தேன் – 5

ஒரு நாளில் உன்னை மாற்றிக் கொள் என்று சொல்லிய வேந்தன், அதன் பின் ஒரு வாரமாகியும் அவள் கண்ணில் படவில்லை. அவன் அங்கு இல்லைத்தான். ஆனாலும் அவளைப் பற்றிய அத்தனையும் அவனுக்கு தெரிந்திருந்தது. இவளோ அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தாள். சாப்பிட கொண்டு வந்து கொடுத்தால், அதை வாங்கி சாப்பிடுவாள்.

இப்படியே இவள் இருப்பதைக் கேட்டவனுக்கோ இன்னும் இன்னும் எரிச்சல் தான் வந்தது. அதனால், அவனுடைய அத்தனை வேலையையும் ஒதுக்கி வைத்து விட்டு அன்று வீட்டுக்கு வந்திருந்தான். இவளோ அவன் வந்தது அறியாது அறையிலேயே மூழ்கிக் கிடக்க, விறுவிறுவென்று அறைக்குள் வந்து நின்றவன், எதையும் யோசிக்காது அவளை அப்படியே அள்ளி தூக்கினான்.

அதில் அவள் திடுக்கிட்டு, அவனைப் பார்க்க, அவனோ அவளைத் தூக்கிக் கொண்டு, பால்கனிக்கு வந்தான். அவள் என்ன என்று யோசிக்கும் முன்னே, அவளுடன் சேர்ந்து மேலே இருந்து கீழே குதித்திருக்க, அவள் மிரண்டுப் போய் தன்னை மீறி அவன் கழுத்தை இறுக்கிக் கட்டிக் கொள்ள, பொத்தென்று அங்கிருந்த நீச்சல் குளத்தில் இருவரும் விழுந்திருந்தனர்.

என்ன நடந்தது என்று யோசிக்கும் முன்னே, அவள் நீருக்குள் மூழ்க, அதற்குள் அவள் இடையோரம் கைக் கொடுத்து தன் கால் மீது அவளை நிற்க வைத்து, அவளை சுவாசிக்க விட்டான்.

நீண்ட நாட்களுக்குப் பின் அப்போதுத்தான் சுவாசிப்பது போல், அவள் மூச்சை இழுத்து இழுத்து விட, அவனோ அசையாது அவளையேத்தான் பார்த்தான். அவளுக்கு மூச்சு வாங்கியது. அவன் என்ன செய்தான்? தான் அவனுடன் எப்படி நிற்கிறோம். எதுவுமே அவளுக்கு மூளையில் பதியவில்லை. அவள் உயிருடன் தான் இருக்கிறாள் என்பதே அவளுக்கு ஒரு வித நிம்மதியைக் கொடுத்தது.

சில நொடிகளில் தன்னை மீட்டு அவனைப் பார்க்க, அவனோ வெகு இயல்பாய், “குட் மார்னிங்” என்றான். இன்னும் கூட அவளுக்கு சற்று மூச்சு வாங்க, “ஏன் இப்படி பண்ணீங்க?” என்று திக்கி திணறி கேட்டாள்.

அதில் அவள் இடையில் பிடித்திருந்த கரத்தில் மேலும் அழுத்தம் கூட்டி, அவளை அப்படியே அலாக்க தூக்கி அங்கிருந்த திண்டில் அமர வைத்தான். அவனின் செய்கையில், அவள் உடல் மேலும் அதிர அதை உணர்ந்தாலும், அவள் இடையில் இருந்த கரத்தை விலக்கிக் கொள்ளாமலே, அங்கிருந்த கம்பியில் சாய்ந்து நின்றான்.

அவளோ வேகமாய் அவன் கரத்தை விலக்க முயற்சிக்க, அவனின் கரம் இரும்பென இருக்க, அவளால் அசைக்க கூட முடியவில்லை. அதில் அவள் கண்ணில் நீர் கோர்க்க முயற்சித்தது.

அதற்குள், அவளை இன்னும் நெருங்கி, “உனக்கு கொடுத்த டைம் எல்லாம் முடிஞ்சிருச்சி. இதுக்கப்புறம், நான் சொல்றதத்தான் நீ செய்யனும்” என்றான்.

“என்னால முடியாது” என்று அவள் பட்டென்று சொல்ல, “முடியனும். நான் முடிச்சு காமிப்பேன்” என்று அவன் அத்தனை ஆங்காரமாய் சொல்ல, அவனின் கோவத்துக்கான தண்டனையை அவள் இடை அனுபவித்தது. ஈரத்தில் நனைந்ததுக்கும் அதற்கும், அவளின் தேகம் இரத்தமாய் சிவந்திருந்தது.

“ஸ்” என்று அவள் வலி தாங்காது முணங்க, அப்போதே சற்று இறுக்கத்தை குறைத்தவன், மெல்ல கரத்தை விலக்கிக் கொண்டான். ஆனால் அவனின் பார்வை இப்போது அவள் வெண்ணிற இடையை தழுவ, அவசரமாய் தன் சேலையால் தன்னை மறைத்தாள். அவளின் சேலை மொத்தமுமே நனைந்திருக்க, இப்போதும் அது கண்ண்டாடியாய் அவளின் மேனியை அவனுக்கு வெளிச்சம் போட்டு காட்டத்தான் செய்தது. ஆனாலும், அதை அவளிடம் காமிக்காது, வெகு இயல்பாய், “அன்னிக்கு சொன்னதுத்தான். இனிமே நீ தான் என்ன பாத்துக்கிடனும்” என்றான்.

அவனின் வார்த்தையில் இவளோ கோவமாய், “ஏன் இப்படி பண்றீங்க? என்னால எதுவும் முடியாது” என்று ஆதங்கத்துடன் கூறினாள். “உன்னால எது முடியும்? முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். இப்போ போய், எனக்கு துவட்ட துண்டும், சூடா ஒரு காபியும் கொண்டு வா” என்றான்.

“என்ன?” என்று அவள் அதிர்ந்து விழிக்க, “என்ன? போ நான் சொன்னத செஞ்சா, நீயும் நிம்மதியா இருக்கலாம். நானும் சந்தோஷமா இருப்பேன். அத விட்டுட்டு” என்றவன் மீதி வார்த்தையை முடிக்கவில்லை. ஆனால் அவன் கண்ணிலேயே அது தெரிந்தது. அதில் அவள் உடல் ஒரு நொடி அதிர்வை உணர்ந்தது.

“போ. எனக்கு எப்படி காபி போடனும்னு செல்லம்மா கிட்ட கேளு. அவங்க இன்னிக்கு ஒரு நாள் உனக்கு சொல்லிக் கொடுப்பாங்க. நாளையில இருந்து நீயேத்தான் பண்ணனும்” என்றவன் மீண்டும் நீச்சல் அடிக்க ஆரம்பித்திருந்தான்.

இங்கே இவளுக்கோ கோவமாய் வந்தது. அதை விட வேதனை அதிகமாய் இருந்தது. ஆனாலும் அவன் சொல்வதை செய்யும் நிலையில் அவள் இருக்க கஷ்டப்பட்டு எழுந்தாள்.

“ஹேய்” என்று அவன் சத்தமாய் அழைக்க, அவள் அவன் பக்கம் திரும்ப, “போறப்ப, அந்த ஷர்ட்ட எடுத்து போட்டுட்டு போ” என்று சற்று தள்ளி இருந்த அவன் சட்டையைக் காட்டி கூறினான்.

அதில் அவளோ எடுக்காது செல்லப் போக, “இப்போ அத போட்டுக்கலன்னா, நானே வந்து அத போட்டுவிடுவேன்” என்றான். அதில் அதிர்ந்தவள் அடுத்த நொடி அந்த சட்டையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடியிருந்தாள். அதில் வாய் விட்டு புன்னகைத்துக் கொண்டான்.

இங்கே கிச்சனுக்குள் வந்த தேன்கவியை பார்த்த செல்லம்மாவோ, “என்னம்மா? நனைச்சிட்டீங்களா? நில்லுங்க நான் போய்” என்று சொல்லும் முன்னே, “அவருக்கு காபி போடனும்” என்றாள்.

அதில் ஒரு நொடி அவளை ஆச்சர்யமாய் பார்த்தவர், அவரே எடுத்து காபி போடப் போக, “இல்ல எப்படி போடனும்னு மட்டும் சொல்லுங்க. நானே போட்டுக்கிறேன்” என்றாள். அவர் எதுவுமே மறுக்கவில்லை. அவன் எப்படி காபி குடிப்பான்? எந்த மாதிரி இருக்க வேண்டும் என்று சொல்ல அவளும் அவர் சொல்லியது போல் காபியை போட்டு எடுத்துக் கொண்டு அவனிடம் சென்றாள்.

அங்கே அவனோ அணிந்திருந்த பனியனையும் கழட்டிவிட்டு நீச்சல் அடித்துக் கொண்டிருக்க, அவளோ சட்டென்று முகத்தை திருப்பினாள். அதைப் பார்த்து சிரித்தவனோ, அவள் கையில் இருந்த டவலை பிடுங்கி துடைத்தப்படி மேலேறி வந்தான். அவன் பக்கம் திரும்பவில்லை என்றாலும் அவன் தன்னருகில் தான் நிற்கிறான் என்பதை அவள் உணரத்தான் செய்தாள். அதுவே அவளுக்குள் ஒரு வித நடுக்கத்தை கொடுத்தது. 

இப்போது அவன் மேலிருந்த நீர்த்துளி, அவள் முதுகில் உரசும் அளவுக்கு நெருங்கி அவன் வர, திடுக்கிட்டு திரும்பினாள். அவனோ இன்னும் நெருக்கமாய் அவளருகில் நிற்க ஒரு நொடி அவளுக்கோ உடல் வெளிறியது. ஆனால் அவனோ அதை எல்லாம் பெரிதாய் கண்டுக் கொள்ளாது அவள் விரல் நுனி உரச அவள் கையில் இருந்த காபியை வாங்கிக் கொண்டான். இவளோ சட்டென்று ஒரு அடி விட்டு பின்னே தள்ளி நின்றாள். காபியைக் குடித்தவனோ, அதை ரசித்து குடித்தான். ஆனால் அது எப்படி இருக்கிறது? என்று அவன் சொல்லவில்லை.

முழுவதையும் குடித்து முடித்தவன் அவள் பக்கம் திரும்பி, “இன்னிக்கு நான் கேட்டேன். நாளையில இருந்து நான் கேட்காமலே, காபி என் கையில இருக்கனும். புரிஞ்சிதா?” என்று கேட்டவன் தான் துவட்டிய துண்டை அவள் கழுத்திலேயே போட்டு விட்டு அவன் பின் பக்க மாடி வழியே அவர்களுடைய அறைக்குள் நுழைந்தான்.

இங்கே இவள் கழுத்தில் கிடந்த துண்டில் அவனின் வாசனை குப்பென்று வர, அவள் முகம் வியர்த்தது. வேகமாய் அதை தூக்கி தண்ணீருக்குள் மீண்டும் எரிந்தாள். அழுகையாய் வந்தது.

அவள் யாருக்கு என்ன செய்தால்? என்று சத்தியமாய் அவளுக்கு தெரியவில்லை. அவளின் வாழ்க்கையை மட்டும் யாரோ ஒருவர் கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அதில் சில நிமிடங்கள் அப்படியே அங்கேயே அமர்ந்து விட்டாள். கிட்ட தட்ட சூரியன் முகத்தில் அடிக்கும் போதுத்தான் நிமிர்ந்துப் பார்த்தாள். நனைந்த ஆடைகள் எல்லாம் காய்ந்திருக்க, வேறு வழியின்றி மேலே வந்தாள். அவன் அறையில் இருப்பான் என்பதால், அதுவரை அறைக்குள் மட்டுமே இருந்தவள் அதை விட்டு விட்டு மீதி இடங்களுக்கு சென்றாள்.

அங்கே ஒரு நூலகம் இருக்க, அங்கே சென்று ஒரு புத்தகத்தை கையில் எடுத்தாள். கிட்ட தட்ட மதியம் போல் தான் செல்லம்மாவின் குரல் கேட்டு புத்தகத்தை மூடினாள்.

“அம்மா சாப்பாடு ரெடியாகிடுச்சி. ஐயா உங்கள சாப்பிட வர சொன்னாரும்மா” என்றார்.

அதைக் கேட்டவளுக்கு அப்போதே, அவனும் இந்த வீட்டில் இருக்கிறான் என்ற விஷயம் மீண்டும் நினைவுக்கு வர தடுமாறினாள்.

நேற்று வரை அவள் இருக்கும் அறைக்கே வந்து செல்லம்மா சாப்பாடு கொடுத்து விடுவார். ஆனால் இன்று கீழே சென்று சாப்பிட வேண்டும். அதுவும் அவனுடன் சாப்பிட வேண்டும் என்பதே அவளுக்குள் ஒரு வித பதட்டத்தைக் கொடுத்தது.

அதனால் திக்கி திணறி, “இங்க கொண்டு வறீங்களா?” என்று கேட்டாள். அதில் அவளை பாவமாய் பார்த்தவர், “அம்மா, தம்பி கீழ இருக்கு. உங்கள கூட்டியார சொன்னாரு” என்று அதையே அவள் சொல்ல, அவளுக்கும் புரிந்தது. அதனால், “சரி நீங்க போங்க. நான் வரேன்” என்றவள் சில நொடிகள் கழித்து கீழிறங்கி வந்தாள்.

அவள் தலையை குனிந்தப்படி வர அவள் அவனை பார்க்கவில்லைத்தான். ஆனாலும் அவனுடைய பார்வை மொத்தமும் அவள் மீது இருப்பதை அவளால் உணர முடிந்தது.

அதில் அவளின் கரம் அன்னிட்சையாய் விலகிய சேலையை சரி செய்தது. அதில் இவனின் உதட்டிலோ மெல்லிய புன்னகை உதயமாகி பின் அது இருக்கும் இடம் தெரியாமல் மறைந்திருந்தது.

எதுவும் பேசாது அவள் டைனிங் டேபிளில் அமரப் போக செல்லம்மாவிடம் அவன் கண் காமித்தான். அதில் அவர் உள்ளே சென்று விட, இப்போது அவனோ, “வந்து எனக்கு சாப்பாடு பரிமாறு” என்றான்.

அவனின் வார்த்தையில் அவள் அதிர்ந்து நிமிர. அவனோ வெகு சாதாரணமாய், “வந்து பரிமாறுறீயா? இல்ல ஊட்டி விடுறீயா?” என்றான். “என்னது?” என்று அவள் மான் விழிகள் மிரண்டுப் போய் அவனைப் பார்க்க, அவனோ தன் முன்னே இருந்த காலி தட்டைப் பார்த்தான்.

“கடவுளே” என்று நொந்தவள் வேறு வழியின்றி அவனுக்கு சென்று பரிமாற, அவனோ வேண்டுமென்றே தன் தட்டை நகர்த்திக் கொண்டே செல்ல, இப்போது அவளின் தேகம் அவன் கன்னத்தை உரசியது.

அதில் தீ சுட்டது போல் அவள் விலகப் போக, அவள் ஆழிலை வயிற்றில் அழுத்தமாய் முகம் புதைத்து அழுத்தி இதழ் பதித்தான் வேந்தன். அதில் கையில் இருந்த கரண்டியை அவள் கீழே போட, சத்தம் கேட்டு செல்லம்மா அங்கு வர, அதற்குள் அவளிடம் இருந்து விலகி, குனிந்து அந்த கரண்டியை எடுத்து, “பாத்து பரிமாறனும். இல்லன்னா இப்படித்தான் நடக்கும்” என்று அழுத்திக் கூறினான்.

அதில் அவள் அவனை அத்தனை கோவமாய் பார்க்க, அவள் கண்களில் கண்ணீர் திரண்டது. உடலெல்லாம் வெந்தது. அவளுக்கே அவனின் செயலில் அவள் மீது ஒரு வித அறுவறுப்பு தோன்றி மறைந்தது. அவள் மூக்கு நுனி கோவப்பழம் போல் சிவந்திருந்தது. இன்னும் கூட அவன் இதழின் ஈரம் அவள் வயிற்றில் ஒட்டிக் கொண்டிருப்பது போல் தோன்ற, உதட்டை கடித்து அழுகையை இழுத்துப் பிடித்தாள். அதில் அவள் பல் பட்டு அவள் உதடுகள் காயப்பட, இங்கே இவனோ செல்லம்மாவைப் பார்த்தான். அவர் அமைதியாய் அங்கிருந்து சென்று விட அடுத்த நொடி அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி அவள் செவ்விதழை நோக்கி நெருங்க, அவளோ அதிர்ந்து மூச்சு விட கூட மறந்து அவனைப் பார்த்தாள்.

இதழ் வரை நெருங்கி, அதை செய்யாது, “உன் மேல எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. உரிமைக்கும், கடமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இதுக்கப்புறம் உன் கண்ணுல இருந்து தண்ணி வந்திச்சு. அப்புறம் என் உரிமை என்னென்னு மொத்தமா காமிப்பேன்” என்று அழுத்திக் கூறினான். அதில் அவள் உடல் மேலும் நடுங்கியது.

அதில் தன் கோவத்தை இழுத்துப் பிடித்தவன், தன் முன்னே இருந்த உணவை எடுத்து அவளுக்கு ஊட்டினான். அதில் அவளோ நிராயுதபாணியாய் அவன் முன் நிற்பது போல் அதை வாங்கிக் கொண்டாள். ஆனால் உணவு உள்ளே செல்ல மறுத்தது.

அதில் தன் மடியில் இருந்து அவளை விலக்கி, அருகில் இருந்த சேரில் அமர வைத்தவன், அவனே அவளுக்கு பரிமாறி சாப்பிட சொன்னான். அவளும் அழுகையோடே அந்த சாப்பாட்டை விழுங்க, இவனுக்கோ சாப்பிடும் எண்ணமே மறைந்திருக்க, சாப்பாட்டிலேயே கை கழுவி விட்டு எழுந்து சென்றிருந்தான். இவளோ அழுதுக் கொண்டே அவர்கள் அறை சென்று கட்டிலில் விழுந்து விட்டாள்.

(இவர்கள் உறவில் அடுத்து என்னாகப் போகிறது? இது நிலைக்குமா? இல்லை? அது எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்புறம் உங்க கமெண்ட்ஸ் எல்லாமே படிச்சேன். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். இன்னிக்கு எல்லாருக்கும் ரிபிளை பண்ணிடுறேன். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட் லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 5 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***