட்க, “ஆ.ங் நேத்து உன்கிட்ட என்ன சொன்னாரு? வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னார்த்தான?” என்று மூக்கு விடைக்க கேட்டாள் கவி.
அதில் தன் அண்ணனைப் பார்த்த விழியோ, “ச் இப்போ அதுக்கு என்ன?” என்று கேட்க, “ம் என்னவா? இப்போ உன் அண்ணாக்கிட்ட அத சொல்ல சொல்லு” என்றாள் கவி.
“இவளுக்கு என்னாச்சுண்ணா? என்ன சொல்லிட்டு இருக்கா?” என்று கேட்க, “அதொன்னுமில்ல குட்டிமா. உனக்காக நான் ஒரு கல்யாணம் பண்ணிட்டேன். ரெண்டாவது கல்யாணமாச்சி எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றேன். அதுக்கு உன் அண்ணி ஒத்துக்க மாட்டேங்கிறா” என்று படு நக்கலாய் கூறினான்.
அண்ணனின் வார்த்தையில், வார்த்தைக்கு வார்த்தை அண்ணி, அண்ணி என்று வரும் போதே அண்ணனின் மனதை அறிந்த விழியோ, இப்போது கவியைப் பார்த்து, “ம் அதான அண்ணன் சொல்றதும் கரெக்ட்த்தான. அண்ணாக்கு பிடிச்ச பொண்ண பாத்து அவர் கல்யாணம் பண்ணிக்கட்டுமே. அதுல உனக்கென்ன பிரச்சன?” என்றாள்.
“ச். உன் அண்ணாக்கு மட்டும் பிடிச்சா போதும்மா? அந்தப் பொண்னுக்கு பிடிக்க வேண்டாமா?” என்று கவி எரிச்சலாய் கேட்க, “ம் என் அண்ணாக்கு பிடிச்சாலே, என் அண்ணிக்கும் பிடிச்ச மாதிரித்தான. என் அண்ணாவ யாருக்காச்சும் பிடிக்காம போகுமா?” என்று சீண்டினாள் விழி.
“நினப்புத்தான். இந்த நினப்புலத்தான், அண்ணன், தங்கச்சி ரெண்டு பேரும் ஆடிட்டு இருக்கீங்க. இதெல்லாம் கொஞ்சமும் சரி கிடையாது. ஒழுங்கா, உங்க அம்மா, அப்பா பாக்கிற பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொல்லு” என்றாள் கவி.
“இதுல என் அம்மா, அப்பா எங்க இருந்து வந்தாங்க?” என்று விழி கேட்க, “எங்க இருந்து வந்தாங்கன்னா என்ன அர்த்தம்? அவங்க உங்கள பெத்தவங்க. அவங்களுக்கு தெரியாதா? உங்களுக்கு எது சரியா இருக்கும்னு?” என்று கோவமாய் கேட்டாள் கவி.
இப்போது வேந்தனுக்கு, ஏதோ ஒன்று நெருடலாய் தோன்றியது. நேற்று வரையிலும் கூட, கவியுடைய இந்த விலக்கத்துக்கு தன்னுடைய பெற்றோர்கள் காரணமாய் இருப்பார்கள் என்று அவன் நினைக்கவே இல்லை. ஏனெனில், அவர்களுக்கு எப்போதுமே கவியை பிடிக்காது. அதே நேரம் அவர்கள் கவியுடன் பேசியது கூட கிடையாது. அப்படி இருக்க, இவளுடைய திடீர் விலகலுக்கு, அவர்கள் காரணமாய் இருப்பார்களோ? என்று யோசிக்கவே இல்லை. ஆனால் கவியுடைய வார்த்தையில், இப்போது அவனுக்கு ஒரு வேளை இருக்குமோ? என்ற சிந்தனை எழ ஆரம்பித்தது.
அதில் சட்டென்று, “என் வாழ்க்கைக்கு என்ன வேணும்? என்ன தேவைன்னு நான் தான் முடிவுப் பண்ணுவேன்” என்று அழுத்தம் திருத்தமாய் வேந்தன் சொல்ல, “ஒரு வேள அதனால உங்க தங்கச்சி வாழ்க்கையும் சேர்ந்து கெட்டுப் போச்சின்னா? என்னப் பண்ணுவீங்க?” என்று கோவமாய் கேட்டாள்.
அதற்கு வேந்தன் பதில் சொல்லும் முன்னே, “என் வாழ்க்கைய காப்பாத்திக்க எனக்கு தெரியும். அதுவும் போக என் அண்ணா இருக்கிற வரைக்கும், என் வாழ்க்க நல்லாத்தான் இருக்கும்” என்றாள் விழி.
அதில் தன் தோழியை ஒரு நொடி பார்த்த கவிக்கு, நொடிக்கும் குறைவாய், “இந்த நம்பிக்கை சில வருடங்களுக்கு முன் தனக்கு இருந்திருந்தால், இந்த நிலையில் வந்து நின்றிருக்க மாட்டோம்மோ?” என்று தோன்றியது.
அவள் முக வாட்டத்தை, விழி, வேந்தன் இருவருமே குறித்துக் கொண்டனர். அதற்குள்ளாக கவியோ, “ச் இதெல்லாம் பேசுறதுக்கு நல்லா இருக்கும். ஆனா வாழ்க்கைக்கு ஒத்து வராது. இதுக்கப்புறமும் எந்த பிரச்சனையும் இழுத்துக்காம, உங்க குடும்பத்தோட சேர்ந்து வாழப் பாருங்க” என்று கோவமாய் சொல்லிவிட்டு நகர முயற்சித்தாள்.
அதற்குள்ளாக, “மாமா. வந்துட்டீங்களா?” என்று கவியை இடித்துக் கொண்டு வேகமாய் ஓடி வந்தாள் சுஜி.
அவ்வளவுத்தான் அத்தனை நேரம், ஒரு பக்கம் நின்று பேசிக் கொண்டிருந்த கவிக்கு சுள்ளென்ற கோவம் கூட, “ச் இருக்கிற பிரச்சனையில இந்த லூசு வேற” என்று தனக்குள் திட்டியப்படி, அவள் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
“ஹேய் என்னப் பண்ற நீ? என் கைய விடு” என்று சுஜி சொல்ல, “ஒழுங்கா, இந்தப் பக்கம் வந்து பேசு. சும்மா சும்மா அவர தொட்டு பேசாதன்னு முன்னாடியே உனக்கு சொல்லியிருக்கேன்” என்றாள் கவி.
“ச் அவரு என் மாமா. நான் அவர தொட்டா உனக்கென்ன?” என்று சுஜி கோவமாய் கேட்க, “எனக்கு ஒன்னும் இல்ல. ஆனா உன் மாமாக்குத்தான் உன்ன பார்த்தாலே அலர்ஜி” என்றாள் கவி.
“அப்படில்லாம் ஒன்னும் இல்ல. மாமா. நீங்களே சொல்லுங்க” என்று அவனின் கையைப் பிடித்தாள் சுஜி. அதில் எரிச்சலான வேந்தனோ, சுஜியின் கையை உதறிவிட்டு, இப்போது இதுத்தான் சமயம் என்று, எட்டி நின்றிருந்த கவியின் இடையோரம் கைக் கொடுத்து இழுத்துப் பிடித்தவன், “ரொம்ப பசிக்குது. சாப்பாடு எடுத்து வை. சாப்பிடுவோம்” என்று குதர்க்கமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து உள்ளே சென்றான்.
அவனின் பிடியும், அவனின் பார்வையும், அவன் வார்த்தைக்கு வேறு வேறு அர்த்தத்தை சொல்ல, அவள் உடல் ஒரு நொடி அதிர்வை உணர்ந்தது.
ஆனால் சுஜியோ, “பாரு விழி. மாமாக்காக நான் இவ்வளவு நேரம் முழிச்சிருக்கேன். ஆனா அவரு என்னென்னா, அந்த கவி கூட சேர்ந்து சாப்பிட போறேன்னு சொல்றாரு” என்றாள்.
“சரி விடு. உனக்கு பிடிச்ச சாக்லெட்ட உன் ரூம் பிரிட்ஜ்ல வச்சிருந்தேன்னே. அத சாப்டீயா?” என்று பேச்சை மாற்ற, “என்ன சொல்ற? சாக்லெட்டா? அத ஏன் என்ட்ட சொல்லல. நில்லு நான் போய் பாக்குறேன்” என்ற சுஜி உள்ளே சென்றாள்.
இங்கே இன்னுமே அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த கவியிடம் வந்த விழியோ, “எப்படியோ கவி? அண்ணாக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ண, அண்ணா பாத்துட்டாரு. இதுக்கப்புறம் உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. நீயும், நானும் பிரண்டாவே இருந்துக்கலாம்” என்று படு நக்கலாய் கூறினாள் விழி.
அதில் சற்று கடுப்பான கவியோ, “ஹே லூசா நீ? உன் அண்ணன் யார பிடிச்சிருக்குன்னு சொல்றாரு தெரியுமா?” என்று கோவமாய் கேட்டாள்.
“யாரா இருந்தா என்ன? என் அண்ணாக்கு பிடிச்சிருக்குன்னா, அந்த பொண்ண கடத்திட்டு வந்துன்னாலும், நான் என அண்ணாக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவேன். சரி நீ சொல்லு. யாரு அந்த பொண்ணு” என்று படு நக்கலாய் கேட்டாள்.
“அது நா” என்று ஆரம்பித்தவள், சட்டென்று அதை சொல்லாது அப்படியே நிறுத்தி, “ஆ.ங் அது. உங்க ரெண்டு பேருக்கும் எப்பவுமே உங்க ரெண்டு பேர் விருப்பம் தான் முக்கியமா?” என்று கோவமாய் கேட்டாள்.
“அப்கோர்ஸ் எனக்கு என் அண்ணா விருப்பம் தான் முக்கியம்” என்று விழி அசராது சொல்ல, “உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. எக்கேடோ கெட்டுப் போங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
விழியோ, “யாருக்கு? எங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா? நில்லு இன்னும் ரெண்டு வாரத்துல, உனக்கு என் அண்ணா பைத்தியம் பிடிக்க வைக்கல. நான் என் அண்ணாக்கு தங்கச்சி கிடையாது” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
இங்கே கோவமாய் தன் அறைக்கு செல்ல முயன்ற கவியின் கையைப் பிடித்திழுத்து, தங்கள் அறைக்குள் இழுத்தான் வேந்தன். அவனின் செயலில், “ச் என்னப் பண்ணிட்டிருக்கீங்க நீங்க?” என்றாள் கவி.
“ம் நீ இப்போ எங்க போயிட்டு இருக்க?” என்று அவன் கேட்க, “எங்க போவாங்க. தூங்கப் போறேன்” என்று எரிச்சலாய் அவள் சொல்ல, “அப்போ நீ இங்கத்தான வந்திருக்கனும்” என்றான்.
“என்னது? நான் எதுக்கு இங்க வரனும்? நேத்தே நமக்குள்ள இருந்த எல்லாம் முடிஞ்சுப் போச்சுன்னு சொல்லிட்டேன். திரும்ப திரும்ப தேவையில்லாம என் கிட்ட வம்பு பண்ணீங்கன்னா, அப்புறம் நான் என்னப் பண்ணுவேன்னே தெரியாது” என்று அவள் பாட்டுக்கு கோவப்பட்டு கத்த, அவனோ உள்ளே பூட்டிவிட்டு, சாவியை தன்னுடைய சட்டைப் பையில் வைத்துக் கொண்டு கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.
அதன் பின்னே கவி கதவு மூடப்பட்டதை கவனிக்க, “ச் இப்போ எதுக்கு நீங்க லாக் பண்ணீங்க?” என்று கேட்டாள். “ச் எனக்கு தூக்கம் வருது. சோ தூங்கப் போறேன்” என்றான்.
“சாவிய குடுங்க” என்று அவள் கேட்க, அவனோ அவள் கேட்பதை காதில் வாங்காது திரும்பி படுத்துக் கொண்டான். இவளோ ஒரு வித எரிச்சலுடன் அவனருகில் சென்று சாவியை எடுக்க முயல, பட்டென்று அவள் கரத்தை இழுத்து, தன்னருகில் படுக்க வைத்தவன், அவளை அணைத்துக் கொண்டான்.
அவனின் செயலில், அவள் அதிர்ந்து விலக, “ச் அமைதியா தூங்குனன்னா, ரேப் சீன் எல்லாம் எதுவும் நடக்காது. இல்லன்னா, எனக்கு தெரியாது” என்று அவள் காதுக்குள் கிசுகிசுத்துவிட்டு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தான் சுடர் வேந்தன்.
(நல்லா இருக்குய்யா! உன் திரைக்கதை வசனம். சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்து எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Jebaselvi Jeba
super
Shree Ram
vendhan semmmmaaaaaaaa 💞💞💞💞💞💞💞💞💞💞
Vel raj
super….