உயிர் மீட்டுத்தா! என் உயிரே 💕

உன்னுடன் நான் இருந்த காலத்தில்

உணராத என் காதலை ,

உன் ஒரு நாள் பிரிவில்

உணர்ந்தேனடா..

உன் கோப பார்வையின் தீண்டலில்,

என்று நான் என் காதல்

பார்வையை கண்டேன்?

என்று நான் அறியேன்.

உன்னை திட்டிக் கொண்டிருக்கிறேன்

என்று நினைத்த எனக்கு,

என்னையே அறியாமல்

உன்னிடம் என்னை

தொலைத்து கொண்டிருக்கிறேன்

என்று

இன்று தான் அறிந்தேன்.

உன் பிரிவில் என் காதலை

உணர்த்திய நீயே

உன் வருகையை தந்து

என் உயிர் மீட்டு விடு"

Comments   3

*** உயிர் மீட்டுத்தா! என் உயிரே 💕 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***