தேன் – 20

வேந்தன் விழியின் மீது காட்டும் பாசத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு அத்தனை பொறாமையாய் இருக்கும். அதை பொறாமை என்று கூட சொல்லிவிட முடியாது. ஒரு வித பிரமிப்பு. அவள் வாழ்நாளில் பாசமாய் இருக்கும் அண்ணன், தங்கைகளைப் பார்த்துள்ளாள்த்தான். ஆனால் இவனைப் போன்ற ஒரு அண்ணனைப் பார்த்ததே இல்லை. அவனுக்கு சுற்றி இருக்கும் எதைப் பற்றியும் கவலை இல்லை. அவனின் தங்கைக்காக, அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.

அவன் பேசியதைக் கேட்டப்படி கவி அவனையே பார்த்திருக்க, “இருந்தாலும் எனக்கு உன் மேல கொஞ்சம் பொறாமையா இருக்குண்ணா” என்றாள்.

அதில் அவனோ, “எதுக்கு?” என்று வேந்தன் குழப்பமாய் கேட்க, “ஆமா, என் பிரண்ட முழுசா உன் மேல பைத்தியமாக்கி வச்சிருக்கீயே. சாப்பிடாம கூட உன்னை எப்படி பாக்குறா பாரு” என்று சீண்டலாய் கூறினாள்.

அவளின் சீண்டலில் தன்னிலை மீட்ட கவியோ சட்டென்று பார்வையை விலக்க அதற்கு முன்னே, வேந்தன் அதைப் பார்த்திருந்தான். ஆனால் அவள் பார்வைக்கான அர்த்தம் அவனுக்கு தெரியும்.

பல நேரங்களில், விழியை விட வேந்தன் அவளை சற்று அதிகமாய் படிப்பான். இப்போதும் அது அவனுக்கு புரிய, இருந்தும் அதை சொல்லாது, “சரிடா சாப்டு” என்று தங்கைக்கு ஊட்டினான்.

அதை கவியின் விழிகள் சற்று ஏக்கத்துடன் பார்க்க, அதைக் கவனித்த விழியோ, “அண்ணிக்கு பர்ஸ்ட்” என்றாள். அதில் அவனோ கவியைப் பார்க்க, “ஆ.ங் இல்ல” என்று முகத்தை திருப்ப முயன்றாள். அதற்குள்ளாக, அவள் முன் உணவை நீட்டியிருக்க, அவளோ அவனைப் பார்த்தாள்.

“குட்டிமாக்காக மட்டும் தான்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் தோணியில் சொல்ல, அவள் தொண்டைக்குள் உணவு இறங்க மறுத்தது. இருந்தும் அதை வாங்கிக் கொண்டாள்.

“அண்ணா இப்போ எனக்கு?” என்று விழி கேட்க, அவளுக்கும் உணவை ஊட்டினான். இருவருக்கும் சிறிதாய் கூட வேற்றுமை இன்றி சரி சமமாய் ஊட்டி முடித்தவன், “சரி மேரேஜ் வேண்டாம். படிப்பும் வேண்டாம்னு சொல்லிட்ட. அப்போ ஏதாச்சும் வேலைக்கு போறீயா?” என்றான்.

அதில் விழியோ, “நானும் அப்படித்தான்னா யோசிச்சேன். இன்னும் ஒரு வாரம் போகட்டுமே. அப்புறம் சொல்லட்டா?” என்று கேட்டாள். “ம் சரிடா” என்று சொல்லியவன் சாப்பிட போக, விழியோ, “அண்ணா உனக்கு ஊட்டி விட்டார்த்தான. நீயும் அவருக்கு ஊட்டி விடு” என்றாள்.

“உனக்கும்த்தான ஊட்டி விட்டாரு. நீ ஊட்டி விட வேண்டியதுத்தான” என்று கவி மெதுவாய் முனுமுனுக்க, அதற்குள் வேந்தனோ, “குட்டிமா” என்றான்.

அதில் விழி அமைதியாகிவிட, வேந்தன் சாப்பிட ஆரம்பித்தான். அதன் பின் எழுந்தவன், “சரிடா அண்ணாக்கு கொஞ்சம் வெளிய வேல இருக்கு. ஏதாச்சும்னா கூப்டு சரியா?” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

“ச் எண்ணண்ணா? மணி என்னாச்சு தெரியுமா? இன்னேரத்துல வெளிய போறீங்க?” என்று சொல்ல, “அண்ணன் வேல அப்படிடா. நான் போய்த்தான் ஆகனும்” என்றான்.

“சரிண்ணா” என்றவள் அண்ணனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள். அதில் தன் தங்கையை மெல்லமாய் அணைத்துக் கொண்டவன், கவியின் பக்கம் கூட திரும்பாது, அங்கிருந்து கிளம்ப முயன்றான். ஆனால் விழியோ, “அண்ணிக்கிட்ட சொல்லல” என்றாள்.

அதில் கவியின் பக்கம் திரும்பியவனோ, “நான்” என்று சொல்லி முடிக்கும் முன்னே, “கேட்டுச்சி” என்றாள். அதில் அவனோ தோளை குலுக்கிவிட்டு அங்கிருந்து சென்றான்.

செல்பவனையே கவி பார்த்துக் கொண்டிருக்க, “இப்படி எல்லாம் அண்ணாவ இந்த டைம்ல அனுப்பாத கவி. அப்புறம் இந்த பழக்கத்த விடவே மாட்டாரு. வீட்டுல அம்மாவும், நானும்தான் போர்ஸ் பண்ணி இருக்க வைப்போம். இல்லன்னா என்னேரமும் கட்சி, கட்சி வேலைன்னுத்தான் சுத்துவாங்க” என்றாள்.

“நீ சொன்னா கேட்பாரு. நான் சொன்னா எதுக்கு கேட்கப் போறாரு?” என்று தனக்குள் சொல்லியவளுக்கு ஏனோ மெல்லிய ஏக்கம் பரவவே செய்தது. அவள் மனம் என்ன நினைக்கிறது? என்று தெரியவில்லை. ஆனால் வேந்தனுடைய அந்த அளவில்லாத தங்கை பாசம், ஏதோ ஒரு வகையில் அவளை பாதித்தது.

ஆனால் அவளுக்கு புரியவே இல்லை. தங்கைக்காக இத்தனை செய்பவன். அவள் மட்டும் அவனின் சரி பாதி என்று பதிய வைத்து விட்டால், அவளுக்காக இந்த உலகத்தையே கூட கையில் எடுத்து வந்து கொடுப்பான். அவனின் மீது முழு உரிமையும் அவளிடம் தான் இருக்கிறது என்பதை அவள் அறியவே இல்லை.

அவள் அப்படியே நிற்கவும், “சரி வா கவி. நம்ம தூங்கலாம்” என்றப்படி இழுத்துச் சென்றாள். அவர்கள் அறைக்குள் நுழையும் போதுத்தான். “ஆமா நீ எதுக்கு இங்க என் கூட வர்ற? அண்ணா ரூம்ல போயி தூங்கு” என்றாள்.

“என்ன?” என்றவள் வெகுவாய் தயங்க, “என்னாச்சு? இன்னமும் நீ ஒன்னும் என் பிரண்ட் மட்டும் கிடையாது. அண்ணாவோட ஒயிப். சோ நீ அங்கத்தான் தூங்கனும்” என்றாள்.

“உன் அண்ணாத்தான் இல்லத்தான” என்று கவி சொல்ல, “அட ஆமால்ல. ஆனாலும் அண்ணா வந்துட்டா நீ அங்க போயிடு” என்று சொல்லியப்படித்தான் கவியுடன் படுத்தாள். வழக்கம் போல் அவள் கட்டியிருந்த சேலை நுனியை கையில் பிடித்தப்படியே உறங்கியிருந்தாள் விழி.

அதுவும் அவளுக்கு பழக்கம் தான். எப்போதுமே அவள் அணிந்திருக்கும் டாப்பை பிடித்துக் கொண்டுத்தான் படுப்பாள். இப்போது சேலை கட்டியிருக்கவும், அதை பிடித்துக் கொண்டாள்.

தாயின் வாசனையை தேடும் குழந்தைப் போல் அவள் உறங்கியிருக்க, இங்கே இவளுக்கோ வேந்தனைப் பற்றிய சிந்தனைத்தான் ஓடியது.

அவனின் வாழ்க்கையைப் பற்றிய கவலைத்தான் அவளுக்கு பெரிதாய் இருந்தது. அது, இது என்று யோசித்தப்படி அவளும் விழி மூடி உறக்கத்திற்கு சென்றிருந்தாள். வேந்தனோ எப்போதும் போல் வேலையை முடித்து விட்டு வர அதிகாலை ஆகியிருந்தது. வந்தவன் நேரே விழியுடைய அறைக்குத்தான் சென்றான். அங்கே தன் தங்கையை அரவணைத்து படுத்திருக்கும் மனைவியையும் ஒரு நொடி நின்றுப் பார்த்தான்.

ஏனோ தங்கை இருக்கும் இடத்தில் தன்னைப் பொறுத்திப் பார்க்க மனம் துடித்தது. ஆனாலும் அவள் பேசிய வார்த்தைகள் எல்லாம் கண் முன்னே வர, கஷ்டப்பட்டு தன் மனதை அடக்கினான்.

பின்பு தங்கையின் தலையை மெல்ல கோதிவிட்டு, பெட் ஷீட்டை இருவருக்குமாய் போர்த்தி விட்டு நகர்ந்தான். கதவு வரை வந்தவன் என்ன நினைத்தானோ மீண்டும் கவியின் அருகில் வந்து அவள் தலையையையும் மெதுவாய் கோதிவிட்டான்.

சிறு வயதில் இருந்தே, அவளை அவன் தனியாய் யோசித்ததே இல்லை. தங்கைக்கு வாங்கும் அத்தனையும் அவளுக்கும் சேர்த்துத்தான் வாங்குவான். அவளின் பொறுப்பை அந்த பன்னிரெண்டு வயதிலேயே எடுத்திருந்தான்.

விழிக்காக மருத்துவமனை வரை, அவர்கள் குடும்பம் கவியுடன் சென்றது. அவர்களுக்கு தெரிந்தவர்கள் வந்ததும் வேந்தனுடைய அப்பா, இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வந்தார். வரும் போது கவியிடம் பணத்தையும் கொடுத்து விட்டு சென்றார். அவ்வளவுத்தான் அவரால் முடிந்தது. வேலையை போட்டு விட்டு அங்கு நிற்கவெல்லாம் அவருக்கு நேரம் இல்லை. அதிலும் அவர்கள் யார் என்றே அவருக்கு தெரியாது. 

ஆனால் விழியோ கவியை விட்டு வர மாட்டேன் என்று அடம்பிடிக்க, வேந்தனுக்குமே அவளை அப்படியே விட்டு செல்ல மனம் இல்லை. அதிலும் கடைசியாய் வேந்தனை அவள் பார்த்த அந்த பார்வை கல் மனதுடையவனையும் கலங்கடிக்கும்.

வந்திருந்தவர்களும் கூட யாருமே தேன் கவியிடம் ஆறுதலாய் எதுவும் பேசியிருக்கவில்லை. அதை வேந்தனால் உணர முடிந்தது. அன்றைய தினம் முழுவதும் விழி புலம்பிக் கொண்டே இருந்தாள்.

“கவி பாவம். அவள நம்ம வச்சிப்போம்” என்று சிறு பிள்ளைப் போல் சொல்லிக் கொண்டே இருக்க, அண்ணனிடமும் சொல்ல, அவனும் வழக்கம் போல், “சரிடா கவிய நம்ம வச்சிக்கலாம்” என்றான்.

ஆனால், சிறுவர்களின் பேச்செல்லாம் அங்கு எடுபடும்மா என்ன? ஆனால் வேந்தனோ, கவியைத் தேடி சென்றான். மருத்துவமனையில் கவியின் உறவினர் கொடுத்த அட்ரஸை வைத்துக் கொண்டு வந்திருந்தான். ஆனால் அங்கே கவி இல்லை. அவனுக்கு தேடவோ? விசாரிக்கவோ தெரியவில்லை. ஆனாலும் அங்கு, இங்கு என்று சுற்றி திரிந்து கடைசியாய் அவன் ஓரிடம் வந்தப் போது கவி ரோட்டில் நின்றிருந்தாள். ஆம், நடுத்தெருவில் தான் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தாள். சாப்பிட்டு எப்படியும் முழுதாய் இரண்டு நாளாவது இருக்கும். அதே பட்டுப்பாவடையில் தான் இருந்தாள்.

வேகமாய் அவளிடம் ஓடி சென்று நின்றான். அவளோ மலங்க மலங்க விழித்தாள். ஓடி திரிந்ததில் அவனுக்கு மூச்சு வாங்கியது.

“சாப்டீயா நீ?” என்று முதல் வார்த்தையாய் அதைத்தான் கேட்டான். “ம்ஹூம்” என்று உதடு கடித்து அவள் ஆரம்பிக்க, ஏனோ இவனுக்கும் வலித்தது. அடுத்த நொடி அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு ஒரு டீக்கடைக்கு வந்தான். அவனிடம் இருந்த காசுக்கு பிஸ்கட் பாக்கெட் தான் வாங்க முடிந்தது. பின்னே அவனே பள்ளி செல்லும் மாணவன் தானே. அவனிடம் பெரிய தொகை என்ன இருந்துவிட முடியும்?

அதை வாங்கி அவளிடம் கொடுக்க, அவளோ பசியில் வேகமாய் வாங்கிக் கொண்டாள். அந்த டீக்கடைக்காரரோ, “ஏன் தம்பி உனக்கு தெரிஞ்ச பாப்பாவா?” என்றார்.

“ம்” என்று அவன் தலையாட்ட, “காலையில இருந்து இங்கத்தான்ப்பா இருக்கு. ஏதாச்சும் வேணுமான்னு கேட்டும் எதுவும் சொல்லல. இப்போ நீ கொடுத்ததும் வாங்கிக்கிச்சு” என்றார்.

ஏனோ அதைக் கேட்டதும் வேந்தன் கவியைப் பார்த்தான். கவிக்கோ அது எதுவும் காதில் விழவில்லை. பசி மொத்தமாய் அவள் செவியை மறைத்திருந்தது. தண்ணீரை எடுத்துக் கொடுத்தான். அதையும் வாங்கிக் குடித்தாள்.

பின்பு அவளோ, மீண்டும் அந்த மரத்தடியில் சென்று படுக்க போனாள். அதில் அவனோ, “நீ ஏன் இங்க இருக்கிற? உன் வீட்டுக்கு போலையா?” என்று புரியாது கேட்டான்.

“வீடு இல்ல” என்று அவள் சொல்ல, அவனுக்கு புரியவில்லை. “அம்மாவும் அப்பாவும் வர மாட்டாங்களாம். நான் இனிமே ரோட்டுலத்தான் இருக்கனுமாம்” என்று சிறுமியாய் அவள் அழுதப்படி மழலை மொழியில் சொல்ல, வேந்தனுக்கோ பெரிதாய் புரியவில்லை என்றாலும் அவளை அப்படி விட்டு செல்ல மனம் வரவில்லை.

“உனக்கு வீடு இருக்கு. வா” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டுக்குத்தான் சென்றான். ஆனால் அவர்கள் வீட்டில் உள்ளவர்களோ அனுமதிக்கவில்லை.

கவியோ தன்னால், வேந்தனும், விழியும் திட்டு வாங்குகிறார்கள் என்று மட்டும் புரிந்தது. அவள் திரும்பி அங்கிருந்து ஓடி விட்டாள்.

(எப்போ பார்த்தாலும் இந்த புள்ளைக்கு ஓடுறதே வேலையா போச்சி. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பார்க்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 20 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***