கொஞ்சம் கொஞ்சமாய் நிலாவிடம் அவன் எல்லை மீற ஆரம்பிக்க, சட்டென்று நினைவு வந்து விலக முயன்றான். ஆனால் அதற்குள்ளாகவே அவனின் சட்டையைப் இழுத்துப் பிடித்து, “போகாத மாமா ப்ளீஸ்" என்றாள்.
ஏனோ அவளின் அந்த ப்ளீஸ் என்ற வார்த்தையில் தான் அவளைப் பார்த்தான் அவன். அவள் கண்களில் இருக்கும் பயம் கலந்த ஆசை, அவள் முகத்தில் படிந்திருந்த மெல்லிய வெட்கம். அவளுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை சொல்வது போல், அவள் உதடுகள் நடுங்கியது. அவளுடைய இதயம் அத்தனைப் படபடப்பையும் மொத்தமாய் காட்டியது.
“என்ன கதிர் பண்ணிட்டு இருக்க நீ? அவ ஒன்னும் பொம்மை கிடையாது" என்று அவனின் மனசாட்சி அவனைத் திட்டியது. எல்லை மீற ஆரம்பித்தது அவன் தானே.
அதில் மெல்ல அவளை விட்டு விலகி தரையில் படுக்க, அவளின் முகம் வாடியது. அதற்குள், அவளை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டவன், “உனக்கு என்னைப் பிடிக்குமா?” என்றான்.
அவனின் சம்பந்தமில்லாத கேள்வியில் அவள் அவனைப் பார்க்க, “பிடிக்குமா?” என்றான். அதில் அவன் மார்பில் தாடையைப் பதித்து, அவனைப் பார்த்தவள், “பிடிக்கும் மாமா” என்றாள்.
“ஏன்?” என்று அவன் கேட்க, இதென்ன கேள்வி என்பது போல், அவள் அவனைப் பார்த்தாள்.
“சொல்லு நிலா, என்ன ஏன் உனக்குப் பிடிக்கும்?” என்று மீண்டும் அழுத்திக் கேட்டான்.
“பிடிக்கும் மாமா” என்றவளுக்கு, ஏன்? எதற்கு என்றெல்லாம் தெரியாது. அதை சொல்லவும் தெரியவில்லை.
“என்னைப் பத்தி முழுசா உனக்கு தெரியுமா நிலா?” என்றான். “தெரியும்" என்று அவள் வேகமாய் சொல்ல, “என் மேல ஒரு கொலை கேஸு இருக்கு. அது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
அதில் அவள் அதிர்வாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க, அவளோ அசராமல், “தெரியும்" என்றாள். அதில் இப்போது அவன் அதிர்ச்சியாய், “உனக்கு அத நினைச்சி பயம் இல்லையா?” என்றான்.
“நான் ஏன் பயப்படனும்?” என்று புருவம் உயர்த்திக் கேட்டாள் நிலா. அவளுடைய அந்த கேள்வியில், “ஒரு வேள நாளைக்கு நான் தான் அந்த கொலைய பண்ணேன்னு ஆயிடுச்சின்னா, என்னை ஜெயில்ல பிடிச்சுப் போட்டுடுவாங்க" என்றான்.
“நீங்க அந்த கொலைய பண்ணல மாமா. அதனால உங்களுக்கு தண்டனை கிடைக்காது" என்றாள்.
“அப்படின்னு ஆறு சொன்னா?” என்று கதிர் கேட்க, “எனக்குத் தெரியும். நீங்க பண்ணல" என்று அழுத்திக் கூறினாள்.
“உங்கம்மா உண்ட்ட எதுவுமே சொல்லலையா?” என்று அவன் கேட்க, “எனக்குத் தெரியும் மாமா. அவங்களுக்குத்தான் தெரியாது" என்றாள் நிலா.
“அவங்களுக்கு என்ன தெரியாது?” என்று இவன் சிறு சந்தேகத்துடன் அவளைப் பார்த்துக் கேட்டான்.
“பாட்டிய கொண்னது எங்கப்பா. நீங்க இல்ல" என்று அவள் சொல்ல, கதிர் சட்டென்று எழுந்தே விட்டான்.
அவன் முகத்தில் அப்பட்டமான பதட்டம். “அப்புடின்னு ஆறு சொன்னா?” என்றவனுக்கு நொடியில் அத்தனை அதிர்ச்சி.
“நான் பாத்தேன் மாமா. எனக்குத் தெரியும். அப்பாத்தான், பாட்டிய குத்துனாரு" என்றாள் நிலா. அதைக் கேட்ட கதிருக்கு அது உச்சப்பட்ச அதிர்ச்சி. எது யாருக்கும் தெரிந்து விடக் கூடாது? குறிப்பாய் யாருக்கெல்லாம் தெரியவே கூடாது என்று நினைத்திருந்தானோ, அதை அவளே அவனிடம் சொல்வதைக் கேட்டவனுக்கு இதயம் அத்தனை சத்தமாய் துடித்தது.
அவன் கரத்தை எடுத்து அழுத்திப் பிடித்தவள், “உங்களுக்கு தண்டனை கொடுத்தா, இத நான் எல்லார் முன்னாடியும் சொல்லுவேன்" என்றாள்.
“ம்ஹூம்" என்றவன் வேகமாய் தலையாட்ட, “ஏன் மாமா, நீங்க இத அம்மாட்ட சொல்லவே இல்ல?” என்று கேட்டாள்.
அப்போது அவள் சிறு பெண். தந்தை தன் பாட்டியை கத்தியால் குத்தியதைப் பார்த்தாள் தான். ஆனால் அதைப் பார்த்து அவள் பயந்துத்தான் போனாள். அதன் பின் தான் அங்கு கதிர் வந்தான். வந்தவன் செந்திலை குத்தவே சென்றான். ஆனால், அதற்குள் மீண்டும் இடையில் வந்து தடுத்தது கதிரின் அம்மாத்தான். அதற்குள் செந்தில், கதையை மாற்றிப் போட்டு கத்த, தாமரை அங்கு வரும் போது, கதிரின் கையில் தான் கத்தி இருந்தது.
அதற்குள் அங்கு வந்த முருகேசன், அந்த கத்தியை பறித்திருக்க, அவனோ கோவமாய் சீறிப் பாயவே செய்தான். அதற்குள் கதிரின் அம்மா, “ஐயா ராசா” என்றழைக்க, வேறு வழியின்றி செந்திலை விட்டு விட்டு அவரிடம் ஓடினான்.
இங்கே நிலாவுக்கோ அது என்ன மாதிரியான சூழல் என்று தெரியவில்லை. ஆனால் செந்தில், நிலாவை பார்த்திருக்க, அவளை தனியே அழைத்து சென்று, இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியிருந்தார். சிறு வயதில் இருந்தே சற்று பயந்த சுபாவம். அதிலும் தந்தை என்றால் அத்தனைப் பயம்.
அதையும் மீறி எத்தனையோ நாள் அன்னையிடம் சொல்ல நினைத்திருக்கிறாள். ஆனால் அவள் அப்பா தடுத்திருக்க, அதிலும் நீ இதைப் பற்றி சொன்னால், பெரிய வீட்டுக்கு செல்லவே அனுமதிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லியிருந்தார்.
சிறு வயதில் விதைக்கப்பட்ட பயம், அதுவோ அவள் வளர வளர விருட்சமாய் வளர்ந்திருந்தது. ஆனால் கதிருக்கு அதனால் எத்தனை பாதிப்பு ஏற்பட்டது என்று அவளுக்கு இப்போதும் கூட தெரியாது. அது பற்றிய விவரமும் அவளுக்கு அப்போது இல்லை.
இருவருக்குமே கடந்த கால நிகழ்வு கண் முன் ஓடி மறைய, கதிர் நிலாவைப் பார்த்தான்.
“உங்களுக்கு பாட்டின்னா உசுருத்தான மாமா?” என்று கேட்டாள். அதில் நிலாவை இழுத்து அணைத்துக் கொண்டவனின் கண்கள் கலங்கியது.
அவளுக்குமே கண்களில் இருந்து கண்ணீர் காரணமின்றி வந்தது. “நான் உங்கள பாத்துப்பேன் மாமா” என்றாள். அவளின் வார்த்தையில் மெல்ல அவளை விட்டு விலகி, அவள் கண்ணீரைத் துடைத்து, அவள் நெற்றியில் அழுத்தி இதழ் பதித்தான்.
உடனே அவளும் அவன் கண்ணீரைத் துடைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அதில் அவன் கண்ணை மூட, “எனக்கு உங்கள பிடிக்கும் மாமா. இப்போ இல்ல ஆரம்பத்துல இருந்தே ரொம்ப பிடிக்கும் மாமா. ஏன்லாம் தெரியாது. பிடிக்கும்" என்றாள்.
அதில் விழியைத் திறந்து அவளைப் பார்த்தவனுக்கு என்னப் பதில் சொல்ல என்றே தெரியவில்லை. உண்மையில் அவனிடம் வார்த்தைகளே இல்லை.
“எண்ட்ட என்ன மாமா தயக்கம்?” என்றாள் அவள். அந்த நொடி அவனின் மனம் உணர்ந்தது அவள் சிறு பிள்ளை அல்ல என்று.
அதில் அவனின் கண்களில் இருந்து கண்ணீர் சிந்த, அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். அவன் தலையை அவள் விரல்கள் கோதி விட, அவளின் மறு கரம் அவன் கண்ணீரைத் தனதாக்கிக் கொண்டிருந்தது.
அவள் உதடுகளோ, “நீ தான் மாமா சின்னப் பையன் மாதிரி நடந்துக்கிடுற" என்றாள். அதில் அவள் மடியில் படுத்தப்படியே, அவளைப் பார்த்தவன் புருவத்தை உயர்த்த, அவளோ நாக்கைக் கடித்தாள்.
அவளின் செயலில் இப்போது கதிரின் முகத்தில் புன்னகை படர்ந்தது. அதில் அவன் கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்தவள், “அழகு மாமா நீ” என்றாள்.
அதில் ஒரு நொடி கண்ணை மூடியவன், அடுத்த நொடி, அவளை தன் பக்கம் இழுத்து அவள் உதட்டில் தன்னுடைய மிச்ச முத்தத்தைக் கொடுக்க ஆரம்பித்தான். அவனின் செயலில் அவள் விழி விரிக்க, அவளை அள்ளித் தூக்கிக் கொண்டு, அங்கிருந்த கட்டிலுக்கு நடந்தான்.
அவனின் செயலில், “மாமா” என்றவள் அழைக்க, “முகி" என்றான் அவன். அதில் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவள், “என்ன மாமா பண்ணப் போறீங்க?” என்றாள்.
“கதிரு பொண்டாட்டிக்குத்தேன் எல்லாம் தெரியுமே” என்று சீண்டலாய் சொல்லியப்படி, கட்டிலில் அவளுடன் விழுந்தவன், அடுத்த நொடி, கணவனாய், அன்பனாய், அவளிடம் தன் விளையாட்டை ஆரம்பித்திருந்தான். அதென்னவோ அவன் சிறுவனாய் மாறும் போது மட்டுமே பெரியவளின் வார்த்தை எல்லாம் அவளிடம். அவனிடம் அவள் சிறுமியாய் துயில, அங்கே அழகிய இல்லறம் தங்கு தடையின்றி இனிதே துவங்க, அன்றைய பொழுதின் இறுக்கம் எல்லாம் தளர்ந்து, நிலா அவனுடைய வெற்று மார்பில் முகம் புதைத்து உறங்கினாள்.
அவனுமே, அவளை தட்டிக் கொடுத்தப்படியே விழி மூடினான்.
அடுத்த நாள் காலை நிலா கண்ணைத் திறக்கும் போது, அவளையே பார்த்தப்படி படுத்திருந்தான் கதிர். “தூங்கலையா மாமா?” என்று கேட்டப்படி இன்னும் வாகாய் அவன் மார்பில் முகம் புதைத்து அவள் தூக்கத்தை தொடர, “ஐ லவ் யூ தென்றல்" என்றான்.
“ம் எனக்குத் தெரியும்" என்றவள் உறக்கத்தில் உளற, “எல்லாமே தெரியுமா அப்போ?” என்று கேட்டவனின் வார்த்தையில் விசம புன்னகை ஒளிந்திருந்தது.
“ம்" என்றவள், அவனை அணைத்துக் கொண்டு உறங்க, “ஹனிமூன் போவோம்மா?” என்று கேட்டப்படி அவளை அவன் இழுத்தணைக்க, பட்டென்று கண்ணைத் திறந்தாள் நிலா.
அப்போதே இத்தனை நேரம் கண்டது கனவல்ல என்பதே புரிய, “என்ன மாமா?” என்றாள்.
“ஹனிமூன் போவோம்மாடி?” என்று அவள் நெற்றி முட்டிக் கேட்க, “நெஜமாவா?” என்றாள்.
“நிலாக்கு எங்கன போனும்?” என்று கேட்க, அவளோ, உதட்டில் கை வைத்து, யோசித்தாள்.
அவள் யோசிப்பதைப் பார்த்தவன், “பெருசா ஏதும் பிளான் இருக்கு போலையே” என்று கேட்டான்.
“யோசிக்க விடுங்க மாமா” என்று அவள் சிறுமியாய் சினுங்க. “சரி யோசி" என்றவனின் இதழ்கள் அவள் முகத்தை மெலிதாய் அளந்து, உதட்டில் இருந்த அவள் விரலை, மெலிதாய் முத்தமிட்டது.
அவளோ சட்டென்று திரும்பி, “ஹனிமூனுக்கு எங்களாம் போவாங்க?” என்று கேட்டாள்.
“ஏன் கதிரு பொண்டாட்டிக்குத்தேன் எல்லாம் தெரியும்த்தேன்ன?” என்றவனின் குரலில் சீண்டல் எஞ்சியிருந்தது.
“மாமா” என்று அவள் சொல்ல, அவனோ, “நீ எங்கன போகனும்னு ஆசப்படுறீயோ அங்கன போலாம்" என்றான்.
“எனக்கு உங்க கூடவே இருக்கனும் மாமா” என்றாள். அதில் அவளை ஒரு நொடிப் பார்த்தவன், அடுத்த நொடி அவளை இன்னும் தனக்குள் இறுக்கி அணைத்தப்படி, “நான் உன் கூடவேத்தான இருக்கேன்" என்றான்.
“இங்கன மட்டும் இல்ல. வூட்டுக்கு போனாலும் இருக்கனும்" என்றாள் அவள். அவளுக்கு அதை விளக்கமாய் சொல்லத் தெரியவில்லை. ஆனால் கதிருக்கு அவளின் ஏக்கம் புரிந்தது. கணவனாய் மனைவி ஆசைப்பட்ட படிப்பை படிக்க வைத்தால் மட்டும் போதுமா? அவளுடைய மற்ற ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டுமே. அதுவும் கணவனின் கடமைத்தானே.
அதை உணர்ந்தவன், “எங்கனாலும் இருப்பேன் போதுமா?” என்று கேட்க, “ம்" என்றப்படி அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள் நிலா.
சில நிமிடங்கள் கழித்து, “நிலா” என்று சிறு தயக்கத்துடன் அழைத்தான். அவளோ, “அதெல்லாம் கலெக்டர் ஆகிடுவேன் மாமா” என்றாள்.
“அது இல்ல" என்று அவன் சொல்ல, “குழந்தையும் இப்போதைக்கு வேண்டாம் மாமா” என்றாள் அவள். அதில் அவள் காதைப் பிடித்து திருகியவன், “சொல்றத முழுசா கேளுடி" என்றான்.
அதில் அவள் அவனைப் பார்க்க, “எண்ட்ட சொன்னத ஆறுட்டையும் சொல்லக் கூடாது" என்றான். அவளோ அவனையே பார்த்தாள்.
(அந்தப் புள்ள எல்லாம் உன் பேச்ச கேட்கிற மாதிரி எனக்குத் தெரியல. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
Anbu Anbu
super……
Keerthi Keerthi
♥✨✨