தேன் – 9

கவி சத்தியம் செய்தது கொடுத்தது போலவே, அவளே அவனைப் பார்த்துக் கொண்டாள். அவள் உதவிக்காக அவனை நெருங்கினாலும், அவனோ, ஏதாவது சில்மிஷ சேட்டையை செய்துக் கொண்டேத்தான் இருந்தான். இப்போது காலில் காயம் சற்று நன்றாகவே ஆறியிருந்தது.

ஆனாலும், அவனோ, “கவி” என்று சத்தமாய் அழைக்க, அவனுக்கு காபி போட சென்றவள் அடித்துப் பிடித்து, மூச்சு வாங்க ஓடி வந்து, “என்னாச்சு?” என்றாள்.

“எங்கப் போன நீ?” என்று அவன் கேட்க, இவளோ இப்போது அவனை முறைத்தாள். பின்னே அவன் தானே அவளிடம் காபி வேண்டும் என்று சொல்லி அவளை அனுப்பியிருந்தான். இப்போது அவனே அப்படி கேட்கவும், அவளோ எதுவும் சொல்லாது அவனைப் பார்த்தாள்.

“உண்ட்டத்தான நான் கேட்குறேன்” என்று அவன் சொல்ல, அவளோ, “இப்போ என்ன வேணும்?” என்றாள். அதில் சட்டென்று அவள் கையைப் பிடித்து இழுத்தவன் தன் மடியில் அமர்த்திக் கொள்ள முயற்சிக்க, அதற்கு முன்னே, “இந்த வேலைலாம் வேண்டாம்” என்று விலகி சென்றாள்.

அதில் அவனோ, “என்னைப் பார்த்துக்கிடுறன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்க” என்றான். அதில் பல்லைக் கடித்தவளோ, “அதுக்குன்னு, உங்க மடியில உட்கார்ந்து, உங்கள கொஞ்சுறேன்னு நான் ஒன்னும் சொல்லல” என்று வார்த்தையை கடித்து துப்பினாள்.

ஆனால் அவனோ, “ம் அதுவும் நல்லாத்தான இருக்கு” என்று அசராது சொல்ல, அவளோ அவனை முறைத்தாள். அதை வழக்கம் போல் கண்டுக் கொள்ளாதவன், “எனக்கு போர் அடிக்குது” என்றான்.

“அதுக்கு நான் என்னப் பண்றது?” என்று அவள் எரிச்சலாய் கேட்க, “புருஷனுக்கு போர் அடிச்சா, பொண்டாட்டி என்னப் பண்ணனும்னு நான் வேணும்னா சொல்லிக் கொடுக்கவா?” என்று நக்கலாய் கேட்டான்.

இங்கே இவளோ, கோவமாய், “இங்க நான் ஒரு வேலைக்காரியாத்தான் இருக்கேன். அத மனசுல எப்பவும் வச்சுக்கோங்க” என்றாள்.

“சரி வேலைக்காரியாவே இருந்துட்டுப் போ. இப்போ எனக்கு போர் அடிக்குது. எஜமான் நான் தான. அப்போ நான் சொல்றதெல்லாம் நீ செய்யனும்த்தான?” என்று கண்ணடித்துக் கூறினான்.

அதில் அவளோ, இன்னும் கோவமாய், “அந்த மாதிரி வேலைக்கெல்லாம் வேற ஆள பாருங்க” என்று சொல்லியப்படி நகர, இப்போது அவள் கையை எட்டிப் பிடித்து தன் மடியில் அமர வைத்தவன், “எம் எல் ஏன்னு சொன்னதும், உன் புருஷன் நிறையா சம்பாதிப்பன்னு நினைச்சிட்டீயா? என்னோட சாலரி வெறுமன ஒரு லட்சம் தான். அதுல, என் கூட இருக்கிறவங்களுக்கு சம்பளம் கொடுக்கவே அது பத்தாது. அப்புறம் எப்படி? அந்த மாதிரி வேலைக்கெல்லாம் தனியா ஆள் வைக்கிறது?” என்று அசராது கேட்டான் சுடர் வேந்தன்.

“ச் என்ன விடுங்க முதல்ல?” என்றவள் அப்போதும் கூட, அவனின் காயத்தை முன் நிறுத்தி பொறுமையாய் எழ முயற்சித்தாள்.

ஆனால் அவனோ, வலக்கரத்தால் மொத்தமாய் அவள் இடையை அழுத்திப் பற்றியிருக்க, அவனின் அந்த பிடியில் இருந்து சிறிதாய் கூட அவளால் நகர முடியவில்லை. அதிலும் இவனின் விரல் வேறு அவளின் ஆழிலை வயிற்றை மெதுவாய் வருடி கிச்சு கிச்சு மூட்ட, இவனின் மீசை முடி வேறு மென்மையிலும், மென்மையாய் அவள் காது மடலை வருடிக் கொடுத்தது.

அதில் அடி வயிற்றில் ஏதோ ஒரு உணர்வு, அவள் தேகத்தை பிடித்திழுக்க, அதை எல்லாம் ஓரம் கட்டி, அவள் விலக முயல்வதில், அவனின் முரட்டு கரம், பெண்ணவளின் மென்மையிலும் பட்டுப் படாமல் உரசிச் செல்ல, அவனுக்குத்தான் மூச்சடைத்தது.

“ச் சமத்தா இருந்தன்னா, நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டு விட்டுடுவேன். இல்லன்னா, உனக்குத்தேன் சிரமம். எனக்கு எல்லாமே வசதித்தேன்” என்றவனின் இருள் பொருள்பட்ட வாக்கியத்தில், அவள் சிலையாய் அமர்ந்தாள்.

அதில் வழக்கமான புன் சிரிப்புடன், “ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. முன்ன விட இப்பத்தேன் பிடிக்க நல்ல வசமா இருக்க” என்றவனின் கட்டைவிரல், அவள் ஆழிலை வயிற்றின் மத்தியில் அழுத்தமாய் பதிய, அந்த ஒற்றை விரல் தீண்டலில், அவள் கால் பெருவிரல் பக்கத்து விரலை மொத்தமாய் கோர்த்துப் பிடித்து தன் உணர்வை இழுத்துப் பிடித்தது.

அதில் அவள் கண்களில் சட்டென்று நீர் கோர்த்துக் கொள்ள, இப்போது, தன் உணர்வை மீட்டு, விரலின் விளையாட்டுக்கு தடையிட்டவனின் உடல் இரும்பென இறுகியது. அதை அவன் அணைப்பிக்குள் இருந்தவளால் உணர் முடிந்தது.

“நான் தான தொட்டேன்” என்று வாய் வரை வந்த வார்த்தையை சொல்லாது, இழுத்துப் பிடித்து “ஏதாச்சும் படம் பார்ப்போமா?” என்றான்.

அதில் அவளோ, “பாருங்க” என்றாள். “எனக்கு பார்க்க எனக்குத் தெரியும். நான் உன்னையும் சேர்த்து கூப்டேன்” என்றான்.

“இல்ல எனக்கு வேண்டாம்” என்று சொல்லியப்படி இப்போது சுலபமாய் அவன் மடியில் இருந்து இறங்கியிருந்தாள்.

அவனும் இம்முறை அவளை தடுக்காது, “உனக்கு புடிச்ச படமா பாக்கலாம்” என்று அவன் சொல்ல, “எனக்கு பிடிச்சதுன்னு, இந்த உலகத்துல ஒன்னும் கிடையாது” என்று பட்டென்று கூறினாள்.

அதில் இவனின் நாசி கோவத்தில் விடைக்க, புஜங்கள் எல்லாம் முறுக்கேறி, தன் கோவத்தை அவளிடம் காமிக்க, அவளோ, அவனின் கோவம் அவளை பாதிக்காது என்பது போல் தான் நின்றிருந்தாள்.

“சரி ஒன்னும் பிரச்சன இல்ல. அப்போ எனக்கு பிடிச்ச படத்த பாக்கலாம்” என்றான். “உங்களுக்கு பிடிச்சதுன்னா நீங்க பாருங்க. என்ன எதுக்கு கூப்பிடுறீங்க” என்று இம்முறை சிறு கோவத்துடனே கேட்டாள்.

“நீத்தான என்ன பாத்துக்கனும். அப்போ நீயும் என் கூடத்தான் இருக்கனும்” என்றான். அதில் அவளோ ஒரு வித எரிச்சலுடன், “நீங்க என்னத்தான் என்னை உங்க கூட வச்சிக்கனும்னு நினைச்சாலும், அதனால, உங்களுக்கு எதுவும் கிடைக்கப் போறதும் இல்ல. இப்புடி உட்கார்ந்து படம் பாக்குறது எனக்கொன்னும் புதுசும் கிடையாது” என்று வார்த்தையை விட்டாள்.

ஆனால் அது சரியாக வேந்தனுடைய மனதை குறி வைத்து பாய்ந்திருக்க, கோவமாய் அவள் கையை முறுக்கிப் பிடித்தவன், “உன் கூட நான் உட்கார்ந்து படம் பாக்குறது புதுசுத்தான்ன. அப்போ அத நீ பண்ணித்தான் ஆகனும்” என்றான் அவன்.

அதில் இவளின் மனமோ நினைக்கவே கூடாது என்று நினைத்தாலும் முதன் முறையாய் அவனுடன் தியேட்டருக்கு சென்ற நிகழ்வு கண் முன்னே வந்து நின்றது.

“ச் உன் அண்ணா வர்றாருன்னு, நீ ஏன் என்கிட்ட சொல்லல” என்று தியேட்டர் வாசலில் நின்று உள்ளே வர மறுத்தப்படி கூறினாள் கவி.

“ஹேய், தலைவர் படத்துக்கு டிக்கெட் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதான் அண்ணாவ வர சொன்னேன்” என்றாள் விழி.

“அப்படின்னா நீ மட்டும் போக வேண்டியதுத்தான? எதுக்கு என்ன கூப்டு வந்த?” என்றாள் கவி.

“ஹே இப்போ உனக்கு என்ன பிரச்சன? என்னமோ நீயும், என் அண்ணாவும் மட்டும் தனியா உட்கார்ந்து படம் பாக்க போற மாதிரி, இந்தளவுக்கு தயங்குற. கூட்டத்த பார்த்தத்தான, உள்ள வா” என்று இழுத்தாள் கவி.

“இல்ல இல்ல நான் வரல. நீ போயிட்டு வா” என்று சொல்லியப்படி, கவி கிளம்ப, “படம் பாக்கலையா?” என்ற கனீர் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள். அங்கே வேந்தனோ, தங்கையிடம் டிக்கெட்டை கொடுத்து விட்டு, அவளை கேள்வியாய் பார்த்தான்.

அதென்னவோ அவன் வெகு சாதாரணமாய் தான் கேட்டான். ஆனால் அந்த குரலில், இங்கே இவளுக்குத்தான் உடல் பதறியது. அவன் குரல் அவள் செவியைத் தாண்டி, இதயத்துக்குள் அல்லவா புகுந்து ஒலிக்கும். 

அவள் அதிர்ந்து அப்படி நிற்பதைப் பார்த்த விழியோ, “அது, பசங்க கூட உட்கார்ந்து படம் பாக்கனும்னு அவ யோசிக்கிறாண்ணே” என்றாள்.

அதில் அவனோ, “அதுக்குன்னு, லேடீஸ்க்கு மட்டும்னு சிறப்பு காட்சியா போட சொல்ல முடியும்? இது கப்பிள் சீட் தான். நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து பாருங்க. ஆப்ரேட்டர்ட்ட சொல்லிருக்கேன். பக்கத்துல ஏதாச்சும் பசங்க உட்கார்ந்தா, மாத்தி உட்கார வச்சிடுவாங்க” என்றான்.

“ஏன்னா, அப்போ நீ வரலையா?” என்று விழி கேட்க, அவனோ, “நீ டிக்கெட் கேட்டன்னுத்தான் வாங்கிக் கொடுக்க வந்தேன். எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு. படம் முடிஞ்சதும், ஆப்ரேட்டர் ரூம்ல போயி இருங்க. நான் வந்து அழைச்சிட்டு போறேன்” என்றவன், பர்ஸில் இருந்த பணத்தை எடுத்து, “பிடிச்சத வாங்கி சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான் வேந்தன்.

செல்பவனையே கவி பார்த்திருக்க, “என் அண்ணன்ன சைட் அடிச்சது போதும். வா” என்றழைக்க, இப்போது தன் தோழியை முறைத்தவளோ, “இங்கப்பாரு விழி. நீ நினைக்கிறது எதுவும், என்னிக்கும் நடக்கப் போறது கிடையாது. எனக்கு அவர் மேல அப்படி ஒரு எண்ணம் கிடையவே கிடையாது. அதுலையும் உன் அண்ணாக்கு மட்டும் நீ இப்படி பேசிட்டு இருக்கிறது தெரிஞ்சிச்சு. அதுக்கப்புறம், உன்னை என் கூட பேசவே விட மாட்டாரு” என்று சிறு பயத்துடன் கூறினாள்.

அதில் விழியோ, “அண்ணா சொன்னா, நான் உன்கிட்ட பேசாம இருப்பேன்னா? இந்த உலகத்துல யார் சொன்னாலும், நான் உன் கூட பேசத்தான் செய்வேன். அப்புறம் என் அண்ணாக்கு ஒரு மிகப்பெரிய வீக்னஸ் இருக்கு. அது என்ன தெரியுமா?” என்றாள்.

“என்ன?” என்று அவள் கேட்காவிட்டாலும், அவளே, “அது நான் தான். நான் சொன்னா என் அண்ணா கேட்கும். சோ, நீ மட்டும் என் அண்ணாவ கட்டிக்கிறேன்னு சொல்லு. இப்பவே என் அண்ணாவ உன் கழுத்துல தாலி கட்ட சொல்றேன்” என்றாள்.

அவளின் வார்த்தையில், கவியோ, “ப்ளீஸ் விழி. தயவு செஞ்சு இப்படி எல்லாம் பேசாத” என்று கண் கலங்கி சொல்ல, “சரிடி. நான் எதுவும் சொல்லல. இப்போ நீ படம் பாக்க வறீயா? இல்ல வாங்குன டிக்கெட்ட, பிளாக்லத்தான் விக்கனுமா?” என்றாள்.

அதில் தோழியின் ஆசையை மறுக்க இயலாது அவளுடன் சென்று படம் பார்த்தாள். ஆனாலும் கூட விழியுடைய இந்த ஆசையை வளர விட கூடாது என்று அன்றே முடிவெடுத்திருந்தாள் கவி. இந்த இரு தோழிகளுக்குள் நடப்பவை பற்றி அறியாத வேந்தனோ சொல்லியது போல், அவர்களை அழைத்துச் சென்று கல்லூரி ஹாஸ்டலில் விட்டான்.

தன் தங்கையை தன் வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்ள அவனுக்கு ஆசைத்தான். ஆனால் அவனின் தங்கையோ, அவளின் தோழியுடன் தான் இருப்பேன் என்று சொல்லிவிட, அதனால் தான் கவிக்கும் சேர்த்து, ஹாஸ்டல் பீஸ் கட்டி இருவருக்கும் ஒரே அறையை வாங்கிக் கொடுத்திருந்தான்.

அந்த நினைவில் இருந்தவளின் தோளைத் தட்டி, “ஆக்சிவலி நான் அப்போ ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்றான். அவனின் வார்த்தையில் இவ்வுலகம் வந்து அவனை அவள் பார்க்க, “எஸ். குட்டிம்மாவ ஹாஸ்டல்ல சேர்த்ததுக்கு பதிலா, அவளோட சேர்த்து, உன்னையும் அப்பவே என் வீட்டுக்கு தூக்கிட்டு வந்திருக்கனும்” என்று நக்கலாய் கூறினான்.

அவனின் வார்த்தையில் ஜில்லென்ற ஒரு உணர்வு அவளுக்குள் பொங்கி வர, ஆனால் அவளோ அதை வெளிக்காட்டாது, முகத்தில் கோவத்தை கூட்டி, “எனக்குன்னு யாரும் இல்ல. என்ன தூக்கிட்டு வந்தா, உங்கள யார் என்ன சொல்லப் போறாங்கன்ற நினப்புத்தான? ஆனா அதுவும் உண்மைத்தான. அதான் இப்போ இப்படி தூக்கிட்டு வந்திருக்கீங்க. என் பக்கம் நிக்க ஒருத்தர் இருந்திருந்தா, எனக்கான நியாயமும் கிடைச்சிருக்கும்” என்று பளீச்சென்று கூறினாள்.

இந்த வார்த்தை பழைய வேந்தனாக இருந்திருந்தால், நிச்சயம் பாதித்திருக்கும். ஆனால் இவனுக்கோ, அது சிறிதும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக, “பாத்தீயா, கடவுளே இந்த வேந்தன் பக்கம் தான் நின்னுருக்கான். அதான், உனக்குன்னு யாரையும் வச்சுக்கலையோ என்னவோ? ஆனா இதுக்கப்புறம் ஒருத்தன் இருக்கான். அவன நீ உன் முன்னாடி வச்சிக்கிடுறதும். இல்ல உன் மடியில வச்சிக்கிடுறதும் உன் சாமர்த்தியம்” என்று நக்கலாய் சொல்லி அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான் வேந்தன்.

(ஆனாலும் வேந்தா. அவ என்ன பால் போட்டாலும், நீத்தான்ப்பா ஈஸியா கேட்ச் பிடிக்கிற. எப்படித்தான் இவள சமாளிக்கப் போறீயோ? சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அபப்டியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 9 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***