தேன் – 13

வேந்தன் சொல்லியதைக் கேட்ட கவியோ அதிர்ச்சி விலகாது அவனையே பார்த்திருந்தாள். அவனோ அவள் பக்கம் நன்றாக திரும்பி, “இந்த வருஷம் நான் கேட்காம, உனக்குப் பிடிச்சத எனக்கு கிப்டா கொடுத்திருக்க, அப்போ பதிலுக்கு நானும், என்னோட ரிட்டன் கிப்ட கொடுக்கனும் இல்லையா?” என்றப்படி, தன் முழு கை சட்டையை மடக்கி விட்டான்.

அதில் அவளோ, “இன்னிக்கு உங்களுக்கு” என்றவளுக்கு உண்மையாகவே அந்த நொடி அவனை அடித்தது அதிகபட்ச வருத்தத்தை கொடுத்திருந்தது. ஆனால் அடுத்த நொடியே, “பிறந்த நாள் அதுவுமா குடிச்சிட்டு வந்தீங்களா?” என்று அத்தனைக் கோவமாய் கேட்டாள்.

அதில் அவனோ, “திருத்தம் நான் குடிச்சது நேத்து நைட். நீதான் என் கன்னத்துலையே ஒன்னு விட்டு, அதத்தான் அனுப்பி வச்சிட்டீயே. சோ, நீ பண்ண வேண்டியத பண்ணிட்ட. இப்போ நான் பண்ண வேண்டியது பாக்கி இருக்கு இல்லையா?” என்று கேட்டப்படி அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான்.

என்னத்தான் வெளியில் தைரியமாக காட்டிக் கொண்டாலும், சட்டென்று அவன் நெருங்கவும், அவளோ, பயந்துப் போய் வேகமாய் பின் எட்டு வைத்தாள். அதைப் பார்த்து நக்கலாய் சிரித்தவன், “ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. நீ அடிச்ச அடி சும்மா ஜிவ்வுன்னு மண்டைக்குள்ள ஏறிச்சின்னா பாரேன்” என்று தாடையில் கை வைத்து தலையை இடம் வலமாய் ஆட்டியப்படி கூறினான்.

அவன் என்னவோ கபடி போட்டிக்கு தயார் ஆவது போல் ஆகிக் கொண்டிருக்க, இவளுக்கோ உள்ளுக்குள் அத்தனைத் நடுக்கம். அவனின் ஒரு அடிக்கு இவள் தாங்குவாளா? என்பது கேள்விக் குறித்தான். ஆனால் வேந்தன் பெண்களை அத்தனை எளிதில் எல்லாம் கை நீட்டுபவன் கிடையாது.

அது தந்த தைரியத்தில், “நீங்க தப்பு பண்ணீங்க. அதனாலத்தான் நான் அடிச்சேன்” என்றாள்.

“ஆ.ங். சோ தப்பு பண்ணா, அப்போ அடிக்கலாம். அப்படித்தான? அப்போ நீ என்னெல்லாம் தப்பு பண்ணன்னு வரிசையா நான் இப்போ சொல்லட்டுமா?” என்று கேட்டப்படி அவளை நோக்கி நடக்க, அவளோ, “அத் அது” என்றவளுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. தயங்கியப்படியே பின்னே சென்றாள்.

“என் சட்டையவே பிடிச்சு, தர தரன்னு இழுத்துட்டு வந்து தண்ணியில தள்ளிவிட்டல்ல நீ?” என்றவன் இப்போது அந்த நீச்சல் குளத்தையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தான். அதில் அவளோ அங்கிருந்து தப்பி ஓட வழியை அங்கும் இங்கும் பார்த்தாள்.

அதற்குள் அவன் வேகமாய் முன்னேற, அவளோ அங்கிருந்த தூணில் சாய்ந்து நின்றாள். அதில் இன்னும் நக்கலாய் சிரித்தவன், “இதுக்கு மேல உன்னால எங்க போ முடியும்?” என்று கேட்டப்படி அவள் இருபக்கமும் கையை ஊன்றி, அவளை விலக விடாது அணைக் கட்டினான்.

அந்த நள்ளிரவில் இரத்தத்தை உறிஞ்சும் அந்த குளிரில், இப்படி அவனிடம் சிறைப்பட்டிருப்பது ஒரு வித அவஸ்தையையும், பதட்டத்தையும் கொடுத்தது. இருவருமே முற்றிலுமாய் நனைந்திருக்க, அவள் உதடு வேறு தந்தியடித்தது.

அதில் அவனுடைய விழிகளோ, அதை மோகமாயும், சிறு தாபத்துடனும் தழுவிச் செல்ல, இவளுக்கோ பதட்டம் கூடி, நெற்றியில் வியர்வைத் துளிகள் படர முயற்சித்தது.

“இல்ல சார். இது தப்பு” என்றவள் அவனை விட்டு விலகி ஓடப் போக, சட்டென்று இருவருக்குள்ளும் இருந்த இடைவெளியை குறைத்து, “என்ன தப்பு?” என்றான். அவனின் மூச்சுக்காற்று அவள் முகத்தில் அடிக்க, அவள் இதயமோ அத்தனைப் பலமாய் துடித்தது.

“ப்ளீஸ் சார்…” என்றவளின் கெஞ்சலை சற்றும் காதில் வாங்காமல், அவள் மேல் பட்டும் படாமலும், ஒட்டியும் ஒட்டாமலும் மெதுவாய் ஆடை உரசிக் கொள்ள வாகுவாய் நின்றான்.

அவனுடைய அந்த நெருக்கம், அவளுக்கோ பதட்டத்தை அதிகரிக்க, அவனோ இப்போது முகத்தை மட்டும் அவள் முகம் நேரே கொண்டு வந்து, “என்னோட ரிட்டர்ன் கிப்ட வாங்க ரெடியா?” என்றான்.

அதில் அவள் கண்களோ அதிர்ந்து அவனிடம், “ம்ஹூம்” என்று தலையாட்ட, “உனக்கு ஆப்சன் இல்ல. நான் கொடுக்கிறத நீ வாங்கித்தான் ஆகனும்” என்றவனின் உதடு, அவள் மென் உதட்டை தொட்டு செல்லும் தூரம் நெருங்க, அவளோ, வேகமாய் முகத்தை திருப்பி, கண்ணை இறுக்க மூடினாள்.

அவளின் செயலில், இன்னும் அழகாய் சிரித்தவன், அவளை உரசுவது போலேயே நெருங்கி அவள் மேலிருந்து கீழே குனிந்து அவள் முன் அமர்ந்தான். அவள் மேனி எங்கும் அவனின் சுவாசம். ஏனோ அவளால் கண்ணைத் திறக்கவே முடியவில்லை. ஆனால் அந்த சுவாசத்தின் பரிஷத்தை அவளால், வெறுக்க முடியவில்லை.

அவனோ மெதுவாய் அவளுடைய பிஞ்சு பாதங்களை பற்றி தூக்கி தன் தொடையில் வைத்தான். அதில் அவள் திடுக்கிட்டு, கண்ணைத் திறந்துப் பார்க்க, தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த தங்க கொலுசை கையில் எடுத்தான்.

அவனின் செயலில், “ச் என்னப் பண்றீங்க?” என்று வேகமாய் அவள் தன் கால்லை விலக்கிக் கொள்ளப் பார்க்க, அவனோ விடாது அழுத்தமாய் இறுக்கிப் பற்றினான். அதில் அவள் தடுமாறி பிடிமானத்துக்கு என்று அவன் தோள்பட்டையை அழுத்திப் பிடித்து தன்னை நிலைப்படுத்தினாள்.

அவனோ அதை எல்லாம் பொருட்படுத்தாது, மெதுவாய் அவள் சேலையை உயர்த்தி, அவளுடைய காலில் அந்த கொலுசை போட்டு விட்டான். அந்த கொலுசின் பரிஷமும், அவன் விரலின் மென் தொடுகையும், அவளை மொத்தமாய் உறைய வைத்தது.

அவளைப் பார்த்தப்படியே அந்த கால்லை விட்டு விட்டு, அடுத்த கால்லை எடுத்து, அதில் மற்றொரு கொலுசை போட்டு விட்டான். இன்னுமே அவள் அசையாது அப்படியே இருக்க, அவள் பாதங்களில், மீசை உரச அழுத்தி இதழ் பதித்தான் வேந்தன்.

அதில் அவள் சுயம்பெற்று, வேகமாய் அவனிடம் இருந்து விலகி சென்றாள். அதில் அவனோ சிரித்தப்படியே எழுந்து, “என்னோட ரிட்டர்ன் கிப்ட் எப்படி இருக்கு?” என்று கேட்டு அழகாய் சிரித்தான்.

அதில் அவளுக்கோ, கோவமும், அழுகையும் சேர்ந்தே வந்து தொலைக்க, “எதுக்காக இப்படி பண்ணிட்டு இருக்கீங்க? இது எதுக்குமே எனக்கு தகுதி கிடையாது” என்றவள் வேகமாய் அந்த கொலுசை கழட்டப் போக, சட்டென்று அவள் கையைப் பிடித்திழுத்து தன் அணைப்புக்குள் கொண்டு வந்து, “இந்த கொலுசு உன் கால்ல இல்லன்னா, அடுத்து அது என் சமாதிலத்தான் இருக்கும். ஏன்னா, அது மேல உனக்கும், எனக்கும் மட்டும் தான் உரிமை இருக்கு” என்று அவள் விழி பார்த்து அழுத்தம் திருத்தமாய் கூறினான்.

அவன் கண்கள் சிவக்க, அவன் நின்றிருக்க, அவளோ அவனை அதிர்ந்துப் பார்த்தாள். அவன் கண்ணில் தெரிந்த உறுதியில், இங்கே இவளுடைய பிடிவாதம் ஆட்டம் கண்டது. மற்ற நேரமாக இருந்தால் கூட, அதை கழட்டி அவனிடம் எறிந்திருப்பாள். ஆனால் அவனின் பிறந்த நாள் அன்று, அவன் சொல்லிய அந்த வார்த்தை அவள் உயிரையும் சேர்த்து அறுத்தது.

உதடு கடித்து அழுகையை இழுத்துப் பிடித்தாள். அவள் கண்ணில் அத்தனை வலி. ஆனால் அதைப் பார்த்து கரையாது, “நான் உனக்காக கொடுக்கிறத நீ வாங்கித்தான் ஆகனும். உன்னால அத எப்பவுமே தடுக்க முடியாது. ஏன்னா, அதெல்லாமே உனக்கு மட்டும் தான் சொந்தம்” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான்.

அதற்கு மேல் அந்த கனத்தை அவளால் தாங்க முடியவில்லை, “ஏன் வேந்தன் சார்? இப்படி என்னைப் போட்டு உயிரோட கொல்றீங்க?” என்று அப்படியே மடிந்தமர்ந்து அழுதாள்.

அவள் அழுகை அவனை வதைத்தது தான். ஆனாலும், இந்த விஷயத்தை அவன் எதற்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்பது போல், அவளுக்கு நிகராக மண்டியிட்டு அமர்ந்தவன், “உன்கிட்டத்தான், எங்க ரெண்டு பேரோட உயிருமே இருக்கு. அப்படி எல்லாம் உன்னை போக விட்டுட மாட்டேன்” என்றான்.

அவனின் வார்த்தையில் கன்ணீரைத் துடைத்து அவனைப் பார்த்தவளோ, “இப்படி எல்லாம் நீங்க பண்றதால, உங்களுக்கு என்ன கிடைச்சிடும்னு நினைக்கிறீங்க?” என்றாள்.

நிச்சயம் அந்த பாண்டிய மன்னனுக்கு சாபமிட்ட, அந்த கண்ணகியின் சாயல் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. ஆனால், அதற்கெல்லாம் அஞ்சி நிற்க அவன் ஒன்னும் தப்பு செய்த பாண்டியனும் இல்லை. பாதிக்கப்பட்ட கோவலனும் இல்லை. அவன் வேந்தன். இந்த அதீத புத்திசாலியின் ஆருயிர் கணவன். இந்த தேன் கவியின் சுடர் வேந்தன்.

“எனக்கு எது கிடைக்கனும், அப்படின்றத விட, உனக்கு எது கிடைக்கனும்ன்றதுத்தான் எனக்கு முக்கியம். சோ, உனக்கு பிடிச்சாலும், பிடிக்கலன்னாலும், உனக்கு கிடைக்கிற எதையுமே உன்னால தடுக்க முடியாது. வலிச்சாலும் பரவாயில்ல. நீ இதுக்கெல்லாம் பழகித்தான் ஆகனும். நீ ஏத்துக்கிட்டாலும், ஏத்துக்கிடலன்னாலும், நீ இப்போ இந்த சுடர் வேந்தனோட பொண்டாட்டி. அந்த உண்மை உனக்கு கசப்பா இருந்தாலும், அதப் பத்தி எனக்கு கவலை கிடையாது” என்றான்.

அவன் கண்ணில் தெரிந்த அந்த திண்ணம், இங்கே இவளுடைய கோவத்தையும் சேர்த்தே கூட்டியது. அதில் வெடுக்கென்று அங்கிருந்து எழுந்தவள், அவனைப் பார்த்து, “நீங்களே, என் கழுத்துல இருக்கிற இந்த தாலியையும், இந்த கொலுசையும் என்கிட்ட இருந்து ஒரு நாள் வாங்கிப்பீங்க. அதுவரைக்கும் நான் கழட்ட மாட்டேன். ஆனா அதுக்காக, இத உங்களோட வெற்றியா நீங்க நினைச்சா, அதுத்தான் உங்களோட முதல் தோல்வியா இருக்கும்” என்று அத்தனை அழுத்தம் திருத்தமாய் கூறினாள்.

“எஸ். கண்டிப்பா, அந்த ஒரு நாள், இந்த வேந்தன் செத்த நாளா இருக்கும்” என்று சொல்லி முடிக்கும் முன்னே அவன் சட்டையை கொத்தாய் பிடித்து, தன் பக்கம் இழுத்தாள் தேன் கவி.

“என் உயிர் போறதுக்கு முன்னாடி, உங்க உயிர் போகாதுன்னு எனக்குத் தெரியும். அதுக்காக திரும்ப திரும்ப அதையே சொன்னீங்க, அதுக்கப்புறம், யாருக்கு பண்ணிக் கொடுத்த சத்தியத்த பத்தியும் நான் கவலைப்பட மாட்டேன்” என்றாள்.

“நானும் எத பத்தியும் கவலைப்பட மாட்டேன். நீ அப்படி ஒரு முடிவு எடுத்தன்னா, அதுக்கடுத்த செகண்ட், நான் என்னப் பண்ணுவேன்னு உனக்கே தெரியும்” என்று நக்கலாய் கூறினான்.

அவனின் அந்த நக்கலில் இன்னும் கடுப்பானவளோ, “உங்கள நம்பி உங்க தங்கச்சி இருக்கா. அவள பத்தி யோசிக்காம, நீங்க நடந்துக்கிடுறது சுத்தமா சரி கிடையாது. அவத்தான் அறிவு இல்லாம என்னமோ பண்ண சொல்றான்னா, உங்களுக்கு புரியாதா? உங்க வாழ்க்கைய மட்டும் இல்லாம, அவ வாழ்க்கையையும் சேர்த்து ஏன் கெடுத்துட்டு இருக்கீங்க?” என்றாள்.

“நீ தெரிஞ்சே உன் வாழ்க்கைய கெடுத்துட்டு இருந்தப்ப, நீ எங்க பேச்ச கேட்டீயா? இல்ல உன் பிரண்ட் சொன்னதத்தான் காது கொடுத்து கேட்டீயா? இல்லத்தான” என்று படு நக்கலாய் கேட்டான்.

அதில் அவனை இன்னும் இன்னும் அதிகமாய் முறைத்தவளோ, “உங்க ரெண்டு பேருக்கும் இது புரியுதா? இல்லையா? என் வாழ்க்கப் போச்சின்னாவோ, இல்ல நானே போனாளோ, அதனால யாருக்கும் எதுவும் கிடையாது. ஆனா, உங்களுக்குன்னு ஒரு அழகான குடும்பம் இருக்கு. அத எதுக்கு, ரெண்டு பேரும் புரிஞ்சிக்காம நடந்துக்கிடுறீங்க?” என்று கேட்டாள்.

“எஸ். அந்த குடும்பம் அழகாவே இருக்கனும்னா, அதுக்கு நீ அந்த குடும்பத்துல இருந்தே ஆகனும்” என்று அசராது கூறினான். அதில் கடுப்பானவளோ, “பூஜை அறையில கொண்டு போய் வைக்கிறதுக்கு நான் ஒன்னும்” என்று அவள் ஆரம்பிக்கும் முன்னே அவள் இதழை தன் இதழால் மூடியிருந்தான் சுடர் வேந்தன்.

அவனும் பொறுமையாய் இருக்கவே நினைக்கிறான். ஆனால் இவள் எங்கே விடுகிறாள்? அவள் மலர் விழிகள் அதிர்ந்து விரிய, அவனோ, மொத்தமாய் அவள் இதழை தன் இதழுக்குள் அடக்கிக் கொண்டான்.

(ஸ்ப்பா. இப்பவே எனக்கு கண்ண கட்டுதே. ஏம்மா கவி. நீ கொஞ்ச நேரம் அமைதியாத்தான் இரேன்ம்மா. என்னாலையே முடியல. மூச்சு வாங்குது. சரி அடுத்து என்னாகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 13 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***