குல தெய்வ கோவிலில் இருந்து வீட்டுக்கு வரும் வரை தாமரை, செல்வியிடம் கதிரை திட்டி தீர்த்திருந்தார். நல்ல வேளையாக, முருகேசன், ஊரை நெருங்கும் முன்னே, கதிருக்கு போன் போட்டு சொல்லியிருக்க, அவனும் அவர்கள் வரும் முன்னே, நிலாவை பெரிய வீட்டின் முன் விட்டிருந்தான். அவனும் பைக்கிலேயே நின்றிருக்க, தாமரை பேச வரும் முன்னே, செல்வியிடம் நிலாவை ஒப்படைத்து விட்டு அங்கிருந்து கதிர் சென்றிருந்தான்.
அதன் பின் வழக்கம் போல், கதிர் நிலாவின் கண்ணில் படவில்லை. ஆனால், அடிக்கடி அவனுடைய மோதிரம் மட்டும், அவனுடைய நினைவை அவளுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தது.
நிச்சயம் எல்லாம் இப்போதைக்கு வேண்டாம் என்று கதிர் சொல்லியும், யாரும் அவன் பேச்சைக் கேட்பதாக இல்லை. அந்தப் பக்கம் செந்திலோ, நிச்சயம் எல்லாம் வைத்துக் கொள்ள முடியாது என்று தாமரையிடம் கத்தினார். அவருக்கோ, தன் கணவரின் செயல் மீது தீராக் கோவம். அவர் தானே அத்தனைப் பிரச்சனைக்கும் ஆரம்ப புள்ளி.
இப்படியாக செல்ல, நாளை மறு நாள் பள்ளி துவக்கம் என்ற நிலையில், நாளை மாலை ஊரைக் கூட்டி நிச்சயம் நடக்கவிருந்தது. கதிருக்கோ, தடுக்கவும் முடியவில்லை. அதே நேரம் அதை ஏற்கவும் முடியவில்லை.
நிலாவுக்கோ, முடிக்க வேண்டிய வீட்டுப் பாடம் கொட்டிக் கிடந்தது. அதனால், அதைத் தான் விழுந்து விழுந்து எழுதிக் கொண்டிருந்தாள். சொந்தக்கார கூட்டம் மொத்தமும், அவள் வீட்டில் அவளுக்காய் வந்திருக்க, அவள் அவளுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்த கேலி முறையில் இருந்த ஒருவளோ, “பாத்தியாடி இந்த கூத்த. இவளுக்கு நிச்சயம்னு, நம்ம அத்தனை சோழியையும் போட்டுட்டு, இங்க வந்தா, இவெ அந்த புத்தகத்த போட்டு கிண்டிக்கிட்டு இருக்கா” என்றாள்.
“இல்ல மதினி. எழுதிட்டு போலன்னா டீச்சர் திட்டுவாக" என்று நிலா சொல்ல, “எவெடி அவ எம் நாத்தனார திட்டுறவ?” என்று அவள் சண்டைக்கு சென்றாள்.
“வேற ஆறு, எல்லாம், அந்த மலராத்தேன் இருக்கும்" என்று கங்கா சொல்ல, “அவெளுக்கு என்னவாம்? படிச்ச கொழுப்பா.” என்று கதிரின் தங்கை முறையில் இருந்த ஒருவள் சண்டைக்கு சென்றாள்.
“ஆ..ங் அதெல்லாம் இல்ல" என்று நிலா, பவ்வியமாய் சொல்ல, “அத்தேன்ன ஒருத்தரையும் குற சொல்லிடாத. இப்புடி இருந்தா, உன் தலையில மொளகாய அரைச்சிப் புடுவாள்க. அதுலையும், என் அண்ணன்ன கட்டிக்கப் போற. சும்மா ராசாக்கு ஏத்த ஜோடியா கெத்தா இருக்கனுமாக்கும்" என்றாள் அவள்.
“அதெல்லாம் என் தங்கச்சி இருப்பா. இல்லன்னா, உங்க அண்ணன் சொல்லிக் கொடுப்பாரு" என்று சீண்டலாய் இன்னொருவள் கூறினாள்.
இப்படியாக நிச்சய வீடு கலைக் கட்ட, கதிரோ, இரவு போல் தான் வீடு வந்து சேர்ந்தான்.
“நாளைக்கு நிச்சயத்த வச்சிட்டு, வர்ற நேரம்மா இது?” என்று செல்வி சத்தம் போட, “இல்ல அத்" என்று கதிர் ஏதோ சொல்லப் போக, “அத்தேன் வந்துட்டான்ல. முதல்ல சாப்ட சொல்லு" என்றப்படி முருகேசனும் அங்கு வந்தார்.
அதில் தன் மாமாவை முறைத்தவன், “அதெல்லாம் வேணாம்" என்று சொல்லிவிட்டு, கையில் இருந்த கவரை செல்வியிடம் கொடுத்து விட்டு, அவன் வீட்டிற்குள் சென்றான்.
செல்வியோ குமாரிடம் அவனுக்கு சாப்பாடு கொடுத்தனுப்ப, முருகேசனும் அங்கு சென்றார். அதன் பின் முருகேசனுக்கும், கதிருக்கும் கடுமையான வாக்குவாதம் சென்றது. முடிவில் வழக்கம் போல், “என்னமோ பண்ணுங்க" என்றிருந்தான் கதிர்.
பெரிய வீட்டின் வெளியில் பந்தல் தோரணம் என்று கலைக்கட்ட, பற்றாக்குறைக்கு, மைக் செட்டில் பாடல்கள் எல்லா பலமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.
“ஆடியில சேதி சொல்லி, ஆவணியில் தேதி வச்சி
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்”
வீடு மொத்தமும் சொந்தங்கள் நிறைந்து வழிய, தாமரையும், முருகேசனும் ஒரு ஓரமாய் நின்றிருந்தனர்.
தாமரைக்கு பெரிதாய் விருப்பம் இல்லைத்தான். ஆனாலும், நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தார்.
பட்டு வேஷ்டி, பட்டு சட்டையில், மதுரை வீரனாட்டம், சபையில் அமர்ந்திருந்த கதிரைப் பார்த்த தாமரைக்கே ஒரு நொடி, தன் தம்பியின், அந்த கம்பீரமும், அழகும் வியக்க வைத்தது. அப்படி இருக்க, ஊர் காரர்களை சொல்லவும் வேண்டுமா என்ன? அதிலும் முறைப் பெண்கள் அத்தனைப் பேரும், அவனைத்தான் வைத்தக் கண் வாங்காமல் பார்த்தனர்.
“ஆனாலும், இந்த நிலாப்புள்ள அதிஷ்டக்காரி. இல்லன்னா, இத்தனப் பேரு அவர சுத்திட்டு கிடக்க, நேத்து வந்தவ தட்டிட்டுப் போவாளா?” என்று ஏக்க பெருமூச்சோடு ஒருத்தி சொல்ல, அதைக் கேட்ட சங்கரேஸ்வரி பாட்டியோ, “ஆறுடி நேத்து வந்தவ. என் பேத்தி பொறக்குறப்பையே, எம் மருமவனுக்குன்னு சொல்லித்தாண்டி, தூக்குனேன். வந்துட்டாளுங்க. ஊருல இருக்கிறவள்க கண்ணு மொத்தமும் என் ராசா மேலத்தேன்” என்று சற்று தள்ளி இருந்தே, கதிருக்கு சுற்றி போட்டார்.
“அத்தேன் நினைச்சத சாதிச்சிட்டத்தான்ன. நீ ஒருத்தி போதும்த்தா. உன் அண்ணன் வூட்டுல வேற ஆரும் சம்பந்தம் பண்ணிட முடியாது” என்று சங்கரேஸ்வரியின் வயது ஒத்த இன்னொருவர் கூச்சலிட்டார்.
“அதுல உமக்கென்னடி வருத்தம் வேண்டிக்கிடக்கு? எம் அண்ணன் வூட்டுல எனக்கு உரிமை இருக்கு. நான் கேட்பேன்" என்று சங்கரேஸ்வரி சொல்ல, அதற்குள், புரோகிதர், “நல்ல நேரம் முடியிறதுக்குள்ள பொண்ண அழைச்சிட்டு வந்தா, லக்கண பத்திரிக்கை வாசிச்சிடலாம்" என்றார்.
அதில், இப்போது அத்தனைப் பேருடைய பார்வையும், அங்கே பச்சை வண்ண பட்டுடுத்தி, கதிர் அவளுக்கு சீராக வாங்கி வந்திருந்த அத்தனை நகைகளையும் அணிந்து வந்த நிலாவின் மீது தான் படிந்தது.
தாமரைக்கு சட்டென்று கண் கலங்கிவிட, தன் மகளையே பார்த்திருக்க, செந்திலோ, “இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பாக்குறேன்" என்று உள்ளுக்குள் கருவியப்படி நின்றிருந்தார்.
கதிரோ நிலாவை நிமிர்ந்துக் கூட பார்க்காமல் அமர்ந்திருக்க, “ஏல மாப்பிள்ள, செத்த நிமிந்து புள்ளைய பாருல்ல" என்றார் முருகேசன்.
அதில் அவரை முறைத்தவன், “அமைதியா இல்லன்னு வைங்க. அப்படியே எந்திரிச்சு போயிடுவேன்" என்றான் கதிர்.
நிலாவுக்கோ, கூட்டம் என்றாலே கலக்கம் தானே. ஆனாலும் செல்வியும் அவள் நெருங்கிய சொந்தம் மொத்தமும் உடன் இருக்க, சற்று தைரியமாகவே நின்றிருந்தாள்.
“சபைக்கு வணக்கும் சொல்லிட்டு, மாப்பிள்ள பையன் பக்கம் உட்கார சொல்லுங்கோ” என்று புரோகிதர் சொல்ல, அதன் படியே கதிரின் அருகில் அமர்ந்தாள் நிலா.
அதில் அன்னிட்சையாய் கதிர் அவள் பக்கம் திரும்ப, அதன் பின் நிச்சய பத்திரிக்கை வாசித்து முடிக்கும் வரை, அவள் பக்கம் இருந்து அவன் திரும்பவே இல்லை.
தங்க சிலையென தன் அருகில் அமர்ந்திருந்தவளை, வைத்தக் கண் வாங்காமல் பார்க்க, ஒரு நொடி, சிறு பெண் என்ற தோற்றம் மறைந்து பருவம் எய்திய பெண்ணாய் அவன் கண்ணை நிறைத்தாள்.
அடுத்த ஆறு மாதத்தில் திருமணம் முடிவாகியிருக்க, இப்போது மாலை ஒன்றை நிலாவின் கையிலும், கதிரின் கையிலும் கொடுத்து மாற்றிக் கொள்ளக் கூறினர்.
அப்போதே கதிர் வேறு பக்கம் திரும்ப, நிலாவோ அப்போது தான் கதிரின் பக்கம் திரும்பினாள். அவன் நெற்றியில் இருந்த அந்த மெல்லிய சந்தனக் கீற்று, சற்று வேர்வையில் கலைந்திருக்க, சற்றும் யோசிக்காமல், எக்கி அதை சரி செய்து விட்டாள் நிலா.
அவள் தொடுதலில், இங்கே இவன் கரைய, “சந்தனம் இழுவியிருக்கு மாமா” என்றாள்.
அதில் துளசியோ செல்வியிடம், “நான் கூட என்னமோ நினைச்சேன் மதினி. ஆனா, சமாளிச்சிப்பா. என் மச்சான்த்தேன் பாவம் போல" என்று கேலியாய் கூறினாள்.
நிலா அத்தனை எளிதில் எல்லாம் ஒருவரிடம் பழகிட மாட்டாள். ஆனால் கதிரிடம் அவள் சாதாரணமாய் பழகுவதைப் பார்க்க, செல்விக்கு திருப்தியாய் இருந்தது. ஆனால் தாமரைக்குத்தான் தன் மகள் அதிகபிரசங்கித்தனமாய் நடந்துக் கொள்வது போல் தோன்றியது.
“மாலைய போட்டு வுடு மாப்புள்ள" என்று முருகேசன் சொல்ல, கதிரும், நிலாவின் கழுத்தில் மாலையைப் போட்டு விட்டான். அதன் பின் நிலா அவன் கழுத்தில் மாலையை அனுபவிக்க, முருகேசன் அப்படியே நிச்சய மோதிரத்தையும் மாற்றிக் கொள்ள சொல்லி சபையில் கொடுத்தார்.
இதெல்லாம் வேண்டாம் என்று கதிர் அத்தனை முறை சொல்லியும், முருகேசன் கேட்காமல், சபையில் வைத்து நீட்ட, இப்போது அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை.
அதில் நிலா முதலில், அவன் விரலைப் பிடித்து மோதிரத்தை போட்டு விட, அவள் பார்வையோ, அவன் உள்ளங்கையில் இருந்த தழும்பைத் தான் பார்த்தது. பெரிதாய் தெரியவில்லை. ஏதோ ரேகை பொல் மெல்லிய கோடு. ஆனால் அவளுக்கோ, அதை மறக்கவே முடியவில்லை.
அதன் பின் கதிர் அவள் கரத்தைப் பிடிக்க, ஏதோ பூவை பிடிப்பது போல் அத்தனை மென்மையாய் இருந்தது. அதிலேயே அவனுடைய கரம், இறுக்கத்தை தொலைத்து, மெதுவாய் பற்றியது.
ஏற்கனவே அவள், வலது கையில் அவன் கொடுத்திருந்த மோதிரத்தை அணிந்திருக்க, செல்வியோ அதை கழட்ட சென்றார்.
“ஆ..ங் வேண்டாம்" என்று நிலா சொல்ல முடியாமல் தடுமாற, கதிருக்கு அது புரிந்தது. ஏனோ அந்த நொடி நிலாவுடைய அந்த தடுமாற்றம் பிடித்தது.
அதில் செல்வியை தடுத்து விட்டு, அவனே அந்த மோதிரத்தை கழட்ட, அவளோ கலக்கமாய் அவனைப் பார்த்தாள்.
பின் நிச்சய மோதிரத்தை அவள் விரலில் போட்டு விட, அவளின் பார்வை மொத்தமும், அவனிடம் இருந்த, அந்த மோதிரத்தின் மீது தான் இருந்தது. அதில் மெல்லிய வருத்தமும் தெரிய, அவள் கரத்தை விலக்க முயன்றாள்.
வலக்கரத்தை விடுவித்து, இடக்கரத்தை பற்றியவன், இப்போது அந்த மோதிரத்தை மீண்டும், அவளுடைய இடக் கரத்தில் போட்டு விட்டான். அதில் நிலாவின் முகம் பளிச்சென்று மின்ன, அவளின் புன்னகையையே பாத்தப்படி நின்றிருந்தான் கதிர்.
“மாமா. நிச்சயம் முடிஞ்சு அம்புட்டு பேரும் பந்திக்கே போயிட்டாக” என்று சீண்டலாய் ஒருவன் சொல்ல, அப்போதே நிலாவின் கரத்தை விடுவித்தான் கதிர்.
அதில் மற்றவர்கள் எல்லாரும் சிரிக்க, அவனுக்கே மெலிதாய் வெட்கம் எட்டிப் பார்த்தது. ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், முகத்தை இறுக்கமாய் வைத்தப்படி அங்கிருந்து நகர்ந்தான்.
நிலாவுடைய பட்டுப்புடவையைப் பார்த்து, அத்தனைப் பெண்களும் செல்வியிடம், “நிச்சய பட்டு நீ காட்டுறப்ப, வானத்துக்கலரா இருந்திச்சு. இப்போ என்ன பச்சை கலர்ல இருக்கு?” என்று கேள்வி எழுப்பினர்.
“அது. கதிரு நேத்து ராத்திரித்தேன், நிச்சயத்துக்கு இதத்தேன் கட்டனும்னு சொன்னான். இனிமே புள்ள மேல அவனுக்குத்தேன்ன உரிமை அதிகம். அதுவும் போக, நாங்க கூட, முப்பதாயிரத்துக்குத்தான் பட்டு எடுத்தோம். அவென் எம்பதாயிரத்துக்கு எடுத்துட்டு வந்திருக்கான். ஏதோ வெயிட்டே தெரியாதாம்" என்று தாமரையின் காதில் விழும்படி சற்று சத்தமாகவே கூறினார் செல்வி.
“ஏன் கனமான சேலை கட்டுன, இவெ கரைஞ்சிடுவாளா?” என்று சீண்டலாய் ஒருவள் கேட்க, “அவென் பொண்டாட்டிக்கு, அவென் பாக்குறான் உங்களுக்கு என்னல்ல?” என்று பெரியவர் ஒருவர் வாயை அடைத்தார்.
இப்படியாக நிச்சயம் இனிதே முடிந்து, சொந்தக்காரர்கள் அனைவரும் அவரவர் வீட்டுக்கு கிளம்ப, நிலாவும் பள்ளிக்கூடம் செல்ல தயரானாள்.
(படிக்கிற புள்ளைய வச்சிட்டு, லவ் சீன் கேட்கிறீங்களே. நான் எப்படி கொடுப்பேன்? அப்புறம் மைனர் பொண்ணு மனச கெடுத்துட்டேன்னு, இந்த கதிர் பையனே என் மேல கம்பிளைண்ட் கொடுத்துடுவான். சரி அடுத்து என்னென்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்டல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தென்றல் தீண்டுமா?
0 Comments
No comments yet.