தேன் – 45

கவி சொல்லிய வார்த்தையில், அடுத்த பத்தாவது நிமிடம், அவளின் முன் வந்து நின்றான் சுடர்வேந்தன். அவனைப் பார்த்ததும், அவள் கண்ணெல்லாம் கலங்கி, தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்க, வந்த வேகத்தில் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டான்.

அவன் அணைப்புக்குள் அடங்கியப் பின்னும் கூட, கவி அழுதுக் கொண்டேத்தான் இருந்தாள். ஏனோ அவளுக்கு மூச்சு விடக் கூட அத்தனை சிரமமாய் இருந்தது. அவள் உள் மனம் வலித்தது. அது எதனால்? என்ற கேள்விக்கான விடை எல்லாம் இருவருக்கும் தெரியவில்லை. ஆனால் ஏனோ கடவுள், அவளின் வாழ்க்கையில் மட்டும் இருண்டு போன பக்கங்களை மட்டுமே எழுதியது போல் ஒரு பிம்பம்.

ஆனால் அவள் வாழ்வின் ஒட்டு மொத்த வெளிச்சமாய், வந்து நிற்கும் சுடரை ஏற்க மறுத்தாள்.

இப்போதும் கூட, அவனின் அணைப்புக்குள் இருந்தப்படி, அழுதாள். ஒரு கட்டம் வரை பொறுத்தவன், அதன் பின், “ச் அதான் நான் வந்துட்டேன் தான. எதுக்கு அழுகுற நீ?” என்றான்.

அதில் சட்டென்று அவனை விட்டு விலகியவளோ, கோவமாய் அவன் கன்னத்தில் அடித்தாள். அவளின் பிஞ்சு கரம் பட்டு, அவனுக்கு என்ன வலிக்கவா போகிறது? ஆனாலும், கோவப்பட்டு, “இப்போ எதுக்குடி அடிக்கிற?” என்றான்.

“நீங்க எதுக்கு அப்படில்லாம் சொன்னீங்க” என்று கேட்க, இப்போது அழுகை சென்று, கோவம் வந்து ஒட்டிக் கொண்டது. “ச் அது ஏதோ கோவத்துல” என்று சொல்லி முடிக்கும் முன்னே, அவன் சட்டையை கொத்தாய் பிடித்தவளோ, “இன்னொரு தடவ இந்த மாதிரி எல்லாம் உங்க வாயில வந்துச்சு. அதுக்கப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன். ஒருத்தரோட வாழ்ந்துட்டு, இன்னொருத்தர் கூட வாழ்றது எவ்வளவு பெரிய கொடும தெரியுமா? அந்த கொடும எல்லாம் உங்களுக்கு வேண்டாம்” என்றாள்.

அவனுக்கு இப்போது தெளிவாய் புரிந்தது. அவள் இன்னொருவனுடன் வாழ்ந்ததால், இவனை ஏற்க முடியாமல் தவிர்க்கிறாள் என்று. “சரி அப்போ இப்போ உன் கூட வாழ்ந்துடுறேன். அதுக்கப்புறம் அந்த கொடுமைய நான் அனுபவிச்சிட்டு போறேன்” என்றான்.

அதில் மீண்டும் அவன் கன்னத்தில் அடித்தவள், “நான் உங்களுக்கு வேண்டாம்” என்று அவள் அதையே சொல்ல, “எனக்கு நீத்தான் வேணும்” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான்.

நேற்று வரை எப்படியோ? ஏன் சில நொடிகளுக்கு முன்பு வரை எப்படியோ? ஆனால் இந்த நொடி அவனுக்கு தெளிவாய் ஒன்று புரிந்து விட்டது. அது அவன் மனதில், அவள் எப்போதோ நுழைந்து விட்டாள் என்று. அதனால் இதன் பின் அவளை விட்டுக் கொடுக்க அவன் தயாராக இல்லை.

“சுடர்” என்று அவள் கோவமாய் ஏதோ சொல்லப் போக, “ஆமா. நான் உன் சுடர் தான். உன் கழுத்துல நான் என் தங்கச்சிக்காகத்தான் இந்த தாலிய கட்டுனேன். ஆனா இப்போ சொல்றேன். என் மனசுல நீ தான் இருக்க. உன்ன தவிர வேற ஒருத்திய என் தங்கச்சி வந்து சொல்லியிருந்தாலும், கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன். ஏன் தெரியுமா? இந்த சுடர் மனசுல, இந்த தேன்னு மட்டும் தான் இருக்கா. உன் பாலிசி படி, ஒருத்தன் கூட வாழ்ந்தாலே நீ கெட்டுப் போயிட்ட அப்படின்னா, நான் மனசால, உன் கூட வாழ ஆரம்பிச்சிட்டேன். அப்போ நானும் கெட்டுப் போனவன் தான. என்ன கொண்டு போய் வேற ஒருத்திக்கு கொடுத்துட்டா, அவ மட்டும் என்ன ஏத்துக்கனுமா? நான் மட்டும் பழச எல்லாம் மறந்துட்டு, அந்த புது வாழ்க்கைய வாழ ஆரம்பிக்கனுமா?” என்று கேட்டான்.

சத்தியமாய் அவனிடம் இருந்து, இத்தகைய வார்த்தையை, அதுவும் நேரடியாய் அவள் எதிர்பார்க்கவே இல்லை. அதில் சில நொடிகள், அப்படியே நின்று விட்டாள். அவன் சொல்லியதை எல்லாம் மூளை ஏற்று, அது என்ன  என்பதைபுரிந்துக் கொள்ளும் முன்னே, அவளை சட்டென்று தன் பக்கம் இழுத்தணைத்து, அவள் இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டான் சுடர் வேந்தன்.

அவன் சொல்லியதையே எதிர்பார்க்காதவள், இப்போது அந்த முத்தத்தையும் எதிர்பார்த்திருக்கவில்லை. உதடு துடிக்க, உடல் வியர்க்க, உள்ளம் பதற, கவியின் மனம் எப்படி ஒரு மன நிலையில் இருக்கிறது என்று வார்த்தையால் சொல்லவே இயலாது.

மெல்ல அவள் இதழில் மூழ்கி வெளி வந்தவன், “நீ என் பொண்டாட்டி. நீ மட்டும் தான் என் பொண்டாட்டி. உன்ன தவிர இதுக்கப்புறம் வேற ஒரு பொண்ணு என் வாழ்க்கைக்குள்ள வர மாட்டா, இது என் குட்டிமா மேல ச..” என்று முடிக்கும் முன்னே இவ்வுலகம் வந்தவள் கோவமாய் அவன் கன்னத்தில் அடித்தாள்.

அவள் இதழ்கள் மட்டும் அல்லாது, கன்களும் கோவப்பழமாய் சிவந்திருக்க, பட்டென்று அவள் கன்னம் பற்றி மீண்டும் ஒரு முத்தத்தை அவள் உதட்டில் கொடுத்தான். அதையும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவள் அவனிடம் இருந்து விலகப் பார்க்க, விலகவே முடியாத அளவுக்கு, அவன் உதட்டு தடத்தை அவள் உதட்டில் பதித்து விட்டே விலகினான்.

அவன் விலகவும் இன்னும் கோவமாய், அவள் அவனை அடிக்க, அவனோ மீண்டும் அவள் உதட்டை முற்றுகையிட்டான். அவள் எத்தனை அடித்தாளோ? அத்தனை அடிக்கும் பதில் முத்தத்தை அவன் கொடுத்துக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில், அடியின் எண்ணிக்கை குறைய, ஆனால் அவன் முத்தமிடும் வேகத்தை நிறுத்தவே இல்லை. அவள் முற்றும் முழுதாய் சோர்ந்து நிற்க கூட முடியாது தடுமாறினாள்.

அதன் பின்னே அவளை விட்டு விலகியவன், “புரிஞ்சிதா? இந்த வேந்தன் முடிவெடுத்தா, அத மாத்திக்க மாட்டான். இந்த வேந்தனுக்கு, இந்த கவித்தான். இதுக்கப்புறம் யாராலையும் மாத்த முடியாது” என்றான்.

அதில் அவளோ இன்னும் இன்னும் கோவமாய் முறைத்து விட்டு, அங்கிருந்து செல்ல முயற்சிக்க, மீண்டும் அவள் கரத்தைப் பிடித்திழுத்து இறுக்கி அணைத்தவன், “வீட்டுக்கு வந்தா, உன் கூட வாழலாம்னு சொன்னத்தான. சரி வா இப்பவே வாழ ஆரம்பிக்கலாம்” என்றான்.

“என்ன?” என்றவள் அதிர்ந்து மிரள. “ஆமா நீத்தான சொன்ன, உன் கழுத்துல இருக்கிற தாலிக்கு நான் மதிப்பு கொடுக்கனும்னு. அப்படிப்பார்த்தா, என்ன பொறுத்த வரைக்கும் நீ என் பொண்டாட்டித்தான. அப்போ என் பொண்டாட்டிக்கிட்ட என் ஆசைய தீர்த்துக்கலாம் தான?” என்று பாரபட்சமே இல்லாது கேட்டான்.

அவனின் வார்த்தையில் அவள் இதயம் பலமாய் துடிக்க, கோவத்தில் அவள் மூக்கு சிவக்க, ஆனால் அவன் கண்களோ, அவள் கண்களை மட்டும் தான் பார்த்திருந்தது.

“இந்த ஜென்மத்துல நடக்காது” என்று கோவமாய் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு விலகி நடந்தாள். “இந்த ஆம்பள சாபம் உன்ன சும்மா விடாதுடி” என்று கை நீட்டிக் கூறினான்.

அதில் எரிச்சலாய் திரும்பிப் பார்த்தவள், “அப்போ அதுக்கு வேற பொண்ண” என்று சொல்லி முடிக்கும் முன்னே, அவளை நெருங்கி, மீண்டும் அவள் செவ்விதழை சிறை எடுக்கப் போக, இம்முறை சட்டென்று சுதாரித்து, வேகமாய் விலகினாள்.

அவளுக்கோ, அவனின் இந்த அதிரடியை சமாளிக்க முடியவில்லை. வழக்கமாய் அவள் அழுதாலே, அவன் அமைதியாகிவிடுவான். இப்போது அவள் என்ன சொன்னாலும், அவன் முன்னேறிக் கொண்டே இருக்க, இவளுக்கு கோவம் கோவமாய் வந்தது.

“இங்கப்பாருங்க. நீங்க இப்படி எல்லாம் பண்ணீங்கன்னா, அப்புறம், நான் இங்க இருந்து போயிடுவேன்” என்றாள்.

அதில் அவளையே அழுத்தமாய் பார்த்தவன், “என் தங்கச்சிக்காக உன்ன கூட்டிட்டு வந்தப்பையே, என்னை விட்டு உன்னால போ முடியாது. இப்போ நான் எனக்காக, உன்ன கூட வச்சிருக்கேன். அப்படி இருக்கிறப்ப, என்ன மீறி உன்னால போயிட முடியுமா?” என்று கேட்டான்.

“நேத்து என்ன சொன்னீங்க நீங்க?” என்று விட்டால் அழாத குறையாய் கேட்டாள். “என்ன சொன்னேன்?” என்று அவன் படு நக்கலாய் கேட்க, “சுடர்” என்று கோவமாய் அழைத்தாள்.

“சொல்லுடா” என்று அவன் அவளிடம் கொஞ்சலாய் பேச, “சும்மா மாத்தி மாத்தி பேசாதீங்க. நேத்தே எல்லாம் முடிஞ்சிருச்சின்னு சொன்னீங்கத்தான” என்றாள்.

“அப்படியா சொன்னேன்? ம் சரி அப்படியே சொல்லிருந்தாத்தான் என்ன? நேத்து பேச்சு நேத்தோட போச்சு. சோ இன்னிக்கு நம்ம பிரஸா ஸ்டார்ட் பண்ணிக்கலாம்” என்றான்.

“இதெல்லாம் கொஞ்சமும் சரி கிடையாது” என்று கவி கோவமாய் சொல்ல, “கண்டிப்பா, என் பொண்டாட்டிக்கிட்ட, இப்படி எல்லாத்துக்கும் சரி சொல்லிட்டே இருக்கிறதுத்தான. இனிமே அத பண்ணல” என்றான்.

“சுடர்” என்று அவள் சொல்ல, மீண்டும் அவளை இழுத்து, அவள் விழியை நேருக்கு நேருக்கு நேர் பார்த்து, “ஐ லவ் யூ. இந்த ஜென்மத்துல, இந்த வார்த்தைய உன் கண்ண பார்த்து முதல்ல சொல்றவன் நானாத்தான் இருப்பேன். அப்படிப் பார்த்தா, நான் தான் உனக்கு பர்ஸ்ட்” என்றான்.

அவனின் வார்த்தையில் அவள் குண்டு விழிகள், மேலும் பெரிதாய் விரிய, “புரிஞ்சிதா? எங்க இப்போ நான் சொன்ன மாதிரியே நீயும் உன் லவ்வ என்கிட்ட சொல்லு பார்ப்போம்” என்றான்.

“நான் ஒன்னும் உங்கள லவ் பண்ணல” என்று சொல்லியப்படி விலக முயன்றாள். ஆனால், அவள் இடையை மேலும் இறுக்கிப் பிடித்து, “இதுவரைக்கும் பண்ணலன்னா பரவாயில்ல. இதுக்கப்புறம் லவ் பண்ணு” என்றான்.

“ச் என்னால அது முடியாது” என்று அவள் சொல்ல, “பரவாயில்ல. நான் லவ் பண்றேன். நீ அத பாத்து கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கோ” என்றான்.

“சுடர். ஒரு அண்ணன் மாதிரி” என்று அவள் ஏதோ சொல்லப் போக, “உனக்கு நான் புருஷன். சோ உன்கிட்ட புருஷன் மாதிரி நடந்துக்கிட்டா போதும்” என்றான்.

“உங்கள நான் என்னிக்குமே அப்படி” என்று அவள் சொல்லும் போதே, அவள் உதட்டை மீண்டும் அவன் நெருங்க, பட்டென்று முகத்தை திருப்பினாள். அதில் அவன் இதழ்கள் அவள் கன்னத்தில் பதிந்தது.

அவன் மீசை முடி குறுகுறுப்பில் அவள் விலகப் பார்க்க, அவனோ, கன்னத்தில் பதிந்த இதழை பிரிக்காமலையே, “சும்மா சொல்லக் கூடாது. இந்த வேந்தனுக்கு ஏத்த மாதிரி சும்மா ஜம்முன்னு அழகாத்தான் இருக்க” என்று கிசுகிசுத்தான்.

அவன் வார்த்தையில், இங்கே இவளுக்குள்ளோ மின்சாரம் பாய்ந்தது. உடல் எல்லாம் நடுங்க, அதை உணர்ந்தது போல், அவளை மேலும் தன் அணைப்புக்குள் இறுக்கி, “நான் எத்தன முத்தம் கொடுத்தேன். நீயும் எனக்கு ஏதாச்சும் கொடுக்கலாம் தான” என்று கேட்டப்படி மீண்டும் அவள் செவ்விதழை நெருங்கினான் சுடர் வேந்தன்.

அவனுடைய இந்த ஆளுமையில், அவள் தடுமாற, அவனிடம் இருந்து விலக தன்னால் முடிந்த மட்டும் போராட, ஆனால் அவனோ, அவளுடைய ரோஜாப்பூ இதழ்களை, தன் இதழால் மெல்ல உரசி இம்சித்தான். அதில் அவள் கரம் அன்னிட்சையாய் அவனுடைய தோள்பட்டையை இறுக்கிப் பிடிக்க, இப்போது அவனோ, அவள் மூக்கோடு மூக்குரசினான்.

பெண்ணவளுக்கோ அத்தனை கோவம். ஆனால் வெளிப்படுத்த முடியாத நிலையில் அவள் இருக்க, அதை தனக்கு சாதகமாய் பயன்படுத்தியவன், “உன்கிட்ட நான் கெட்டுப் போயிட்டா, நீ என்ன ஏத்துப்பத்தான?” என்று குதர்க்கமாய் கேட்டப்படி, அவள் இதழுக்குள் மூழ்க முயன்றான்.

அதற்குள்ளாக, “ஹேய் கவி இன்னும் அங்க என்ன” என்ற விழியின் சத்தம் அவர்கள் செவியில் கேட்க, பட்டென்று கவி, அவன் கையில அழுத்தி கிள்ளியிருந்தாள். அதில் அவன் கரத்தை உதற, அவள் அந்த கேப்பில் வேகமாய் அவனை விட்டு விலகினாள்.

இவனோ, மீண்டும் அவளை பிடிக்கப் போக, “ச் சுடர். விழி வந்துட்டு இருக்கா” என்று அவனை தன்னில் இருந்து விலக்க முயற்சித்தாள். ஆனால் அதெல்லாம் அவன் மூளையில் விழுந்தால் தானே, மீண்டும் அவளைப் பிடித்திழுத்து அணைத்தான் சுடர்.

(ரைட்டு. இன்னிக்கு நீ ரொம்ப நல்ல பார்ம்லத்தான் இருக்க சுடரு. இப்படியே மெயிண்டெயின் பண்ணு. சரி நாளைக்கு நம்ம கவி காளியாத்தாவாகுறாளா? இல்ல மாரியாத்தாவாகுறாளான்னு பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   4

*** தேன் – 45 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***